என் மலர்
உள்ளூர் செய்திகள்

விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோவில் உண்டியலில் ரூ.3.92 லட்சம் காணிக்கை
- விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோவில் உண்டியலில் ரூ.3.92 லட்சம் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்
- செயல் அலுவலர் முத்துராமன், ஆய்வாளர் யசோதா, மேற்பார்வையாளர் மாரிமுத்து முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது
விராலிமலை,
புதுக்கோட்டை விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயில் சிறப்பு பெற்ற தலமாகும். அப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக போற்றப்படும் இக்கோயிலில் வருடம் முழுவதும் மார்கழி, சித்திரை உள்ளிட்ட மாதங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் முக்கிய விழாக்கள் நடைபெறும்.இதில் பல்வேறு வெளியூர்களில் இருந்து பக்தர்கள் வந்து இருந்து அம்மனுக்கு வழிபாடு நடத்தி செல்வார்கள். இந்த நிலையில் இக்கோயில் உண்டியலை திறந்து காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
செயல் அலுவலர் முத்துராமன், ஆய்வாளர் யசோதா, மேற்பார்வையாளர் மாரிமுத்து முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூபாய் 3 லட்சத்தி 92 ஆயிரத்தி 189 ரொக்கம் மற்றும் 5.8 கிராம் தங்கம், 291 கிராம் வெள்ளி என பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோயில் பணியாளர்கள் அருள்முருகன், மாதவன்,கோயில் மகளிர் குழுக்கள், மற்றும் கோகிலா கலைக்கல்லூரி மாணவர்கள், விளக்குபூஜை மகளிர் குழுவினர், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.






