என் மலர்
செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு
நேற்று 103.22 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 103.4 அடியாக உயர்ந்தது. #Metturdam
மேட்டூர்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நேற்று 5 ஆயிரத்து 623 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 5 ஆயிரத்து 734 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு காவிரி ஆற்றில் 2 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வந்தது.
இன்று காலை முதல் கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு 750 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. டெல்டா பாசனத்திற்கு வழக்கம் போல 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நேற்று 103.22 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 103.4 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #Metturdam

Next Story