திருச்செங்கோட்டில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த தேவனாங்குறிச்சி கிராமம் கீழேரிப்பட்டி பகுதியை சேர்ந்த முத்துகவுண்டர் மகன் மோகன்ராஜ். இவரது மனைவி செந்தமிழ்செல்வி. இவர்கள் இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு திருச்செங் கோடு, தெற்கு ரதவீதியில் நிதி நிறுவனம் தொடங்கி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர்.
திருச்செங்கோட்டில் நிதி நிறுவனம் நடத்தி மோசடி
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கீழேரிப் பட்டியில் நிதி மோசடி செய்த வர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் முதலீட்டா ளர்கள் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த தேவனாங்குறிச்சி கிராமம் கீழேரிப்பட்டி பகுதியை சேர்ந்த முத்துகவுண்டர் மகன் மோகன்ராஜ். இவரது மனைவி செந்தமிழ்செல்வி.

இவர்கள் இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு திருச்செங் கோடு, தெற்கு ரதவீதியில் நிதி நிறுவனம் தொடங்கி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர். இதையடுத்து கீழேரிப்பட்டி பகுதியை சேர்ந்த ஏராள மானோர் இந்த நிதி நிறுவ னத்தில் முதலீடு செய்தனர்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுக்கு முன்பு மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவி செந்தமிழ்செல்வி ஆகிய இருவரும் இறந்து விட்டனர். இதையடுத்து நிதி நிறுவனத்தை அவர்களது மகள் சவுந்தர்யா, அவரது கணவர் தமிழ்கண்ணன் ஆகி யோர் நடத்தி வந்ததாக தெரி கிறது.மேலும் முதலீட்டா ளர்களுக்கு முதிர்வு தொகை உள்ளிட்ட வற்றை வழங்காமல் மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. எனவே அவர்களிடம் இருந்து பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com