சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல்- 3 பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பலியாகினர்.
மாவோயிஸ்டு தாக்குதலில் சிதறிய வாகனம் (கோப்பு படம்)
மாவோயிஸ்டு தாக்குதலில் சிதறிய வாகனம் (கோப்பு படம்)
Published on

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம் காங்கர் மாவட்டம் காஸ்ரண்டா- துமாபால் கிராமங்களுக்கு இடையே ரெயில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணிக்காக டீசல் ஏற்றப்பட்ட டேங்கர் லாரி நிறுத்தப்பட்டிருந்தது. இந்த லாரியை குறிவைத்து மாவோயிஸ்டுகள் இன்று தாக்குதல் நடத்தினர். டேங்கர் லாரியில் டிரைவர் கவனிக்காத நேரத்தில், அதில் வெடிகுண்டை வைத்து வெடிக்கச் செய்துள்ளனர்.

இதில் டேங்கர் லாரி தூக்கி வீசப்பட்டு சிதைந்தது. லாரியில் இருந்த டிரைவர் உள்ளிட்ட 3 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com