search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதி"

    • அரியலூரில் மாவட்டத்தில் ரெடிமேட் ஆடை உற்பத்திக்கு ரூ.3 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
    • அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அறிவித்து உள்ளார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க ரூ.3 லட்சம் நிதியுதவியை பெற பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த 10 பேர் கொண்ட குழுவினர் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் தெரிவித்ததாவது, அரியலூர் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக தையல் தொழிலில் ஈடுபட்டு வரும் இருபாலரும் குறைந்தபட்சம் 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு ஏற்படுத்தும் திட்டம் 2022-2023ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தில் தையல் தொழிலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் உபகரணங்கள், இடைநிகழ் செலவு மற்றும் பணி மூலதனம் ஆகியவைகளுக்காக அதிகபட்சமாக குழு ஒன்றுக்கு ரூ.3 லட்சம் வீதம் வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள், குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். 10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் வேண்டும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

    இதற்கான விண்ணப்பப்படிவம், அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம். மாவட்ட கலெக்டர் தலைமையிலான தேர்வு குழுவினரால் பூர்த்தி செய்து வரப்பெறும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்கள் தேர்தெடுக்கப்பட்டு, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்கத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

    • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த தேவனாங்குறிச்சி கிராமம் கீழேரிப்பட்டி பகுதியை சேர்ந்த முத்துகவுண்டர் மகன் மோகன்ராஜ். இவரது மனைவி செந்தமிழ்செல்வி.
    • இவர்கள் இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு திருச்செங் கோடு, தெற்கு ரதவீதியில் நிதி நிறுவனம் தொடங்கி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கீழேரிப் பட்டியில் நிதி மோசடி செய்த வர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் முதலீட்டா ளர்கள் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த தேவனாங்குறிச்சி கிராமம் கீழேரிப்பட்டி பகுதியை சேர்ந்த முத்துகவுண்டர் மகன் மோகன்ராஜ். இவரது மனைவி செந்தமிழ்செல்வி.

    இவர்கள் இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு திருச்செங் கோடு, தெற்கு ரதவீதியில் நிதி நிறுவனம் தொடங்கி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர். இதையடுத்து கீழேரிப்பட்டி பகுதியை சேர்ந்த ஏராள மானோர் இந்த நிதி நிறுவ னத்தில் முதலீடு செய்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில ஆண்டுக்கு முன்பு மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவி செந்தமிழ்செல்வி ஆகிய இருவரும் இறந்து விட்டனர். இதையடுத்து நிதி நிறுவனத்தை அவர்களது மகள் சவுந்தர்யா, அவரது கணவர் தமிழ்கண்ணன் ஆகி யோர் நடத்தி வந்ததாக தெரி கிறது.மேலும் முதலீட்டா ளர்களுக்கு முதிர்வு தொகை உள்ளிட்ட வற்றை வழங்காமல் மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. எனவே அவர்களிடம் இருந்து பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    • விளையாட்டு போட்டிகளை மேம்படுத்துவதற்காக புகளூர் காகித நிறுவனம் சார்பில் ரூ.75 லட்சம் நிதி வழங்கப்பட்டது
    • அமைச்சர் உதயநிதியிடம் கொடுக்கப்பட்டது

    வேலாயுதம்பாளையம், 

    விளையாட்டு போட்டிகளின் பயன்பாட்டிற்காக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஊரக பகுதிகளில் விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிப்பதற்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதற்காகவும், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகள், மாற்றுத்திற னாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகள் பங்கேற்பாளர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதற்காகவும் தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறையின் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சமூக பொறுப்புடைமை செயல்பாடுகளின் கீழ் விளையாட்டு போட்டிகளை மேம்படுத்துவதற்காக ரூ 75 லட்சத்திற்கான காசோலையை தமிழக முதலமை ச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார். நிகழ்ச்சியில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முனைவர் சாய்குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையக் குழு உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அரசு மருத்துவமனைக்கு தேவையான சாதனங்கள் மற்றும் பொருட்களை வழங்க பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் உறுதி அளித்தனர்.
    • உடலை பதப்படுத்தும் குளிர்சாதன பெட்டி அமைக்க கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நிதி உதவி அளிக்க உறுதி அளித்தனர்.

     பல்லடம் :

    பல்லடத்தில் நமக்கு நாமே திட்ட ஆலோசனைக் கூட்டம் வனம் இந்தியா அறக்கட்டளை கூட்டரங்கில் திருப்பூர் சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்லடம் நகரத்தின் முக்கிய தேவைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நகராட்சி ஆணையாளர் விநாயகம், தாசில்தார் ஜெய்சிங் சிவகுமார், அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் ராமசாமி, டாக்டர் சுபா, தமிழ்ச்சங்க தலைவர் ராம்.கண்ணையன், வனம் இந்தியா அறக்கட்டளை செயலாளர் ஸ்கை. சுந்தரராஜன், செயல்தலைவர் பாலசுப்பிரமணியம், ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க கவுரவ தலைவர் முருகேஷ், கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம், கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் உடலை பதப்படுத்தும் குளிர்சாதன பெட்டி அமைக்க காரணம்பேட்டை மற்றும் 63. வேலம்பாளையம் பகுதி கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நிதி உதவி அளிக்க உறுதி அளித்தனர். இதே போல அரசு மருத்துவமனைக்கு தேவையான சாதனங்கள் மற்றும் பொருட்களை ரூ.10 லட்சம் மதிப்பில் வழங்க பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கமும் உறுதி அளித்தனர். மேலும் பல்லடம் அரசு மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை உள்ளதால் அரசு சுமார் 5 ஏக்கர் நிலம் வழங்கினால் அந்த இடத்தில் மருத்துவமனைக்கு புதிய கட்டடங்கள் கட்டித்தர பல்லடம் பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள், சமூக சேவகர்கள் உறுதியளித்தனர்.

    • பணத்திற்கு ஆசைப்பட்டுகணவன்-மனைவி நிதி நிறுவனத்தில் கையாடல் செய்து பணம் மோசடி செய்துள்ளனர்.
    • இது குறித்து நடவடிக்க வேண்டும் என நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து புகார் மனு கொடுத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு, கருங்கல்பாளையத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த பொது மேலாளர் மாரிமுத்து(42) என்பவர் தலைமையில் நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

    நாங்கள் ஈரோடு, கருங்கல்பாளையம் நியூ ஸ்டேட் பேங்க் காலனியில் தலைமை இடமாக வைத்து நிதி நிறுவனம் நடத்தி வருகிறோம். எங்களுக்கு ஈரோடு, பவானி, ஓமலூர், சங்ககிரி, அரச்சலூர், மற்றும் அம்பாசமுத்திரம் என 6 இடங்களில் எங்கள் கிளைகள் உள்ளன.

    எங்கள் நிறுவனத்தில் சேலம் மாவட்டம் சங்ககிரி, தேவன்ன கவுண்டனூர் பகுதியை சேர்ந்த ஒருவர் பணிபுரிந்து வந்தார். அவர் சொல்பவர்கள் எல்லாம் எங்கள் நிறுவனத்திற்கு வரச்சொல்லி ஆவணங்களை சரிபார்த்து பெற்றுக்கொண்டு பணத்தை அவரிடம் வழங்கினோம்.

    அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அவர்கள் திருமணத்தையும் நாங்களே தலைமையேற்று நடத்தி வைத்தோம். இந்நிலையில் பணத்திற்கு ஆசைப்பட்டு இருவரும் எங்கள் நிதி நிறுவனத்தில் கையாடல் செய்து பணம் மோசடி செய்துள்ளனர்.

    இருவரும் 3 மாதத்திற்குள் எங்கள் நிதி நிறுவனம் இடமிருந்து ரூ.19 லட்சத்து 37 ஆயிரத்து 325 ரூபாயை மோசடி செய்து கையாடல் செய்து உள்ளனர். இது குறித்து அவர்களிடம் கேட்டபோது முறையாக பதில் சொல்லாமல் உள்ளனர்.

    எனவே அவர்கள் இருவர் மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

    • சொட்டுநீர் பாசன திட்டத்தை ஏராளமான விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
    • மகசூல் குறையவும் வாய்ப்பு உள்ளது.

    உடுமலை:

    குறைந்த தண்ணீரில் கூடுதல் மகசூல் கிடைக்க, விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசன திட்டம் பரிந்துரை செய்யப்படுகிறது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு மானிய திட்டங்களை விவசாயிகளுக்கு வழங்குகின்றன.

    இது குறித்து திருப்பூர் விவசாயிகள் கூறியதாவது:-

    விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை மூலம் பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை வரவேற்கிறோம். சொட்டுநீர் பாசன திட்டத்தை ஏராளமான விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். மானியத்துடன் இத்திட்டத்தை வேளாண் துறை செயல்படுத்தி வருகிறது.சாதாரணமாக 35 - 40 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் சொட்டுநீர் பாசனம் சேதமடையாமல் பல ஆண்டுகள் உழைக்கிறது. ஆனால் வேளாண் துறை சார்பில் பரிந்துரைக்கப்படும் சொட்டு நீர் பாசனத்துக்கு 1.25 லட்சம் ரூபாய் மதிப்பிடப்படுகிறது. கூடுதல் விலை கொடுத்து இத்திட்டத்தை செயல்படுத்துவதால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது.

    பொதுவாக 3 -5 அடி இடைவெளியுடன் பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைப்பது வழக்கம். ஆனால்வேளாண் துறை சார்பில் பரிந்துரைக்கப்படும் நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் சொட்டு நீர் 4 அடி இடைவெளியில் உள்ளன.இது அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்து பயிர்களுக்கும் ஏற்புடையது அல்ல. இதனால் மகசூல் குறையவும் வாய்ப்பு உள்ளது.

    மத்திய அரசின் பி.எம்., கிஷான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படுவது போன்று, சொட்டு நீர் பாசனத்துக்கு உண்டான தொகையை, விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே வழங்க வேண்டும்.இதனால் திட்டத்துக்கு கூடுதல் நிதி செலவாவது தவிர்க்கப்படுவதுடன், விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு தேவையான இடைவெளியில் சொட்டுநீர் அமைத்துக்கொள்ள முடியும். இதன் மூலம் ஊழல் முறைகேடுகளும் தடுக்கப்படும். எனவ, மத்திய, மாநில அரசுகள் இது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    நிதி பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள் வரிபாக்கிகளை செலுத்த ஆணையாளர் உத்தரவு விடுத்துள்ளார்.
    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம்   2-ம் நிலை நகராட்சியாக விளங்கி வருகிறது. இங்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  அதிக அளவில் வணிகர்களாகவும், வியாபாரிகளாகவும் உள்ளனர். 

    இந்த நகராட்சியில் கொரோனா காலத்திற்குப் பிறகு முறையாக செலுத்த வேண்டிய வரிகளை பொதுமக்களும், வணிகர்கள் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் செலுத்தாமல் இழுத்தடித்து வருகின்றனர். 

    இதனால் நகராட்சிக்கு ரூ.2 கோடிக்கு மேல் வரி பாக்கி நிலுவையாக உள்ளது. இதனால் நகராட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதே நிலை தொடர்ந்தால் நகராட்சி வளர்ச்சி திட்ட பணிகள் என்பது கேள்விக்குறியாகிவிடும். அதுபோல் ராமேசுவரம் நகர் பகுதிகளுக்கு செய்ய வேண்டிய அத்தியாவசிய பணிகள் மற்றும் பொது சுகாதார பணிகள் செய்ய முடியாமல் முடங்கி விடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    ராமேசுவரம் நகராட்சிக்கும் செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் வரி மற்றும் வரியில்லா பாக்கிகள் ஆகியவற்றை முழுமையாக நகராட்சிக்கு செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் தெரிவித்தார். வரி செலுத்தாமல் இருந்தால் அவர்களின் பெயர் பட்டி யலிடப்பட்டு   நகர் பகுதி முழுவதும் வைக்கப்படும் என்றும் மூர்த்தி தெரிவித்தார்.
    ×