search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tribute"

    • சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் ரூ.25 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.
    • கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடந்தது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரர் வழிபட்ட பெருமை பெற்ற மதுரகாளியம்மன் கோவில் வாரந்தோறும் திங்கள், வெள்ளி, அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திறந்திருக்கும். உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி, வெளிநாட்டு பணம் ஆகியவற்றை செலுத்துவது வழக்கம். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நடந்தது. இந்த அபிஷேகம் மே 22-ந்தேதி முடிவடைந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி 3 தற்காலிக கோவில் உண்டியல்கள் அமைக்கப்பட்டிருந்தது.

    இந்து சமய அறநிலையத்துறையின் மதுரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் அசனாம்பிகை, சரக ஆய்வாளர்கள் தீபாதேவி, வினோத்குமார் ஆகியோர் முன்னிலையில் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக 3 உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், தங்கம், வெள்ளி, வெளிநாட்டு பணம் ஆகியவை எடுக்கப்பட்டு தனித்தனியாக எண்ணப்பட்டது. கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் அகில பாரத ஐயப்பா சேவா சங்க ஆன்மிக மெய்யன்பர்கள் 47 பேரும், கோவில் பணியாளர்கள் உள்பட 60 பேர் ஈடுபட்டனர். இதில் ரூ.25 லட்சம் பணமும், 192 கிராம் தங்கமும், 148 கிராம் வெள்ளியும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்ததாக இந்து சமய அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.

    • மேஜர் சரவணனின் 24-ம் ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது
    • அமைச்சர் கே.என்.நேரு மலர் வளையம் வைத்து அஞ்சலி

    திருச்சி,

    கடந்த 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் எதிரிகள் நால்வரை நேருக்கு நேர் சுட்டு வீழ்த்தி அவர்களது இரண்டு முகங்களை தனது ஏவுகணையால் தாக்கி அவற்றை முழுவதும் அழித்து விட்ட பின்னர் முதல் ராணுவ அதிகாரியாக வீரமரணமடைந்தவர் திருச்சியை சேர்ந்த மேஜர் சரவணன்.அவரின் வீர தீர செயல்களை பாராட்டி இந்திய அரசு பாட்டாலிக்கின் கதாநாயகன் என்றும் நம் நாட்டின் உயரிய விருதான வீர் சக்ரா என்ற விருதையும் வழங்கி கௌரவித்தது.இந்நிலையில் இன்று அவரது 24 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.இதையொட்டி திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகே உள்ள அவரது நினைவு தூணுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மேஜர் சரவணனின் சகோதரி மருத்துவர் சித்ரா மற்றும் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் செந்தில்குமார் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா, மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    • தேர்தல் பிரச்சாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு குண்டு வைத்து கொல்லப்பட்டார்.
    • ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    டெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 32வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    முன்னதாக ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் மே 21-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தில் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூருக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருவதாக தகவல் வெளியான நிலையில் அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேர்தல் பிரச்சாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு குண்டு வைத்து கொல்லப்பட்டார் என்பது நினைவு கூறத்தக்கது.

    • திருவள்ளுவர் அறக்கட்டளை பொருளாளர் இறையடிகன், பொறுப்பாளர் உதயகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
    • திருக்குறள் தொண்டர் கருப்பசாமியை பாராட்டி இணை செயற்பொறுப்பாளர் நெடுஞ்சேர லாதன் நினைவு பரிசு வழங்கினார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் 1-ந்தேதி குமரிமுனை திருக்குறள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதேபோல வைகாசி மாத பிறப்பான நேற்று 17-வது ஆண்டு குமரி முனை திருக்குறள் திருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் சங்கிலித்துறை கடற்கரையில் அமைந்துள்ள திருக்குறள் ஒண்சுடர் தூணில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    தமிழ் அறிஞர் செந்தூர் பாரிசுடர் ஏற்றி வைத்தார். பின்னர் திருவள்ளுவர் அறக்கட்டளை செயல் பொறுப்பாளர் தாகூர் மற்றும் தமிழ் அறிஞர் கணேஷ் ஆகியோர் முன்னிலையில் திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.

    அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு திருவள்ளுவர் அறக்கட்டளை பொறுப்பாளர் கதிர் முத்தையன் தலைமையில் தமிழ் அறிஞர்கள் படகில் புறப்பட்டு சென்று திருவள்ளுவர் சிலையின் கால் பாதத்தில் மலர் தூவி வழிபட்டனர். மாலையில் லீபுரம் சந்திப்பில் இருந்து திருக்குறளூருக்கு தமிழ் அறிஞர்கள் திருவள்ளுவர் அறக்கட்டளை பொறுப்பாளர் ராமன் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

    இந்த ஊர்வலத்தை புனிதா கணேசன் தொடங்கி வைத்தார். பின்னர் இரவு திருக்குறளூரில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு திருவள்ளுவர் அறக்கட்டளை ஆட்சி பொறுப்பாளர் தமிழ் முகிலன் தலைமை தாங்கினார். லீபுரம் பஞ்சாயத்து தலைவி ஜெயக்குமாரி லீன், துணை தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை பொறுப்பாளர் பாண்டிய ராஜன் வரவேற்று பேசினார்.

    இதில் திருவள்ளுவர் அறக்கட்டளை பொருளாளர் இறையடிகன், பொறுப்பாளர் உதயகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். திருக்குறள் தொண்டர் கருப்பசாமியை பாராட்டி இணை செயற்பொறுப்பாளர் நெடுஞ்சேர லாதன் நினைவு பரிசு வழங்கினார். பின்னர் அறக்கட்டளை பொறுப்பாளர் விமுனா மூர்த்தி, உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை நிறுவனர் குறளமிழ்தன் ஆகியோர் திருக்குறள் திறப்பாடு போட்டி நடத்தினார்கள். முடிவில் அறக்கட்டளை பொறுப்பாளர் நற்றேவன் நன்றி கூறினார்.

    • 40 மரங்கள் வேருடன் வெட்டி சாய்க்க ப்பட்டன.
    • வெட்டப்பட்ட பனை மரங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது

    திருப்பூர்:

    பல்லடம் அடுத்த, மாதப்பூரை சேர்ந்தவர் வடிவேல், (42)விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தின் அருகே, 80 ஆண்டுகள் பழமையான பனை மரங்கள் இருந்தன. இவருக்கும், இவரது உறவினருக்கும் இடையே வழித்தட பிரச்னையை தொடர்ந்து, 40 மரங்கள் வேருடன் வெட்டி சாய்க்க ப்பட்டன. இது குறித்து வடிவேல் அளித்த புகார் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, வெட்டப்பட்ட பனை மரங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அண்ணாதுரை தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, வடிவேல் மற்றும் இவரது உறவினர்கள் பங்கேற்றனர். முன்னதாக, வெட்டப்பட்ட பனை மரங்களுக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பெண்கள் ஒப்பாரி வைத்தனர். 'மண்ணைக் காக்கும் பனை மரங்களை அழிக்காதே', 'பனை மரத்துக்கு அஞ்சலி' என்பது உள்ளிட்ட பல்வேறு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

    பொதுமக்கள் கூறுகையில், '80 ஆண்டுகளாக இருந்த பனை மரங்களை, வழித்தட பிரச்னைக்காக வெட்டி வீழ்த்தியுள்ளனர். இன்றைய சூழலில், பெற்ற குழந்தைகள் போல் மரங்களை வளர்க்க வேண்டியுள்ளது. வெட்ட ப்பட்ட பனை மரங்களுக்கு இணையாக மரங்கள் நட வேண்டும். மரங்களை வெட்டியவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காதது கவலை அளிக்கிறதுஸ என்றனர்.

    • விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோவில் உண்டியலில் ரூ.3.92 லட்சம் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்
    • செயல் அலுவலர் முத்துராமன், ஆய்வாளர் யசோதா, மேற்பார்வையாளர் மாரிமுத்து முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது

    விராலிமலை,

    புதுக்கோட்டை விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயில் சிறப்பு பெற்ற தலமாகும். அப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக போற்றப்படும் இக்கோயிலில் வருடம் முழுவதும் மார்கழி, சித்திரை உள்ளிட்ட மாதங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் முக்கிய விழாக்கள் நடைபெறும்.இதில் பல்வேறு வெளியூர்களில் இருந்து பக்தர்கள் வந்து இருந்து அம்மனுக்கு வழிபாடு நடத்தி செல்வார்கள். இந்த நிலையில் இக்கோயில் உண்டியலை திறந்து காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

    செயல் அலுவலர் முத்துராமன், ஆய்வாளர் யசோதா, மேற்பார்வையாளர் மாரிமுத்து முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூபாய் 3 லட்சத்தி 92 ஆயிரத்தி 189 ரொக்கம் மற்றும் 5.8 கிராம் தங்கம், 291 கிராம் வெள்ளி என பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோயில் பணியாளர்கள் அருள்முருகன், மாதவன்,கோயில் மகளிர் குழுக்கள், மற்றும் கோகிலா கலைக்கல்லூரி மாணவர்கள், விளக்குபூஜை மகளிர் குழுவினர், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் ரூ.49½ லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது
    • கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், ஆன்மிக அன்பர்கள் ஈடுபட்டிருந்தனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி, வெளிநாட்டு பணம் ஆகியவற்றை செலுத்துவது வழக்கம். மேலும் அந்த உண்டியல்களை 3 மாதங்களுக்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுவதும் வழக்கம். கடந்த ஏப்ரல் மாதம் 5-ந்தேதி கோவிலின் கும்பாபிஷேக விழா நடைபெற்றதால் மார்ச் மாதம் உண்டியல்கள் திறந்து எண்ணப்படவில்லை.

    இந்தநிலையில், நேற்று கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், தங்கம், வெள்ளி, வெளிநாட்டு பணம் ஆகியவற்றை இந்து சமய அறநிலையத்துறையின் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலின் உதவி ஆணையர் ஹரிகர சுப்பிரமணியன் தலைமையில், மதுரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் அசனாம்பிகை, சரக ஆய்வாளர் தீபாதேவி ஆகியோர் முன்னிலையில் கோவிலில் உள்ள மொத்தம் 7 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.

    இதில், ரூ.49 லட்சத்து 63 ஆயிரத்து 77-ம், 261 கிராம் தங்கமும், 845 கிராம் வெள்ளியும், டாலர், தினார் உள்ளிட்ட 167 எண்ணிக்கையிலான வெளிநாட்டு பணமும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், ஆன்மிக அன்பர்கள் ஈடுபட்டிருந்தனர். இதற்கு முன்பு கோவில் உண்டியல் கடந்த டிசம்பர் மாதம் திறந்து எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மே 4-ந்தேதி தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 ராணுவவீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
    • வீர மரணமடைந்த சந்திரசேகரின் 3-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு செங்கோட்டை அருகே உள்ள மூன்று வாய்க்கால் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    செங்கோட்டை:

    கடந்த 2020-ம் ஆண்டு மே 4-ந்தேதி ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதி களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 ராணுவவீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மூன்று வாய்க்கால் பகுதியை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் சந்திரசேகரும் ஒருவர்.

    இந்நிலையில் வீர மரணமடைந்த சந்திரசேகரின் 3-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு செங்கோட்டை அருகே உள்ள மூன்று வாய்க்கால் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தென்காசி பட்டாளம் ராணுவ நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் ராம்குமார் தலைமையில் கவுரவத்தலைவர் மணி மற்றும் செயலாளர் முருகன், துணைச் செயலாளர் ரஞ்சித் ஆகியோர் முன்னிலையில் அவரது நினைவத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் போது அவரது மனைவி ஜெனிபர் கிறிஸ்டி மற்றும் தென்காசி பட்டாளம் ராணுவ நலச்சங்கத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் உடன் இருந்தனர்.

    • முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தந்தை மரணத்திற்கு கட்சியினர்-முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.
    • இன்று மாலை நல்லடக்கம் நடக்கிறது.

    சிவகாசி

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், அமைப்பு செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தந்தை கே.தவசிலிங்க ஆசாரி (வயது93). இவர் வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்தநிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி யின் வீட்டில் வைக்கப் பட்டுள்ளது.

    முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், பல்வேறு கட்சியினர், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

    • திருக்கோவிலூர் தீயணைப்பு நிலையத்தின் சார்பில் தீ தொண்டு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது
    • ப்பு அலுவலர் ரேணு தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் தீயணைப்பு நிலையத்தின் சார்பில் தீ தொண்டு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீயணைப்பின் போது மரணம் அடைந்த தீயணைப்பு படை வீரர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நிலையத்தின் சிறப்பு அலுவலர் ரேணு தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தனர்.

    • செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கவுள்ளனர்
    • உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    பெரம்பலூர்:

    நாடு முழுவதும் தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் தீயணைப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு, பெரம்பலூர்-அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா, உதவி மாவட்ட அலுவலர் ஹக்கீம் பாஷா, நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் வீரர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர். வருகிற 20-ந் தேதி வரை தீ தொண்டு வார விழா "தீ பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு தேசிய உள்கட்டமைப்பின் வளர்ச்சியாகும்" என்ற தலைப்பின் கீழ் கடைபிடிக்கப்படவுள்ளது. அப்போது மாவட்டம் முழுவதும் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி, தீ விபத்து, பேரிடர்களில் இருந்து எவ்வாறு தப்பிப்பது? என்பது குறித்து தீயணைப்பு நிலைய வீரர்கள் செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கவுள்ளனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ.க சார்பில் சமூக நீதி வாரம் நிகழ்ச்சி கச்சேரி சாலையில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ.க சார்பில் சமூக நீதி வாரம் நிகழ்ச்சி கச்சேரி சாலையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். ஓ.பி.சி. அணி மாநில செயலாளர் வக்கீல் செல்வநாயகம், பட்டியல் அணி மாநில செயலாளர் பாண்டியராஜன், மாவட்ட செயலாளர் ஹரி, மாநில செயற்குழு உறுப்பினர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஷ் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து இரட்டைமலை சீனிவாசன், பண்டிதர் அயோத்திதாசர், கக்கன், சகஜானந்தா, வீரன் சுந்தரலிங்கம், ஒண்டிவீரன், வீரதமிழச்சி குயிலி ஆகியோரின் உருவபடங்களுக்கு கட்சியினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.இதில் மாவட்ட பொதுச்செயலாளர் தியாகராஜன், துணை தலைவர் சர்தார்சிங், பொருளாளர் குமரவேல், மாநில சிறுபான்மை அணி பொருளாளர் ஸ்ரீசந்த், ஒன்றிய தலைவர் முத்து, பட்டியல் அணி மாவட்ட துணை தலைவர் ராமமூர்த்தி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×