search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "11 வீரர்கள் காயம்"

    • சிவ ஆலயங்களில் பழமையானது உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில்
    • இந்த ஆண்டு விசாகத் திருவிழா வருகிற 11மற்றும்12-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.

    திசையன்விளை:

    தமிழ்நாட்டில் உள்ள சிவ ஆலயங்களில் பழமையானது உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில். இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் வைகாசி விசாகத் திருவிழா முக்கிய விழாவாகும்.

    இந்த ஆண்டு விசாகத் திருவிழா வருகிற 11-ந் தேதி (சனிக்கிழமை)தொடங்கி 12-ந் தேதி (ஞாயிற்றுகிழமை) வரை 2 நாட்கள் நடக்கிறது.

    11 -ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறப்பு, மதியம் உச்சிகால பூஜை மாலையில் சமய சொற்பொழிவு, இரவு தேவார இன்னிசை, சமய சொற்பொழிவு, ராக்கால பூஜை நடைபெறுகிறது.

    12-ந் தேதி விசாகத் திருநாள் காலை கலை மாமணி மணிகண்டன் குழுவினரின் மங்க இசை, மதியம் உச்சிகால பூஜை, மாலையில் சமய சொற்பொழிவு, இரவு செய்க தவம், பாரதம் காட்டும் வாழ்க்கை நெறி, கந்தபுராணம் காட்டும் பக்த நெறி,

    பெரியபுராணம் காட்டும் பக்தியின் மகிமை, இந்துமதம் என்ற தலைப்புகளில் சமய சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி முதலியவை நடக்கிறது. நள்ளிரவு சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து மகர மீனுக்கு காட்சி கொடுத்தல் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா ப.க.சோ.த.ராதாகிருஷ்ணன் செய்துவருகிறார்.

    ஜார்க்கண்டின் சரைகேலா பகுதியில் நக்சலைட்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 11 சி.ஆர்.பி.எப். வீரர்கள் காயம் அடைந்தனர்.
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலம் சரைகேலாவில் உள்ள குசாய் பகுதியில் சி.ஆர்.பி.எப். வீரர்களுடன் இணைந்து மாநில போலீசாரும் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த நக்சல்கள் திடீரென கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள், மாநில போலீசார் என 11 பேர் காயமடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    பிரேசில் நாட்டில் மர்ம நபர்கள் மது பாருக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். BrazilShooting
    ரியோ டி ஜெனிரோ:

    பிரேசில் நாட்டின் பாரா மாநிலம், பெலம் நகரில் உள்ள ஒரு மது பாரில் நேற்று மாலை வாடிக்கையாளர்கள் பலர் உற்சாகமாக மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது முகமூடி அணிந்தபடி ஒரு பைக் மற்றும் 3 கார்களில் வந்த நபர்கள், பாருக்குள் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    சிறிது நேரம் துப்பாக்கியால் சுட்ட அந்த நபர்கள், அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த கொடூர தாக்குதலில் 6 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.



    துப்பாக்கி சூட்டுக்கான காரணம் தெரியவில்லை. தாக்குதல் நடைபெற்ற மது பாரில் போதைப் பொருட்கள் விற்பனை தாராளமாக நடைபெறுகிறது. எனவே, போதைப்பொருள் விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #BrazilShooting
    11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. 95 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். #Plus1Result
    சென்னை:

    தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வினை சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததையடுத்து தேர்வு முடிவு இன்று வெளியிடப்படுள்ளது.



    11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.5 சதவீதமும், மாணவர்கள் 93.3 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகள் 90.6 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 2636 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
     
    www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

    பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) மூலமாக தேர்வு முடிவு அனுப்பப்படும். தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்பப்படுகிறது.

    இணையதளம் வழியாக மதிப்பெண் பட்டியலும் வழங்கப்படும். அரசு தேர்வுத் துறையால் அச்சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் வரை மட்டுமே இந்த மதிப்பெண் பட்டியல் செல்லுபடியாகும். வருகிற 14-ந் தேதி பிற்பகல் முதல் தாங்கள் படித்த மற்றும் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாக மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம். 16-ந் தேதி பிற்பகல் முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு வருகிற 10, 11-ந் தேதி மற்றும் 13-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகலுக்கு ஒரு பாடத்துக்கு ரூ.275-ம், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு ரூ.305-ம், மற்ற பாடங்களுக்கு ரூ.205-ம் கட்டணமாக செலுத்தவேண்டும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்கள் பணமாக செலுத்தவேண்டும்.

    11-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும், வருகை புரியாதவர்களுக்கும் ஜூன் மாதம் 14-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும். #Plus1Result
     
    11-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்படுகிறது. #ExamResult
    சென்னை:

    தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வினை சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததையடுத்து 11-ம் வகுப்புக்கான தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

    www.tnr-esults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

    பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) மூலமாக தேர்வு முடிவு அனுப்பப்படும். தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்பப்படும்.

    இணையதளம் வழியாக மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். அரசு தேர்வுத் துறையால் அச்சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் வரை மட்டுமே இந்த மதிப்பெண் பட்டியல் செல்லுபடியாகும். வருகிற 14-ந் தேதி பிற்பகல் முதல் தாங்கள் படித்த மற்றும் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாக மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம். 16-ந் தேதி பிற்பகல் முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு வருகிற 10, 11-ந் தேதி மற்றும் 13-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகலுக்கு ஒரு பாடத்துக்கு ரூ.275-ம், மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு ரூ.305-ம், மற்ற பாடங்களுக்கு ரூ.205-ம் கட்டணமாக செலுத்தவேண்டும். விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்கள் பணமாக செலுத்தவேண்டும்.

    11-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும், வருகை புரியாதவர்களுக்கும் ஜூன் மாதம் 14-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும்.

    மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
    மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் சொகுசு பஸ் சாலையில் இருந்து விலகி பக்கவாட்டில் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். #BusAccident #MexicoBusAccident
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டியில் இருந்து சுமார் 40 பயணிகளுடன் டோர்ரியோன் நகரை நோக்கி ஒரு சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

    (உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை) ஜகட்டெகஸ் நகராட்சிக்கு உட்பட்ட சாலையில் ஒரு குறுகிய வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையை விட்டு விலகி பக்கவாட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 11 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



    காயமடைந்த சுமார் 20 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #BusAccident #MexicoBusAccident
    பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்கள் பயன்படுத்தும் 11 ஆவணங்களை தேர்தல் கமி‌ஷன் வெளியிட்டுள்ளது. #ElectionCommission #Parliamentelection #LSPolls

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்கள் பயன்படுத்தும் 11 ஆவணங்களை தேர்தல் கமி‌ஷன் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    1. பாஸ்போர்ட்

    2. ஓட்டுநர் உரிமம்

    3. மத்திய -மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் - வரையறுக்கப்பட்ட பொதுநிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாளஅட்டை

    4.புகைப்படத்துடன் கூடிய வங்கி - அஞ்சலக கணக்குப் புத்தகம்

    5.பான்கார்டு

    6. தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு


    7.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணிஅட்டை

    8.தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட்கார்டு

    9.புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதியஆவணம்

    10. பாராளுமன்ற- சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை

    11.ஆதார் கார்டு

    வாக்களிக்கும்போது இந்த 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு வாக்காளர் வேறொரு சட்ட மன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருப்பாரேயானால் அந்த அடையாள அட்டையையும் தேர்தல்ஆணையம் காட்டும் ஆவணமாகப் பயன்படுத்தலாம். ஆனால் அந்த வாக்காளருடைய பெயர் அந்த வாக்குச் சாவடிக்கு உரியவாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ElectionCommission #Parliamentelection #LSPolls

    இஸ்ரேலில் ஈரானுக்கு உளவு பார்த்த முன்னாள் மந்திரி கோனன் செகேவுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். #GonenSegev
    ஜெருசலேம்:

    இஸ்ரேலில், கடந்த 1995-96-ம் ஆண்டில் எரிசக்தித்துறை மந்திரியாக பதவி வகித்தவர் கோனன் செகேவ். இவர் இஸ்ரேலின் முக்கிய எதிரி நாடான ஈரானுக்காக உளவு பார்த்தாக குற்றச்சாட்டு எழுந்தது. 2012-ம் ஆண்டு நைஜீரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தில் அந்நாட்டு அதிகாரிகளைச் சந்தித்து, இஸ்ரேல் குறித்த ரகசிய தகவல்களை அவர் வழங்கியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த மாதம் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த வழக்கில் கோனன் செகேவுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார்.  #GonenSegev

    11 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வந்ததும் அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #DMK

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட வேந்தோணி கிராமத்தில் தி.மு.க. ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    தி.மு.க. தேர்தல் பணிகள் தொடங்கி உள்ளது. கிராமங்களில் இருந்து சேவை செய்ய முடிவு எடுத்துள்ளேன். உங்கள் குறைகளை எடுத்துச் சொல்லி அதைக் கேட்டு முடிந்த அளவு நிவர்த்தி செய்ய இங்கு வந்துள்ளேன். தமிழ்நாட்டில் 12617 கிராம ஊராட்சிகள் உள்ளன.

    அனைத்து ஊராட்சிகளிலும் இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம். முதலில் திருவாரூரில் தொடங்கப்பட்டது. தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமென விரும்பி ஏராளமான பெண்கள் வந்துள்ளீர்கள். உங்கள் குறைகளை அதிகாரிகளிடம் சொல்லி நிறைவேற்றுவேன். முடியாதவற்றை ஆட்சிக்கு வந்தவுடன் செய்து கொடுப்போம்.

    பரமக்குடி தொகுதி உள்பட 18 தொகுதிகளில் எம்.எல். ஏ.க்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

    ஓராண்டு காலமாக அந்த தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் இல்லை. இன்னும் ஒரு வாரத்தில் பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் தீர்ப்பு வர உள்ளது. அது வந்து விட்டால் இந்த ஆட்சி முடிந்து விடும்.

    பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. எம்.பி. தேர்தலோடு 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் வர உள்ளது.

    தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். விவசாயத்திற்கு 1989-ல் தி.மு.க. ஆட்சியில் தான் இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. 7000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

    கலைஞர் முதலமைச்சர் ஆனதும் முதல் கையெழுத்து போட்டது அதுதான். அதே போல் 2.2.2011-ம் ஆண்டு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜனார்த்தனன் தலைமையில் தனிநபர் கமிட்டி அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பட்டியல் இனத்தில் உள்ள 7 உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடப்படும்.

    மேற்கண்டவாறு அவர் பேசினார்.

    பின்பு தெளிச்சாத்த நல்லூரில் நடந்த பூத் கமிட்டி முகவர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    தண்ணீரில்லா காடு பனிஷ்மென்ட் ஏரியா என்று அழைக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 616 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை பத்து மாதத்தில் செயல்படுத்தி இந்த மாவட்ட மக்களின் தண்ணீர் தாகத்தை தீர்த்தது தி.மு.க. அரசு.

    அப்போது நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்து அந்தப் பணிகளை மேற் கொண்டேன். அ.தி.மு.க. ஆட்சி அதை முறையாக பயன்படுத்தவில்லை.

    மக்களைப் பற்றியும் அவர்கள் படும் சிரமங்கள் பற்றியும் இந்த ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை. இந்த ஆட்சியை காப்பாற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு மக்களின் வரி பணத்தை கொடுத்து தக்க வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் சந்தேகத்துக்கு தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முறையாக விசாரணை நடத்தப்படும். உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை சிறைக்கு அனுப்புவது தான் முதல் வேலை.

    கமி‌ஷனுக்கும், கரப்சனுக்கும் பஞ்சாயத்து செய்கிறார்கள். நான் மக்கள் பிரச்சினைக்கு பஞ்சாயத்து செய்கிறேன். மோடி நம் நாட்டின் பிரதமர். அவர் டெல்லியில் இல்லாமல் உலகத்தை சுற்றுகிறார்.

    மேற்கண்டவாறு அவர் பேசினார்.

    11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு வந்ததும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #MLADisqualify

    சென்னை:

    சென்னை மேற்கு மாவட்டம் மயிலை பகுதி தி.மு.க. பிரமுகர் வில்லவன் இல்லத் திருமண விழா நுங்கம்பாக்கத்தில் நடந்தது. மணமக்கள் கதிரவன்- புனிதா திருமணத்தை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

    அப்போது மணமக்களை வாழ்த்தி மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-

    இங்கு நடைபெற்ற திருமணம் ஒரு சீர்திருத்த திருமணமாக, சுயமரியாதை உணர்வோடு திருமணம் நடைபெற்றுள்ளது.

    இதுபோன்ற சீர்திருத்த திருமணங்கள், சுயமரியாதை உணர்வோடு நடைபெறும் திருமணங்களுக்கு 1967-ம் ஆண்டுக்கு முன்பு சட்டப்படி அங்கீகாரம் கிடைக்காத நிலை இருந்தது.

    1967-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்றது. அப்போது முதல்- அமைச்சராக அண்ணா பொறுப்பேற்றதும், சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லும் என்று சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி தந்தார்.

    அந்த வகையில் இந்த திருமணம் சட்டப்படி, முறைப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்துடன் நடந்துள்ளது. எனவே நமக்கு தெரிந்த, புரிந்த, நாம் அறிந்த, நமது தாய்மொழியான தமிழ் மொழியில் இந்த திருமணம் நடந்துள்ளது.

    அப்படிப்பட்ட அழகு தமிழ்மொழிக்கு செம்மொழி என்ற அங்கீகாரத்தை பெற்று தந்தவர் தலைவர் கலைஞர். இன்றைக்கு தமிழை எப்படியாவது திட்டமிட்டு, இந்திமொழியை, சமஸ்கிருதம் மொழியை கொண்டு வந்து திணித்து அதன்மூலம் தமிழுக்கு ஒரு ஆபத்து ஏற்படுத்துகிற நிலையில் மத்தியில் உள்ள மோடி ஆட்சி ஈடுபட்டு வருகிறது. அதை தவிடு பொடியாக்கும் வகையில் தமிழ் பெயர்களை சூட்டுகிற அந்த சூழ்நிலையை நாம் ஏற்படுத்த வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தல் வரப்போகிறது. அது முடிந்ததும் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி வரப்போகிறது என்று இங்கு பேசினார்கள்.

    எனக்கு ஒரு சந்தேகம், பாராளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டசபைக்கும் பொதுத் தேர்தல் வந்துவிடும் என தெரிகிறது. காரணம் இன்று தமிழகத்தில் ஒரு மைனாரிட்டி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியை மத்தியில் உள்ள பா.ஜனதா ஆட்சி முட்டுக்கொடுத்து காப்பாற்றி கொண்டிருக்கிறது.

    2017-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக சட்டசபையில் ஓ.பன்னீர் செல்வம் உள்பட 11 எம்.எல். ஏ.க்கள் வாக்களித்தது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் 11 எம்.எல்.ஏ.க்களின் பதவி செல்லுமா? செல்லாதா? என்பதில் பிப்ரவரி முதல் வாரத்தில் தீர்ப்பு வர உள்ளது. அப்போது நிச்சயமாக தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி இருக்காது.

    இதை சொன்னால் நான் கனவு காண்பதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். நான் கனவு காணவில்லை. நினைவாக நடக்க போகிறது.

    உங்கள் ஆட்சியை கவிழ்க்க நாங்கள் கனவா காண வேண்டும்? கனவெல்லாம் காண வேண்டிய அவசியமே கிடையாது. நினைவாகத்தான் உருவாக்கப் போகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்கள். #MKStalin #MLADisqualify

    ஜம்மு காஷ்மீரில் இன்று பயணிகள் பஸ் ஒன்று நிலைதடுமாறி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர். #JKAccident #BusFallsIntoGorge
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் லோரன் என்ற இடத்தில் இருந்து பூஞ்ச் நகருக்கு இன்று பயணிகள் பஸ் சென்றுகொண்டிருந்தது. பிளேரா மலைப்பகுதியில் சென்றபோது, அந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையைவிட்டு விலகி, ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ் கடுமையாக சேதமடைந்தது. பயணிகள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடினர்.



    விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த கோர விபத்தில் 11 பேர் பலியானார்கள். 17 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. #JKAccident #BusFallsIntoGorge
    அசாமில் சென்ற இன்டர்சிட்டி ரெயிலில் திடீரென குண்டு வெடித்ததில் அதில் பயணம் செய்த 11 பேர் காயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. #AssamExplosion #IntercityExpressExplosion
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் உள்ள காமக்யா ரெயில் நிலையத்தில் இருந்து டெகர்கோன் ரெயில் நிலையத்திற்கு இன்டர்சிட்டி பயணிகள் ரெயில் சென்று வருகிறது.

    இந்நிலையில், காமக்யா - டெகர்கோன் இன்டர்சிட்டி ரெயில் இன்று வழக்கம்போல் புறப்பட்டது. இந்த ரெயில் உதால்குரி என்ற பகுதியை இரவு 7.05 மணிக்கு வந்தடைந்தது.

    அப்போது அந்த ரெயிலின் ஒரு பெட்டியில் திடீரென குண்டு வெடித்தது. இதில் அந்த ரெயிலில் பயணம் செய்த 11 பேர் காயம் அடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. #AssamExplosion #IntercityExpressExplosion
    ×