search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trinamool Congress"

    • கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.
    • வாகனங்களில் சென்றவர்கள் கண்டும், காணாமல் சென்றது போலவும் இடம் பெற்று இருந்தது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் தன்பான் பகுதியை சேர்ந்த பழங்குடி இனத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 4 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதியஜனதா கட்சியில் இணைந்தனர்.

    இதற்கிடையில் அந்த பெண்களை ரோட்டில் தவழ வைத்து நூதன தண்டனை கொடுப்பது போன்ற வீடியோவை மேற்கு வங்காள மாநில பாரதிய ஜனதா தலைவர் சுகந்தா மஜூம்தார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

    அந்த வீடியோவில் 3 பெண்களும் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் ரோட்டில் படுத்து தவழ்ந்து ,தவழ்ந்து செல்வதும், இதனை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் கண்டும், காணாமல் சென்றது போலவும் இடம் பெற்று இருந்தது.

    இந்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 3 பழங்குடி இன பெண்கள் பாரதியஜனதா கட்சியில் சேர்ந்ததால் ஆத்திரம் அடைந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அவர்களை மீண்டும் தங்கள் கட்சியில் சேருமாறு இந்த தண்டனையை கொடுத்ததாக பா.ஜனதா குற்றம்சாட்டி உள்ளது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது. 

    • ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் ஆணையம் தேசிய கட்சி என்ற அந்தஸ்தை வழங்கி உள்ளது.
    • இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தேசிய அந்தஸ்து திரும்ப பெறப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த தேசிய கட்சி என்ற அந்தஸ்தை தலைமை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றுள்ளது. இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தேசிய அந்தஸ்தும் திரும்ப பெறப்பட்டுள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் ராஷ்டிரிய லோக் தளம், ஆந்திராவில் பாரத் ராஷ்டிர சமிதி, மணிப்பூரில் பிடிஏ கட்சி, புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கடசி, மேற்கு வங்காளத்தில் ஆர்எஸ்பி, மிசோரமில் எம்பிசி ஆகிய கட்சிகளுக்கு வழங்கப்பட்ட மாநிலக் கட்சி அந்தஸ்தையும் தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.

    அதேசமயம், டெல்லி, கோவா, பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பெற்ற வாக்குகள் மற்றும் செயல்திறனின் அடிப்படையில், ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தற்போது டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது.

    சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் செயல்திறனின் அடிப்படையில், நாகாலாந்தில் தேசியவாத காங்கிரசும், மேகாலயாவில் திரிணாமுல் காங்கிரசும் மாநில கட்சிகளாக அங்கீகரிக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.

    பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய மக்கள் கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகிய கட்சிகள் இப்போது தேசிய கட்சிகளாக உள்ளன. 

    • அர்பிதா வீடுகளில் நடந்த சோதனையின்போது ஏராளமான தங்க நகைகள் மற்றும் கோடிக்கணக்கான ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    • குந்தன் கோஷ் பலரிடம் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி கொண்டு ஏமாற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த ஆசிரியர் பணி நியமன மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சமீபத்தில் முன்னாள் கல்வி மந்திரி பார்த்தா சட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அர்பிதா வீடுகளில் நடந்த சோதனையின் போது ஏராளமான தங்க நகைகள் மற்றும் கோடிக்கணக்கான ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக மேற்கு வங்காள மாநில திரிணாமுல் காங்கிரஸ் இளைஞர் பிரிவு தலைவர் குந்தன் கோஷ் பலரிடம் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி கொண்டு ஏமாற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

    இதையடுத்து அவருக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்நிலையில் இன்று குந்தன்கோஷ் கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கங்குலி பாஜகவில் சேருவார் என்ற தகவலை மக்கள் மத்தியில் பரப்ப பாஜக முயன்றது.
    • கங்குலி வீட்டிற்கு சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரவு உணவு சாப்பிட்டார்.

    கொல்கத்தா:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ தலைவர் பதவிக்கு 2வது முறையாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியிடவில்லை. எனினும் செயலாளர் பதவிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா 2வது முறையாக போட்டியிடுகிறார். கங்குலிக்கு பதில், பிசிசிஐ தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகின.

    இந்நிலையில் பாஜகவில் கங்குலி சேராததால், 2வது முறையாக அவருக்கு பிசிசிஐ தலைவர் பதவியை வழங்காமல் அவரை அக்கட்சி அவமானப் படுத்துவதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. இது குறித்து பேசிய திரிணாமுல் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், கடந்த ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாகவே, கங்குலி பாஜகவில் சேருவார் என்ற தகவலை மக்கள் மத்தியில் பரப்ப பாஜக முயன்றது என்றார்.

    கடந்த மே மாதம் கங்குலி வீட்டிற்கு சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரவு உணவு சாப்பிட்டதை திரிணாமுல் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது. ஆனால் கங்குலி பாஜகவில் சேராதததால் அவரை அக்கட்சி அரசியல் ரீதியாக அவமானப்படுத்த முயற்சிப்பது வெளிப்படையாக தெரிகிறது என்றும் குணால் கோஷ் கூறினார்.

    ஜெய்ஷா இரண்டாவது முறையாக பிசிசிஐ செயலாளராக ஆகும் போது கங்குலி ஏன் பிசிசிஐ தலைவராக 2வது முறையாக வர முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் திரிணாமுல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ள பாஜக, கொல்கத்தா இளவரசரை, ஒருபோதும் கட்சியில் சேர்க்க முயற்சிக்கவில்லை என்று கூறியுள்ளது.

    திரிபுராவில் திரிணாமுல் இளைஞர் காங்கிரஸ் தலைவி சயோனி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
    அகர்தலா:

    பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வரும் திரிபுராவில் 2023 ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது. வரும் 25ம் தேதி நடைபெறும் உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிடுகிறது. இதற்காக கட்சியின் முக்கிய தலைவர்கள் திரிபுராவில் முகாமிட்டு பொதுக்கூட்டங்களை நடத்திவருகின்றனர்.

    திரிபுராவில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டம் ஒன்றில் முதல் மந்திரி பிப்லப் கலந்து கொண்டார். தொண்டர்களும் திரளாக பங்கேற்றனர். அந்த சமயத்தில், அவர்கள் மீது வாகனம் ஏற்றி கொல்ல முயற்சி நடந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

    இதற்கிடையே, திரிணாமுல் இளைஞர் காங்கிரஸ் தலைவி சயோனி கோஷ் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இதுபற்றிய முதல்கட்ட சான்று கிடைத்துள்ளது. இதனால் கோஷ் மீது 307, 153 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அகர்தலா போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என மேற்கு திரிபுராவின் கூடுதல் எஸ்.பி. பி.ஜே. ரெட்டி கூறியுள்ளார்.

    இந்நிலையில், திரிபுராவில் சயானி கோஷ் கைது சம்பவத்தை கண்டித்தும், போலீசார் கடுமையாக நடந்து கொண்டனர் எனக்கூறி டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதில் சுகேந்து ராய், கல்யாண் பானர்ஜி மற்றும் தோலா சென் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

    பிரதமர் மோடி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக கேதார்நாத், பதிரிநாத் சென்றுள்ள நிலையில், கேதார்நாத் யாத்திரை குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    பிரதமர் நரேந்திரமோடி நேற்று உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் மலையில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் அருகே உள்ள புனித குகைக்கு சென்று அவர் தியானம் மேற்கொண்டார். விடிய விடிய தியானத்தில் ஈடுபட்டு இருந்த மோடி இன்று காலை குகையை விட்டு வெளியே வந்தார். பிரதமரின் வருகையையொட்டி கேதர்நாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோதும் கேதார்நாத் பயணத்துக்கு அனுமதி அளித்த தேர்தல் கமி‌ஷனுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு மோடி கூறினார்.

    பின்னர் அவர் அங்கிருந்து பத்ரிநாத் சென்று அங்குள்ள கோவிலில் சாமி கும்பிட்டார். இன்று பிற்பகல் மோடி டெல்லி திரும்புகிறார்.

    அவர் கேதார்நாத் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த காட்சி டிவி-க்களில் ஒளிபரப்பானது. இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தேர்தல் கமி‌ஷனில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    அதில் பிரதமர் நரேந்திர மோடியின் கேதார்நாத் யாத்திரை டெலிவி‌ஷன்களில் ஒளிபரப்பப்பட்டது. அதன் மூலம் மோடி தேர்தல் விதிமுறையை மீறியுள்ளார் என கூறப்பட்டுள்ளது.



    இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிக் ஓ’பிரைன் கூறுகையில் ‘‘கடைசி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் 17-ந்தேதி மாலை 6 மணியுடன் முடிவடைந்த போதிலும், இரண்டு நாட்களாக மோடியின் கேதார்நாத் யாத்திரை தேசிய மற்றும் உள்ளூர் டிவி-க்களில் ஒளிபரப்பானது ஆச்சர்யத்தை அளிக்கிறது. இது தேர்தல் விதிமுறையை மீறியதாகும்.

    அவரது செயல்பாடுகள் நிமிடத்திற்கு நிமிடம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது ஒருவகையில் வாக்காளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈர்க்கக்கூடிய செயலாகும். மோடி பின்பக்கத்தில் இருந்து மோடி, மோடி என்ற கோஷம் எழுப்பப்பட்டது’’ என்றார்.
    திரிணாமூல் காங்கிரஸுக்கு வாக்களியுங்கள் என்று சீன மற்றும் தெலுங்கு மொழிகளில் சுவர் விளம்பரம் மூலம் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றன. #MamataBanerjee #LoksabhaElections2019

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் போட்டி போட்டு தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் நூதன முறையில் பிரசாரம் மேற்கொண்டுள்ளது.

    முந்தைய தேர்தல்களில் பெங்காலி, ஆங்கிலம், உருது மற்றும் இந்தி மொழிகளில் சுவர் பிரசார விளம்பரங்கள் இருந்து வந்தன. தற்போது தெலுங்கு, சந்தாலி (அல்சிசி) மற்றும் சீன மொழிகளில் சுவர் விளம்பரம் மூலம் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றன.

    தங்காரா, ஜார்கிராம் மற்றும் கராக்பூர் தொகுதிகளில் இத்தகைய பிரசாரம் மேற் கொள்ளப்பட்டுள்ளது. தங்காராவில் சீனா டவுன் என்றழைக்கப்படும் ஹூயு கிங் தைம் பகுதியில் 2300-க்கும் மேற்பட்ட சீனர்களின் ஓட்டு உள்ளது.

     


    தங்காராவில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளராக மலாராய் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக இங்கு சீன மொழியில் பிரசாரம் செய்யப்படுகிறது.

    அதே போன்று பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் மேற்கு மிட்னாபூர் தொகுதியில் துரு, ஹேம் பிரம், ஹன்ஸ்டா, மண்டி, குஸ்கு, சோரன், முர்மு, பாஸ்கே பகுதிகளில் 52 சதவீதம் சந்தாலி மொழி பேசும் அல்சிசி இனத்த வர் உள்ளனர். இங்கு பிர்கா சோரனுக்கு வாக்களிக்கும்படி சந்தாலி மொழியில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

    கராக்பூர் தொகுதியில் தெலுங்கு மொழி பேசும் வாக்காளர்கள் 50 சதவீதம் பேர் உள்ளனர். அவர்களை கவரும் விதத்தில் அங்குள்ள ரெயில்வே டவுன்ஷிப் பகுதிகளில் தெலுங்கு மொழியில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.  #MamataBanerjee #LoksabhaElections2019

    துரைமுருகன் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதற்கு திரிணாமூல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. #duraimurugan #mamata #incometaxraid
    கொல்கத்தா:

    வேலூர் மாவட்டம் காட்பாடி - காந்திநகரில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டுக்கு நேற்றிரவு 10.30 மணிக்கு வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை நடத்துவதற்காக வந்தனர். அப்போது அங்கிருந்த திமுக தொண்டர்கள், சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சுமார் 4 மணி நேரத்திற்குப் பிறகு, துரைமுருகனின் வீட்டில் சோதனை தொடங்கியது. அங்கிருந்த துரைமுருகனின் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. 

    இதனுடன் அவரது மகனும் தி.மு.க. சார்பில் வேலூர் மக்களவை தொகுதியின் வேட்பாளராக போட்டியிடும் கதிர் ஆனந்துக்கு சொந்தமான காட்பாடி கிருஸ்தியான்பேட்டையில் உள்ள கல்லூரி மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் துரைமுருகன் இல்லத்தில் இருந்து ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என வருமான வரிதுறை தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தின் கல்லூரி, சி.பிஎஸ்.இ பள்ளியில் வருமானவரிதுறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி திமுக பொருளார் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அக்கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில், மேற்கு வங்கம், டெல்லி,  உத்தரபிரதேசம், ஆந்திரா, பீகார், கார்நாடகா ஆகிய மாநிலங்களில் எதிர்கட்சியினர் மீது வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் அந்த வகை சோதனைகள் நடைபெற்றுள்ளது.

    அரசியல் காரணங்களுக்காக இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுவதை  திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மேற்குவங்கம் மற்றும் கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் பழிவாங்கும் நடவடிக்கை தொடர்வதாக திரிணாமூல் காங்கிரஸ் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. #duraimurugan #mamata #incometaxraid
    மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கார்த்திக் நஸ்கார் பலியானார். #TMCLeaderShotDead
    கொல்கத்தா:

    மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் தாரியா பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் நஸ்கார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான இவர், தாரியா பஞ்சாயத்து தலைவி சுவப்னா நஸ்கரின் கணவர் ஆவார்.

    கார்த்திக் நேற்றிரவு  தங்கரகாளி பகுதியில் இருந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.  தாரியாஜாரி என்ற இடத்தில் சென்றபோது பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் அவரை வழிமறித்து கண்மூடித்தனமாக தாக்கியது. பின்னர் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிய கார்த்திக், அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.



    இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடினர். ஆனால் அவர்கள்  தப்பித்துச் சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதேபோல் நேற்று மாலை குல்தாலி பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர் சூரத் அலி மோண்டலை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது. #TMCLeaderShotDead

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கொலை வழக்கில் பா.ஜ.க. பிரமுகர் முகுல் ராய்க்கு கொல்கத்தா ஐகோர்ட் இன்று முன்ஜாமின் வழங்கியது. #SatyajitBiswas #MukulRoy #MukulRoyAnticipatorybail
    கொல்கத்தா:
        
    மேற்கு வங்காளம் மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ளது கிருஷ்ணகஞ்ச் சட்டசபை தொகுதி. இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சத்யஜித் பிஸ்வாஸ். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.
     
    இந்நிலையில், எம்.எல்.ஏ. சத்யஜித் பிஸ்வாஸ் வங்காளதேசம் நாட்டின் எல்லைப்பகுதியான நாடியா மாவட்டம், புல்வாரியில் உள்ள தனது வீட்டின் அருகில் 9-2-2019 அன்று நடந்த சரஸ்வதி பூஜையில் பங்கேற்றார்.

    அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சத்யஜித் பிஸ்வாசை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த

    டாக்டர்கள், வரும் வழியில் சத்யஜித் பிஸ்வாஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,  சத்யஜித் பிஸ்வாஸ் கொல்லப்பட்ட வழக்கில் முன்னர் மம்தாவின் ஆதரவாளராக இருந்து கடந்த ஆண்டு பா.ஜ.க.வுக்கு தாவிய முன்னாள் எம்.பி. முகுல் ராய் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்த கொலை வழக்கில் இவருடன் மேலும் மூன்றுபேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இவர்களில் இருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்திருந்தனர். விரைவில் முகுல் ராயும் கைது செய்யப்படலாம் என திரிணாமுல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில், சத்யஜித் பிஸ்வாஸ் கொலை வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக முன்ஜாமின் கோரி கொல்கத்தா ஐகோர்ட்டில் முகுல் ராய் மனு தாக்கல் செய்திருந்தார்.



    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது மார்ச் 7-ம் தேதிவரை முகுல் ராயை கைது செய்ய தடை விதித்து முன்ஜாமின் அளிக்கப்பட்டது.

    திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவுடன் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் முகுல் ராய் சில மாதங்கள் ரெயில்வே துறை மந்திரியாக பதவி வகித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம். #SatyajitBiswas #MukulRoy #MukulRoyAnticipatorybail #SatyajitBiswasmurder
    மம்தா ‘நவீன ஜான்சி ராணி’ அவரை சாதாரணமாக எடை போட வேண்டாம் என்று பாராளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி தினேஷ் திரிவேதி கூறினார். #MamataBanerjee #TrinamoolCongress
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசுகையில், சி.பி.ஐ.யின் நடவடிக்கையை கண்டித்து பேசினார்கள்.

    அக்கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி பேசுகையில் மம்தா பானர்ஜியை நவீன ஜான்சி ராணி என்று வர்ணித்தார். அவர் பேசியதாவது:-

    மத்திய அரசு சி.பி.ஐ.யை வைத்து எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறது. எங்கள் தலைவர் மம்தா பானர்ஜி இன்றைக்கு ஜான்சி ராணியாக திகழ்கிறார். நவீன ஜான்சி ராணியான அவரை சாதாரணமாக எடை போட வேண்டாம். அவரை யாராலும் வீழ்த்த முடியாது. மக்கள் அவர் பக்கம் இருக்கிறார்கள்.

    நாடு சுதந்திரம் அடையும் முன்பு ஆங்கிலேயர்கள் தான் நம்மை அடக்கி ஆண்டார்கள். அதுபோல் எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறார்கள். ஆட்சியாளர்களுக்கு நான் சொல்லிக்கொள்கிறேன் ஜான்சி ராணியை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஜான்சிராணி யார்? அவர் ஒரு சாதாரண பெண்மணிதான். ஆனால் அவரால் தான் ஜான்சியை பாதுகாக்க முடியும்” என்று மக்கள் தேர்வு செய்தனர்.

    இவ்வாறு அவர் பேசினார். #MamataBanerjee #TrinamoolCongress
    மேற்கு வங்காளம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி. மவுசம் பெனாசிர் நூர் இன்று மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். #CongressMP #MausamNoor #TrinamoolCongress
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் கடந்த 19-ம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 22 முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசினர். பல லட்சக்கணக்கான மக்கள் இந்த கூட்டத்துக்கு வந்திருந்தனர்.

    இந்த கூட்டத்தால் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் முகாமில் சற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக வடநாட்டு ஊடகங்கள் விமர்சித்திருந்தன. 

    இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்.பி.யான மவுசம் பெனாசிர் நூர் இன்று மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    சட்டம் பயின்ற பட்டதாரியான மவுசம், மேற்கு வங்காளம் மாநிலத்துக்குட்பட்ட சுஜாப்பூர் சட்டசபை தொகுதி பெண் உறுப்பினராக மூன்றுமுறை வெற்றிபெற்ற ருபி நூர் என்பவரின் மகளாவார்.

    மேற்கு வங்காளம் மாநிலத்தின் காங்கிரஸ் இளைஞர் அணி தலைவராக முன்னர் பொறுப்பு வகித்த மவுசம் பெனாசிர் நூர், தனது தாயாரின் மறைவுக்கு பின்னர் சுஜாப்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அதன் பின்னர் மல்தாஹா உட்டார் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருமுறை போட்டியிட்டு வெற்றிபெற்ற மவுசம் பெனாசிர் நூர்(39)  இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #CongressMP #MausamNoor #TrinamoolCongress 
    ×