search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் 2 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும்- மேயர் பேட்டி
    X

    வணிக வளாகம் கட்டப்பட்டு வரும் பணிகளை மேயர் சண்.ராமநாதன் பார்வையிட்டார்.

    தஞ்சையில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் 2 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும்- மேயர் பேட்டி

    • இதன் அடிதளத்தில் 4 சக்கர வாகனங்கள் 130 நிறுத்தலாம்.
    • 22 ஆயிரத்து 249 சதுர அடியில் 45 கடைகள் உள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே திருவள்ளுவர் தியேட்டர் மற்றும் அதனை சுற்றியுள்ள கடைகள் இடிக்கப்பட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.48 கோடியே 5 லட்சம் மதிப்பில் அடுக்குமாடிகளுடன் வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. அதன்படி அடித்தளம், தரைதளம், முதல்தளம், 2-வது தளம் ஆகியவற்றுடன் கட்டப்பட்டுள்ளது.

    இந்த பணிகளை மேயர் சண்.ராமநாதன் பார்வையிட்டார். அப்போது மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், மண்டலக்குழு தலைவர் மேத்தா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    பின்னர் மேயர் சண்.ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வணிக வளாகம் கட்டும் பணி கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 18 மாதங்களில் முடிக்கும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டது. தொல்லியல் துறை ஆட்சேபனை காரணமாக தாமதம் ஆனது. தற்போது மாநகராட்சி சார்பில் பணிகள் நிறைவடைந்து விட்டது. கடைகள் ஏலம் எடுத்துள்ளவர்கள் அந்தந்த கடைகளில் டைல்ஸ் உள்ளிட்ட இதர பணிகள் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர். இந்த பணிகள் மே மாதத்துக்குள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும்.

    இதன் அடிதளத்தில் 4 சக்கர வாகனங்கள் 130 நிறுத்தலாம். தரைதளம் 22 ஆயிரத்து 249 சதுர அடியில் 45 கடைகள் உள்ளன. இதில் நகைக்கடைகள், ஜவுளி கடைகள் இடம்பெறுகின்றன இதே போல் முதல்தளம், 2-வது தளத்திலும் ஜவுளிகடைகள், நகைகடைகள் இடம் பெறுகின்றன. இதில் ஒவ்வொரு தளத்திலும் ஆண், பெண்களுக்கு தனித்தனி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. லிப்ட் வசதி, எஸ்கலேட்டர் வசதி, குளிர்சாதன வசதியும் அமைக்கப்படுகின்றன.

    இதே போல் தஞ்சாவூர் காந்திஜி சாலையில் உள்ள வணிக வளாகம், புதிய பஸ் நிலையத்தில் உள்ள பன்னோக்கு வணிக வளாகம் ஆகியவற்றின் பணிகள் விரைந்து முடிக்கப்படும். தஞ்சை மேலவீதி மூலஅனுமார் கோவில் அருகே கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் உள்ள பாலத்தின் முன் பகுதியில் உள்ள வீடுகளை அகற்றி பாலம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றார்.

    Next Story
    ×