search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.20 லட்சம் நிதி
    X

    ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.

    பல்லடம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.20 லட்சம் நிதி

    • அரசு மருத்துவமனைக்கு தேவையான சாதனங்கள் மற்றும் பொருட்களை வழங்க பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் உறுதி அளித்தனர்.
    • உடலை பதப்படுத்தும் குளிர்சாதன பெட்டி அமைக்க கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நிதி உதவி அளிக்க உறுதி அளித்தனர்.

    பல்லடம் :

    பல்லடத்தில் நமக்கு நாமே திட்ட ஆலோசனைக் கூட்டம் வனம் இந்தியா அறக்கட்டளை கூட்டரங்கில் திருப்பூர் சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்லடம் நகரத்தின் முக்கிய தேவைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நகராட்சி ஆணையாளர் விநாயகம், தாசில்தார் ஜெய்சிங் சிவகுமார், அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் ராமசாமி, டாக்டர் சுபா, தமிழ்ச்சங்க தலைவர் ராம்.கண்ணையன், வனம் இந்தியா அறக்கட்டளை செயலாளர் ஸ்கை. சுந்தரராஜன், செயல்தலைவர் பாலசுப்பிரமணியம், ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க கவுரவ தலைவர் முருகேஷ், கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம், கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் உடலை பதப்படுத்தும் குளிர்சாதன பெட்டி அமைக்க காரணம்பேட்டை மற்றும் 63. வேலம்பாளையம் பகுதி கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நிதி உதவி அளிக்க உறுதி அளித்தனர். இதே போல அரசு மருத்துவமனைக்கு தேவையான சாதனங்கள் மற்றும் பொருட்களை ரூ.10 லட்சம் மதிப்பில் வழங்க பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கமும் உறுதி அளித்தனர். மேலும் பல்லடம் அரசு மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை உள்ளதால் அரசு சுமார் 5 ஏக்கர் நிலம் வழங்கினால் அந்த இடத்தில் மருத்துவமனைக்கு புதிய கட்டடங்கள் கட்டித்தர பல்லடம் பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள், சமூக சேவகர்கள் உறுதியளித்தனர்.

    Next Story
    ×