search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drip water"

    • சொட்டுநீர் பாசன திட்டத்தை ஏராளமான விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
    • மகசூல் குறையவும் வாய்ப்பு உள்ளது.

    உடுமலை:

    குறைந்த தண்ணீரில் கூடுதல் மகசூல் கிடைக்க, விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசன திட்டம் பரிந்துரை செய்யப்படுகிறது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு மானிய திட்டங்களை விவசாயிகளுக்கு வழங்குகின்றன.

    இது குறித்து திருப்பூர் விவசாயிகள் கூறியதாவது:-

    விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை மூலம் பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை வரவேற்கிறோம். சொட்டுநீர் பாசன திட்டத்தை ஏராளமான விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். மானியத்துடன் இத்திட்டத்தை வேளாண் துறை செயல்படுத்தி வருகிறது.சாதாரணமாக 35 - 40 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் சொட்டுநீர் பாசனம் சேதமடையாமல் பல ஆண்டுகள் உழைக்கிறது. ஆனால் வேளாண் துறை சார்பில் பரிந்துரைக்கப்படும் சொட்டு நீர் பாசனத்துக்கு 1.25 லட்சம் ரூபாய் மதிப்பிடப்படுகிறது. கூடுதல் விலை கொடுத்து இத்திட்டத்தை செயல்படுத்துவதால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது.

    பொதுவாக 3 -5 அடி இடைவெளியுடன் பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைப்பது வழக்கம். ஆனால்வேளாண் துறை சார்பில் பரிந்துரைக்கப்படும் நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் சொட்டு நீர் 4 அடி இடைவெளியில் உள்ளன.இது அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்து பயிர்களுக்கும் ஏற்புடையது அல்ல. இதனால் மகசூல் குறையவும் வாய்ப்பு உள்ளது.

    மத்திய அரசின் பி.எம்., கிஷான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படுவது போன்று, சொட்டு நீர் பாசனத்துக்கு உண்டான தொகையை, விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே வழங்க வேண்டும்.இதனால் திட்டத்துக்கு கூடுதல் நிதி செலவாவது தவிர்க்கப்படுவதுடன், விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு தேவையான இடைவெளியில் சொட்டுநீர் அமைத்துக்கொள்ள முடியும். இதன் மூலம் ஊழல் முறைகேடுகளும் தடுக்கப்படும். எனவ, மத்திய, மாநில அரசுகள் இது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    ×