search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்து டி.எஸ்.பி. ஆலோசனை
    X

    விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்து டி.எஸ்.பி. ஆலோசனை

    • கோபி போலீஸ் நிலையத்தில் இந்து அமைப்பின் நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • பல்வேறு வழிகாட்டு முறையை டி.எஸ்.பி தங்கவேல் தெரிவித்தார்.

    கோபி:

    விநாயகர் சதூர்த்தி விழா அன்று கோபி காவல் துணைக்கோட்டத்திற்குட்பட்ட கோபி, கவுந்தப்பாடி, கடத்தூர், நம்பியூர், வரப்பா ளையம், சிறுவலூர், திங்க ளூர் ஆகிய காவல் நிலைய பகுதிகளில்

    இந்து முன்னனி, இந்து மக்கள் கட்சி, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பு களுடன் பொதுமக்களும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைத்து ஒரு வார காலம் வழிபாடு செய்து,

    அதன் பின்னர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லபட்டு அருகில் உள்ள நீர் நிலை களில் கரைப்பது வழக்கம்.

    இந்த ஆண்டு விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் 18-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் கோபி போலீஸ் நிலையத்தில் இந்து அமைப்பின் நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் டி.எஸ்.பி தங்கவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சண்முக வேலு, துரைபா ண்டி, நிர்மலா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் புதிய சிலைகளை வைக்க கூடாது, ஏற்கனவே சென்ற அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே ஊர்வலம் செல்ல வேண்டும்.

    மத வழிபாட்டு தளங்கள் முன்பு அமைதி யான முறையில் ஊர்வலம் செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு முறையை டி.எஸ்.பி தங்கவேல் தெரிவித்தார்.

    அதே போன்று ஊர்வலத்தின் போது போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊ ர்வலம் செல்லும் சாலையில் இடையூறு இல்லாமல் பாது காப்பது போன்றவற்றை தெரிவித்தார்.

    Next Story
    ×