search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water inflow"

    முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.
    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் வைகை, பெரியாறு அணகளின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் கோடை காலத்தில் குடிநீர் தேவையை சமாளிக்க முடியுமா? என கேள்வி எழுந்துள்ளது.

    அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வரை 510 கன அடி நீர் வந்துகொண்டிருந்தது. இன்று காலை அது 615 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 115.85 அடியாக உள்ளது. தமிழக பகுதிக்கு 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணயின் நீர்மட்டம் 48.92 அடியாக உள்ளது. 11 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசனம் மற்றும் மதுரை மாநகர குடிநீருக்காக 760 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 39.15 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 88.39 அடியாக உள்ளது. வருகிற 3 கன அடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

    வைகை அணை 2.2., மஞ்சளாறு 7, சோத்துப்பாறை 7 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் நேற்று 70.81 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 70.82 அடியாக இருந்தது. #MetturDam
    சேலம்:

    மேட்டூர் அணைக்கு நேற்று 150 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 243 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரி ஆற்றில் டெல்டா பாசனத்திற்காக 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை முதல் தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது.

    இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது. நேற்று 70.81 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 70.82 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #MetturDam

    மேட்டூர் அணைக்கு இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 134 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. #Metturdam
    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்து உள்ளது. கடந்த 16-ந் தேதி 86 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மேலும் அதிகரித்து 118 கன அடியானது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 134 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று 73.09 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 72.7 அடியாக சரிந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக சரிய வாய்ப்பு உள்ளது. #Metturdam

    நேற்று 117 கன அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 116 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. #Metturdam
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

    நேற்று 117 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 116 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 11 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று 82.13 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் ஒரு அடிக்கு மேல் சரிந்து 81.2 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது. #Metturdam
    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்ததையடுத்து பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #PapanasamDam #ManimutharDam
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த தென்மேற்கு பருவமழையால் அணைகள், குளங்கள் நிரம்பின. இதைத் தொடர்ந்து சாகுபடி பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருந்தனர். போதிய அளவு வடகிழக்கு பருவமழை பெய்யாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. நேற்றும் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணை பகுதிகளில் கனமழை பெய்தது. மற்ற இடங்களில் அம்பை, சேரன்மகாதேவி, தென்காசி பகுதிகளில் மிதமான மழையும், செங்கோட்டை, சிவகிரி, ஆய்க்குடி பகுதியில் லேசான மழையும் பெய்தது.

    மலை பகுதிகளில் பெய்த மழையினால் நேற்று குற்றாலம், மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மாலையில் மழை நின்றதால் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

    நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயரத்தொடங்கியுள்ளது. பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 119.95 அடியாக இருந்தது. இன்று 120.30 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1423 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    இதே போல் சேர்வலாறு அணை நீர்மட்டம் 120.67 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 103.90 அடியாகவும் உள்ளன. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 567 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 480 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    இதே போல் கடனா அணையின் நீர்மட்டம் 79.10 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 65.75 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 59.33 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 32.5 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 29.50 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 12.74 அடியாகவும், அடவிநயினார் அணை 74 அடியாகவும் உள்ளன.

    பாபநாசம் கீழ் அணை மூலமாக மொத்தம் 1216 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    பாபநாசம்-58, சேர்வலாறு-39, மணிமுத்தாறு-24.8, கடனா-18, அம்பை-5.4, சேரன்மகாதேவி-5.8, தென்காசி-5, பாளை-4, நெல்லை-3.3., ஆய்க்குடி-3, செங்கோட்டை-2, சிவகிரி-2, குண்டாறு-1. #PapanasamDam #ManimutharDam


    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. இன்று அணையின் நீர்மட்டம் 101.75 அடியாக இருந்தது.
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 2 ஆயிரத்து 270 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 2ஆயிரத்து 109 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் டெல்டா பாசனத்திற்காக 9 ஆயிரம் கன அடியும், கால்வாயில் 400 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. நேற்று 102.24 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 101.75 அடியாக இருந்தது.
    தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. #PuzhalLake
    திருவள்ளூர்:

    வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக நேற்று முன்தினம் மாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    சென்னையில் இன்று காலையும் பரவலாக மழை பெய்தது. புறநகர் பகுதியான ஆவடி, அம்பத்தூர், புழல், சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு கனமழை கொட்டியது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. பழவேற்காடு, மீஞ்சூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, புழல், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழைபெய்தது. ஊத்துக்கோட்டையில் நேற்று மாலையில் தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கியது.

    தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால் எதிர்பார்த்த நீர் வரத்து இல்லை.இந்த 4 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி நீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி மொத்தம் 1,704 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

    கடந்த 3-ந் தேதி 4 ஏரிகளையும் சேர்த்து 1,681 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. கடந்த 2 நாட்களில் 23 மில்லியன் கனஅடி நீர் அதிகரித்து உள்ளது.  #PuzhalLake

    தென் மாவட்டங்களில் நேற்றும், இன்றும் எந்தவித மழை பொழிவும் இல்லாததால் அணைகளுக்கு வரும் நீர்வரத்து குறைந்தது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக அணைகளுக்கு கூடுதல் நீர் வந்தது. இதைத்தொடர்ந்து பாபநாசம் அணை நீர்மட்டம் 124 அடியை தாண்டியது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டி 104 அடியானது.

    இந்த நிலையில் தென் மாவட்டங்களில் நேற்றும், இன்றும் எந்தவித மழை பொழிவும் இல்லை. இதன் காரணமாக அணைகளுக்கு குறைந்த அளவு நீர் வருகிறது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 827 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 804 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இன்று காலை பாபநாசம் அணை நீர்மட்டம் 124.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 134.74 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 315 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 35 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இன்று காலை மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 104.25 அடியாக உள்ளது.

    கடனாநதி-78.80, ராமநதி- 69.25, கருப்பாநதி-67.03, குண்டாறு-35.87, வடக்கு பச்சையாறு-31.50, நம்பியாறு-18.66, கொடுமுடியாறு-35, அடவிநயினார்-93.25 அடிகளாகவும் நீர்மட்டம் உள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழ்நிலை உள்ளதால் 5-ந்தேதிக்கு பிறகு மீண்டும் வடகிழக்கு பருவமழை பெய்யும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பல இடங்களில் கனமழை பெய்ததையடுத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #ManimutharDam
    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை மிகவும் குறைந்த அளவே பெய்து வருகிறது. நவம்பர் மாதம் சராசரி மழை அளவான 208.20 மில்லி மீட்டரை விட குறைவாக 186.11 மில்லி மீட்டர் மழையே பெய்துள்ளது.

    இந்த மாதம் சராசரி மழை அளவான 111.60 மில்லி மீட்டர் பெய்தால் தான் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் போதுமானதாக இருக்கும். இந்த நிலையில் டிசம்பர் 1-ந்தேதியே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பல இடங்களில் கனமழை பெய்தது. மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1841.55 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 804.75 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்றைவிட ஒரு அடி உயர்ந்து இன்று 124.15 அடியாக உள்ளது. சேர்வ லாறு அணை நீர்மட்டமும் நேற்றை விட ஒரு அடி உயர்ந்து இன்று 134.18 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 1059 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 35 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது. இதனால் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்றை விட ஒரு அடி உயர்ந்து இன்று 103.60 அடியாக உள்ளது.

    இதுபோல கடனாநதி -78.20, ராமநதி-69.25, கருப்பாநதி-67.86, குண்டாறு-36.10, வடக்கு பச்சையாறு-31.50, நம்பியாறு -19.61, கொடுமுடியாறு-37, அடவிநயினார்-94.75 அடிகளாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றும் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

    நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக ராமநதி அணை பகுதியில் 54 மில்லி மீட்டர் மழையும், பாபநாசம் மலை பகுதியில் 39 மில்லி மீட்டர் மழையும், அம்பையில் 38.2 மில்லி மீட்டர் மழையும், கன்னடியன் கால்வாய் பகுதியில் 32.8 மில்லி மீட்டர் மழையும், சேர்வலாறு அணை பகுதியில் 30 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக வைப்பாறில் 13 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    மற்ற இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ராமநதி-54, பாபநாசம்-39, அம்பை-38.2, கன்னடியன் கால்வாய்-32.8, சேர்வ லாறு-30, ஆய்க்குடி-12.8, தென்காசி-8.4, கருப்பாநதி-7, குண்டாறு-7, களக்காடு-5.6, மணிமுத்தாறு-5.2, கடனாநதி-5, சேரன் மகாதேவி-2

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    வைப்பாறு-13, கடம்பூர்-3, எட்டயபுரம்-3, கயத்தாறு-1. #ManimutharDam

    நேற்று 103.54 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 103.63 அடியானது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #Metturdam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கடந்த ஜூன் மாதம் முதல் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 5 ஆயிரத்து 134 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 4 ஆயிரத்து 347 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 750 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 103.54 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 103.63 அடியானது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #Metturdam

    நேற்று 103.22 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 103.4 அடியாக உயர்ந்தது. #Metturdam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 5 ஆயிரத்து 623 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 5 ஆயிரத்து 734 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு காவிரி ஆற்றில் 2 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வந்தது.

    இன்று காலை முதல் கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு 750 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. டெல்டா பாசனத்திற்கு வழக்கம் போல 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 103.22 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 103.4 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.  #Metturdam



    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதையடுத்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #Hogenakkal
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் வந்து கொண்டிருந்தது. நேற்று முன்தினம் நீர்வரத்து 4600 கனஅடியாக சரிந்தது.

    இந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி கடந்த 2 தினங்களாக கர்நாடக-தமிழக எல்லை பகுதிகளிலும், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களிலும் மழை பெய்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 4900 கனஅடியாக அதிகரித்தது. இன்று மேலும் அதிகரித்து 5800 கனஅடியாக உயர்ந்தது.

    தொடர்ந்து கர்நாடக- தமிழக எல்லையான பிலி குண்டுலுவில் நீர்வரத்தை மத்திய நீர்வள துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். #Hogenakkal

    ×