என் மலர்

  செய்திகள்

  கிராமசபை கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசினார்.
  X
  கிராமசபை கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசினார்.

  11 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வந்ததும் அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் - மு.க.ஸ்டாலின்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  11 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வந்ததும் அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #DMK

  பரமக்குடி:

  ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட வேந்தோணி கிராமத்தில் தி.மு.க. ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

  தி.மு.க. தேர்தல் பணிகள் தொடங்கி உள்ளது. கிராமங்களில் இருந்து சேவை செய்ய முடிவு எடுத்துள்ளேன். உங்கள் குறைகளை எடுத்துச் சொல்லி அதைக் கேட்டு முடிந்த அளவு நிவர்த்தி செய்ய இங்கு வந்துள்ளேன். தமிழ்நாட்டில் 12617 கிராம ஊராட்சிகள் உள்ளன.

  அனைத்து ஊராட்சிகளிலும் இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம். முதலில் திருவாரூரில் தொடங்கப்பட்டது. தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமென விரும்பி ஏராளமான பெண்கள் வந்துள்ளீர்கள். உங்கள் குறைகளை அதிகாரிகளிடம் சொல்லி நிறைவேற்றுவேன். முடியாதவற்றை ஆட்சிக்கு வந்தவுடன் செய்து கொடுப்போம்.

  பரமக்குடி தொகுதி உள்பட 18 தொகுதிகளில் எம்.எல். ஏ.க்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

  ஓராண்டு காலமாக அந்த தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் இல்லை. இன்னும் ஒரு வாரத்தில் பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் தீர்ப்பு வர உள்ளது. அது வந்து விட்டால் இந்த ஆட்சி முடிந்து விடும்.

  பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. எம்.பி. தேர்தலோடு 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் வர உள்ளது.

  தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். விவசாயத்திற்கு 1989-ல் தி.மு.க. ஆட்சியில் தான் இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. 7000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

  கலைஞர் முதலமைச்சர் ஆனதும் முதல் கையெழுத்து போட்டது அதுதான். அதே போல் 2.2.2011-ம் ஆண்டு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜனார்த்தனன் தலைமையில் தனிநபர் கமிட்டி அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

  தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பட்டியல் இனத்தில் உள்ள 7 உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடப்படும்.

  மேற்கண்டவாறு அவர் பேசினார்.

  பின்பு தெளிச்சாத்த நல்லூரில் நடந்த பூத் கமிட்டி முகவர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

  தண்ணீரில்லா காடு பனிஷ்மென்ட் ஏரியா என்று அழைக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 616 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை பத்து மாதத்தில் செயல்படுத்தி இந்த மாவட்ட மக்களின் தண்ணீர் தாகத்தை தீர்த்தது தி.மு.க. அரசு.

  அப்போது நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்து அந்தப் பணிகளை மேற் கொண்டேன். அ.தி.மு.க. ஆட்சி அதை முறையாக பயன்படுத்தவில்லை.

  மக்களைப் பற்றியும் அவர்கள் படும் சிரமங்கள் பற்றியும் இந்த ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை. இந்த ஆட்சியை காப்பாற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு மக்களின் வரி பணத்தை கொடுத்து தக்க வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

  முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் சந்தேகத்துக்கு தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முறையாக விசாரணை நடத்தப்படும். உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை சிறைக்கு அனுப்புவது தான் முதல் வேலை.

  கமி‌ஷனுக்கும், கரப்சனுக்கும் பஞ்சாயத்து செய்கிறார்கள். நான் மக்கள் பிரச்சினைக்கு பஞ்சாயத்து செய்கிறேன். மோடி நம் நாட்டின் பிரதமர். அவர் டெல்லியில் இல்லாமல் உலகத்தை சுற்றுகிறார்.

  மேற்கண்டவாறு அவர் பேசினார்.

  Next Story
  ×