search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vehicle"

    • இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் தஞ்சாவூர் மாவட்ட கிளை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
    • ரெட்கிராஸின் பல்வேறு சேவைகளில் ரத்த வங்கி சேவை என்பது‌ குறிப்பிடத்தக்கது.

    தஞ்சாவூர்:

    ஐ.சி.ஐ.சி.ஐ பவுண்டேஷன் சார்பில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டிக்கு ரூ. 40 லட்சம் மதிப்புள்ள ரத்த சேகரிப்பு போக்குவரத்து வாகனம் மற்றும் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள ரத்த வங்கி உபகரணங்களை ஐ.சி.ஐ.சி.ஐ பவுண்டேஷன் திட்ட மேலாளர் ஆசிப் இக்பால் ஏற்பாட்டில் மத்திய மண்டல தலைவர் செந்தில்குமார், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் , கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா ஆகியோர் முன்னி லையில் ஒப்படைத்தார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது:- இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, தஞ்சாவூர் மாவட்ட கிளை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    ரெட்கிராஸின் பல்வேறு சேவைகளில் ரத்த வங்கி சேவை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த பணி மேலும் சிறப்பாக செயல்படுவதற்காக ஐ.சி.ஐ.சி.ஐ பவுண்டேஷன் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள வாகனம் மற்றும் உபக ரணங்கள் பயனுள்ளதாக இருக்கும். இதற்காக ஐ.சி.ஐ.சி.ஐ, பவுண்டேஷன் மற்றும் வங்கிக்கு பாராட்டுக்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர். பாலாஜி நாதன், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சேர்மன் டாக்டர். வரதராஜன், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி பிராந்திய தலைவர்கள் சீனிவாச யோகானந்த், கிருஷ்ண மூர்த்தி, பிராந்திய மேலா ளர்கள் ராதாகிருஷ்ணன், சிவராமன், கிளை மேலாளர் அரவிந்த், வளர்ச்சி அலுவலர் நவராஜா, ரெட்கிராஸ் மேலாண்மை குழு உறுப்பினர்கள் முகமதுரபி, ஜெயக்குமார், முனைவர் பிரகதீஷ், தஞ்சை ராமதாஸ், குருநாதன், அம்மாபேட்டை துணை கிளை சேர்மன் தர்ம புருஷோத்தமன், சுவாமி மலை துணை கிளை சேர்மன் இராகவ நாராயணன், பூதலூர் துணை கிளை சேர்மன் ரவிசங்கர், ஒரத்தநாடு துணை கிளை சேர்மன் நாராயணசாமி, சேதுபாவாசத்திரம் துணை கிளை தலைவர் ஷேக் அப்துல்லா, டாக்டர் சிங்காரவேலு, ஆர்க்கிடெக்ட் அருண் பாலாஜி, முனைவர் ஜோசப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ரெட்கிராஸ் துணை சேர்மன் பொறியாளர் முத்துக்குமார் வரவேற்றார். பொருளாளர் சேக் நாசர் நன்றி கூறினார்.

    • இருசக்கர வாகனங்களை இயக்கும் பொழுது கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
    • ஆஸ்பத்திரி வளாகத்தை சுற்றி வந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக்கல்லூரியில் சமூக மருத்துவத்துறை சார்பில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. இதனை மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் பாலாஜிநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் ஆறுமுகம், இணை பேராசிரியர் சிவச்சந்திரன், துணை பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களும் கலந்து கொண்டனர்.

    ஊர்வலத்தின் போது டீன் பாலாஜிநாதன் பேசியதாவது:-

    உலக சுகாதார தினமானது ஆண்டுதோறும் ஏப்ரல் 7-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் மக்களால் பெருமளவில் தாக்கும் நோயின் மீது கவனத்தை ஈர்க்க இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

    மேலும், உலக சுகாதார தினமானது உலக சுகாதார நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட நாளையும் நினைவு கூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட 75 -வது ஆண்டு ஆகும்.

    உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டுக்கான கருப்பொருள் "அனைவருக்கும் சுகாதாரம்" என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த கருபொருளின் இலக்கு என்னவென்றால், கடந்த 70 ஆண்டுகளில் பொது சுகாதாரத்தை பேணுவதில் செய்யப்பட்ட சாதனைகளை நினைவு கூருவது, பொது சுகாதாரப் பணிகள் எப்படி கடந்த 70 ஆண்டுகளில் மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளது என்பதை அறிவது, தமிழ்நாடு அரசின் சீரிய வழிகாட்டுதலின் பேரில் 100 சதவீதம் கட்டாய முகக்கவசம் அணிந்து, நம்மை தொற்று நோய்களில் இருந்து காத்துக் கொள்ள வேண்டும்.

    மருத்துவ மாணவர்கள் இருஓசக்கர வாகனங்களை இயக்கும் பொழுது கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். நமது உடல் சுகாதாரத்தைப் பேண, நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை மட்டுமே தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விழிப்புணர்வு ஊர்வலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரி வளாகத்தை சுற்றி வந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    முடிவில் சமூக மருத்துவத் துறையின் இணை பேராசிரியர் சிவச்சந்திரன் நன்றி கூறினார்.

    • பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான அண்ணா நகர் டவர் பார்க். சுமார் 15 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
    • வீடுகளில் வசிப்போருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் அன்றாடம் ஏற்படும் பிரச்சினைகள் கொஞ்சம் நஞ்சமல்ல.

    சென்னையில் மக்கள் தொகை பெருகி வருவது போல் வாகனங்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது.

    இதற்கேற்றார் போல் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான அரசு அலுவலகங்கள், வணிக தலங்கள், பூங்காக்கள் ஆகிய இடங்களில் வாகனங்கள் நிறுத்த போதிய இட வசதிகள் இல்லாததால் அருகில் உள்ள தெருக்களில், வீடுகளின் முன்பு வண்டிகளை நிறுத்தி செல்கின்றனர்.

    இதனால் வீடுகளில் வசிப்போருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் அன்றாடம் ஏற்படும் பிரச்சினைகள் கொஞ்சம் நஞ்சமல்ல.

    சென்னை நகரின் அழகான பகுதி அண்ணாநகர். இங்கு வசிப்போர் பெரும்பாலும் நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்கள் ஆவார்கள். பெரும்பலான வீடுகளில் கார்கள் பயன்பாடு அதிகம். எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணாநகரில் வணிக நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், கோவில்கள், பொழுது போக்கு பூங்காக்கள் அதிகம் உள்ளன.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான அண்ணா நகர் டவர் பார்க். சுமார் 15 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் வரும் வாகனங்கள் பூங்காவின் முன்பு நிறுத்தப்பட்டு அங்கு இடமில்லாமல் அருகில் உள்ள தெருக்களின் வீடுகள் முன்பு நிறுத்தப்படுகின்றன. இதனால் வீடுகளில் வசிப்போர் பெரும் சிரமம் அடைகிறார்கள். இதனால் வாகன ஓட்டிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

    ஒய் பிளாக்கில் அதிக வாகனங்கள் வீடுகளின் முன்பு நிறுத்தப்படுவதால் ஏற்படும் சங்கடங்கள் குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    பல ஏக்கர் பரப்பளவுள்ள டவர் பூங்காவில் தினமும் பல்லாயிரக்கணக்கானோர் இந்த பகுதி மட்டுமல்லாது சுற்று வட்டார பகுதிகளிலும் இருந்தும் இங்கு வந்து செல்கின்றனர். அதிலும் பெரும்பாலானோர் கார்களில் வருவதால் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக ஏற்பட்டு எங்கு இடம் கிடைக்குமோ அங்கு நிறுத்த வேண்டிய சூழலில் நிறுத்தி செல்கின்றனர்.

    நாங்கள் அவசரத்துக்கு எங்கும் செல்ல முடியவில்லை. பல ஏக்கர் பரப்பளவுள்ள டவர் பூங்காவில் கட்டண முறையில் வாகன நிறுத்தத்தை ஏற்படுத்தி தந்தால் அவர்களுக்கும் வசதி. எங்களுக்கும் வசதி என்கின்றனர்.

    சென்னையின் மிகப் பெரிய வணிக ஸ்தலம் தியாகராய நகர். கோடிகள் புரளும் இந்த பகுதியில் பொதுமக்கள் வரத்து எப்போதும் அதிகமாகவே காணப்படும். இரு சக்கர வாகனங்கள் முதல் 4 சக்கர வாகனங்கள் என எந்நேரமும் சாலைகள் பரபரப்புடன் காணப்படும்.

    வாகனங்கள் நிறுத்துவதற்கு என்று போதிய இடம் இல்லாததால் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, பாண்டி பஜார் ஆகிய இடங்களில் உள்ள தெருக்களில் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. சில தெருக்களில் நோபார்க்கிங் என்ற அறிவிப்பு போர்டையும் மீறி வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

    பாண்டி பஜாரில் பிரமாண்ட பன்னடுக்கு பார்க் கிங் கட்டப்பட்டு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. ஆனால் அதன் அருகில் உள்ள மாசிலாமணி தெருவிலேயே இரு சக்கர வாகனங்களும், 4 சக்கர வாகனங்களும் நிறுத்தப்பட்டு உள்ளன.

    வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் நிறுத்தப்படுவதால் பொது மக்கள் நடந்து செல்ல கூட முடியாமல் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

    அரசு இந்த பிரச்சினைக்கு மல்டி லெவல் பார்க்கிங் போன்ற பல்வேறு வசதிகளை கொண்டு வந்தாலும் தெருக்களில் நிறுத்தப்படும் வாகனப் பிரச்சினைக்கு தீர்வு என்பது எப்போது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    • வாகனம் மோதி முதியவர் படுகாயம் அடைந்தார்.
    • நடந்து சென்ற போது சம்பவம்

    கரூர் :

    கரூர் தளவாபாளையம் அருகே உள்ள புஞ்சை தோட்டக்குறிச்சி முத்துராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 65). இவர் தோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மாணிக்கம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாணிக்கம் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் விபத்து ஏற்படுத்திய செல்வராஜ் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேலூர் நகராட்சி பகுதியில் உரிமம் பெறாத கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • வாகனங்களை பறிமுதல் செய்வதோடு அவர்கள் மீது வழக்கு தொடரப்படும்

    மேலூர்

    மேலூர் நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் தனியார் கட்டிடங்களில் உள்ள மனித கழிவு நீர் தொட்டிகளில் இருந்து கழிவுகளை அகற்றும் வாகனங்கள் உடனடியாக உரிமம் பெற வேண்டும் என்று நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளார்.

    கழிவுநீர் அகற்றும் வாகனங்களில் அரசு விதிப்படி போதிய பாதுகாப்பு அமைப்புகள் செய்திருக்க வேண்டும்.தகுந்த ஆவணங்களுடன் வாகன உரிமையாளர்கள் ரூ.2 ஆயிரம் கட்டணத்துடன் நகராட்சியில் விண்ணப்பித்து 2 ஆண்டுகள் செல்லத்தக்க உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம்.

    அவ்வாறு உரிமம் பெறாத கழிவுநீர் அகற்றும் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு அவர்கள் மீது வழக்கும் தொடரப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    • தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு அறிவுரை.
    • தலைகவசம் வைத்துக்கொண்டு அணியாமல் வாகனங்களில் தொங்க விட்டபடி செல்லக்கூடாது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைகவசம் அணிந்து செல்ல வேண்டும் என்ற போக்குவரத்து விதிமுறை அமல்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்க ப்பட்டு வருகிறது. தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு போலீசார் அபராதமும் விதித்து வருகிறார்கள்.

    மேலும் தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்று விபத்துக்குள்ளாகி உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தஞ்சை மாநகர போக்குவரத்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறர்கள்.

    அதன்படி தஞ்சை பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு அறிவுரை கூறியதோடு, தலைகவசம் அணிந்து வாகனம் ஓட்டுவேன் என உறுதிமொழியும் மேற்கொள்ள செய்தனர்.

    இதையடுத்து தஞ்சை அண்ணாநகர் பகுதியில் நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தலைகவசம் உயிர்கவசம் என்ற தலைப்பில் நடந்த விழிப்புணர்வு நாடகத்தில், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, அவ்வாறு ஓட்டினால் உயிரிழப்பு எவ்வாறு ஏற்படுகிறது என்பதை போலீசார் தத்ரூபமாக நடித்து காட்டினர். மேலும் தலைகவசம் வைத்துக்கொண்டு அணியாமல் வாகனங்களில் தொங்க விட்டபடி செல்லக்கூடாது, தலைகவசம் அணிந்து தான் பயணிக்க வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

    • ரூ.88.500 லட்சம் மானியத்துடன் கூடிய புதிய ஆட்டோ.
    • வாகனங்களின் மொத்த மதிப்பு ரூ.19,65,000-ம் இதற்கு மானிய தொகையாக ரூ5,20,500 ஆகும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெகடர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தாட்கோ மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி ஊராட்சி சாக்கரமஸ் என்பருக்கு தொழில் முனைவோர் இயக்கத்தின் மூலம் ரூ.2.95,000 மொத்த தொகையில் ரூ.88.500 லட்சம் மானியத்துடன் கூடிய புதிய ஆட்டோவையும்,

    மயிலாடுதுறை மாவட்டம் அடியாமங்கலம் ஊராட்சி பெரிய தெரு ராஜபாண்டியன் என்பருக்கு ரூ.9,800,000 மொத்த தொகையில் ரூ.2.25 லட்சம் மானியத்துடன் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் கோதண்டபுரம் ஊராட்சியை சார்ந்த கண்ணன் என்பவருக்கு ரூ.6,00,000 மொத்த தொகையில் ரூ.2.07,000 மானியத்துடன் புதிய டிராக்டர்களை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

    இவ்வாகனங்களின் மொத்த மதிப்பு மதிப்பு ரூ.19, 65,000 மும் இதற்கு மானிய தொகையாக ரூ5, 20, 500 ஆகும்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்

    முத்துசாமி, மானட்ட தொழில் மையம் பொது மேலாளர் மணிவண்ணன் மாவட்ட ஆட்சியயின் நேர்முக உதனியாளர் (பொது) நரேந்திரன், மாவட்ட தாட்கோ மேலாளர்சுகந்தி பரிமளம்உதவி மேலாளாசுசிலா ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • இதன் அடிதளத்தில் 4 சக்கர வாகனங்கள் 130 நிறுத்தலாம்.
    • 22 ஆயிரத்து 249 சதுர அடியில் 45 கடைகள் உள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே திருவள்ளுவர் தியேட்டர் மற்றும் அதனை சுற்றியுள்ள கடைகள் இடிக்கப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.48 கோடியே 5 லட்சம் மதிப்பில் அடுக்குமாடிகளுடன் வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. அதன்படி அடித்தளம், தரைதளம், முதல்தளம், 2-வது தளம் ஆகியவற்றுடன் கட்டப்பட்டுள்ளது.

    இந்த பணிகளை மேயர் சண்.ராமநாதன் பார்வையிட்டார். அப்போது மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், மண்டலக்குழு தலைவர் மேத்தா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    பின்னர் மேயர் சண்.ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வணிக வளாகம் கட்டும் பணி கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 18 மாதங்களில் முடிக்கும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டது. தொல்லியல் துறை ஆட்சேபனை காரணமாக தாமதம் ஆனது. தற்போது மாநகராட்சி சார்பில் பணிகள் நிறைவடைந்து விட்டது. கடைகள் ஏலம் எடுத்துள்ளவர்கள் அந்தந்த கடைகளில் டைல்ஸ் உள்ளிட்ட இதர பணிகள் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர். இந்த பணிகள் மே மாதத்துக்குள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும்.

    இதன் அடிதளத்தில் 4 சக்கர வாகனங்கள் 130 நிறுத்தலாம். தரைதளம் 22 ஆயிரத்து 249 சதுர அடியில் 45 கடைகள் உள்ளன. இதில் நகைக்கடைகள், ஜவுளி கடைகள் இடம்பெறுகின்றன இதே போல் முதல்தளம், 2-வது தளத்திலும் ஜவுளிகடைகள், நகைகடைகள் இடம் பெறுகின்றன. இதில் ஒவ்வொரு தளத்திலும் ஆண், பெண்களுக்கு தனித்தனி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. லிப்ட் வசதி, எஸ்கலேட்டர் வசதி, குளிர்சாதன வசதியும் அமைக்கப்படுகின்றன.

    இதே போல் தஞ்சாவூர் காந்திஜி சாலையில் உள்ள வணிக வளாகம், புதிய பஸ் நிலையத்தில் உள்ள பன்னோக்கு வணிக வளாகம் ஆகியவற்றின் பணிகள் விரைந்து முடிக்கப்படும். தஞ்சை மேலவீதி மூலஅனுமார் கோவில் அருகே கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் உள்ள பாலத்தின் முன் பகுதியில் உள்ள வீடுகளை அகற்றி பாலம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றார்.

    • பரமத்தி அருகே சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதி பெண் பலியானர்.
    • விபத்தை ஏற்படுத்திவிட்டு அந்த வாகனம் நிற்காமல் சென்று விட்டது.

    பரமத்திவேலூர்,

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே நல்லியாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கௌஸ். இவரது மனைவி சசிகலா என்கிற மும்தாஜ் (வயது 64). இவர் நேற்று காலை பரமத்தி அருகே உள்ள மரவாபாளையம் பஸ் நிறுத்தத்தில் நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் பை-பாஸ் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி அதிவேகமாக சென்ற வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சசிகலா என்கிற மும்தாஜ் தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    அக்கம் பக்கத்தில் இருந்த வர்கள் ஓடிவந்து பார்த்து இது குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சசிகலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திடீரென பெய்த பலத்த மழையின் காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியது.
    • சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று திடீரென பெய்த பலத்த மழையின் காரணமாக குண்டும், குழியுமான சாலைகளில் மழை நீர் தேங்கியது.இதில் வாகனங்கள் சிக்கிக் கொண்டன.குறிப்பாக ஊத்துக்குளி சாலை ரெயில்வே கேட் பகுதி மற்றும் அணைப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குண்டும் குழியுமான சாலைகளில் வாகனங்கள் சிக்கி கொண்டன.

    அந்த வாகனங்கள் அவ்வழியே வந்த சரக்கு வேன் மூலம் கயிறை கொண்டு பொதுமக்கள் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக ஊத்துக்குளி ரெயில்வே கேட், அணைப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் இவை உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வருகின்றன.
    • மானின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பீலிக்காம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

     காங்கயம் :

    காங்கயம்-தாராபுரம் சாலையில் உள்ள ஊதியூா் மலையில் மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் இவை உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வருகின்றன. இந்நிலையில் ஊதியூா் வனத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு வெளியேறிய புள்ளிமான் குண்டடம் சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தது.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், மானின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பீலிக்காம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    குடிநீர் தேடி வனங்களில் இருந்து வெளியேறும் விலங்குகள் வாகனங்களில் மோதி உயிரிழப்பது வாடிக்கையாகி வருகிறது. எனவே வனங்களில் குடிநீா்த் தொட்டி அமைத்து தண்ணீா் நிரப்ப வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 

    • வாகனம் மோதி மான் பரிதாபமாக இறந்தது.
    • நெடுஞ்சாலையில் எச்சரிக்கை பலகைகள் வைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தேவகோட்டை

    தேவகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியில் அதிக அளவில் மான்கள் நடமாட்டம் உள்ளது. நகரின் எல்லை பகுதியில் தற்போது புதிதாக அமைக்கப்பட்ட திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.இதில் வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்கின்றனர்.

    அமராவதி புதூரில் இருந்து புளியால் வரை உள்ள காட்டுப் பகுதிகளில் மான்கள் அதிகமாக உள்ளது. இந்தப் பகுதியில் இருந்து கிராமப் பகுதிகளுக்கு தண்ணீர் குடிப்பதற்காக மான்கள் நெடுஞ்சாலையைக் கடந்து வருவது வழக்கம்.

    அப்படி கடந்து வரும் போது வேகமாக வரும் வாகனங்களில் அடிபட்டு இறப்பது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், இன்று காலை தேவகோட்டை அருகே திருச்சி-ராமேசு வரம் தேசிய நெடுஞ்சாலையில் மாரிச்சான்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் மான் ஒன்று இறந்து கிடந்தது.

    இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மானின் உடலை மீட்டுச் சென்றனர்.

    மான்கள் வாகனங்களில் அடிபட்டு இறப்பது தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில், நெடுஞ்சாலை ஓரங்களில் மான்கள் நடமாட்டம் குறித்தும், வேகக்கட்டுபாடுடன் வாகனங்களை இயக்க அறிவுறுத்தும் வகையிலும் எச்சரிக்கை போர்டுகள் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×