என் மலர்
நீங்கள் தேடியது "illegally selling alcohol and ganja"
- போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் 4 பேர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
- சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அருண்குமார் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1,250 மதிப்புள்ள 125 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில், சட்ட விரோதமாக மது மற்றும் கஞ்சா விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் சட்டம் - ஒழுங்கு மற்றும் மது விலக்குப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, மாவட்டத்தில் அம்மாபேட்டை, பவானி, மொடக்குறிச்சி, வரப்பாளையம் காவல் நிலைய எல்லைகளில் போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் 4 பேர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்த 25 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேப்போல் கருங்கல்பாளையம் போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது பவானி ரோடு, நெரிகல்மேடு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக அருண்குமார் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1,250 மதிப்புள்ள 125 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.






