search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tobacco products"

    • புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • 22 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவின் பேரில் மாவட்டம் முழு வதும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நடத்தப்பட்ட சோதனையில் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்த 22 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். மேலும், மணலூர் பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மணிகண்டன் (வயது 46), சதீஷ்(30) மற்றும் வரஞ்சரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிலம்பரசன் (38) ஆகியோரின் 3 கடைகளை மூடி சீல் வைத்தனர்.

    • போலீசாரை கண்டதும் காரில் வந்த நபர் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓட முயன்றார்.
    • காரை சோதனை செய்தபோது அதில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் சப் -இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, ஜெகதீஷ் மற்றும் போலீஸ்காரர்கள் பிரபு, சதீஷ், குமரவேல் ,வேல்முருகன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் குன்னத்தூரில் இருந்து பெருமாநல்லூர் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது திருப்பூர் நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். போலீசாரை கண்டதும் காரில் வந்த நபர் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓட முயன்றார். அந்த வாலிபரை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். தொடர்ந்து காரை சோதனை செய்தபோது அதில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் தர்மபுரி மாவட்டம் கரிமங்கலத்தைச் சேர்ந்த மாதேஷ் (வயது 31) என்பது தெரியவந்தது. மேலும் இவர் தர்மபுரியில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து திருப்பூரில் உள்ள ஒரு நபருக்கு கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர்.

    • மீனாட்சிபுரம் மற்றும் பூதிப்புரம் பேரூராட்சி பகுதிகளில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • சுமார் 10 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் மற்றும் பூதிப்புரம் பேரூராட்சி பகுதிகளில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் ராகவன் தலைமையில் போடி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சரண்யா மற்றும் அலுவலர்கள் பூதிப்புரம், மீனாட்சிபுரம் பேரூராட்சி அலுவலர்கள் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

    உணவு விடுதிகள் டீக்க டைகள், பெட்டிக்கடைகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளில் மேற்கொண்ட ஆய்வில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு கைப்பற்ற ப்பட்டது.

    சுமார் 1½ கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்ற ப்பட்டது. மேலும் சுமார் 10 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

    இது மட்டுமின்றி பல்வேறு பெட்டிக்கடைகள் மற்றும் உணவு விடுதிகளில் மேற்கொண்ட ஆய்வில் தரமற்ற எண்ணையில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் பயன்பாட்டு காலம் முடிந்து விற்பனைக்கு தரமற்ற நிலையில் வைக்கப்பட்டி ருந்த உணவுப் பொருட்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டது.

    இதுபோன்ற பொரு ட்களை விற்ற வியாபாரி களிடம் இனியும் இது போன்று தொடர்ந்து நடந்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரித்து ரூ.9 ஆயிரத்து 500 வரை அபராதம் வசூலித்தனர்.

    • நன்னிலத்தில் புகையிலை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    • நன்னிலம் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

     திருவாரூர்

    நன்னிலத்தில் பொது சுகாதார துறை மற்றும் பள்ளி கல்வி துறை இணைந்து புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஊர்வலத்தை நன்னிலம் பேரூராட்சி மன்றத்தலைவர் ராஜசேகர் தொடங்கி வைத்தார். இதில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பொது சுகாதார துறை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஸ்ரீதர், முதல் நிலை சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம் அன்பழகன்,

    சுகாதார ஆய்வாளர்கள் ஹட்சன், மிதுன், கீர்த்திவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஊர்வலம் ஆண்கள் மேல்நிலைபள்ளியில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக சென்று பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.

    • தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 3 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.
    • 5 கடைகளில் இருந்து ரூ.500 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தில் உள்ள கடைகளில் கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் ராஜா உத்தரவின் பேரில், வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் பாசில், அன்பரசன், சந்திரன் வள்ளி மற்றும் ஊழியர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 3 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். தொடர்ந்து அரசம்பட்டு கிராமத்தில் ஆய்வு செய்த அதிகாரிகள் அங்கு புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளின் உரிமை யாளர்க ளுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கினர். இந்த சோதனை யில் மொத்தம் 5 கடைகளில் இருந்து ரூ.500 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • கடத்தூர் மற்றும் சித்தோடு போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
    • ரூ.2,024 மதிப்புள்ள 1,478 கிராம் எடையிலான புகை யிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்

    கோபி

    கடத்தூர் மற்றும் சித்தோடு போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தங்களது மளிகை கடையில் விற்பனைக்கு வைத்திருந்ததாக நம்பியூர் பள்ளத்தூர் காலனியை சேர்ந்த தீபா (34), அளுக்குளி குட்டிமூலை காடு பகுதியை சேர்ந்த சரோஜாதேவி (62), காலிங்கராயன்பாளையம் பெரியார் நகர் முதல்வீதியை சேர்ந்த முருகேசன் (49) ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து ேபாலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.2,024 மதிப்புள்ள 1,478 கிராம் எடையிலான புகை யிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பதாக ரகசிய தகவல் வந்தது.
    • ரூ.1500 மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ராஜேந்திரபிரசாத்தை கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே திரு.பட்டினம் மலையன் தெருவில் ராஜேந்திர பிரசாத் நடத்திவரும் கடையில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து, திரு.பட்டினம் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி உத்தரவின் பேரில், சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, ரூ.1500 மதிப்பிலான அப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ராஜேந்திரபிரசாத்தை கைது செய்தனர்.

    • போலீசார் விசாரணை
    • ரூ.13 ஆயிரம் மதிப்புள்ளவை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு டவுன் போலீசார் ஆற்காட்டில் உள்ள செய்யாறு சாலையில் வாகனத் தணிக் கையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவர் ஆற்காடு அடுத்த மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த கண்ணாயிரம் (வயது 62), என்பதும், மோட்டார் சைக்கிளில் பையில் மறைத்து சுமார் 14 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்திச் செல்வதும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.13 ஆயிரம் மதிப்புள்ள புகை யிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.
    • புகையிலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் பஸ் நிலையம் அருகே, தனியார் மதுபான கடையை ஒட்டி, தள்ளு வண்டி பெட்டிக்கடை ஒன்றில்புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.

    அதன்பேரில் உதவி சப்- இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார், கடையை சோதனை செய்த போது அங்கு புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட 2 ஆயிரம் மதிப்புள்ள 40 புகையிலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் காரைக்கால் பெசன்ட் நகரைச் சேர்ந்த காதர் பாட்ஷாவை கைது செய்தனர்.

    • 10 கடைக்காரர்களுக்கு தலா ரூ .500 அபராதம் விதிக்கப்பட்டது.
    • மளிகை கடைகள், பெட்டிக்கடைகள், பேக்கரிகள் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டனர் .

    அவினாசி

    உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நேற்றுஅவினாசி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மனோகரன் தலைமையில் ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட சுகாதாரத் துறையினர் அவினாசியை அடுத்து கருவலூரில்உள்ள மளிகை கடைகள், பெட்டிக்கடைகள், பேக்கரிகள் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டனர் .

    அப்போது அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்ததாக 10 கடைக்காரர்களுக்கு தலா ரூ .500 அபராதம் விதிக்கப்பட்டது.

    • அதிரடி சோதனைகளை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவிட்டார்.
    • தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புகையிலை, கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் அதிரடி சோதனைகளை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவிட்டார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் மணலூர்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தமயந்தி (வயது 40), குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகன், வரஞ்வரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட உடையநாச்சி புதூர் கிராமத்தைச் சேர்ந்த சம்பத்(45), நின்னையூர் கிராமத்தைச் சேர்ந்த காசி (48), சங்கரபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஊராங்கனி கிராமத்தில் வெங்கடேசன் மனைவி செல்வி(43), ஜவுளிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த மாயவன் மனைவி கல்யாணி(60), கள்ளக்குறிச்சி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெ.ஜெ நகர் பகுதியைச் சேர்ந்த முருகன்(45) ஆகியோர் தங்களது மளிகை கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் மணலூர்பேட்டை, வரஞ்சரம் மற்றும் சங்கராபுரம் ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 4 கடைகளை மூடி சீல் வைத்தனர்.

    ஆசனூர் அருகே 13 கிலோ புகையிலை மற்றும் போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் ஆசனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கிடு சாமி மற்றும் போலீசார் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

    அவர்கள் ஆசனூர் சத்தியமங்கலம்- மைசூர் ரோட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் 3 பேர் பேக் மற்றும் கட்டை பையுடன் நின்று கொண்டு இருந்தனர். சந்தேகத்தின் பேரில் போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

    அப்போது அதில் தடை செய்யப்பட்ட பாக்குகள், புகையிலை உள்பட போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் புதுகோட்டை மாவட்டம் கோபாலபட்டினம் பகுதியை சேர்ந்த சதக்கத்துல்லா (24), ரகுமான்கான (24), முகமது சியமுதீன் (20) எனவும் அவர்கள் போதை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களிடம் இருந்து 13 கிலோ புகையிலை மற்றும் போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×