search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடுப்பூசி"

    • தீவிர மிஷன் இந்திர தனுஷ் திட்டத்தின் கீழ் தடுப்பூசி முகாம் நடக்கிறது.
    • 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் விடுபட்டு போன தடுப்பூசி தவணைகளை செலுத்திக்கொள்ளலாம்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் தீவிர மிஷன் இந்திர தனுஷ் திட்டத்தின் கீழ் தடுப்பூசி முகாம் இன்று முதல் 12 ந்தேதி வரை நடக்கிறது.

    எனவே 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் விடுபட்டு போன தடுப்பூசி தவணைகளை செலுத்திக்கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டுமாறு வட்டார மருத்துவ அலுவலர் டி.ராஜலட்சுமி கேட்டுக் கொண்டுள்ளார்.

    • தடுப்பூசிக்கான சந்தை 10 பில்லியன் டாலருக்கு மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது
    • இந்நோய் அறிகுறிகளை விரைவில் கவனிக்காமல் விட்டால் உயிருக்கு ஆபத்தாக முடியும்

    நுரையீரல் மற்றும் சுவாச பாதையில் தொற்று நோயை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய ஒரு நுண்கிருமி ஆர்எஸ்வி (RSV) வைரஸ்.

    இந்த வைரஸ் நோய் தொற்று பொதுவாக லேசான குளிர் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். ஆனால் விரைவில் கவனிக்காமல் விட்டால் உயிருக்கு ஆபத்தாக முடியும்.

    எனவே இதன் தாக்குதலிலிருந்து மனிதர்களை காக்க ஒரு தடுப்பூசியை கண்டு பிடிக்க உலகெங்கிலும் உள்ள முன்னணி மருந்து நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. இந்த தடுப்பூசிக்கான சந்தை 10 பில்லியன் டாலருக்கு மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    லண்டனை மையமாக கொண்டு இயங்கும் பன்னாட்டு பிரிட்டன் மருந்து நிறுவனம் க்ளாக்ஸோ ஸ்மித்க்லைன் (GSK). இந்நிறுவனம் இந்த நோய்க்கு எதிராக அரெக்ஸ்வி எனும் தடுப்பூசியை சந்தைக்கு அறிமுகப்படுத்த அனுமதி பெற்று விட்டது.

    இந்நிலையில், நேற்று அமெரிக்காவில் உள்ள டெலாவேர் மாநில நீதிமன்றத்தில், அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியை மையமாக கொண்டு செயல்படும் அமெரிக்க பன்னாட்டு முன்னணி மருந்து நிறுவனமான ஃபைசர் மீது காப்புரிமை வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது.

    ஃபைசர் நிறுவனத்தின் அப்ரிஸ்வோ (Abrysvo) தடுப்பூசியில் பயன்படுத்தப்படும் ஒரு மூலக்கூறு, ஜிஎஸ்கே நிறுவனத்தின் 4 காப்புரிமைககளை மீறுவதாக ஜிஎஸ்கே குற்றம் சாட்டியுள்ளது.

    "ஃபைசர் நிறுவனம் தெரிந்தே அப்ரிஸ்வோ தடுப்பூசியில் எங்களுக்கு உரிமையுள்ள கண்டுபிடிப்புகளை அனுமதியின்றி பயன்படுத்துகிறது. எங்கள் தடுப்பூசியான அரெக்ஸ்வி (Arexvy), ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு 7 வருடங்களுக்கு முன்பே வளர்ச்சியில் இருந்தது. இவ்விவகாரத்தில் ஒரு நீதி விசாரணை நடத்த வேண்டும் என கேட்கிறோம். காப்புரிமை மீறலின் விளைவாக நாங்கள் இழந்த லாபங்கள் மற்றும் ராயல்டிகள் உட்பட பண நஷ்டத்திற்கும் ஈடு வேண்டும். மேலும் ஃபைசர் நிறுவனம் அதன் தடுப்பூசியை அமெரிக்காவில் தயாரித்து விற்பனை செய்வதிலிருந்து தடுக்க வேண்டும். அறிவுசார் சொத்து பாதுகாப்புகள்தான் நிறுவனங்களின் புதுமையான ஆராய்ச்சி நோக்கங்களுக்கு அடிப்படை. எங்கள் தடுப்பூசியான அரெக்ஸ்வியை அறிமுகப்படுத்துவது தடையின்றி நடைபெற வேண்டும்" என ஜிஎஸ்கே தன் புகாரில் கோரியுள்ளது.

    "எங்கள் அறிவுசார் சொத்துக்களின் நிலைப்பாடுகளில் நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். நோயாளிகளை காக்க எங்களின் புதுமையான தடுப்பூசியை கொண்டு வருவதற்கு எங்களுக்கு முழு உரிமை உள்ளது. எங்கள் நிலையை தற்காத்துக் கொள்ள நாங்கள் நீதிமன்றத்தில் போராடுவோம்" என ஃபைசர் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    • 0-5 வயது குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு முழுமையான தடுப்பூசி வழங்குவதாகும்.
    • யு-வின் என்ற இந்திய அரசின் ஆன்லைன் போர்ட்டல் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான தீவிரப்படுத்தப்பட்ட இந்திர தனுஷ் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது:-

    இந்திர தனுஷ் திட்டம் விடுபட்ட மற்றும் பகுதி தடுப்பூசி போடப்படாத 0-5 வயது குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு முழுமையான தடுப்பூசி வழங்குவதாகும். திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 1342 குழந்தைகள் மற்றும் 132 கர்ப்பிணிப் பெண்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முதல் சுற்று எதிர்வரும் ஆகஸ்ட் 7 முதல் 14 வரை தடுப்பூசி செலுத்தப்படும். இரண்டாம் மற்றும் மூன்றாம் சுற்று செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும். மேலும் இந்த விவரங்களை யு-வின் என்ற இந்திய அரசின் ஆன்லைன் போர்ட்டல் மூலம் பதிவு செய்ய மருத்துவ துறையினருக்கு போதுமான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

    High Risk எனப்படும் அதிக கவனம் செலுத்தக்கூடிய பகுதிகள் மற்றும் புலம் ெபயர்ந்து வாழும் மக்களுக்கும் சிறப்பு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர்களுக்கும் முழுமையான தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) ஜெகதீஸ்குமார், உலக சுகாதார அமைப்பை சார்ந்த ஆஷா மற்றும் வேலன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தேசிய தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த மேயர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    குழந்தை பிறந்தது முதல், 2 வயது வரை, 13 வகையான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு செலுத்தப்படுகிறது. தேசிய அளவில் இந்த திட்டம் அடுத்த மாதம் 7ந் தேதி முதல் சிறப்பு முகாம்கள் மூலம் செயல்படுத்தப் படவுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை பிற மாநில, பிற மாவட்ட தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். இதனால், அவர்கள் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசிகள் முழுமையாகச் செலுத்துவதை உறுதிப்படுத்தும் விதமாக இதற்கென சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    மாநகராட்சி பகுதியில் மேயர் தினேஷ்குமார் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    மாநகர நல அலுவலர் கவுரி சரவணன் உறுப்பினர் செயலர், தடுப்பூசி திட்ட கண்காணிப்பு நல அலுவலர் வேலன், இந்திய குழந்தைகள் நல மருத்துவ சங்கம், இந்திய மருத்துவர் சங்கம், ஊட்டச்சத்து துறை, தொழிற்சாலை துறை, தொழிலாளர் நல துறை, குடிசை மாற்று வாரியம், போலீஸ் துறை உள்ளிட்ட துறையினர் இதில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இக்குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் மேயர் தினேஷ்குமார் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கமிஷனர் பவன்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர்.

    வெளி மாவட்ட, வெளி மாநில தொழிலாளர் குழந்தைகளைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, இதற்காக துறை வாரியாக வழங்க வேண்டிய ஒத்துழைப்பு, பதிவுகள் மேற்கொள்ளும் நடவடிக்கை, அவற்றை முற்றிலும் சாப்ட்வேர் மூலம் முழுமையாக பதிவேற்றம் செய்து, தினமும் இதன் விவரங்களை குழுவுக்கு சமர்ப்பித்தல் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    • கால்நடைகளுக்கு சினைப்பரிசோதனை மற்றும் கர்ப்பப்பை கோளாறுகள் கண்டறியப்படுகிறது.
    • கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு, குடற்புழு நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர்அருகே பெரு ந்தரக்குடி ஊராட்சியில் கால்நடை மருந்தக கட்டடத்தினை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் மற்றும் மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் கால்நடை பராமரிப்புத்துறை, பால்வளத்துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் கலைஞர் நூற்றாண்டு கால்நடை மருத்துவ முகாமை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.

    இச்சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை, ஆண்மை நீக்கம், சினை பரிசோதனை, மலட்டுதன்மை நீக்கம், குடற்புழு நீக்கம், தடுப்பூசி போடுதல், செயற்கைமுறை கருவூட்டல் உள்ளிட்ட வைகள் மேற்கொள்ளப்படு கிறது. மேலும், ஸ்கேன் மூலம் கால்நடைகளுக்கு சினைப்பரிசோதனை மற்றும் கர்ப்பப்பை கோளா றுகள் கண்டறியப்படுகிறது. இம்முகாமினை கால்நடை வளர்ப்போர்கள் பயன்படுத்திக் கொண்டு பயனடையுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    அதனைதொடர்ந்து, கால்நடைகளுக்கான தாது உப்பு, தீவனங்கள், புல் கரணைகள் உள்ளிட்ட வைகளை கால்நடை வளர்ப்போரிடம் மாவட்ட கலெக்டர் வழங்கினார். வெள்ளாடு, நாய், ஆடு, மாடு உள்ளிட்ட 500 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறந்த பால் உற்பத்தியாளர் 3 நபர்க ளுக்கும், சிறந்த கால்நடை வளர்ப்போர்களை ஊக்குவிக்கும் விதமாக 3 நபர்களுக்கும் மாவட்ட கலெக்டர் பரிசுகள் வழங்கினார்.

    இந்நிகழ்வில், கொரடாச்சேரி ஒன்றி யக்குழு துணைத்தலைவர் பாலசந்தர், கால்நடை பராமரிப்பு துறையின் இணை இயக்குநர் ஹமீது அலி, ஊராட்சி மன்றத்தலைவர் மதிவாணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவி யாளர்கள் உடனிருந்தனர்.

    • யு- வின் என்ற மொபைல் போன் செயலியை மார்ச் மாதம் (2023) அறிமுகப்படுத்தியது.
    • யு - வின் செயலி அனைத்து மாவட்டங்களிலும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் போது அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி தாமதமின்றி செலுத்தப்படும்.

    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் இம்மாத இறுதிக்குள் குழந்தைகளுக்கான மத்திய அரசின் யு - வின் செயலி பயன்பாட்டை விரிவுபடுத்த தமிழக சுகாதாரத்துறை ஆயத்தமாகி வருகிறது.

    நோட்டில் மட்டுமே இருந்து வரும் தடுப்பூசி திட்டத்தை டிஜிட்டல்மயம் ஆக்கும் வகையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் யு- வின் என்ற மொபைல் போன் செயலியை மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியது.

    கர்ப்பிணியர், குழந்தைகளுக்கான தடுப்பூசி விபரம் மற்றும் அட்டவணையை இச்செயலி மூலமாக மொபைல் போன் வாயிலாக அறிந்து கொள்ள முடியும்.

    திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் யு - வின் செயலி இயக்கம் மே மாதம் அறிமுகமானது. மீதமுள்ள 36 மாவட்டங்களில் இம்மாதம் 31-ந்தேதிக்குள் யு - வின் செயலியை இயக்கத்துக்கு கொண்டு வர சுகாதாரத் துறை ஆயத்தமாகியுள்ளது.

    மத்திய அரசு தரப்பில் இருந்து தமிழக சுகாதாரத்துறை, அனைத்து மாவட்ட இணை இயக்குனர், சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி குழந்தைகளுக்கு 11 வகையான தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. குழந்தைகளுக்கு எந்த தடுப்பூசி, எந்த நாளில் செலுத்த வேண்டும் என்பதில் பெற்றோர் பலர் ஒரு வித குழப்பம் அடைகின்றனர்.மொபைல் போன் வழி நினைவூட்டல் இருந்தால் தடுப்பூசி செலுத்த முன்கூட்டியே தயாராகி விடுவர். சரியான தேதியில் செலுத்துவது சாத்தியமாகி விடும்.யு - வின் செயலி அனைத்து மாவட்டங்களிலும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் போது அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி தாமதமின்றி செலுத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • தங்கள் குழந்தையை போல செல்லப்பிராணியை கையில் தூக்கிக்கொண்டு பெண்கள் வந்தனர்.
    • பல்கலைக்கழக பிரதான கட்டிடத்தில் இருந்து வெறிநாய் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    சென்னை:

    உலக விலங்கு வழி பரவும் நோய்கள் தினம் இன்றும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் மாதவரத்தில் உள்ள புறநகர் கால்நடை மருத்துவமனையில் வெறிநாய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. இதில் 250-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. தங்கள் குழந்தையை போல செல்லப்பிராணியை கையில் தூக்கிக்கொண்டு பெண்கள் வந்தனர். வெறிநாய் தடுப்பூசி முகாம் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கே.என்.செல்வகுமார் தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக பிரதான கட்டிடத்தில் இருந்து வெறிநாய் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாணவ-மாணவிகள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக சென்றனர். இந்நிகழ்ச்சியில் இயக்குனர் சவுந்தர்ராஜன், டாக்டர் செல்வராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • முகாமில் 156 மாடுகளுக்கு குடல் புழு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • ப்ரூஸசெல்லா தடுப்பூசி 20 மாடுகளுக்கும், பி. பி .ஆர் தடுப்பூசி 250 மாடுகளுக்கும் செலுத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே எடமேலையூரில் தமிழக அரசின் சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

    இந்த முகாமை கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.

    நீடாமங்கலம் ஒன்றிய குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட கால்நடை துறை இணை இயக்குனர் ஹமீது அலி, துணை இயக்குனர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த முகாமில் 156 மாடுகளுக்கு குடல் புழு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ப்ரூஸசெல்லா தடுப்பூசி 20 மாடுகளுக்கும், பி. பி .ஆர் தடுப்பூசி 250 மாடுகளுக்கும், மினரல் மிக்சர் 75 மாடுகளுக்கும் செலுத்தப்பட்டது.

    சிறந்த முறையில் பராமரிக்கப்பட்ட ஒன்பது மாடுகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.

    இதில் ஓய்வு பெற்ற கால்நடை துறை துணை இயக்குனரும் மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவருமான டாக்டர் பாலகிருஷ்ணன், உழவர் பயிற்சி மைய டாக்டர் கதிர்செல்வம், ஆவின்பால் பொது மேலாளர் டாக்டர் ராஜசேகரன், டாக்டர் மகேந்திரன், ஆவின் விஜயலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் கோமளா மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போழக்குடி கிராமத்தில் உள்ள ஒரு சிறுமிக்கு திடீரென வைரஸ் காய்ச்சல் வந்தது.
    • வீடு மற்றும் தெருவில் சென்று நோய் தடுப்பு மருந்து மற்றும் சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் ஒன்றியம் கோவில்ராமபுரம் ஊராட்சியில் போழக்குடி கிராமத்தில் உள்ள ஒரு சிறுமிக்கு திடீரென வைரஸ் காய்ச்சல் வந்தது.

    இதைத் தொடர்ந்து சிறுமிக்கு உண்ணி காய்ச்சல் வைரஸ் பரவியது என்று மருத்துவர்கள் பரிசோதனையில் தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து கோணுழாம்பள்ளம் ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி அருள் ஆகியோர்கள் குழந்தையின் நலன் கருதியும் வீடு மற்றும் தெருவில் சென்று நோய் தடுப்பு மருந்து மற்றும் சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

    மேலும் சுகாதார பணியாளர்கள் வீடுகள் தோறும் கணக்கெடுப்பு செய்து தடுப்பூசி மற்றும் சத்து மாத்திரைகளை வினியோகித்து வருகின்றனர்.

    இது குறித்து மருத்துவ அதிகாரி அபினேஷ் கூறியதாவது:-

    கிராமத்தில் வயல்வெளி பகுதிகள் செடி, கொடிகள் மண்டி கிடப்பதால் அதில் உள்ள சிறிய பூச்சிகள் மூலம் உண்ணி காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது.

    எனவே மருத்துவ பரிசோதனையில் பாதிக்கப்பட்டவர்க்கு முன்பே அறிந்ததால் உரிய சிகிச்சை அளித்து வருகிறோம்.

    மேலும் கிராமங்களிலும், பரவாமல் தடுப்பு பணிகளை சுகதார பணியாளர்கள் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். உண்ணி காய்ச்சலுக்கு மக்கள் பீதி அடைய தேவை இல்லை என தெரிவித்தார்.

    • தடுப்பூசி செலுத்தாதவர்களே பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
    • முஞ்சிறை ஒன்றியத்தில் நேற்று ஒரே நாளில் 13 பேருக்கு தொற்று

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக முஞ்சிறை, திருவட்டார் ஒன்றியங்களில் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கடந்த 10 நாட்களில் 25 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்சிறை திருவட்டார் ஒன்றியங்களில் அதிகமா னோர் பாதிக்கப்பட்டு ள்ளனர். முஞ்சிறை ஒன்றியத்தில் நேற்று ஒரே நாளில் 13 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

    இதேபோல் திருவட்டார் ஒன்றியத்தில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.கிள்ளியூரில் இரண்டு பேரும் குருந்தன்கோடு ராஜாக்கமங்கலத்தில் தலா ஒருவரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். நாகர்கோவில் மாநகர பகுதியில் இரண்டு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்த 72 வயது பெண் ஒருவரும் அதே பகுதியை சேர்ந்த 52 வயது ஆண் ஒருவரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    பாதிக்கப்பட்ட 72 வயது பெண் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி யிலும் 52 வயது ஆண் ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் வசித்துவந்த பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் அவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து அவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

    பாதிப்பு அதிகமாக உள்ள முன்சிறை திருவ ட்டார் ஒன்றியத்தில் சுகா தாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர்

    வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகி றார்கள். பாதிக்கப்பட்ட வர்களில் பெரும்பா லானோர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது. எனவே தடுப்பூசி செலுத்தாத பொதுமக்கள் அனைவரும் உடனடியாக பக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    கொரோனா அதிகரித்து வருவதையடுத்து மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

    ×