என் மலர்

  நீங்கள் தேடியது "Naxals attack"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜார்க்கண்டின் சரைகேலா பகுதியில் நக்சலைட்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 11 சி.ஆர்.பி.எப். வீரர்கள் காயம் அடைந்தனர்.
  ராஞ்சி:

  ஜார்க்கண்ட் மாநிலம் சரைகேலாவில் உள்ள குசாய் பகுதியில் சி.ஆர்.பி.எப். வீரர்களுடன் இணைந்து மாநில போலீசாரும் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

  அப்போது அங்கு வந்த நக்சல்கள் திடீரென கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள், மாநில போலீசார் என 11 பேர் காயமடைந்தனர்.

  தகவலறிந்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சத்தீஸ்கர் மாநில வனப்பகுதியில் நடந்த கடும் துப்பாக்கி சண்டையில், 2 மாவோயிஸ்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். #Chhattisgarh #NaxalsKilled
  ராய்ப்பூர்:

  சத்தீஸ்கர் மாநிலத்தில் வன்முறை தாக்குதல்கள் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மாவோயிஸ்டுகளை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவோயிஸ்டுகள் பதுங்கியிருக்கும் பகுதிகளில், உள்ளூர் போலீசாருடன் சிறப்பு அதிரடிப்படை மற்றும் மாவட்ட ரிசர்வ் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஏராளமான மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.

  இந்நிலையில், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த தண்டேவாடா மாவட்டம் கொண்டராஸ் வனப்பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் சிறப்பு அதிரடிப்படை மற்றும் மாவட்ட ரிசர்வ் படை வீரர்கள் ரோந்து சென்றனர். அப்போது, அவர்களை நோக்கி மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.

  இரு தரப்பினருக்குமிடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. சண்டை நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கிகள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

  மாவோயிஸ்டுகளுக்கு எதிரான இன்றைய தேடுதல் வேட்டையில், மாவட்ட ரிசர்வ் படையின் பெண் கமாண்டோக்களும் இடம்பெற்றிருந்ததாக மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அபிஷேக் பல்லவா தெரிவித்தார். இந்த கமாண்டோபடையில், சரண் அடைந்த பெண் மாவோயிஸ்டுகள், சரண் அடைந்த மாவோயிஸ்டுகளின் மனைவிகள் என 30 பெண்கள் இடம்பெற்றிருந்ததாகவும் அவர் கூறினார். #Chhattisgarh #NaxalsKilled
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக எம்எல்ஏ கொலையில் தொடர்புடைய 2 மாவோயிஸ்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். #ChhattisgarhEncounter #NaxalsGunnedDown
  ராய்ப்பூர்:

  சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பீமா மாண்டவி உள்ளிட்டோர் கடந்த 9ம் தேதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் பா.ஜ.க.வினர் சென்ற கார்களை நோக்கி சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இதில் பாஜக எம்.எல்.ஏ. பீமா மாண்டவி உள்பட பாதுகாப்பு படையை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டு அமைப்பினரை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

  இந்நிலையில், தவுலிகர்கா கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட ரிசர்வ் படை வீரர்கள் இன்று அதிகாலை அந்த இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்குமிடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

  இந்த சண்டையில், இரண்டு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். ஒருவன் பலத்த காயமடைந்தான். அவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகளிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

  கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகள் வர்கீஸ் மற்றும் லிங்கா என அடையாளம் காணப்பட்டுள்ளது. எம்எல்ஏ மாண்டவி மற்றும் பாதுகாவலர்களை கொன்றதில் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. #ChhattisgarhEncounter #NaxalsGunnedDown

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் அதிகாரிகளை குறிவைத்து மாவோயிஸ்டுகள் இன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். #ChhattisgarhElections #DantewadaBlast #NaxalsAttack
  ராய்ப்பூர்:

  90 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் உள்ளிட்ட 18 தொகுதிகளில் இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என மாவேயிஸ்டுகள் மிரட்டி உள்ளதால், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  இந்த பாதுகாப்பையும் மீறி தண்டேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர்.  தேர்தல் பணிக்காக இன்று அதிகாலையில் தேர்தல் அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சென்றபோது துமக்பால்-நயனார் சாலையில் குண்டு வெடித்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதிகாரிகள் பாதுகாப்பாக தங்கள் வாக்குச்சாவடிக்கு சென்று சேர்ந்தனர்.


  முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் முதல்வர் ராமன் சிங், மந்திரிகள் கேதர் காஷ்யப், மகேஷ் காக்தா, பாஜக எம்பி விக்ரம் உசேந்தி, காங்கிரஸ் கட்சியின் நடப்பு எம்எல்ஏக்கள் போன்ற முன்னிணி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 10 மணி நிலவரப்படி 10.7 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

  இதற்கிடையே, சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலில், அதிக அளவிலான வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். #ChhattisgarhElections #DantewadaBlast #NaxalsAttack
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சத்தீஸ்கரில் பேருந்து மீது மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர் உள்ளிட்ட 4 பேர் பலியாகினர். #ChhattisgarhElection #NaxalsAttack
  ராய்ப்பூர்:

  சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. எனவே, பாதுகாப்பு படையினரை குறிவைத்து மாவோயிஸ்டுகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

  இந்நிலையில், தண்டேவாடா மாவட்டம் பச்சேலி அருகே ஒரு வளைவில் சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்தை மாவோயிஸ்டுகள் இன்று வெடிகுண்டு வைத்து தகர்த்தனர். இதில் பேருந்தின் பெரும்பகுதி சேதமடைந்து, அதில் பயணம் செய்த பயணிகள் உடல் உறுப்புகள் சிதைந்து உயிருக்கு போராடினர்.  விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 3 பொதுமக்கள் மற்றும் ஒரு சிஐஎஸ்எப் வீரர் என 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சிலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

  சத்தீஸ்கரில் வரும் 12ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியிருப்பது பாதுகாப்புக்கு சவால் விடும் வகையில் உள்ளது. #ChhattisgarhElection #NaxalsAttack

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் இன்று நடத்திய திடீர் தாக்குதலில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் மற்றும் 2 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர். #Chhattisgarh #NaxalsAttack #DoordarshanCrewKilled
  ராய்ப்பூர்:

  சத்தீஸ்கர் மாநிலத்தில் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக (நவம்பர் 12, 20) தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ளூர் போலீசாருடன் ராணுவ வீரர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.  இந்நிலையில், தேர்தல் பணிகள் தொடர்பாக செய்தி சேகரிப்பதற்காக தூர்தர்ஷன் குழுவினர் தண்டேவாடா மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனர். இன்று ஆரன்பூர் காட்டுப்பகுதி வழியாக அவர்கள் சென்றனர். அவர்களுக்கு பாதுகாப்பாக போலீசாரும் சென்றனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த் மற்றும் ஆரன்பூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ருத்திர பிரதாப், கான்ஸ்டபிள் மங்கலு  உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் விரைந்துள்ளனர்.

  கடந்த சில தினங்களுக்கு முன்பு பிஜப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 4 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #Chhattisgarh #NaxalsAttack #DoordarshanCrewKilled

  ×