சத்தீஸ்கரில் பஞ்சாயத்து தலைவரை கொன்று நக்சல்கள் அட்டூழியம்

சத்தீஸ்கரின் தண்டேவாடா பகுதியில் உள்ள பஞ்சாயத்து தலைவரை நக்சலைட்டுகள் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரோந்து பணியில் போலீசார்
ரோந்து பணியில் போலீசார்
Published on

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்கள் மற்றும் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. பணக்காரர்கள் மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்திவரும் இந்த குழுவினர் அவ்வப்போது போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரையும் தாக்கிக் கொல்கின்றனர்.

தடைசெய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த இந்த குழுவினரை தடுத்து நிறுத்த நக்சல் ஒழிப்பு படை என்ற தனிப்படை பிரிவு இயங்கி வருகிறது. காட்டுப் பகுதிகளில் மறைந்திருக்கு நக்சலைட்களையும், மாவோயிஸ்ட்களையும் இந்த தனிப்படையினர் கைது செய்தும், சுட்டுக் கொன்றும் வருகின்றனர்.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள சோடே குட்ரா கிராமத்தில் நேற்று இரவு புகுந்த நக்சலைட்டுகள் அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவரை கொன்று விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com