என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அயோத்தியா தீப உற்சவம்"

    • சரயு ஆற்றின் கரையில் 26 லட்சத்துக்கு அதிகமான அகல் விளக்கு ஏற்றி உலக சாதனை படைக்கப்பட்டது.
    • இந்த நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டு மகா ஆரத்தி எடுத்தனர்.

    லக்னோ:

    நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாட்டப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி அயோத்தியின் சரயு நதிக்கரையில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கம்.

    இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் சுற்றுலாத்துறை, மாநில அரசு மற்றும் அயோத்தி மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து மகா தீபத்திருவிழாவை இன்று நடத்தியது. அப்போது வாணவேடிக்கையும் நடத்தப்பட்டது.

    சரயு ஆற்றின் கரையில் 26,17,215 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி உலக சாதனை படைக்கப்பட்டது.

    இதனை பொதுமக்களுடன் ஒன்றாக அமர்ந்து, உத்தர பிரதேசத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கண்டுகளித்தார். இதேபோல், திரளான மக்கள் கலந்து கொண்டு மகா ஆரத்தி எடுத்தனர். அப்போது தீபங்களை ஒன்றாக சுழற்றினர். முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழ் பெற்றார்.

    அப்போது பேசிய யோகி ஆதித்யநாத், உலக அரங்கில் உத்தர பிரதேசத்திற்கான புதுப்பிக்கப்பட்ட அடையாளம் ஒன்றை வடிவமைப்பதில் இந்த திருவிழா ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஸ்ரீராம ஜென்ம பூமியில் ராமர் முன்பு முதல் விளக்கை ஏற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கடந்த கால அரசில் அயோத்தியின் ஆன்மீக முக்கியத்துவம் அலட்சியப்படுத்தப்பட்டது. ராம பக்தர்களின் உணர்வுகள் அவமதிக்கப்பட்டன. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு காரணமே கடவுள் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கை தான் என தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    அயோத்தியில் கடந்த ஆண்டு தீபாவளியில் சரயு நதியில் 6 லட்சத்துக்கு அதிகமான அகல் விளக்குகளை ஏற்றி தீப உற்சவம் கொண்டாடப்பட்டது.
    லக்னோ:

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

    தீபாவளியை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் தீப உற்சவம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், தீப உற்சவ நிகழ்ச்சியின் முக்கிய பகுதியாக அயோத்தி நகரின் சரயு நதியின் கரையோரத்தில் ஒன்பது லட்சத்துக்கும் மேற்பட்ட அகல் விளக்குகளை ஏற்றிக் கொண்டாடினர். இதனால் அயோத்தி முழுவதும் தீப ஒளி வெள்ளத்தில் ஜொலித்து வருகிறது.

    இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். சிறப்பு அழைப்பாளராக சுற்றுலாத்துறை இணை மந்திரி கிஷண் ரெட்டி பங்கேற்றார். மாநில கவர்னர்  ஆனந்திபென் படேல், மாநில அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

    கடந்த ஆண்டு தீபாவளியின் போது சுமார் 6 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றியது கின்னஸ் சாதனை படைத்த நிலையில், இந்த ஆண்டு ஒன்பது லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டது புதிய கின்னஸ் சாதனை ஆனது.

    ×