search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TR Baalu"

    • பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் எதற்காக என்பது தற்போது வரை தெரியவில்லை.
    • பாரத் என்ற வார்த்தை அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது.

    குடியரசு தலைவர் மாளிகை தரப்பில் அனுப்பிய ஜி20 உச்சி மாநாட்டுக்கான அழைப்பிதழில் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதிலாக பாரத் குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு? செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான மசோதா வருகிற 18-ந்தேதி கூட உள்ள பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, பெரும்பான்மை இருப்பதால் பா.ஜ.க எதையும் செய்ய நினைக்கிறது. பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் எதற்காக என்பது தற்போது வரை தெரியவில்லை என்றார்.

    மேலும், பாரத் என்ற வார்த்தை அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. பாரத் என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறு என்று கூற முடியாது. அதே நேரம் இந்தியா என்ற பெயரை உச்சரிக்க பா.ஜ.க. பயப்படுகிறது என டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி, ஸ்மிருதி இரானி பேசியுள்ளது பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தும் என்பதால் அப்பேச்சுக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.
    • அமைச்சர் எ.வ.வேலுவின் உரையை தவறாக மேற்கோள் காட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

    பாராளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர். பாலு சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,

    நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது, 'இந்தியா' குறித்து தி.மு.க. அமைச்சர் எ.வ.வேலு கூறியதை மேற்கோள் காட்டி, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் பேசியுள்ளனர்.

    பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சை தவறாக மேற்கொள் காட்டி பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியுள்ளது பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தும் என்பதால் அப்பேச்சுக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    கடந்த 5.8.2023 அன்று சென்னை அண்ணாசாலை மாவட்ட அரசு நூலகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் உரையை தவறாக மேற்கோள் காட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    • டி.ஆர்.பாலு முன்னதாகவே நீதிமன்றத்தில் வந்து சத்திய பிரமாணம் செய்து விட்டு சென்று இருக்கிறார்.
    • பா.ஜ.க. வழக்கறிஞர்கள் அணி பலமாக இருப்பதை இன்றுதான் பார்த்தேன்.

    சென்னை:

    தி.மு.க. பைல்ஸ் என்ற பெயரில் தி.மு.க.வினரின் சொத்து பட்டியல்களை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14-ந்தேதி வெளியிட்டார். இது தொடர்பாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் தனக்கு எதிராக எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு கருத்துக்களை அண்ணாமலை தெரிவித்துள்ளதாகவும், 10 ஆயிரத்து 841 கோடி ரூபாய் மதிப்பிலான 21 நிறுவனங்கள் தனக்கு சொந்தமானவை என அண்ணாமலை கூறியது தவறானது என்றும் அவதூறானது என்றும் மனுவில் தெரிவித்திருந்தார்.

    எந்தவித அடிப்படை ஆதாரம் இல்லாமல் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ள அண்ணாமலையை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை கோர்ட்டு அண்ணாமலை இன்று ஆஜராக உததரவிட்டிருந்தது. இதன்படி அவர் கோர்ட்டில் ஆஜரானார்.

    அப்போது அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    தி.மு.க. பைல்ஸ் ஏப்ரல் 14-ந்தேதி வெளியிட்டதில் இருந்தே தி.மு.க.வினர் கோபத்தில் உள்ளனர். டி.ஆர்.பாலு முன்னதாகவே நீதிமன்றத்தில் வந்து சத்திய பிரமாணம் செய்து விட்டு சென்று இருக்கிறார். 3 நிறுவனத்தில் மட்டும்தான் பங்கு தாரராக இருக்கிறேன் என்று டி.ஆர்.பாலு கூறி உள்ளார்.

    பா.ஜ.க. வழக்கறிஞர்கள் அணி பலமாக இருப்பதை இன்றுதான் பார்த்தேன். மீண்டும் ஆகஸ்டு மாதம் 3-வது வாரம் ஆஜராக சொல்லி இருக்கிறார்கள்.

    தி.மு.க. ஊழல் பட்டியல் சம்பந்தமான பாகம்-2 தயாராக உள்ளது. கவர்னர், டி.ஜி.பி. ஆகியோரிடம் கொடுப்பதா? அல்லது பொது வெளியில் வெளியிடுவதா? என்பது பற்றி பின்னர் அறிவிப்பேன்.

    பினாமி பெயரில் வாங்கி இருக்க கூடிய சொத்து பட்டியல்கள் இருக்கிறது. அவர்கள் சமூகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள்.

    ஊழல் பட்டியல் பாகம்-2 பாதயாத்திரைக்கு முன்பு ஜூலை மாதத்திற்குள் வெளியிடப்படும்.

    நான் வெளியிட இருக்கிற பினாமிகள் அனைவரும் தி.மு.க.வினருக்கு சொந்தமானவர்கள்தான். ரத்த சொந்தமும் இருக்கிறது. இது சம்பந்தமான புகைப்படங்களும் உள்ளன.

    இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

    • டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
    • வழக்கில் நாளை ஆஜர் ஆகும்படி அண்ணாமலைக்கு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தி.மு.க. வினரின் சொத்து பட்டியல்களை வெளியிட்டார். அதில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு பற்றியும் குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கில் நாளை (14-ந்தேதி) ஆஜர் ஆகும்படி அண்ணாமலைக்கு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி நாளை காலை 10 மணிக்கு அண்ணாமலை சைதாப்பேட்டை கோர்ட்டில் நேரில் ஆஜராகிறார்.

    • நெருப்பாற்றில் பயணிப்பவர் மு.க.ஸ்டாலின்.
    • மிரட்டலுக்கு பணியாத மாநிலம் தமிழ்நாடு.

    கோவை :

    அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்தும், தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் கோவை சிவானந்தாகாலனியில் கண்டன பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமை தாங்கினார்.

    பின்னர் அவர் பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:-

    அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதை, குடும்பத்தின் இழப்பாக கருதி கூட்டணி கட்சி தலைவர்கள் இங்கு கூடி உள்ளனர். அதிகார மமதையில் செயல்படும் பா.ஜ.க. ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்ட வேண்டும்.

    அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு பற்றி அவரிடம் தெரிவிக்கவில்லை. இரவு 12 மணி வரைக்கும் வீட்டில் எதுவும் எடுக்கவில்லை. அனுப்பாத சம்மனுக்கு கையெழுத்து போட மிரட்டி உள்ளனர். அதை பற்றி கேட்டபோது கடுமையாக தாக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து நீதிமன்றத்தில் விரைவில் தெரிவிப்போம்.

    நெஞ்சுவலி வந்தவரை நடிக்கிறார் என கூறி அதிகாரிகள் தாக்கி உள்ளனர். அவருக்கு இதயத்தில் 3 அடைப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அவரின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

    மத்திய பா.ஜ.க. ஆட்சி இன்னும் 6 மாதமோ, ஒரு வருடமோ தான். அதற்கு பின்பு வரும், புதிய ஆட்சிக்கு இவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். மத்திய பா.ஜனதாவின் நடவடிக்கை தொடர்பாக விசாரணை கமிஷன் அமைப்போம். அதற்கு பதில் சொல்லியே தீர வேண்டும்.

    டெல்லி துணை முதல்-மந்திரி மணீஸ்சிசோடியா, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, கர்நாடக துணை முதல்- மந்திரியாக உள்ள டி.கே.சிவக்குமார் மற்றும் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் உறவினர் உள்பட பலரிடம் அமலாக்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தி உள்ளது.

    அந்த வகையில் செந்தில்பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் மோசமான நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. மிரட்டலுக்கு பணியாத மாநிலம் தமிழ்நாடு. நெருப்பாற்றில் பயணிப்பவர் மு.க.ஸ்டாலின். அண்ணாமலையை இப்போது தான் நீதிமன்றத்திற்கு வர வைத்திருக்கிறோம். கொங்கு மண்டலத்தில் 11 நாடாளுமன்ற தொகுதியிலும் வெற்றியை கொண்டு வரும் திறமை கொண்டவர் செந்தில் பாலாஜி. அதை தடுக்கத்தான் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். செந்தில் பாலாஜி தலைமையில், 11 பாராளுமன்ற தொகுதியை வெற்றி பெற செய்வார். கொங்கு மண்டலம் கோபாலபுரத்தை நோக்கி பயணிக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பி.டி.ஆர். ஆடியோ விவகாரத்துக்காக மாற்றப்பட்டிருந்தால் அதை ஏற்க முடியாது.
    • தி.மு.க.வின் ஊழல் 2-வது பட்டியல் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து ஆவடி நாசர் நீக்கப்பட்டுள்ளார். அவர் மீது ஏற்கனவே நாங்கள் பல குற்றச்சாட்டுக்கள் வைத்திருந்தோம். அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கியதற்கு பாராட்டுகிறோம்.

    புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் பால் கொள்முதல் விலையை உயர்த்தியும், ஆவின் பால் விலையை குறைத்தும் வழங்க வேண்டும். அதற்கு சிறப்பான நிர்வாக அனுபவம் தேவை.

    தொழில்துறை பொறுப்பை டி.ஆர்.பி. ராஜாவுக்கு வழங்கி உள்ளனர். அது என்ன காரணம் என்று தெரியவில்லை. அந்த குடும்பம் தான் 20 தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறது. அவர்களுக்கு இந்த துறையை வழங்கி உள்ளார்கள். என்ன ஐடியாவில் இதை வழங்கி இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

    டி.ஆர்.பாலு தனது நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டது, பாராளுமன்ற அவை குறிப்பிலேயே இடம்பெற்றுள்ளது.

    டி.ஆர்.பாலு என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பதாக அறிகிறேன். இதனால் நான் பயந்துவிடப் போவதில்லை. இன்னும் உங்கள் மீதான குற்றச்சாட்டு அதிகமாகுமே தவிர குறையாது.

    நிதி அமைச்சராக பொறுப்பு வகித்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மிக சிறப்பாக செயல்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மேடைகளிலேயே பாராட்டி இருக்கிறார். அப்படி இருக்கும்போது அவரிடம் இருந்து நிதித்துறையை மாற்றுவதற்கு என்ன காரணம்?

    பி.டி.ஆர். ஆடியோ விவகாரத்துக்காக மாற்றப்பட்டிருந்தால் அதை ஏற்க முடியாது. அது அவரது தவறல்ல. இப்போதும் நான் சவால் விடுகிறேன். அந்த ஆடியோவில் முதல்வரையும் தான் குற்றம்சாட்டி உள்ளேன். இதற்கும் என் மீது வழக்கு போடுங்கள்.

    விவகாரம் கோர்ட்டுக்கு வரட்டும். ஒருமணிநேரம் ஓடும் அந்த ஆடியோவை கோர்ட்டு ஆய்வு செய்யட்டும். அதில் இருக்கும் பல தகவல்கள் வெளிவரட்டும். தவறு செய்தவர்களை பற்றி தான் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசி இருக்கிறார். அவரை மட்டுமே பகடை காயாக மாற்றிவிடக்கூடாது என்பதால்தான் 3 மற்றும் 4-வது பகுதியை நான் இன்னும் வெளியிடவில்லை.

    என் மீது இதுவரை தி.மு.க.வை சார்ந்தவர்களும், அவர்களது நண்பர்களும் ரூ.1,461 கோடி கேட்டு வழக்கு போட்டுள்ளார்கள். இந்தியாவில் இதுவரை யார் மீதும் இவ்வளவு பணம் கேட்டு வழக்கு போட்டதில்லை. அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. வழக்கை கோர்ட்டில் சந்திக்கிறேன்.

    இந்த நேரத்தில் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். கலைஞர், பா.ஜனதா எங்கு இருக்கிறது? என்று கேட்டிருந்தார். இன்று ரூ.1,461 கோடி கேட்கும் அளவுக்கு நாங்கள் வளர்ந்து இருக்கிறோம். உங்களை கேள்வி கேட்கும் அளவுக்கு வளர்ந்துள்ளோம்.

    இந்த வழக்குகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்சப்போவதில்லை. தி.மு.க.வின் ஊழல் 2-வது பட்டியல் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும். ஏற்கனவே வெளியிட்ட பட்டியலில் 11 பேர் பெயர் இடம்பெற்று இருந்தது. இனி வெளியிடப்படும் பட்டியலில் புதிய அமைச்சர்கள் உள்பட 21 பேர் பெயர் இடம்பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாராய உற்பத்திக்காகவே தொழில் துறை டி.ஆர்.பி.ராஜா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    • ஆடியோவில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியது உண்மை தான்.

    சென்னை:

    முன்னாள் மத்திய மந்திரியும் தி.மு.க. பொருளாளருமான டி.ஆர்.பாலு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மீது இன்று அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஆவின் நிர்வாத்தில் நடைபெற்ற முறைகேடு காரணமாக ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார். பால் விலையை புதிய அமைச்சர் குறைக்க வேண்டும்.

    சாராய உற்பத்திக்காகவே தொழில் துறை டி.ஆர்.பி.ராஜா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    டி.ஆர்.பாலு என் மீது வழக்கு தொடர்ந்திருப்பது நகைப்புக்குரியது. வழக்கிற்கு பயந்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை ஒருபோதும் குறைக்க மாட்டேன். என் மீது தொடரப்பட்ட வழக்குகளை சட்டரீதியாக சந்திப்பேன்.

    ஆடியோ காரணமாக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் துறை மாற்றப்பட்டிருப்பது தவறு. 3 தலைமுறையாக மாநில வளர்ச்சிக்கு அர்ப்பணித்து கொண்டது என பி.டி.ஆர். குடும்பத்தை பாராட்டினார் முதலமைச்சர்.

    ஆடியோவில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியது உண்மை தான்.

    பி.டி.ஆர். ஆடியோ வெளியிட்டதற்காக என் மீது வழக்கு தொடருங்கள்.

    வழக்கு தொடர்ந்தால் ஆடியோவின் உண்மை தன்மையை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும்.

    1461 கோடி நஷ்ட ஈடு கேட்டு தி.மு.க.வினர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை மன்னிப்பு கேட்க மாட்டார். ரூ.100 கோடி நஷ்டஈடும் வழங்க மாட்டார்.
    • டி.ஆர்.பாலு இன்று சைதாப்பேட்டை கோர்ட்டில் 17-வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் மனு தாக்கல் செய்தார்.

    சென்னை:

    தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14-ந் தேதி தி.மு.க. சொத்துப்பட்டியல் என்ற பெயரில் தி.மு.க.வில் உள்ள முக்கிய பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார்.

    அதில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு குடும்ப சொத்து ரூ.10,841 கோடி என்று அதில் இடம் பெற்றிருந்தது.

    இதற்கு அண்ணாமலை 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் ரூ.100 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று டி.ஆர்.பாலு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

    இதற்கு அண்ணாமலையின் வழக்கறிஞரான பாரதிய ஜனதா கட்சி துணைத்தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் அளித்த பதில் நோட்டீசில் டி.ஆர்.பாலு மீதான சொத்து குவிப்பு குறித்து அண்ணாமலை தெரிவித்த கருத்துக்களில் அவர் இப்போதும் உறுதியாக உள்ளார்.

    அதனால் டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை மன்னிப்பு கேட்க மாட்டார். ரூ.100 கோடி நஷ்டஈடும் வழங்க மாட்டார் என்று கூறியிருந்தார்.

    அதுமட்டுமின்றி டி.ஆர்.பாலு குறித்த எந்த ஒரு அவதூறு கருத்துக்களையும் அண்ணாமலை தெரிவிக்கவில்லை. சொத்து மதிப்பு குறித்து அண்ணாமலை வெளியிட்ட அனைத்து தகவல்களும் உண்மையே. இதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அண்ணாமலை இந்த பட்டியலை வெளியிட்டுள்ளார் என்றும் பால் கனகராஜ் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

    இதை ஏற்றுக்கொள்ளாத டி.ஆர்.பாலு இன்று சைதாப்பேட்டை கோர்ட்டில் 17-வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் மனு தாக்கல் செய்தார்.

    அதில் அண்ணாமலை வெளியிட்ட கருத்துக்கள் பொய்யானது. எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருக்கிறது. எனவே அவதூறு சட்டத்தின் கீழ் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • முன்னாள் மத்திய மந்திரியும் தி.மு.க. பொருளாளருமான டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா இன்று அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.
    • பூண்டி கலைவாணன் எனது நண்பர்.

    சென்னை:

    முன்னாள் மத்திய மந்திரியும் தி.மு.க. பொருளாளருமான டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா இன்று அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது குறித்து டி.ஆர்.பாலு கூறுகையில், "எங்கள் தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லெண்ணங்களை, எதிர்பார்ப்புகளை மிக சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் என்ற வகையில் நல்ல அமைச்சர் என்ற பெயரை டி.ஆர்.பி.ராஜா எடுக்க வேண்டும் என்பது தான் எனது வேண்டுகோள்" என்றார்.

    அவரிடம் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட சிலர் அதிருப்தியில் இருப்பதாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு டி.ஆர்.பாலு கூறுகையில், "பூண்டி கலைவாணன் எனது நண்பர். எங்கள் மாவட்ட செயலாளர். டி.ஆர்.பி. ராஜா அமைச்சர் ஆவதற்கு அவரும் ஒரு காரணம்" என்றார்.

    • எனக்கு சொந்தமாக எந்த நிறுவனமும் கிடையாது.
    • 21 கம்பெனிகள் என்னுடையது என கூறி இருக்கிறார்கள்

    பம்மல் :

    சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சி பம்மல் தெற்கு பகுதி தி.மு.க சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் மண்டல குழு தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்தது. இதில் ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு எம்.பி, தமிழக சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் எம்.எல்.ஏ. கருணாநிதி மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி உள்பட பலர் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு கூறியதாவது:-

    பா.ஜ.க.வின் தமிழ்நாடு தலைவர் என்னைப் பற்றி கூறிய அவதூறு செய்தி ஒரு வாரத்திற்கு முன்பு வந்தது. அவதூறுகள் குறித்து நான் அவருக்கு நோட்டீஸ் அளித்தேன். தற்போது வரை அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. 48 மணி நேரம் அவருக்கு கொடுத்தேன். அதுவும் முடிந்து விட்டது.

    21 கம்பெனிகள் என்னுடையது என கூறி இருக்கிறார்கள். ஆனால் 3 நிறுவனங்களில் மட்டுமே பங்குதாரராக உள்ளேன். எனக்கு சொந்தமாக எந்த நிறுவனமும் கிடையாது. எந்த கம்பெனியிலும் நான் டைரக்டர் கிடையாது. தேர்தலில் நிற்கும் போதே சொத்து கணக்குகள் அனைத்தும் கொடுத்திருக்கிறேன் அதை பார்த்துக் கொள்ளலாம். எனக்கு எது சொந்தம் எது சொந்தமில்லை என்பது மக்களுக்கு தெரியும்.

    ஒரு வன்மம் நோக்கத்தோடு செய்திருக்கிறார். அதற்காக நான் வழக்கு தொடராமல் இருக்க முடியாது. வருகிற 8-ந் தேதி அவர் மீது வழக்கு தொடர போகிறேன். அதற்கு பிறகு சட்டபூர்வமாக சிவில் வழக்கு தொடருவேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • டி.ஆர்.பாலு பல நிறுவனங்களில் இயக்குனராக இருப்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.
    • அண்ணாமலை இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக உள்ளார்.

    சென்னை :

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்ட தி.மு.க. மூத்த நிர்வாகிகள் பல கோடி ரூபாய்க்கு சொத்துகளை குவித்துள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சமீபத்தில் வீடியோ வெளியிட்டார்.

    இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் தரப்பில் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசில் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை கூறியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.50 கோடி முதல் ரூ.500 கோடி வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

    இந்த நோட்டீஸ் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு அண்ணாமலை ஏற்கனவே பதில் அனுப்பி இருந்தார். அந்த பதிலில், மன்னிப்பு என்ற கேள்விக்கே இடமில்லை, இழப்பீடு தர முடியாது, சட்ட ரீதியாக இந்த வழக்கை சந்திக்க தயார் என்று அண்ணாமலை கூறியிருந்தார்.

    இந்த நிலையில், டி.ஆர்.பாலு அனுப்பிய நோட்டீசுக்கு வக்கீல் பால் கனகராஜ் மூலம் அண்ணாமலை பதில் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. நிர்வாகிகளின் சொத்து பட்டியலை ஆதாரங்களுடன் தான் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். தி.மு.க.வினரின் சொத்து விவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் அண்ணாமலை இதை வெளியிட்டுள்ளார்.

    யாரையும் அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதை அவர் வெளியிடவில்லை. எனவே அவதூறு சட்டத்தின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. டி.ஆர்.பாலு பல நிறுவனங்களில் இயக்குனராக இருப்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

    அதேபோன்று, பல நிறுவனங்களில் அவருக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பங்குகள் இருப்பதற்கும் ஆவணங்கள் உள்ளன. உரிய ஆதாரங்களுடன் தான் டி.ஆர்.பாலு மீது அண்ணாமலை குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

    எனவே மன்னிப்பு கேட்க முடியாது, இழப்பீடும் தர முடியாது. அண்ணாமலை இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக உள்ளார்.

    இவ்வாறு அந்த பதிலில் கூறப்பட்டு உள்ளது.

    • மோடி ஆட்சியில் ஜனநாயகம் இல்லை.
    • எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை நிச்சயம் 100 சதவீதம் தொடரும்.

    புதுடெல்லி :

    பாராளுமன்றத்தில் நேற்று காலை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்ட பின்னர் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு வளாகத்துக்கு வெளியே விஜய் சவுக் பகுதிக்கு வந்தனர். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பாராளுமன்ற தி.மு.க. குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கூறியதாவது:-

    அதானி பிரச்சினையில் பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கவேண்டும் என கடந்த 2 வாரங்களாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்டு வருகிறார்கள். இதுகுறித்து பதில் இல்லை. பாராளுமன்ற கூட்டுக்குழுவில் பெரும்பான்மையாக இருப்பது பா.ஜனதா உறுப்பினர்கள்தான். இருந்தும் அதை அவர்கள் அமைக்க மறுக்கிறார்கள். தேர்தல் வர இருக்கும் நேரத்தில் உண்மை வெளியே தெரிந்துவிடும் என கூட்டுக்குழுவை அமைக்கவில்லை.

    இந்நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல ராகுல்காந்திக்கு தண்டனை கிடைத்திருக்கிறது. நாட்டில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. மோடி ஆட்சியில் ஜனநாயகம் இல்லை. ஜனநாயகம் மீண்டும் தழைத்து வரவேண்டுமானால் இந்தியாவில் உள்ள எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சிக்கு வரும் வாய்ப்பை தேடிக்கொள்ளவேண்டும். நாங்கள் தீர்ப்புக்கு எதிராகப் போராடவில்லை. பிரதமர் மோடிக்குத்தான் கண்டனம் தெரிவிக்கிறோம்.

    எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை நிச்சயம் 100 சதவீதம் தொடரும். ஏன்? என்று கேட்டீர்கள் என்றால், எல்லோருமே ஒத்த கருத்து உள்ளவர்களாக இருக்கிறார்கள். மாநிலக்கட்சிகள் இல்லாமல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரமுடியாது. ஆட்சியும் நடத்தமுடியாது. மாநிலக்கட்சிகளை சேர்த்து காங்கிரஸ் வழிநடத்தும் என்பதுதான் எங்கள் எண்ணம். மாநிலக் கட்சிகளின் உதவி தேவை என்று அவர்களே பலமுறை சொல்லி இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×