search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "masked robbers"

    • இதில் கோவில் கதவில் பூட்டு உடைந்து கோவி லுக்குள் பொருட்கள் சிதறி கிடந்தது.
    • போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

    கடலூர்:

    கடலூர் கம்மியம் பேட்டை ஜவான் பவன் சாலையில் பிரசித்தி பெற்ற காசி விசாலாட்சி அம்பாள் உடனுறை காசி விஸ்வநாதர் கோவில் சண்முக ஞானிகள் சித்தர் பீடம் கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் நேற்று இரவு பூசாரி முருகையன் வழக்கம் போல் பூஜை செய்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை வழக்கம் போல் பூஜைகள் செய்வதற்கு கோவிலுக்கு வந்து பார்த்தபோது கடும் அதிர்ச்சி காத்திருந்தது. இதில் கோவில் கதவில் பூட்டு உடைந்து கோவி லுக்குள் பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு இருந்தன. இதனை தொடர்ந்து பூசாரி முருகையன் உடனடியாக பீரோவை சென்று பார்த்த போது அதில் வைத்திருந்த2 வெள்ளி கிரீடம் மற்றும் தங்க தாலி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்பு லியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கோவில் வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது முகமூடி அணிந்து 2 கொள்ளையர்கள் கோவில் பூட்டை உடைத்து வெள்ளி கிரீடம் மற்றும் தங்கத் தாலி ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்துள்ளது. திருடி சென்ற பொருட்க ளின் மதிப்பு சுமார் 50 ஆயிரம் ஆகும். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து முகமூடி கொள்ளையர்க ளை வலைவீசி தேடி வரு கின்றனர்.

    விழுப்புரம் அருகே டாஸ்மாக் கடை சூப்பர்வைசரை தாக்கி மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம்-செஞ்சி சாலையில் நேமூர் என்ற பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த டாஸ்மாக்கடையில் ஜெயபாலன்(வயது 48) என்பவர் சூப்பர் வைசராக வேலைபார்த்து வருகிறார். நேற்று இரவு டாஸ்மாக் கடையில் வேலை முடிந்ததும் கடையை பூட்டிவீட்டு வசூலான ரூ.92 ஆயிரத்தை தனது பேண்ட் பையில் வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஜெயபாலன் புறப்பட்டார்.

    அவர் விழுப்புரம் பகுதியில் உள்ள பூண்டி என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த கும்பல் ஒன்று ஜெயபாலனை வழிமறித்து சரமாரியாக தாக்கியது.

    டாஸ்மாக் கடையில் வசூலான பணத்தை ஜெயபாலன் மோட்டார் சைக்கிளில் வைத்திருப்பதாக நினைத்து அந்த கும்பல் மோட்டார் சைக்கிளை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றது.

    ஆனால் ஜெயபாலன் டாஸ்மாக் கடையில் வசூலான பணத்தை மோட்டார் சைக்கிளில் வைக்காமல் தனது பேண்ட் பையில் வைத்ததால் ரூ.92 ஆயிரம் பணம் கொள்ளை கும்பலிடம் சிக்காமல் தப்பியது. கொள்ளையர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த ஜெயபாலனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிக்சைக்காக முண்டியம் பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து கஞ்சனூர் போலீசில் ஜெயபாலன் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டாஸ்மாக் கடை சூப்பர்வைசரை தாக்கி மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திண்டுக்கல் அருகே அடுத்தடுத்த வீடுகளில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் நகை பறித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள முள்ளிப்பாடி ஏழுமலையான் நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது48). கார்பண்டர் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவி ராஜலட்சுமி மற்றும் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.

    இன்று அதிகாலை 3 மணி அளவில் ஒரு மர்ம நபர் இவரது வீட்டிற்குள் நைசாக உள்ளே நுழைந்தார். ராஜலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு செல்ல முயன்றபோது அவர் திடுக்கிட்டு எழுந்தார். உடனே அவனை பிடிப்பதற்காக எழுந்து ஓடினார்.

    தனது மனைவி ஓடுவதை பார்த்து கணவரும் பின்னால் ஓடினார். ஆனால் வாசலில் நின்றிருந்த மற்றொரு ஆசாமி அவர்கள் மீது கல்லை தூக்கி போட வந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்து வீட்டிற்குள் சென்று விட்டனர். அப்போது அவர்கள் 2 பேரும் மின்னல் வேகத்தில் மறைந்து விட்டனர்.

    கொள்ளையடித்த நபர்கள் 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருந்ததாக பழனிச்சாமி தெரிவித்தார்.

    மேலும் இங்கு கொள்ளையடிப்பதற்கு முன்பாக தாமரைப் பாடியிலும் ஒரு வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் அந்த வீட்டில் நகை, பணம் எதுவும் சிக்காததால் அக்கும்பல் தப்பி ஓடியது.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு செம்பட்டி அருகே தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த தம்பதியை தாக்கி முகமூடி கொள்ளையர் பணம் பறித்து சென்றனர்.

    எனவே அதை போன்ற முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால் அதே நபர்கள் இக்கொள்ளையில் ஈடுபட்டனரா? என்று திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×