search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tasmac store"

    திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடையில் ரகளை செய்த நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருச்சி:

    திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது‌. நேற்று இரவு டாஸ்மாக் கடையினை பூட்டிய நேரத்தில் 4 வாலிபர்கள் கடைக்கு வந்து மது வேண்டும் என கேட்டுள்ளனர்.

    அப்போது கடை ஊழியர் இப்ராகிம்சா ( வயது 40), கடையை மூடிவிட்டோம், இனி மதுபானங்கள் கிடையாது என கூறியுள்ளார். ஏற்கனவே போதையில் இருந்த அவர்கள் கடையின் முன்பு நின்று தகராறு செய்தனர். அப்போது கடை ஊழியர் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறியுள்ளார். இருப்பினும் அவர்கள் அங்கிருந்து செல்லாமல், கடை ஊழியரை தாக்கினர்.

    இது குறித்து அவர் கண்டோன்மெண்ட் போலீசில் புகார் செய்தார். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் ரகளையில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினார்.

    இது குறித்து கடை ஊழியர் அளித்த புகாரின் பேரில் போலீசார் 4 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் குளித்தலை பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (23), மணப்பாறையை சேர்ந்த ராஜா (29), சிறுகமணியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (25), அல்லித்துறையை சேர்ந்த முருகானந்தம் (25) என்பது தெரியவந்தது. 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சுரண்டை அருகே மதுக்கடையை அகற்றக்கோரி பரங்குன்றாபுரம் பொதுமக்கள் தாசில்தாரிடம் அனு கொடுத்துள்ளனர்.
    சுரண்டை:

    சுரண்டை அருகே உள்ள பரங்குன்றாபுரம் பொதுமக்கள் வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்று தாசில்தார் நல்லையாவிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பரங்குன்றாபுரத்திலிருந்து கலிங்கப்பட்டி செல்லும் ரோட்டில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இப்பகுதி, பெண்கள் பீடி கடைக்கு செல்கின்ற பகுதி என்பதால், கடையை உடனடியாக அகற்ற வேண்டி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று கடை மூடப்பட்டது. 

    இந்நிலையில் பரங்குன்றாபுரத்திலிருந்து சுரண்டை வரும் ரோட்டில், மரியதாய்புரம் ரோடு பிரிகின்ற இடத்தில் புதிய டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. நெல்லையிலிருந்து பரங்குன்றாபுரம், மரியதாய்புரம், லட்சுமிபுரம், அச்சம் குன்றம், கருவந்தா, குறிச்சான்பட்டி,  முதலான கிராமங்களுக்கு செல்கின்ற பொதுமக்கள் பரங்குன்றாபுரம் விலக்கில் இறங்கி நடந்து இப்பகுதிக்கு செல்லுகின்றனர். 

    இந்நிலையில் பரங்குன்றாபுரம், மரியதாய்புரம் ரோடு பிரியக்கூடிய இடத்தில் புதிய டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் இது பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறாக இருக்கும். நடந்து செல்லும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகும். எனவே கடையை நிரந்தரமாக அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதில் ம.தி.மு.க. மாவட்ட மகளிரணி செயலாளர் தேனம்மாள், சுதா, ராணி, மகேஸ்வரி, பாப்பா, ரீகன், அமிர்தராஜ், பொன்னுத்துரை, குமாரவேல் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 
    புழலில் டாஸ்மாக் கடையை திறக்க கோரி 50-க்கும் மேற்பட்ட மதுப்பிரியர்கள் முற்றுகையிட வந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    செங்குன்றம்:

    புழல் காவல் நிலையம் எதிரே தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானக்கடை புதிதாக கடந்த புதன்கிழமை இரவு திறக்கப்பட்டது. இந்த கடையை இப்பகுதியில் திறக்க கூடாது என கூறி நேற்று முன்தினம் பகலில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    இந்தநிலையில் நேற்றும் கடையை திறக்கக்கூடாது என பொதுமக்கள் முற்றுகையிட வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இந்தநிலையில் 50க்கும் மேற்பட்ட மதுப்பிரியர்கள் புழல் பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடை இல்லை. எனவே நாங்கள் 3 கிலோ மீட்டர் தொலைவில் சென்று வினாயகபுரத்தில் மது குடிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் வாகன சோதனையில் போலீசாரிடம் சிக்குவது மட்டுமல்லாமல் விபத்துகளிலும் சிக்கிக் கொள்கிறோம்.

    எனவே புழலில் மதுக்கடையை திறக்கவேண்டும் என வலியுறுத்தி மதுபிரியர்கள் முற்றுகையிட வந்தனர். இவர்களை புழல் இன்ஸ் பெக்டர் நடராஜ் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் புழல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    விழுப்புரம் அருகே டாஸ்மாக் கடை சூப்பர்வைசரை தாக்கி மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம்-செஞ்சி சாலையில் நேமூர் என்ற பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த டாஸ்மாக்கடையில் ஜெயபாலன்(வயது 48) என்பவர் சூப்பர் வைசராக வேலைபார்த்து வருகிறார். நேற்று இரவு டாஸ்மாக் கடையில் வேலை முடிந்ததும் கடையை பூட்டிவீட்டு வசூலான ரூ.92 ஆயிரத்தை தனது பேண்ட் பையில் வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஜெயபாலன் புறப்பட்டார்.

    அவர் விழுப்புரம் பகுதியில் உள்ள பூண்டி என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த கும்பல் ஒன்று ஜெயபாலனை வழிமறித்து சரமாரியாக தாக்கியது.

    டாஸ்மாக் கடையில் வசூலான பணத்தை ஜெயபாலன் மோட்டார் சைக்கிளில் வைத்திருப்பதாக நினைத்து அந்த கும்பல் மோட்டார் சைக்கிளை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றது.

    ஆனால் ஜெயபாலன் டாஸ்மாக் கடையில் வசூலான பணத்தை மோட்டார் சைக்கிளில் வைக்காமல் தனது பேண்ட் பையில் வைத்ததால் ரூ.92 ஆயிரம் பணம் கொள்ளை கும்பலிடம் சிக்காமல் தப்பியது. கொள்ளையர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த ஜெயபாலனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிக்சைக்காக முண்டியம் பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து கஞ்சனூர் போலீசில் ஜெயபாலன் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டாஸ்மாக் கடை சூப்பர்வைசரை தாக்கி மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 9-வது மாநாடு பெரம்பலூரில் நேற்று நடந்தது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். கார்த்திக், அஜய் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் பேசினார். இதையடுத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்லதுரை, மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கலையரசி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் அகஸ்டின், இந்திய ஜனநாயக சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் ராஜாங்கம். முன்னாள் மாவட்ட செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பேசினர்.

    மாநாட்டில் அனைத்து மாணவர்களுக்கும் பாகுபாடற்ற கல்வி, வேலையில்லா இளைஞர்களுக்கும் பாதுகாப்பான வேலை உறுதிப்படுத்த வேண்டும். தமிழகத்தில் தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க மருத்துவ துறையை சீர்படுத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் டயர் தொழிற்சாலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும்.

    பெரம்பலூரில் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களில் மீண்டும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சங்கத்தின் ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் வினோத் வரவேற்றார். முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் விஜய்குமார் நன்றி கூறினார்.
    ராமநாதபுரம் அருகே டாஸ்மாக் கடை வாசலில் வாலிபர் ஒருவர் படுகாயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை பகுதியைச் சேர்ந்தவர் அப்பாவு என்பவரது மகன் சதீஷ்குமார் (வயது 36). இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ராமநாதபுரம் பஸ் நிலைய பகுதியில் உள்ள சி.டி. கடையில் வேலை பார்த்து வந்த இவர், பின்னர் வெளிநாட்டு பொருட்கள் விற்பனை செய்து வந்தாராம். இந்த நிலையில் நேற்று காலை காரிக்கூட்டம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை வாசல் அருகில் தலையில் படுகாயங்களுடன் சதீஷ்குமார் பிணமாக கிடந்தார். 

    இதுபற்றி தகவல் அறிந்ததும் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக சதீஷ்குமாரின் அண்ணன் ராமநாதபுரம் விவேகானந்தர் தெருவை சேர்ந்த சசிக்குமார்(44) என்பவர் அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வாலிபர் சதீஷ்குமார் நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் சென்று மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் அவர் பிணமாக கிடந்ததால் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
    மயிலாடுதுறையில் எதிர்ப்பை மீறி போலீஸ் பாதுகாப்புடன் 2 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

    மயிலாடுதுறை:

    உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் 13 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டன. தொடர்ந்து மீண்டும் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு முயற்சித்தது. மக்களின் போராட்டத்தால் மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடைகளை திறக்க முடியவில்லை.

    இந்நிலையில் மயிலாடுதுறை நகரில் நேற்று 2 டாஸ்மாக் மதுபானக்கடைகள் அதிரடியாக திறக்கப்பட்டன. ஸ்டேட் பேங்க் ரோடு மற்றும் ரெயிலடி ஆகிய இடங்களில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு 4 டி.எஸ்.பிக்கள் தலைமையில், 6 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 100 போலீசாரின் பாதுகாப்புடன் விற்பனை தொடங்கியது.

    ரெயிலடியில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள கடைகளை அடைத்து போராட்டம் நடத்திய வணிகர்கள் மற்றும் பா.ம.க.வினர் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தகவல் அறிந்து வந்த தி.மு.க.வினர் புதிய டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூடவில்லை என்றால் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையத்தில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நெல்லித்துறை ரோடு காந்திமைதானம் ஆகிய பகுதிகளில் 100- க்கும் மேற்பட்ட உருளைக் கிழங்கு மண்டிகள் உள்ளன. மண்டிகளில் ஆண்,பெண் தொழிலாளர்கள் சுமார் 3ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மண்டிகள் நிறைந்த ஹாஜிசாயுபு சந்தில் குடியிருப்புக்களும் உருளைக் கிழங்கு மண்டிகளும் உள்ளன.

    இதற்கிடையில் அந்த சந்தில் டாஸ்மாக் மதுக்கடை வைக்க தேவையான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததாகத் தெரிகிறது.ஹாஜிசாயுபு சந்தில் மதுக்கடை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உருளைக் கிழங்கு மண்டி பெண்கூலி தொழிலாளர்கள் புதிதாக கட்டுமானப்பணி நடைபெற்று வரும் கடை முன்பு திரண்டனர். வேண்டாம் வேண்டாம் மதுக்கடை வேண்டாம் என்று கோ‌ஷங்களை முழங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் கிடைக்கப்பெற்றதும் மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்களிடம் இங்கு மதுக்கடை வராது. வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று போலீசார் உறுதி கூறியதையடுத்து பெண் தொழிலாளர்கள் அமைதியாகக் கலைந்து சென்றனர்.

    மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் 50க்கும் மேற்பட்ட மக்கள் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு வெண்டிபாளையம் மணலி கந்தசாமி வீதியில் புதிதாக டாஸ்மாக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக அப்போதைய கலெக்டர் பிரபாகரிடமும் மனு கொடுத்தனர்.

    இந்நிலையில் கடந்த 15-ம் தேதி இரவு திடீரென அந்த டாஸ்மாக்கடை திறக் கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இதையடுத்து அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர்.

    அதன்படி மணலி கந்தசாமி வீதியில் இன்று 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டும் வகையில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறியதாவது,

    எங்கள் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் ஏற்கனவே 500 மீட்டர் தொலைவில் மதுக்கடை உள்ளது.

    இந்நிலையில் திடீரென இங்கு மதுக்கடையைதிறந்துள்ளனர் இந்த மதுக்கடை ஒட்டியே குடியிருப்பு பகுதிகள் உள்ளன.

    இந்த மதுக்கடை திறந்ததால் இரவில்இப்பகுதியில் பெண்கள் நடந்து செல்வதற்கும் பயப்படுகிறார்கள். மேலும் 200 மீட்டர் தொலைவில் ஒரு கோயில் உள்ளது. இதனால் கோவில் செல்வதற்கும் பயப்படுகிறார்கள் எனவே எங்களது கோரிக்கையை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் இன்று கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்துகிறோம்.

    தொடர்ந்து இன்று மதியம் 2 மணியளவில் எங்கள் பகுதி சேர்ந்த மக்கள் கலெக்டர் கதிரவனை சந்தித்து வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்க போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

    எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்

    இவர் அவர்கள் கூறினர்.

    விருத்தாசலம் அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி மண்எண்ணை கேனுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது. இந்த டாஸ்மாக் கடைக்கு அந்த கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த குடி பிரியர்கள் வந்து மது வாங்கி குடித்துவிட்டு கிராம பகுதிகளில் ஆங்காங்கே மது மயக்கத்தில் கிடப்பதும் அப்பகுதி வழியாக செல்லக்கூடிய பெண்கள் மாணவிகளை கிண்டல்-கேலி செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். 

    இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கபடவில்லை.

    இதனால் அப்பகுதியில் இருந்த பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு வந்து கோபுராபுரம் பஸ் நிறுத்தத்தில் அமர்ந்து இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெண் மண்எண்ணை கேனுடன் வந்து தீக்குளிக்கப் போவதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடன் விரைந்து வந்த போலீசார் மண்எண்ணை கேனை பறிமுதல் செய்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். உயர் அதிகாரிகளிடம் சென்று மனு கொடுங்கள், நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறினார்கள். அதனை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தால் அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கொடுமுடி டாஸ்மாக் கடை அருகே தொழிலாளி இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முத்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் நிலாக்கோட்டை அடுத்த விளாம்பட்டியை சேர்ந்தவர் வீரகார்த்திக் (வயது31). இவரது மனைவி பெயர் கலா. வீரகார்த்திக் முத்தூர் அருகே உள்ள வீரசோழ புரத்தில் உள்ள ஒரு அட்டை கம்பெனியில் மிஷின் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் வேலைக்கு போய் விட்டு வருவதாகவும் மறுநாள் காலை தாமதமாக வருவேன்..என்று மனைவியிடம் சொல்லி கொண்டு வீரகார்த்திக் வேலைக்கு சென்றார்.

    ஆனால் மறுநாள் வெகு நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கொடுமுடி ரோட்டில் டாஸ்மாக் மதுக்கடை அருகே வீரகார்த்திக் மயங்கி கிடந்ததை அவருடன் வேலை பார்க்கும் மோகன் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர் வீரகார்த்திக் ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிவித்தார்.

    இந்த சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குபதிவு செய்து வீரகார்த்திக் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிள்ளுக்கோட்டையில் பள்ளிக்கூடம், கோவிலுக்கு அருகில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை இட மாற்றம் செய்யகோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    கீரனூர்:

    கீரனூர் அருகே உள்ள கிள்ளுக்கோட்டையில் பள்ளிக்கூடம், கோவிலுக்கு அருகில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை இட மாற்றம் செய்யகோரி கீரனூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

    பின்னர் குளத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் மதுபானகடையை இடம் மாற்றுவதாக உறுதியளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அக்கட்சியின்மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் நடராசன் தலைமையில் குன்றாண்டார் கோவில் ஒன்றிய செயலா ளர் சண்முகம், துணை செயலாளர் ஏழுமலை உட்பட 100-க்கும் மேற்பட்டோர் மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    ×