search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 506 ரன்கள் குவிப்பு.. பாகிஸ்தான் மண்ணில் உலக சாதனை படைத்த இங்கிலாந்து
    X

    ஜாக் கிராவ்லி, பென் டக்கெட்

    டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 506 ரன்கள் குவிப்பு.. பாகிஸ்தான் மண்ணில் உலக சாதனை படைத்த இங்கிலாந்து

    • துவக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 233 ரன்கள் சேர்த்தனர்.
    • முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான், இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்து ரன் குவித்தனர். பந்தை பவுண்டரிகளாக விளாசி சதம் அடித்த இருவரும், முதல் விக்கெட்டுக்கு 233 ரன்கள் சேர்த்தனர். ஜாக் கிராவ்லி 122 ரன்களும், பென் டக்கெட் 107 ரன்களும் விளாசினர்.

    இவர்கள் தவிர ஒல்லி போப், ஹாரி ப்ரூக் ஆகியோரும் கடைசி செசனில் சதம் அடித்து அசத்தினர். ஒல்லி போப் 108 ரன்களில் ஆட்டமிழக்க, ஹாரி ப்ரூக் 101 ரன்களுடன் களத்தில் உள்ளார். போதிய வெளிச்சம் இல்லாததால் 75 ஓவர்களுடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது. இது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும்.

    இதற்கு முன்பு 1910ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி முதல் நாளில் 6 விக்கெட் இழப்பிற்கு 494 ரன்கள் எடுத்ததே உலக சாதனையாக இருந்தது. இதேபோல் விரைவாக 500 ரன்னை கடந்த அணி என்ற சாதனையையும் இங்கிலாந்து படைத்துள்ளது.

    Next Story
    ×