search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special Trains"

    • வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தென்னக ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.
    • பக்தர்களின் வசதிக்காக நெல்லை போக்குவரத்துக்கழக பணிமனை சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.

    நெல்லை:

    வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தென்னக ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. நெல்லை சந்திப்பில் இருந்து காலை 11.15 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டது. பிற்பகல் 12.45 மணிக்கு திருச்செந்தூருக்கு சென்றது. பின்னர் திருச்செந்தூரில் இருந்து இரவு 8.30 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படுகிறது. இரவு 10.10 மணிக்கு நெல்லைக்கு வரும். இந்த ரெயில் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், ஆறுமுகநேரி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று சென்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சென்றது.

    பக்தர்களின் வசதிக்காக நெல்லை போக்குவரத்துக்கழக பணிமனை சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, ராஜபாளையம், ராமநாதபுரம், பரமகுடி, சங்கரன்கோவில், கழுகுமலை, தென்காசி, அம்பை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 155 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இவற்றில் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    சபரிமலை தரிசனம் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவு சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சபரிமலை தரிசனம் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க கீழ்க்கண்ட முன்பதிவு சிறப்பு கட்டண சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    * சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல்-கொல்லம் (வண்டி எண்: 06007) இடையே முன்பதிவு சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற டிசம்பர் மாதம் 3, 10, 17, 24, 31-ந் தேதி மற்றும் ஜனவரி மாதம் 7, 10, 12, 14-ந் தேதிகளில் மாலை 4 மணிக்கு சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கமாக கொல்லம்-சென்னை எம்.ஜி.ஆர் (06008) இடையே முன்பதிவு சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற டிசம்பர் மாதம் 5, 12, 19, 26-ந் தேதி மற்றும் ஜனவரி மாதம் 2, 9, 11, 13, 16-ந் தேதிகளில் காலை 11.30 மணிக்கு கொல்லம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

    * சென்னை எழும்பூர்-நாகர்கோவில் (06005) இடையே முன்பதிவு சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற டிசம்பர் மாதம் 23-ந் தேதி மதியம் 3.30 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கமாக நாகர்கோவில்-எழும்பூர் (06006) இடையே முன்பதிவு சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற டிசம்பர் மாதம் 24-ந் தேதி மதியம் 3.10 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

    * நாகர்கோவில்-தாம்பரம் (06004) இடையே முன்பதிவு சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற டிசம்பர் மாதம் 26-ந் தேதி இரவு 7.30 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கமாக தாம்பரம்-நாகர்கோவில் (06603) இடையே முன்பதிவு சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் வருகிற டிசம்பர் மாதம் 27-ந் தேதி மாலை 4 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    நாடு முழுவதும் இயக்கப்படும் 1,700 ரெயில்களும் அடுத்த ஒரு சில நாட்களில் கொரோனா பாதிப்புக்கு முந்தைய கட்டண நடைமுறையில் இயக்கப்பட உள்ளன.
    புதுடெல்லி:

    கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அனைத்து வகையான போக்குவரத்துகளும் முடக்கப்பட்டன.

    ரெயில்வேயும் பயணிகளின் சேவையை முழுமையாக ரத்து செய்தது. அதன் பிறகு ஊரடங்கு நேரத்தின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக நீண்ட தூர சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டன.

    இந்த சிறப்பு ரெயில்களில் சாதாரண கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட பிறகு குறுகிய தூர ரெயில்களும் இயக்கப்பட்டன.

    ஆனால் அனைத்து ரெயில்களையும் சிறப்பு ரெயில்கள் அடிப்படையிலேயே ரெயில்வே துறை இயக்கியது. இதனால் ரெயில் கட்டணம் அதிகமாக இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.

    இதையடுத்து சிறப்பு ரெயில் நடைமுறையை கைவிட தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அனைத்து மண்டல ரெயில்வே அதிகாரிகளுக்கும் கடிதம் மூலம் ரெயில்வே வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    கொரோனா வைரஸ்

    கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு அனைத்து மெயில் மற்றும் விரைவு ரெயில்களும் சிறப்பு ரெயில்களாகவும், விடுமுறை கால சிறப்பு ரெயில்களாகவும் இயக்கப்பட்டு வந்தன.

    இந்த ரெயில்கள் அனைத்தும் கொரோனா பாதிப்புக்கு முந்தைய கட்டண வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இயக்க அறிவுறுத்தப்படுகிறது.

    ரெயில்வே வாரிய பயணிகள் சந்தைப்படுத்துதல் இயக்குனர் அலுவலகத்தின் ஒப்புதலுடன் இந்த அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஆனால் எந்த தேதியில் இருந்து பழைய கட்டண நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்பது குறித்து அந்த உத்தரவில் குறிப்பிடப்படவில்லை.

    இதுகுறித்து ரெயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பழைய கட்டண நடைமுறையில் ரெயில்களை இயக்க ரெயில்வே மண்டலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. உடனடியாக இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு ரெயில்வே வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

    இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஆகலாம். இந்த உத்தரவின் மூலம் நாடு முழுவதும் இயக்கப்படும் 1,700 ரெயில்களும் அடுத்த ஒரு சில நாட்களில் கொரோனா பாதிப்புக்கு முந்தைய கட்டண நடைமுறையில் இயக்கப்பட உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மகரவிளக்கு பூஜையையொட்டி அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக சென்னை சென்ட்ரல் மற்றும் தாம்பரத்தில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. #sabarimala #SpecialTrains
    சென்னை:

    சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை, மகரவிளக்குக்காக இன்று மாலை நடைதிறக்கப்படுகிறது. தொடர்ந்து 2 மாதம் நடை திறந்து இருக்கும். ஜனவரி 15-ந்தேதி மகர விளக்கு பூஜை நடக்கிறது.

    அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக தென்னக ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது. இந்த ரெயில்கள் சென்ட்ரல் மற்றும் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

    சென்னை சென்ட்ரலில் இருந்து கொல்லத்துக்கு சுவிதா சிறப்பு ரெயில் (எண்.82635) ஜனவரி 11-ந்தேதி இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

    இந்த ரெயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார் பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பாலக்காடு, ஒத்துப்பாலம், திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரை காயங்குளம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    கொல்லம்-சென்னை சென்ட்ரல் சிறப்பு ரெயில் (எண்.82634). அடுத்த மாதம் (டிசம்பர்) 25 மற்றும் ஜனவரி 1-ந்தேதிகளில் கொல்லத்தில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு சென்னை வந்தடையும். இந்த ரெயில் பெரம்பூரில் நிற்கும்.

    தாம்பரம்-கொல்லம் சுவிதா ரெயில் (எண்.82609) ஜனவரி 11 மற்றும் 14-ந் தேதிகளில் மாலை 5.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். மறுநாள் காலை 9.20-க்கு கொல்லம் சென்றடையும்.

    இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடைய நல்லூர், தென்காசி, செங்கோட்டை, பகவதிபுரம், ஆரியங்காவு, தென்மலை, எடனூர், புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரை ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

    மறுமார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு வந்தடையும்.

    இதேபோல் தாம்பரத்தில் இருந்து சிறப்பு கட்டண ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் (எண்.06027) தாம்பரத்தில் இருந்து டிசம்பர் 24-ந்தேதி மாலை 5.15 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 9.20 மணிக்கு சென்று சேரும்.

    இதேபோல் கொல்லத்தில் இருந்து (எண்.06028) புறப்பட்டு தாம்பரம் வந்தடையும்.

    இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பு கோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, பகவதிபுரம், ஆரியங்காவு, தென் மலை, ஏற்றுமாலூர், புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரை, குண்டாரா ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். #sabarimala #SpecialTrains
    தீபாவளி பண்டிகையையொட்டி தாம்பரத்தில் இருந்து நெல்லை மற்றும் கோவைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. கூட்டநெரிசல் இன்றி சென்றதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    தாம்பரம்:

    தீபாவளி பண்டிகையையொட்டி கூட்டநெரிசலை சமாளிக்க சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து நெல்லை மற்றும் கோவைக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

    அதன்படி தாம்பரம்-நெல்லை சிறப்பு ரெயில் நேற்று காலை 9.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து பயணிகளுடன் நெல்லைக்கு புறப்பட்டு சென்றது. இதேபோல 5-ந் தேதி(திங்கட்கிழமை)யும் இந்த சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படுகிறது.

    மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில்கள், நெல்லையில் இருந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 7-ந் தேதி காலை 7.10 மணிக்கு புறப்பட்டு அதேநாள் இரவு 10.30 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.

    இதேபோல சென்னை -கோவை முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் நேற்று காலை 7.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. 5-ந் தேதியும் இந்த சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து கோவைக்கு இயக்கப்படுகிறது.

    மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 7-ந் தேதி ஆகிய இரு நாட்களும் காலை 10 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8.30 மணிக்கு தாம்பரம் வந்துசேரும்.

    நெல்லை மற்றும் கோவைக்கு தாம்பரத்தில் இருந்து தீபாவளி சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டதால் 2 ரெயில்களிலும் கூட்ட நெரிசல் இன்றி பயணிகள் குடும்பத்தினரோடு சொந்த ஊர்களுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றனர்.

    இதேபோல தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையத்தில் இருந்து விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. அதிக பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் தீபாவளி பண்டிகையை கொண்டாட கூட்ட நெரிசல் இன்றி பயணம் செய்தனர். 
    வருகிற டிசம்பர் மாதம் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் பண்டிகை போன்ற விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து நெல்லை, செங்கோட்டை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    சென்னை:

    சென்னை எழும்பூர்-செங்கோட்டை சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்: 06011) டிசம்பர் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் இரவு 8.40 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9.50 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கத்தில் (06012) செங்கோட்டையில் இருந்து 4, 11, 18 ஆகிய தேதிகளில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

    இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, செட்டிநாடு, காரைக்குடி, தேவக்கோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பன்கோவில் சாந்தி, கடையநல்லூர், தென்காசி வழியாக செல்லும்.

    சென்னை எழும்பூர்- நெல்லை சிறப்பு கட்டண ரெயில் (06001) டிசம்பர் 14 மற்றும் 28-ந்தேதிகளில் (வெள்ளிக்கிழமை) எழும்பூரில் இருந்து இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கத்தில் (06002) நெல்லையில் இருந்து 9 மற்றும் 16-ந்தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

    இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக செல்லும்.

    தாம்பரம்-கொல்லம் சிறப்பு கட்டண ரெயில் (06027) டிசம்பர் 3, 5, 10, 12, 14, 17, 19, 26, 28, 31 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கத்தில் (06028) கொல்லத்தில் இருந்து 4, 6, 8, 11, 13, 15, 18, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பன்கோவில் சாந்தி, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, பகவதிபுரம், ஆரியங்காவு, தென்மலை, எடமான், புனலூர், அவனீசுவரம், கொட்டாரக்கரா, குந்தாரா ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

    சென்னை சென்டிரல்-நாகர்கோவில் சிறப்பு கட்டண ரெயில் (06007) டிசம்பர் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் சென்டிரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.05 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கத்தில் (06008) 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

    இந்த அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

    சென்னை சென்டிரல்-அகமதாபாத் (06051) டிசம்பர் 1, 8, 15, 22, 19 ஆகிய தேதிகளில் இரவு 8.10 மணிக்கும், சென்டிரல்-சந்திரகாச்சி (06058) டிசம்பர் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.15 மணிக்கும், புதுச்சேரி-சந்திரகாச்சி (06010) டிசம்பர் 1, 8, 15, 22 ஆகிய தேதிகளில் மாலை 6.45 மணிக்கும் சிறப்பு கட்டண ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. 
    சென்னை-நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.
    சென்னை:

    சென்னை-நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சென்னை எழும்பூரில் இருந்து ஜூலை 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் இரவு 9.50 மணிக்கு இயக்கப்படும் சென்னை எழும்பூர்-நெல்லை சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்: 06001), மறுநாட்களில் காலை 10.50 மணிக்கு நெல்லையை சென்றடையும்.

    மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து ஜூலை 8, 22, 29 ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு கட்டண ரெயில் (06002), மறுநாட்களில் அதிகாலை 3.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

    சென்னை சென்டிரலில் இருந்து ஜூலை 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் இரவு 10 மணிக்கு இயக்கப்படும் சென்னை சென்டிரல்-எர்ணாகுளம் சிறப்பு கட்டண ரெயில் (06005), மறுநாட்களில் காலை 8.45 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். மறுமார்க்கமாக எர்ணாகுளத்தில் இருந்து ஜூலை 8, 22, 29 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு கட்டண ரெயில் (06006), மறுநாட்களில் காலை 7.20 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.

    தாம்பரம்-கொல்லம் இடையே வாரம் மூன்று முறை சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி ஜூலை 2-ந்தேதி முதல் செப்டம்பர் 28-ந்தேதி வரை (திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்) தாம்பரத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும்.

    இச்சிறப்பு ரெயில் (06027), மறுநாட்களில் காலை 10 மணிக்கு கொல்லத்தை சென்றடையும். மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06028), மறுநாட்களில் பிற்பகல் 3.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

    சென்னை சென்டிரலில் இருந்து ஜூலை 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் இரவு 10 மணிக்கு இயக்கப்படும் சென்னை சென்டிரல்-நாகர்கோவில் சிறப்பு கட்டண ரெயில் (06007), மறுநாட்களில் காலை 11.05 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும்.

    மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து ஜூலை 4, 11, 18, 25 மற்றும் ஆகஸ்டு 1 ஆகிய தேதிகளில் மாலை 5 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு கட்டண ரெயில் (06008), மறுநாட்களில் காலை 7.20 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.

    சென்னை சென்டிரலில் இருந்து ஜூலை 4, 11, 18, 25, ஆகஸ்டு 1, 8, 22, 29, செப்டம்பர் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.15 மணிக்கு இயக்கப்படும் சென்னை சென்டிரல்-சந்திராகாச்சி சிறப்பு கட்டண ரெயில் (06058), மறுநாட்களில் இரவு 7 மணிக்கு சந்திராகாச்சியை சென்றடையும்.

    புதுச்சேரியில் இருந்து ஜூலை 7, 14, 21, 28, ஆகஸ்டு 4, 11, 25, செப்டம்பர் 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமைகளில்) இரவு 7.15 மணிக்கு இயக்கப்படும் புதுச்சேரி-சந்திராகாச்சி சிறப்பு கட்டண ரெயில் (06010), திங்கட்கிழமைகளில் அதிகாலை 4.30 மணிக்கு சந்திராகாச்சியை சென்றடையும்.

    மேற்கண்ட ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
    ×