search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகையிலைப் பொருட்கள்"

    • வாய்க்கால்மேடு பகுதியில் பல்வேறு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.
    • குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஈரோடு:

    தமிழக அரசு குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டதுடன் பள்ளி மற்றும் கல்லூரி உள்ள பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்யவும் தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவ்வபோது ரகசிய தகவலின் பேரில் பெட்டிக்கடை, மளிகை கடை, டீக்கடை, பேக்கரி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருப்பவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வாய்க்கால்மேடு பகுதியில் பல்வேறு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.

    இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரிகள் அமைந்துள்ள பகுதியின் அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பெருந்துறை போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது வாய்க்கால்மேடு பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் சோதனை செய்த போது விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 26 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்த பெருந்துறை பிச்சாண்டம்பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி மற்றும் ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த எட்வர்டு அவரது அண்ணன் மகன் அருண்குமார் ஆகிய 3 பேரை கைது செய்து பெருந்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பெருந்துறையில் கல்லூரி பகுதியின் அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • 22 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவின் பேரில் மாவட்டம் முழு வதும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நடத்தப்பட்ட சோதனையில் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்த 22 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். மேலும், மணலூர் பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மணிகண்டன் (வயது 46), சதீஷ்(30) மற்றும் வரஞ்சரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிலம்பரசன் (38) ஆகியோரின் 3 கடைகளை மூடி சீல் வைத்தனர்.

    • வெள்ளகோவில் பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்ட் மேற்பார்வையில், போலீஸஇன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் நகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்
    • ராமகிருஷ்ணன் என்பவரது மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் நகர் பகுதியில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின் பேரில், காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்ட் பார்த்திபன் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், வெள்ளகோவில் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் பாலமுருகன் ஆகியோர் நகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது வெள்ளகோவில், இந்திரா நகர் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவரது மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்து ரூ 5 ஆயிரம் அபராதம் விதித்து கடைக்கு சீல் வைத்தனர்.

    அதேபோல் வெள்ளகோவிலில், மூலனூர் ரோட்டில் பிரபாகரன் என்பவரது டீக்கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 10 கிலோ எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கைப்பற்றி பிரபாகரனை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வெள்ளகோவில் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய புகையிலை மற்றும் குட்கா, கான்ஸ் மற்றும் கஞ்சா போன்றவற்றை யாரேனும் வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ சட்டப்படி கடுமையாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி தெரிவித்துள்ளார்.

    • விழுப்புரம் அருகே புகையிலைப் பொருட்கள் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப் -இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் ஆகியோர் செஞ்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட த்தில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிழைப் பொருட்களை கடைகளில் விற்பனை மற்றும் அதனை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்துவர் மீது போலீசாரால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தடை செய்ய ப்பட்ட புகையிலை பொருள்கள் பயன்படுத்து வதை தடுக்க விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப் -இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் ஆகியோர் செஞ்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது செஞ்சி தாலுகா வல்லம் பகுதியில் செல்வம் (வயது 30) என்பவர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவரிடம் ரூ.20000 மதிப்பிலான ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. மேலும் இவர் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது. உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×