search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "maharavilakku pooja"

    மகரவிளக்கு பூஜையையொட்டி அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக சென்னை சென்ட்ரல் மற்றும் தாம்பரத்தில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. #sabarimala #SpecialTrains
    சென்னை:

    சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை, மகரவிளக்குக்காக இன்று மாலை நடைதிறக்கப்படுகிறது. தொடர்ந்து 2 மாதம் நடை திறந்து இருக்கும். ஜனவரி 15-ந்தேதி மகர விளக்கு பூஜை நடக்கிறது.

    அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக தென்னக ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது. இந்த ரெயில்கள் சென்ட்ரல் மற்றும் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

    சென்னை சென்ட்ரலில் இருந்து கொல்லத்துக்கு சுவிதா சிறப்பு ரெயில் (எண்.82635) ஜனவரி 11-ந்தேதி இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

    இந்த ரெயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார் பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பாலக்காடு, ஒத்துப்பாலம், திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரை காயங்குளம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    கொல்லம்-சென்னை சென்ட்ரல் சிறப்பு ரெயில் (எண்.82634). அடுத்த மாதம் (டிசம்பர்) 25 மற்றும் ஜனவரி 1-ந்தேதிகளில் கொல்லத்தில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு சென்னை வந்தடையும். இந்த ரெயில் பெரம்பூரில் நிற்கும்.

    தாம்பரம்-கொல்லம் சுவிதா ரெயில் (எண்.82609) ஜனவரி 11 மற்றும் 14-ந் தேதிகளில் மாலை 5.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். மறுநாள் காலை 9.20-க்கு கொல்லம் சென்றடையும்.

    இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடைய நல்லூர், தென்காசி, செங்கோட்டை, பகவதிபுரம், ஆரியங்காவு, தென்மலை, எடனூர், புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரை ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

    மறுமார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு வந்தடையும்.

    இதேபோல் தாம்பரத்தில் இருந்து சிறப்பு கட்டண ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் (எண்.06027) தாம்பரத்தில் இருந்து டிசம்பர் 24-ந்தேதி மாலை 5.15 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 9.20 மணிக்கு சென்று சேரும்.

    இதேபோல் கொல்லத்தில் இருந்து (எண்.06028) புறப்பட்டு தாம்பரம் வந்தடையும்.

    இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பு கோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, பகவதிபுரம், ஆரியங்காவு, தென் மலை, ஏற்றுமாலூர், புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரை, குண்டாரா ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். #sabarimala #SpecialTrains
    ×