search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vinayagar chaturthi"

    • வீடுகளிலும், தெருக்களிலும் விநாயகர் சிலைகளை அலங்கரித்து வைத்து பூஜை, வழிபாடு செய்வது வழக்கம்.
    • புரசைவாக்கம் தானா தெரு, கொசப்பேட்டையில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு ஏராளமாக குவிக்கப்பட்டு உள்ளன.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை (18-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளிலும், தெருக்களிலும் விநாயகர் சிலைகளை அலங்கரித்து வைத்து பூஜை, வழிபாடு செய்வது வழக்கம்.

    சென்னையில் கொசப்பேட்டை, திருவல்லிக்கேணி, வடபழனி, ராமாபுரம் உள்ளிட்ட இடங்களில் களிமண் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடந்தது.

    இந்த நிலையில் புரசைவாக்கம் தானா தெரு, கொசப்பேட்டையில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு ஏராளமாக குவிக்கப்பட்டு உள்ளன. சிறிய களிமண் விநாயகர் சிலைகள் ரூ. 150 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அரை அடி முதல் 2 அடி வரையில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. இதனை பெண்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள்

    • புதுவையில் வெளிமாநில சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
    • பாரதிபூங்கா, தாயவரவியல் பூங்கா, சுண்ணாம்பாறு படகு குழாம் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

    விநாயகர் சதுர்த்தியுடன் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறையை புதுவையில் வெளிமாநில சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா, வடமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் புதுவையில்

    குவிந்தனர். நேருவீதி, காமராஜர் சாலை, அண்ணாசாலை, காந்தி வீதி, புஸ்சி வீதி உட்பட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாரதிபூங்கா, தாயவரவியல் பூங்கா, சுண்ணாம்பாறு படகு குழாம் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது.

    • களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாரை இல்லத்தில் வைத்து அலங்கரித்து, தொடங்கும் காரியங்களில் எல்லாம் வெற்றிபெற வேண்டி பக்திப் பரவசத்துடன் வழிபட்டு மகிழ்வார்கள்.
    • கேட்கும் வரத்தைக் கொடுக்கும் கடவுளாகக் கருதப்படும் வேழமுகத்து விநாயகப் பெருமானின் திருவருளால், நாடெங்கும் நலமும், வீடெங்கும் வளமும் பெற்று, பெருவாழ்வு வாழ வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ''விநாயகர் சதுர்த்தி'' வாழ்த்துச்செய்தியில் கூறி இருப்பதாவது:-

    முழுமுதற் கடவுளாம், வினை தீர்க்கும் தெய்வமாம், ஸ்ரீவிநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தியை பக்தியுடனும், மனமகிழ்ச்சியுடனும் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சங்கடங்களையும், தடைகளையும் நீக்க வல்ல விநாயகப் பெருமானை வணங்கி எந்த செயலைத் தொடங்கினாலும், அந்தச் செயலை வெற்றியுடன் செய்வதற்குரிய மன உறுதியும், நம்பிக்கையும் தானாக ஏற்பட்டு அந்தக் காரியம் வெற்றியில் முடியும் என்பதை உணர்ந்து, விநாயகர் சதுர்த்தியன்று மக்கள் களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாரை இல்லத்தில் வைத்து அலங்கரித்து, தொடங்கும் காரியங்களில் எல்லாம் வெற்றிபெற வேண்டி பக்திப் பரவசத்துடன் வழிபட்டு மகிழ்வார்கள்.

    கேட்கும் வரத்தைக் கொடுக்கும் கடவுளாகக் கருதப்படும் வேழமுகத்து விநாயகப் பெருமானின் திருவருளால், நாடெங்கும் நலமும், வீடெங்கும் வளமும் பெற்று, பெருவாழ்வு வாழ வேண்டும் என்ற எனது விருப்பத்தினைத் தெரிவித்து, அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், உளமார்ந்த ''விநாயகர் சதுர்த்தி'' வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • திருச்சி பாலக்கரை பகுதியிலும் இரட்டைப் பிள்ளையார் அருள்புரிகிறார்.
    • செவ்வாய்க்கிழமைகளில் விநாயகரை வழிபட்டால் நாக தோஷம் விலகும்.

    ஒரு சமயம் சிவபெருமானை பிரிந்து பார்வதிதேவி தனியாக தவம் செய்ய நேரிட்டது. அப்போது விநாயகர் தன்னைப் போலவே ஒரு வடிவத்தை தன்னருகே உருவாக்கி, அந்த திருவுருவத்தையே, அதாவது தன்னையே சங்கல்பம் செய்து கொண்டு, பிரிந்த தன் பெற்றோர் விரைவில் ஒன்று சேர பிரார்த்தித்தாராம்.

    இதன் அடிப்படையில் மயிலாடுதுறை அருகில் உள்ள திருவேள்விக்குடி திருத்தலத்தில், சங்கல்ப (இரட்டை) விநாயகர் என்ற பெயரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். 'ஆதி இரட்டை விநாயகர்' என்று போற்றப்படுபவரும் இவரே.

    அதுபோலவே திருச்சி பாலக்கரை பகுதியிலும் இரட்டைப் பிள்ளையார் அருள்புரிகிறார். பிள்ளையாருக்கு உரிய தேய்பிறை சதுர்த்தி திதி மட்டுமின்றி திருவோணம், திருவாதிரை, விசாக நட்சத்திரங்களும் திதிகளில் பஞ்சமியும் இவருக்குரியதாக கருதப்படுகிறது.

    தேய்பிறை சதுர்த்தியில் இவருக்கு அருகம்புல் மாலை அணிவித்து அர்ச்சித்து வழிபட்டால், செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் தீமைகள் விலகும். மேலும் கார் அரிசியில் மோதகம் (கொழுக் கட்டை) செய்து நிவேதனம் செய்தால் சந்திரனால் ஏற்படும் தோஷம் விலகும்.

    திருவோண நட்சத்திரத்தில் இந்த இரட்டைப் பிள்ளையாருக்கு மாம்பழங்கள் நிவேதனம் செய்து ஏழைத் தம்பதிகளுக்கு அளித்தால், கணவன்-மனைவி உறவு பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். திருவாதிரையன்று வில்வத்தால் மாலை தொடுத்து இவரை வழிபட்டால் நோய் நொடிகள் குணமாகும். ஆரோக்கியமாக வாழலாம். பஞ்சமி திதியில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட்டால் கடன் பிரச்சினைகள் தீரும். செல்வ வளம் பெருகும்.

    விசாக நட்சத்திரத்தன்று இரட்டை விநாயகருக்கு பூக்களால் தொடுத்த போர்வை போன்ற மலர் ஆடை அணிவித்தால் குடும்பத்தில் சுப காரியங்கள் தடையின்றி நிறை வேறும்.

    பொதுவாக, செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டால் நாக தோஷம் விலகும். சனிக்கிழமைகளில் கனி வர்க்கத்தில் ஏதாவது ஒன்றைச் சமர்ப்பித்து வழிபட்டால் சனியின் தாக்கம் குறையும்.

    இத்திருக்கோவில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

    இதேபோல், தஞ்சை திருவையாறு ஐயானரப்பன் கோவிலில் அருள்பாலிக்கிறார் இரட்டைப்பிள்ளையார். இவர் சன்னதிமுன் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.

    திருமணமாகாத பெண்கள் சந்தனாபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். கணவன்-மனைவி ஒற்றுமை பலப்பட சங்கடஹர சதுர்த்தியில் அருகம்புல் மாலை அணிவித்து, மோதகங்கள் படைத்து வழிபட்டால், குடும்பத்தில் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நிறைவேறும்.

    மேலும், ஸ்ரீரங்கத்திற்கு அருகில் உள்ள உத்தமர் கோவில், திருச்சி உய்யகொண்டான் திருமலை சிவன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சேலம் மாவட்டம் ஆத்தூர் தலை வாசலை அடுத்த ஆறகலூரில் இருக்கும் கோவில், ஊட்டி பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள விநாயகர் கோவில் போன்ற இடங்களிலும் இரட்டை விநாயகர் சந்நிதி உள்ளது. இரட்டை விநாயகரை ஒரே சன்னதியில் வழிபட்டால் இரு மடங்கு பலன்கள் கிடைக்கும் என்பார்கள்.

    • 18-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் 6 வரை கணபதி ஹோமம், அபிஷேகம் நடைப்பெற்று ராஜகணபதிக்கு தங்க கவசம் சாத்துப்படி நடைப்பெற உள்ளது.
    • இரவு 8 மணியளவில் தினமும் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி திருவீதி புறப்பாடு நடைப்பெறும்.

    சேலம்:

    சேலம் ராஜகணபதி கோவிலில் வருகிற 18-ந் தேதி முதல் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெற உள்ளது. 18-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் 6 வரை கணபதி ஹோமம், அபிஷேகம் நடைப்பெற்று ராஜகணபதிக்கு தங்க கவசம் சாத்துப்படி நடைப்பெற உள்ளது.

    இந்த விழாவை முன்னிட்டு 18-ந் தேதி முதல் 12 நாட்களுக்கு காலை, மாலையில் மூலமந்திர ஹோமம், லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் 12 மணி வரை மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற உள்ளது.

    இரவு 8 மணியளவில் தினமும் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி திருவீதி புறப்பாடு நடைப்பெறும். மேலும் மாலை வேலையில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற உள்ளது.

    12-ம் நாள் காலை 7 மணி முதல் 10 மணி வரை மஞ்சள் நீராட்டு, வசந்த உற்சவமும், காலை 10 மணி முதல் 12.30 மணி வரை உற்சவ ஆஸ்தான பூஜைகள், 1008 லிட்டர் பால் அபிஷேகமும் நடைபெறுகிறது. தொடர்ந்து புஷ்பாஞ்சலி மற்றும் அன்னதானம் நடைப்பெற உள்ளது.

    எனவே அனைத்து பக்கதர்கள், பொதுமக்கள் இந்த நிகழ்வுகளில் பங்கேற்று இறைவன் அருள் பெற வேண்டும் என அறங்காவலர் குழு தலைவர் சோனா வள்ளியப்பா, அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று நவ சக்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட உள்ளது.
    • 22-ந்தேதி ராஜா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற உள்ளது. 2

    சென்னை:

    சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் நவசக்தி விநாயகர் ஆலயம் உள்ளது. இங்கு நாளை மறுநாள் (17-ந்தேதி) தொடங்கி 23-ந்தேதி வரை விநாயகர் சதுர்த்தி பெருவிழா நடைபெற உள்ளது.

    இதையொட்டி 7 நாட்கள் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று நவ சக்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட உள்ளது. 21-ந்தேதி வரை தினமும் காலை சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஊஞ்சல் உற்சவம் நடத்தப்பட உள்ளது.

    இதையொட்டி 7 நாட்களும் தினமும் மாலை இசை நிகழ்ச்சிகள், பட்டிமன்றத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 17-ந்தேதி இளம்பிறை மணிமாறன் தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது. 18-ந்தேதி வீரமணி ராஜு குழுவினரின் பக்தி பாடல் நிகழ்ச்சி நடக்கிறது.

    19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி பக்தி இசை வழங்குகிறார்கள். 20-ந்தேதி நித்யஸ்ரீ மகாதேவன் இன்னிசை நடக்கிறது. 21-ந்தேதி ஞானசம்பந்தன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற உள்ளது.

    22-ந்தேதி ராஜா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற உள்ளது. 23-ந் தேதி இரவு 9 மணிக்கு நவசக்தி விநாயகர் திருவீதி உலா நடைபெறும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் இருந்து மட்டும் பயணம் செய்ய 15 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
    • முன்பதிவு செய்யாமல் ஆயிரக்கணக்கானவர்கள் வருவார்கள் என்பதால் 850 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி பண்டிகை 18-ந்தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிறு, அரசு விடுமுறை நாட்களோடு விநாயகர் சதுர்த்தி வருவதால் 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.

    மேலும் ஞாயிற்றுக்கிழமை சுபமுகூர்த்த நாளாகும். அதனால் பொதுமக்களின் வெளியூர் பயணம் அதிகரிக்கக் கூடும் என்பதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. வெளியூர் செல்லக்கூடியவர்கள் இன்றே தங்கள் பயணத்தை மேற்கொண்டனர்.

    சென்னையில் இருந்து பல்வேறு தொழில், கூலி வேலை செய்து வரும் மக்கள், அரசு பணியாளர்கள் பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்து பயணத்தை தொடர்கின்றனர். சென்னையில் இருந்து புறப்படும் எல்லா ரெயில்களும் நிரம்பி விட்டதால் அரசு பஸ்களை நாடி செல்கின்றனர்.

    ஏழை, நடுத்தர மக்கள் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய அரசு பஸ்கள் மட்டும் இருப்பதால் அதில் ஆயிரக்கணக்கானவர்கள் முன்பதிவு செய்து உள்ளனர். நேற்று வரை தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில் இன்று மேலும் கூடுதலாக 5000 பேர் முன்பதிவு செய்தனர்.

    சென்னையில் இருந்து மட்டும் பயணம் செய்ய 15 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    முன்பதிவு செய்யாமல் ஆயிரக்கணக்கானவர்கள் வருவார்கள் என்பதால் 850 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகின்றன.

    இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னையில் இருந்து வழக்கமாக வெளியூர்களுக்கு இயக்கப்படும் 2100 அரசு பஸ்களுடன் கூடுதலாக 850 பேருந்துகள் இன்று இயக்குவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

    கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு பொதுமக்கள் முன்கூட்டியே வந்தால் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய ஏற்பாடு செய்ய முடியும். நள்ளிரவில் வந்து கும்பலாக குவியும்போது பஸ்களை இயக்குவது பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதால் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொண்டால் பொது மக்களுக்கு உதவி செய்வது பயன் உள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • விநாயகர் சிலைகளை வைக்க பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.
    • ஆய்விற்காக எடுத்துச் சென்ற மாதிரிகள் இயற்கைக்கு கேடு விளைவிக்கும் வகையில் கலவை இருப்பது தெரிய வந்தது.

    நெல்லை:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி (திங்கட் கிழமை) கொண்டாடப்படு கிறது.

    இதற்காக நெல்லை மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து மகாசபை உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சிலைகள் வைக்கப்படக் கூடிய இடங்களில் இந்த ஆண்டும் சிலை வைப்ப தற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

    கட்டுப்பாடுகள்

    இந்த ஆண்டு சுற்றுச் சூழலுக்கு மாசு இல்லாத வகையில் விநாயகர் சிலை களை வைக்க வேண்டும், குறைந்த அளவிலான உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை வைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப் பாடுகள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

    நெல்லை மாநகர் பகுதி களில் இந்து அமைப்புகள் சார்பில் சிலைகள் வைப்ப தற்காக பாளையை அடுத்த கிருபா நகர் பகுதியில் உள்ள கூடத்தில் விநாயகர் சிலைகள் தயார் செய்யப் பட்டு வரும் நிலையில் அந்த சிலைகள் அரசின் உத்தரவை மீறி இயற்கைக்கு கேடு விளைவிக்கும் வகை யில் மூலப்பொருட்களை கொண்டு தயார் செய்யப் படுவதாக தகவல்கள் பரவியது.

    பூட்டியதால் பரபரப்பு

    இதையடுத்து அங்கு வருவாய் துறை மற்றும் போலீஸ் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை அங்கு சென்று சோதனை செய்தனர். தகவல் அறிந்து இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் அங்கு திரண்டு ஆர்டர் கொடுத்த சிலைகளை அவசர கதியில் எடுத்துச் சென்றனர். இதனால் மேற்கொண்டு சிலைகள் எடுத்து செல்வதை தடுக்கும் வகையில் போலீசார் தடுப்பு கம்பிகள் வைத்து பூட்டினர்.

    இதற்கிடையே மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், விநாயகர் சிலை செய்யும் கிருபா நகர் பகுதியில் உள்ள தயாரிப்பு கூடத்தில் ஆய்விற்காக எடுத்துச் சென்ற மாதிரிகள் இயற்கைக்கு கேடு விளைவிக்கும் வகையில் கலவை இருப்பது தெரிய வந்தது. சிலைகளையும் எடுத்துச் சென்றவர்களிட மிருந்து பறிமுதல் செய்து அந்த கூடத்தில் கொண்டு வந்து சேர்த்தனர். இதற்கு இந்த அமைப்பினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதற்கிடையே சிலைகள் தயாரிக்கும் சிற்பக்கூடம் முன்பு 3-வது நாளாக இன்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பேச்சுவார்த்தை

    இந்நிலையில் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் பாளை தாசில்தார் சரவணன் முன்னிலையில் இந்து அமைப்பினருடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் சிலைகள் தொடர்பாக சுமூக உடன்பாடு எட்டப்படும் என்று கூறப்படுகிறது.

    • நீர்நிலைகளுக்கு மாசு ஏற்படுத்தாத இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே பயன்படுத்திட வேண்டும்.
    • ரசாயன வண்ணங்கள் பூசப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைத்திட உயர்நீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை ஐகோர்ட்டு உத்தரவு, பசுமை தீர்ப்பாய உத்தரவு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரி யத்தின் வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் அடிப்படை யில் விநாயகர் சதுர்த்திக்கு நீர்நிலைகளில் கரைக்கும் வகையில் சிலைகளை வைக்க விரும்புவோர் நீர்நிலைகளுக்கு மாசு ஏற்படுத்தாத களிமண் உள்ளிட்ட இயற்கை பொருட்களால் செய்யப் பட்ட சிலைகளை மட்டுமே பயன்படுத்திட வேண்டும்.

    பிளாஸ்டர் ஆப் பாரிஸ் உள்ளிட்ட ரசாயன பொருட் களால் செய்யப்பட்ட மற்றும் ரசாயன வண்ணங்கள் பூசப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைத்திட உயர்நீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

    எனவே கூனியூர், காருக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்களால் செய்யப்படக்கூடிய நீர்நிலைகளை பாதிக்காத வகையிலான விநாயகர் சிலைகளை, சிலை வைப்போர் பயன்படுத்திக் கொள்ளுமாறும், ரசாய னத்தால் உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு இதில் கூறியிருந்தார்.

    • விநாயகர் சிலை தொடர்பாக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
    • இந்து முன்னணியினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    நெல்லை:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து மகாசபை உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சிலைகள் வைக்கப்படக்கூடிய இடங்களில் இந்த ஆண்டும் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத வகையில் விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும், குறைந்த அளவிலான உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை வைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

    நெல்லை மாநகர் பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இதற்காக பாளையங்கோட்டை அடுத்த கிருபா நகர் பகுதியில் விநாயகர் சிலை செய்வதற்கான கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பல்வேறு வடிவங்களில், பல்வேறு வண்ணங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, ஆர்டர் கொடுத்தவர்களுக்கு கொடுக்கும் பணி நடந்து வருகிறது.

    இதற்கிடையே கடந்த 3 நாட்களாக நெல்லை மாவட்ட நிர்வாகம், மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், விநாயகர் சிலை செய்யும் கிருபா நகர் பகுதியில் உள்ள தயாரிப்பு கூடத்தில் ஆய்விற்காக பல்வேறு மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு விநாயகர் சிலை கூடத்திற்கு வருவாய் துறை, காவல் துறையினர் சீல் வைக்க போவதாக தகவல் பரவியது. இதையடுத்து விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்தில் இந்து அமைப்பு நிர்வாகிகள் குவியத் தொடங்கினர்.

    அதே வேளையில் போலீசாரும் விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்தில் குவிக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. ஏற்கனவே விநாயகர் சிலைகளை பெறுவதற்கு இந்து அமைப்பு நிர்வாகிகள், அதனை தயாரிக்கும் தொழிலாளர்களிடம் பல்லாயிரம் ரூபாய் முன்பணம் கொடுத்துள்ள நிலையில், தயார் நிலையில் உள்ள விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்வதற்கான பணிகளை தொடங்கினர்.

    10 அடி உயரம் வரை தயாரிக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் முன்தொகை கொடுத்தவர்கள் ஆட்டோ மற்றும் டெம்போ வேன்கள் மூலம் அந்தந்த பகுதிகளுக்கு எடுத்து செல்லும் பணிகளை தொடங்கினர்.

    இந்த நிலையில் பாளையங்கோட்டை வருவாய் தாசில்தார் தலைமையில் வருகை தந்த வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் ஏற்கனவே விநாயகர் சிலை தொடர்பாக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    ஆய்வு முடிவுகள் வெளியே வரும் வரை சிலைகளை எங்கும் எடுத்துச் செல்லக் கூடாது என கூறி தயாரிப்பு கூடத்தை சுற்றி பேரிகாடுகள் அமைத்து சீல் வைத்தனர்.

    இந்த நிலையில் வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்ட விநாயகர் சிலைகளையும் ஆங்காங்கே தடுத்து நிறுத்திய போலீசார் மீண்டும் தயாரிப்பு கூடத்தில் கொண்டு சேர்த்தனர். இதனால் இந்து முன்னணியினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இன்று வரும் மாதிரி முடிவுகளை பொறுத்து சிலைகள் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படுமா? இல்லையா? என்பது தெரியும் நிலை உருவாகியுள்ளது. போலீசார் பேரிகாடுகள் வைத்து தயாரிப்பு கூடத்தை சீல் வைத்த நிலையில் அங்கு 2-வது நாளாக இன்றும் கூடுதல் கண்காணிப்பு பணிக்காக போலீசரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளனர்.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. இதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளனர்.

    இந்த நிலையில் மாதவரம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா வழிபாடு, ஊர்வலம் குறித்து இந்து அமைப்பின கலந்தாய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் மாத்தூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. உதவி கமிஷனர் தட்சிணாமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் வேலுமணி, சுந்தர், தட்சிணாமூர்த்தி, தியாகராஜன் மற்றும் இந்து அமைப்பினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கோபி போலீஸ் நிலையத்தில் இந்து அமைப்பின் நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • பல்வேறு வழிகாட்டு முறையை டி.எஸ்.பி தங்கவேல் தெரிவித்தார்.

    கோபி:

    விநாயகர் சதூர்த்தி விழா அன்று கோபி காவல் துணைக்கோட்டத்திற்குட்பட்ட கோபி, கவுந்தப்பாடி, கடத்தூர், நம்பியூர், வரப்பா ளையம், சிறுவலூர், திங்க ளூர் ஆகிய காவல் நிலைய பகுதிகளில்

    இந்து முன்னனி, இந்து மக்கள் கட்சி, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பு களுடன் பொதுமக்களும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைத்து ஒரு வார காலம் வழிபாடு செய்து,

    அதன் பின்னர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லபட்டு அருகில் உள்ள நீர் நிலை களில் கரைப்பது வழக்கம்.

    இந்த ஆண்டு விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் 18-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் கோபி போலீஸ் நிலையத்தில் இந்து அமைப்பின் நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் டி.எஸ்.பி தங்கவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சண்முக வேலு, துரைபா ண்டி, நிர்மலா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் புதிய சிலைகளை வைக்க கூடாது, ஏற்கனவே சென்ற அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே ஊர்வலம் செல்ல வேண்டும்.

    மத வழிபாட்டு தளங்கள் முன்பு அமைதி யான முறையில் ஊர்வலம் செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு முறையை டி.எஸ்.பி தங்கவேல் தெரிவித்தார்.

    அதே போன்று ஊர்வலத்தின் போது போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊ ர்வலம் செல்லும் சாலையில் இடையூறு இல்லாமல் பாது காப்பது போன்றவற்றை தெரிவித்தார்.

    ×