search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "were arrested"

    • வாய்க்கால் கரைப்பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்.
    • அவரை பிடித்து விசாரித்ததில் அவர் வாய்க்கால் கரை மறைவான இடத்தில் மது பாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    பவானி:

    பவானி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுளா மற்றும் போலீசார் பவானி அடுத்த போத்த நாயக்கனூர் அருகே கவுண்டன்புதூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது வாய்க்கால் கரைப்பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில் அவர் பவானி அருகே உள்ள நல்லிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த வேலுச்சாமி (32) என்பதும், அவர் வாய்க்கால் கரை மறைவான இடத்தில் மது பாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் வேலுச்சாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்ேபாது சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    விசாரணையில் அவர்கள் ராமநாதபுரத்தை சேர்ந்த தர்மா (24), சிவகங்கையை சேர்ந்த பிரபாகரன் (30) என தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 434 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும் ரூ. 22 ஆயிரத்து 770 ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மது பாட்டில்கள், பணமும் பறிமுதல் செய்யப்பட்டன. 

    • கே.என்.பாளையம் தாசிரிபாளையம் ரோடு பள்ளத்தில் 3 பேர் பஸ்சின் கண்ணாடியை உடைப்பதாக பேசிக்கொண்டிருந்தனர்.
    • இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தோஷ், சாமுண்டி, கருணாமூர்த்தி ஆகிய 3 பேர் மீதும் பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகேயுள்ள கே.என்.பாளையம் தாசிரிபாளையம் ரோடு பள்ளத்தில் 3 பேர் பஸ்சின் கண்ணாடியை உடைப்பதாக பேசிக்கொண்டிருந்தனர்.

    இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் கே.என்.பாளையம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (22) , சாமுண்டி (27) மற்றும் கருணா என்கிற கருணாமூர்த்தி (24) ஆகிய 3 பேர் அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்தால் பிரபலமாகி விடலாம் என்று அரசுக்கு அவப்பெயரையும், பொது சொத்துக்கு சேதம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ள திட்டமிட்டதாக தெரியவந்தது

    இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தோஷ், சாமுண்டி, கருணாமூர்த்தி ஆகிய 3 பேர் மீதும் பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    • சோதனை செய்ததில் அவர்களிடம் இருந்து 1.100 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் பெரிய சாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது வில்லர சம்பட்டி அடுத்த கரந்தான் காடு பகுதியில் 3 பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டி ருந்தனர். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் இருந்து 1.100 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் நடராஜன் (40), தனபால் (32) மற்றும் 17 வயது சிறுவன் என தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 1.100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவன் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

    • ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
    • அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 200 பறிமுதல் செய்யப்பட்டது.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள கள்ளியங்காடு வாய்க்கால் பகுதியில் சட்ட விரோதமாக சிலர் சூதாடி கொண்டு இருந்தனர்.

    இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் தண்ணீர்பந்தல் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 55), வாணிப்புத்தூரை சேர்ந்த பாலசுப்பிரமணி (47), சந்திரன் (38), டி.என்.பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி (53), ராஜன் (39), ஆறுமுகம் (56) என தெரிய வந்தது.

    அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்த னர்.

    அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 200 பறிமுதல் செய்யப்பட்டது.

    • ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த மல்லன்குழி கிராமத்தில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ரூ.39 ஆயிரத்து 260 மற்றும் 5 மோட்டார் சைக்ள்கள், 9 செல்போன்கள், 15 சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த மல்லன்குழி கிராமத்தில் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் போலீசார் அந்த பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது தேவப்பா என்பவர் தோட்டத்தில் உள்ள வீட்டில் 11 பேர் சூதாடி கொண்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் மல்லன்குழி கிரா மத்தை சேர்ந்த பிரசாந்த் (29), ஜெகதீஷ் (50), ராமண்ணா (45), பிரபாகரன் (23), தோவப்பா (35), கல்மண்புரத்தை சேர்ந்த மல்லேதேவர் (40), தமிழ்புர த்தை சேர்ந்த சித்தமல்லு (35), அருள்வாடி சித்தமல்லு (35), சிவசங்கர் (40), சுப்பிர மணி (42), சுப்பிரமணி (45) என தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.39 ஆயிரத்து 260 மற்றும் 5 மோட்டார் சைக்ள்கள், 9 செல்போன்கள், 15 சீட்டு கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து அவர்கள் 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஈரோடு டவுன் போலீசார் கொங்காலம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் சந்தேகம் படுபடியாக நின்று கொண்டிருந்தார். அவரை சோதனை செய்தபோது 15 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு டவுன் சப்- இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையிலான போலீசார் கொங்காலம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் சந்தேகம் படுபடியாக நின்று கொண்டிருந்தார்.

    அவரைப் பிடித்து விசாரித்தனர். அவர் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா தும்பை பட்டி , கக்கன் நகரைச் சேர்ந்த திருமூர்த்தி (40) என தெரிய வந்தது. அவரை சோதனை செய்தபோது 15 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

    அனுமதி இன்றி அவற்றை விற்பனைக்கு கொண்டு சென்றது அவர் ஒப்புக்கொண்டார்.

    இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமூர்த்தியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 மது பாட்டில்கள், ரொக்க பணம் ரூ.2,100 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பவானி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையான போலீசார் பவானி - அந்தியூர் பிரிவில் சோதனையில் ஈடுபட்டபோது முதியவர் ஒருவர் சந்தேகம் படும்படியாக நின்று கொண்டு இருந்தார்.

    அவரை சோதனை செய்தபோது அனுமதி இன்றி 6 மது பாட்டில்களை விற்பனைக்கு கொண்டு சென்றதை ஒப்புக்கொ–ண்டார். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (73) என்ன தெரிய வந்தது.

    இதையடுத்து பவானி போலீசார் அவரை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேப்போல் சிறுவளூரில் அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட ஆனந்த் குமார் (33) போலீசார் கைது செய்தனர்.

    • டி.என்.பாளையம் அருகே சந்தன மரம் வெட்டி கடத்த முயன்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது 4 பேர் கும்பல் தப்பி ஓடினர்.
    • தப்பியோடிய 4-நபர்களும் பிடிபட்டால், சட்ட விரோதமாக சந்தன மரங்களை கடத்தி யாருக்கு? இந்த கும்பல் விற்பனை செய்கின்றனர் என்பது போன்ற தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கணக்கம்பாளையம் கிராமம் வேதபாறை பள்ளம் கத்தாழைமடுவு என்ற இடத்தில் சந்தன மரங்களை ஒரு கும்பல் வெட்டி கடத்துவதாக டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

    வனச்சரகர் கணேஷ் பாண்டியன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடமான கத்தாழை மடுவு என்ற இடத்தில் சென்று பார்த்த போது 6-பேர் கொண்ட கும்பல் சந்தன மரங்களை வெட்டி கட்டைகளை எடுத்து வைத்து கொண்டு இருந்தனர்.

    வனத்துறையினர் வருவதை பார்த்த கடத்தல் கும்பல் தப்பியோட முயன்ற போது 2-பேரை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர், இதில் 4-பேர் தப்பியோடினர்.

    பிடிபட்ட 2- நபரிடம் டி.என்.பாளையம் வனத்துறையினர் விசாரணை நடத்தியதில், கள்ளிப்பட்டி பகவதி நகர் பகுதியைச் சேர்ந்த சடையன் என்பவரது மகன் பெரியசாமி (24), நாகராஜ் (47), முத்து (45), சடையன் (55), மாருச்சாமி (40) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6- பேர் கொண்ட கும்பல் சந்தன மரங்களை வெட்டி எடுத்து விற்பனை ஈடுபட முயன்றது தெரியவந்தது.

    சம்பவ இடத்தில் பிடிபட்ட பெரியசாமி மற்றும் 17-வயது சிறுவன் என இருவரிடம் இருந்து சுமார் 8 கிலோ அளவுள்ள சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற சம்பவத்தில் தப்பியோடிய நாகராஜ், முத்து, சடையன், மாருச்சாமி ஆகிய 4- நபர்களை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    வனத்துறையினர் கூறுகையில், இந்த 6 பேர் கொண்ட கும்பல் சந்தன மரங்களை வெட்டி டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் பகுதியில் மொத்த விற்பனையில் ஈடுபட இருந்ததாக தெரிவித்தனர்.

    தப்பியோடிய 4-நபர்களும் பிடிபட்டால், சட்ட விரோதமாக சந்தன மரங்களை கடத்தி யாருக்கு? இந்த கும்பல் விற்பனை செய்கின்றனர் என்பது போன்ற தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஈரோடு சூரம்பட்டி போலீசார் காந்திஜி வீதி, தீயணைப்பு நிலையை சந்து பகுதியில் ரோந்து மேற்கொண்டனர்.
    • அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் சட்ட விரோத விற்பனையை தடுக்கும் விதமாக போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி, ஈரோடு சூரம்பட்டி போலீசார் காந்திஜி வீதி, தீயணைப்பு நிலையை சந்து பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் (29) கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து, அவரிட மிருந்து 100 கிராம் கஞ்சாவை மீட்டனர். தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    இதேபோல, பவானி போலீசார் மேற்கொண்ட சோதனையில், ஜம்பை, மின்வாரிய அலுவலகம் அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவது தெரிய வந்தது.

    அதைத் தொடர்ந்து, அங்கு கஞ்சா விற்பனை செய்ததாக ஜம்பையைச் சேர்ந்த சுமதி (40) ஒரிச்சேரிப் புதூரைச் சேர்ந்த ஆறுமுகம் (60) ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிட மிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

    • கஞ்சா உபயோகப்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், கஞ்சா விற்பனை செய்வோர் மீது மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து மாணவ, மாணவிகளிடையே எடுத்துரைக்கப்பட்டது.
    • தொடர்ந்து சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ப்பட்டுள்ளனர் என்றார்.

    ஈரோடு:

    தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனையை முற்றி லும் ஒழிக்கும் நோக்கில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து உட் கோட்ட போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளில் கஞ்சா தடுப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டன.

    இதில் கஞ்சா உபயோக ப்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், கஞ்சா விற்பனை செய்வோர் மீது மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து மாணவ, மாணவிகளிடையே எடுத்துரைக்கப்பட்டது.

    மாவட்டம் முழுவதும் 41 இடங்களில் இந்த விழிப்பு ணர்வு கூட்டங்கள் நடை பெற்றன. மேலும், கஞ்சா விற்பனை செய்யும் நபர்களைக் கைது செய்ய ஈரோடு மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலை மையில் 53 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த குழுக்கள் மூலமாக நேற்று ஒரே நாளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 9 பேர் மீது 5 வழக்குகள் பதிவு செய்ய ப்பட்டுள்ளன.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் கூறும்போது,

    ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா, போதை பொருள் விற்பனையை தடுக்கும் வகையில் பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டில் இதுவரை 144 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 107 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ய ப்பட்டு, 189 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், தொடர்ந்து சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ப்பட்டுள்ளனர் என்றார். 

    • கருங்கல்பா ளையம் காமாட்சி அம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல் பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது கருங்கல்பா ளையம் காமாட்சி அம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போது ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரிய வந்தது. போலீசை பார்த்ததும் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றது. அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கிருபாகரன் (36) சந்திரன் (40), ரமேஷ் (46), தயாநிதி (45), செந்தில் குமார்(45), சிவா (40) எனவும் இவர்கள் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரிய வந்தது.

    இவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், ரூ. 22 ஆயிரத்து 900, 5 மோட்டார் சைக்கிள்கள், 7 செ ல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் சட்டம் - ஒழுங்கு மற்றும் மது விலக்குப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    • அப்போது அனுமதியின்றி மது விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 9 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் சட்டம் - ஒழுங்கு மற்றும் மது விலக்குப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் கனிராவுத்தர் குளம் அருகே வீரப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த அஸ்லம் (33) சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 6 மதுபாட்டில்களையும் பறி முதல் செய்தனர்.

    இதேபோல திங்களூர் போலீசார் மேற்கொண்ட சோதனையில், நிச்சா ம்பாளையம், கீழ்பவானி வாய்க்கால் அருகே அதே பகுதியைச் சேர்ந்த குமார் (48) என்பவர் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சிறுவலூர் போலீசார் மேற்கொண்ட சோதனையில், குட்ட ப்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக, அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் (42) மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைதுசெய்தனர். அவரிடமிருந்து 9 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    • போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் 4 பேர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
    • சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அருண்குமார் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1,250 மதிப்புள்ள 125 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில், சட்ட விரோதமாக மது மற்றும் கஞ்சா விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் சட்டம் - ஒழுங்கு மற்றும் மது விலக்குப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி, மாவட்டத்தில் அம்மாபேட்டை, பவானி, மொடக்குறிச்சி, வரப்பாளையம் காவல் நிலைய எல்லைகளில் போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் 4 பேர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்த 25 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேப்போல் கருங்கல்பாளையம் போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது பவானி ரோடு, நெரிகல்மேடு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அருண்குமார் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1,250 மதிப்புள்ள 125 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    ×