search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 கடைகளுக்கு சீல்
    X

     புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 4 கடைகளுக்கு சீல்

    • அதிரடி சோதனைகளை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவிட்டார்.
    • தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புகையிலை, கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் அதிரடி சோதனைகளை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவிட்டார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் மணலூர்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தமயந்தி (வயது 40), குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகன், வரஞ்வரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட உடையநாச்சி புதூர் கிராமத்தைச் சேர்ந்த சம்பத்(45), நின்னையூர் கிராமத்தைச் சேர்ந்த காசி (48), சங்கரபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஊராங்கனி கிராமத்தில் வெங்கடேசன் மனைவி செல்வி(43), ஜவுளிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த மாயவன் மனைவி கல்யாணி(60), கள்ளக்குறிச்சி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெ.ஜெ நகர் பகுதியைச் சேர்ந்த முருகன்(45) ஆகியோர் தங்களது மளிகை கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் மணலூர்பேட்டை, வரஞ்சரம் மற்றும் சங்கராபுரம் ஆகிய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 4 கடைகளை மூடி சீல் வைத்தனர்.

    Next Story
    ×