search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமுடி"

    • அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் வன்முறையை ஏவி விட்டுள்ளனர்.
    • சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள மாநில வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் புதிய கோர்ட்டு அலுவலகம் கட்ட மாநில அரசு முடிவு செய்தது.

    பல்கலைக்கழக வளாகத்தில் புதிய கட்டிடம் கட்ட உள்ள இடத்தில் ஏராளமான மரங்கள் வெட்டப்பட உள்ளது.

    புதிய கட்டிடத்திற்கு வேறு இடம் ஒதுக்க வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது வந்த போலீசார் மாணவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை விரட்டியடித்தனர்.

    அப்போது கல்லூரி மாணவி ஒருவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். பைக்கில் வந்த 2 பெண் போலீசார் மாணவியை துரத்தி சென்றனர்.

    மாணவியின் அருகில் சென்ற பெண் போலீஸ் ஒருவர் மாணவியின் நீண்ட தலை முடியை பிடித்து கொண்டார். இதனால் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

    கீழே விழுந்த மாணவியின் தலைமுடியை பிடித்துக் கொண்டு தரதரவென இழுத்துக் கொண்டு பைக்கை ஓட்டி சென்றனர்.

    இதனால் மாணவி சிறிது தூரம் தரையில் விழுந்து உரசியபடி சென்றதால் காலில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்த சில மாணவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து சந்திரசேகர ராவின் மகள் கவிதா தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அதில் இந்த சம்பவம் ஆழ்ந்த கவலைக்குரியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

    இதுகுறித்து மகளிர் ஆணையம் மற்றும் மனித உரிமை ஆணையம் விரிவான விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் வன்முறையை ஏவி விட்டுள்ளனர் எனக் கூறியுள்ளார். 

    • சுருள் முடி ஸ்டைல் செய்வது என வித்தியாசமான அலங்காரத்தை விரும்புகின்றனர்.
    • பயனர்கள் அந்த வாலிபரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    சமீபகாலமாக இளைஞர்கள், இளம்பெண்கள் பலரும் தங்களது தலைமுடிக்கு கலர் அடிப்பது, சுருள் முடி ஸ்டைல் செய்வது என வித்தியாசமான அலங்காரத்தை விரும்புகின்றனர்.

    அந்த வகையில் தற்போது எக்ஸ் பக்கத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் வாலிபர் ஒருவர் கியாஸ் லைட்டரை பயன்படுத்தி சுருள் முடி ஸ்டைல் உருவாக்கும் 'டெக்னிக்' பயனர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

    அதில், வாலிபர் கியாஸ் லைட்டரை லேசான தீயில் சூடாக்குகிறார். பின்னர் அதனை தலைமுடியில் வைத்து அதன்மீது முடியை சுற்றுவதன் மூலம் அழகான சுருள் முடி வடிவம் கிடைக்கிறது. இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் அந்த வாலிபரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • சாஹலின் தலைமுடி தற்போது 146 செ.மீ. (4 அடி 9.5 அங்குலம்) அளவுக்கு வளர்ந்துள்ளது.
    • மத நம்பிக்கைகளுக்கு கவுரவம் சேர்க்க வேண்டும் என்பதற்காக ஒருபோதும் தலைமுடியை வெட்டியதில்லை.

    சாஹலின் தலைமுடி தற்போது 146 செ.மீ. (4 அடி 9.5 அங்குலம்) அளவுக்கு வளர்ந்துள்ளது.லக்னோ:

    உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா நகரை சேர்ந்த சிறுவன் சிடக்தீப் சிங் சாஹல் (வயது 15). சிறு வயது முதலே சாஹலுக்கு நீண்ட தலைமுடி இருந்தது. இதனால், மகிழ்ச்சியற்ற நிலையில் இருந்த சாஹல், தனது பெற்றோரிடம் அவற்றை நீக்கி விடும்படி கேட்டிருக்கிறார்.

    ஆனால் வளர்ந்ததும், அதன்மீது தனி கவனம் செலுத்த தொடங்கியதுடன், தலைமுடி தன்னில் ஒரு பகுதி என்ற உணர்வும் சாஹலுக்கு ஏற்பட்டது. சீக்கிய மதத்தினை சார்ந்த சாஹல், மத நம்பிக்கைகளுக்கு கவுரவம் சேர்க்க வேண்டும் என்பதற்காக ஒருபோதும் தலைமுடியை வெட்டியதில்லை.

    சாஹலின் தலைமுடி தற்போது 146 செ.மீ. (4 அடி 9.5 அங்குலம்) அளவுக்கு வளர்ந்துள்ளது. இந்நிலையில், சாஹலின் நீண்ட தலைமுடியானது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது.

    இதுபற்றிய வீடியோ ஒன்றை கின்னஸ் உலக சாதனை அமைப்பு வெளியிட்டு உள்ளது. இதில் சாஹல், தன்னுடைய தலைமுடி பராமரிப்பு பற்றி பேசியுள்ளார். தலைமுடியை அலசி, சுத்தம் செய்து, எப்படி தலைமுடியை வாருவது என்பது பற்றி சாஹலின் தாயார் உதவி செய்திருக்கிறார். அப்படி அவர் உதவவில்லை எனில், நாள் முழுவதும் அதற்காக செலவிட வேண்டி இருக்கும் என சாஹல் கூறுகிறார்.

    அப்படி தலைமுடியை அலசாமல் அல்லது காய வைக்காமல் இருக்கும்போது, சீக்கிய முறையை பின்பற்றுபவர்களிடையே காணப்படுவது போன்று, அதனை உருண்டையாக சுற்றி வைத்து, டர்பன் அணிந்து கொள்கிறார். இந்த சாதனையை பற்றி மற்றவர்களிடம் கூறும்போது, அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நான் பொய் கூறுகிறேன் என நினைத்துவிட்டனர். அதன்பின்பு, அவர்களை நம்ப வைக்க சில சான்றுகள் தேவைப்பட்டன என அந்த வீடியோவில் கூறுகிறார். கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2024-ல் தன்னுடைய சாதனையும் ஒரு பகுதியாக இருப்பதற்காக சாஹல் அதிக மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.

    • பெரும்பாலும் பெண்கள் பலர் தலைமுடியை தானமாக வழங்க முன்வருகின்றனர்.
    • சிறுவன் ஒருவர் தானமாக வழங்கியது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

    அவிநாசி :

    புற்றுநோயாளிகளுக்கு பலர் தங்களது தலைமுடிகளை தானமாக வழங்கி வருகின்றனர். பெரும்பாலும் பெண்கள் பலர் தலைமுடியை தானமாக வழங்க முன்வருகின்றனர். இந்தநிலையில் பெண்கள் மட்டும் தான் தானம் கொடுக்க முடியுமா?

    நானும் கொடுப்பேன் என்று, அழகாக தலைமுடியை வளர்த்து, சிறுவன் ஒருவர் தானமாக வழங்கியது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.அவிநாசி சேவூர் ரோடு, வ.உ.சி., காலனியை சேர்ந்தவர் வழக்கறிஞர் விஜய் ஆனந்த்.இவரது மனைவி சங்கீதா. இவர்கள் மகன் இறை எழில்பரிதி, நீளமாக தலைமுடியை வளர்த்து புற்றுநோயால்பாதித்தவர்களுக்கு, விக் தயாரிப்பதற்காக முடியை தானம் வழங்கியுள்ளார். முடிதானம் செய்த சிறுவனை அவிநாசி கிழக்கு ரோட்டரி நிர்வாகிகள் உட்பட பலர் பாராட்டினர்.

    ×