என் மலர்

  செய்திகள்

  டாஸ்மாக் அதிகாரியை தாக்கி மோட்டார் சைக்கிளை பறித்த முகமூடி கொள்ளையர்கள்
  X

  டாஸ்மாக் அதிகாரியை தாக்கி மோட்டார் சைக்கிளை பறித்த முகமூடி கொள்ளையர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விழுப்புரம் அருகே டாஸ்மாக் கடை சூப்பர்வைசரை தாக்கி மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  விழுப்புரம்:

  விழுப்புரம்-செஞ்சி சாலையில் நேமூர் என்ற பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த டாஸ்மாக்கடையில் ஜெயபாலன்(வயது 48) என்பவர் சூப்பர் வைசராக வேலைபார்த்து வருகிறார். நேற்று இரவு டாஸ்மாக் கடையில் வேலை முடிந்ததும் கடையை பூட்டிவீட்டு வசூலான ரூ.92 ஆயிரத்தை தனது பேண்ட் பையில் வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஜெயபாலன் புறப்பட்டார்.

  அவர் விழுப்புரம் பகுதியில் உள்ள பூண்டி என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த கும்பல் ஒன்று ஜெயபாலனை வழிமறித்து சரமாரியாக தாக்கியது.

  டாஸ்மாக் கடையில் வசூலான பணத்தை ஜெயபாலன் மோட்டார் சைக்கிளில் வைத்திருப்பதாக நினைத்து அந்த கும்பல் மோட்டார் சைக்கிளை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றது.

  ஆனால் ஜெயபாலன் டாஸ்மாக் கடையில் வசூலான பணத்தை மோட்டார் சைக்கிளில் வைக்காமல் தனது பேண்ட் பையில் வைத்ததால் ரூ.92 ஆயிரம் பணம் கொள்ளை கும்பலிடம் சிக்காமல் தப்பியது. கொள்ளையர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த ஜெயபாலனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிக்சைக்காக முண்டியம் பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

  இதுகுறித்து கஞ்சனூர் போலீசில் ஜெயபாலன் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  டாஸ்மாக் கடை சூப்பர்வைசரை தாக்கி மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Next Story
  ×