search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special prayer"

    • கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
    • 2023 புத்தாண்டு சிறப்பு திருப்பலி, ஆராதனைகளும் நடந்தன.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் நள்ளிரவு திருப்பலி, ஆராதனை நடந்தது. புதூர் புனித லூர்தன்னை ஆலயத்தில் மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி புத்தாண்டு சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார்.

    ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலயம், கூடல்நகர் தூய திரித்துவ ஆலயம், இடைவிடா சகாய அன்னை ஆலயம், அண்ணாநகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், பாஸ்டின்நகர் தூய பவுல் ஆலயம், விளாங்குடி செங்கோல் நகர் கிறிஸ்து அரசர் ஆலயம், டவுன்ஹால் ரோடு தூய ஜெபமாலை அன்னை ஆலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் பங்குத்தந்தையர்கள் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நிறைவேற்றினர். சி.எஸ்.ஐ. லுத்ரன் திருச்சபை, அசெம்பிளி ஆப் காட் திருச்சபை, எச்.எம்.எஸ். காலனி புதிய ஜீவிய சபை, பைபாஸ் ரோட்டில் உள்ள ஏசு அழைக்கிறார். ஜெபகோபுரம் உள்ளிட்ட அனைத்து சபைகளிலும் இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 2022-ம் ஆண்டின் நன்மைகளுக்காக நன்றி வழிபாடும், அதன் பிறகு 2023 புத்தாண்டு சிறப்பு திருப்பலி, ஆராதனைகளும் நடந்தன.

    இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஒருவருக்கொ ருவர் வாழ்த்து கூறி மகிழ்வை பகிர்ந்து கொண்டனர். மதுரை கோரிப்பாளையம், நெல்பேட்டை உள்பட அனைத்து பள்ளிவாசல் களிலும் இஸ்லாமியர்கள் புத்தாண்டு சிறப்பாக இருக்க வேண்டி சிறப்பு தொழுகை நடத்தினர்.

    • சென்னையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
    • கிறிஸ்துமஸ் பிரார்த்தனை கூட்டம் முடிந்ததும் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    சென்னை:

    சென்னை சாந்தோம், பெசன்ட்நகர் உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் கொட்டும் மழையில் இன்று கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

    கிறிஸ்துமஸ் விழா இன்று உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று (25- ந்தேதி) அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு முதல் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடைகள் அணிந்து கலந்து கொண்டனர்.

    கிறிஸ்துமஸ் விழாவையொட்டி சென்னையில் வீடுகள், கடைகள், ஷாப்பிங் மால்களில் கிறிஸ்துமஸ் குடில், கண்கவர் அலங்கார தோரணங்கள் அமைக்கப்பட்டன. சென்னை மாநகரம் முழுவதும் அலங்கார மின் விளக்குகள் கண்ணை கவர்ந்தது.

    சென்னையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. சென்னை சாந்தோம், பெசன்ட்நகர், பெரம்பூர், ராயப்பேட்டை, மயிலாப்பூர், எழும்பூர், வேப்பேரி உள்ளிட்ட முக்கிய கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் குடில்கள், இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும் வகையில் குழந்தை இயேசு சொரூபங்கள் அமைக்கப்பட்டு நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது.

    அதே போல் இன்று காலை 8 மணிக்கு கொட்டும் மழையில் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர்.

    இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை வரவேற்கும் வகையில் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் கட்டப்பட்டு உள்ளன. 2023-புத்தாண்டு வரை ஒவ்வொரு கிறிஸ்தவர் வீட்டு வாசல்களிலும் "ஸ்டார்கள்" அலங்கார விளக்குகள் தொங்கவிடப்படுகிறது.

    நண்பர்கள், உறவினர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுபொருட்களை வழங்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

    சென்னை சாந்தோம் கிறிஸ்தவ பேராலயம், பெசன்ட்நகர் ஆலயம், சின்னமலை ஆலயம், பெரம்பூர் லூர்து அன்னை ஆலயம், எழும்பூர் தூய இருதய ஆண்டவர் உள்ளிட்ட ஆலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை வழிபாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

    கிறிஸ்துமஸ் பிரார்த்தனை கூட்டம் முடிந்ததும் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். கிறிஸ்துமஸ் விழாவையொட்டி சென்னை முழுவதும் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    • நள்ளிரவு 12 மணிக்கு ஏசு கிறிஸ்து பிறப்பையொட்டி கிறிஸ்துமஸ் பண்டிகை கடலூரில் உள்ள தேவாலயங்களில் கொண்டாடப்பட்டது.
    • மேலும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

    கடலூர்:

    ஏசு கிறிஸ்து டிசம்பர் 25-ந்தேதி பெத்லகேம் என்னும் ஊரில் மாட்டுத்தொழுவத்தில் பிறந்தார் என்று கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் கூறப்பட்டுள்ளது. இந்த நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். இதன்படி நள்ளிரவு 12 மணிக்கு ஏசு கிறிஸ்து பிறப்பையொட்டி கிறிஸ்துமஸ் பண்டிகை கடலூரில் உள்ள தேவாலயங்களில் கொண்டாடப்பட்டது. கடலூர் மஞ்சக்குப்பம் கார்மேல் அன்னை ஆலயத்தில் இரவு சிறப்பு பிரார்த்தனை மற்றும் வழிபாடு நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு ஏசு கிறிஸ்து பிறப்பை விளக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்ட குடிலில் குழந்தை ஏசு சொரூபத்தை பங்கு தந்தை வைத்து, திருப்பலி நடத்தினார்.

    இதேபோல் கடலூர் கம்மியம்பேட்டை புனித சூசையப்பர் ஆலயம், குறிஞ்சிநகர் குழந்தை ஏசு ஆலயம், முதுநகர் பெந்தேகொஸ்தே சபை, மஞ்சக்குப்பம் தூய எபிபெனி தேவாலயம் போன்ற பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கடலூர் ஏ.எல்.சி. தேவாலயத்தில் கிறிஸ்து பிறப்பு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரா ர்த்தனையில் ஈடுபட்டனர். மேலும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர். விழாவையொட்டி கடலூரில் உள்ள அனைத்து தேவாலயங்களும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன.

    • சோழவந்தான் அருகே தர்காவில் அ.தி.மு.க.வினர் சிறப்பு தொழுகை நடத்தினர்.
    • இதில் தமிழ்மகன் உசேன், உதயகுமார் எம்.எல்.ஏ. பங்கேற்றனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் வைகையாற்று கரையோரமுள்ள தர்காவில் அ.தி.மு.க. அவைதலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் முன்னாள் முதல்வர் பழனிசாமி கட்சியின் பொதுசெயலாளராகவும், முதல்வராகவும் வேண்டி சிறப்பு தொழகை நடந்தது.

    இதில் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் தொழிற்சங்க நிர்வாகி மணி, கிழக்கு மண்டலம் ஜெயபால், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கணேசன், மாவட்ட மருத்துவ அணி கருப்பையா, பேரூர் செயலாளர் முருகேசன், ராமசந்திரன், தென்கரை ராமலிங்கம், கண்ணன், திருமங்கலம் தமிழழகன், வக்கீல் திருப்பதி, அஷ்ரத் கவுஸ் பாட்சா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கல்லறை திருநாளையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது
    • 1,000த்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

    அரியலூர்:

    கல்லறைத் திருநாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றறது. ஆண்டிமடம் அருகேயுள்ள தென்னூர் புனித லூர்து அன்னை ஆலய கல்லறைத் தோட்டம் மற்றும்வரத–ராசன் பேட்டைஅலங்கார அன்னை ஆலய கல்லறைத் தோட்டத்தில் 1,000த்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்று தங்களது மூதாதையர்களின் கல்லறைகளை சுத்தப்படுத்தி மலர்களால் அலங்கரித்தனர்.

    அவர்களுக்கு பிடித்த உணவு வகைகள், பழ வகைகள் படையலிட்டு, பின்னர் அதில் மெழுகு–வர்த்திகள், ஊதுவர்த்திகள் கொண்டு அவர்கள் நினை–வாக பிரார்த்தனை செய்து சிலுவையை நட்டும் அஞ்சலி செலுத்தினர்.

    பங்குதந்தை வின்செ–ன்ட்ரோச்மாணிக்கம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதே போல் தென்னூர் லூர்து ஆலய கல்லறைத் தோட்டத்தில் பங்கு தந்தை பிலிப்சந்தியாகு தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நெட்டலகுறிச்சி புனித சவேரியார் ஆலய கல்லறைத் தோட்டத்தில் பங்கு தந்தை ஆரோக்கியராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. குலமாணிக்கம் இஞ்ஞாசியர், புதுக்கோட்டை தூய மங்கள அன்னை, ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    இதே போல் ஜயங்கொ–ண்டம், கூவத்தூர்,அரிய–லூர், உடையா–ர்பாளையம், செந்துறை, கல்லக்குடி கிராமம் உள்ளிட்ட பகுதி–களிலுள்ள கல்லறைத் தோட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    • மங்கள சண்டியாகம் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி ஐப்பசி மாத சப்தமி திதியை முன்னிட்டு நேற்று நவக்கிரக தோஷங்கள் அகல, நிலம், பூமி, வீடுமனை மற்றும் சொத்து தகராறு வழக்குகள் நீங்கிட, தோஷங்கள், திருமணத்தடை அகல, மனஅமைதி பெற்று, மன சோர்வு நீங்கி, திருஷ்டி, செய்வினை அகன்றிட, கணவன் மனைவி ஒற்றுமை பெற, கடன் தொல்லை அகன்றிட, பதவி, படிப்பு, தொழில், வியாபாரம் போன்றவற்றில் ஏற்படும் தடைகள் விலகிட வேண்டி மங்கள சண்டியாகம் நடைபெற்றது.

    மங்கள சண்டி யாகத்தை முன்னிட்டு காலை கோ பூஜை, கணபதி சங்கல்பம், யாகசாலை பூஜைகள், நவதானியங்கள், பல்வேறு வகையான பூக்கள், பழங்கள், கரும்பு, இனிப்பு வகைகள், பூசணிக்காய் உள்பட பல்வேறு வகையான பொருள்கள் வைத்து நடைபெற்ற சண்டி யாகம், பைரவர் பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் இரண்டு பெருநாளை கொண்டாடுவார்கள்.
    • ஈதுல் அல்ஹா எனும் இந்த தியாகத் திருநாள் ஹஜ் பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் இரண்டு பெருநாளை கொண்டாடுவார்கள். ஒன்று ரம்ஜான் பண்டிகை. மற்றொன்று பக்ரீத் பண்டிகை ஆகும்.புனித ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பு இருந்து அதன் இறுதியில் கொண்டாடப்படுவது ரம்ஜான் பண்டிகையாகும்.

    இந்த நிலையில் நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்–பட்டது. இறைத்தூதர் இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இப்ராஹீம் நபி தான் கண்ட கனவின்படி தனது மகன் இஸ்மாயிலை அறுத்துப் பலியிட துணிந்தார். அப்போது வந்த இறைக்கட்டளை மகனை அறுக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக ஒரு ஆட்டை இறைவனுக்காக பலியிடுமாறும் கூறப்பட் டது. அத–ன்படியே அவர் அக்கடமையை நிறைவேற்றினார்.இறைக்கட்டளை என்ற தும் தனது மகனையே பலி கொடுக்க முயன்ற இந்தத் தியாகம் தான் இந்த பண்டிகையின் பின்னணியாகும்.

    இந்த தியாகத் திருநாளில் சிறப்பு தொழுகை நடத்தியும், கால்நடைகளான ஆடு, மாடு, ஒட்டகங்களை பலியிட்டு அதன் இறைச்சிகளை உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் கொடுத்தும் கொண்டாடப்படும்.ஈதுல் அல்ஹா எனும் இந்த தியாகத் திருநாள் ஹஜ் பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. இத்திருநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

    திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், பல்லடம், உடுமலை, தாராபுரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பக்ரீத் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அைனத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள பள்ளிவாசலில் திருப்பூர் மாநகர பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்காேனார் ஒன்று கூடி உலக அமைதி வேண்டி கூட்டு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகைக்கு பின் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். இதுபோல் திருப்பூர் நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளியிலும் சிறப்பு தொழுகை நடந்தது. இதிலும் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று பக்ரீத் பண்டிகை தொழுகையில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் பெரிய பள்ளிவாசல், காதர்பேட்டை பள்ளிவாசல், கோம்பைத்தோட்டம் பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் இன்று காலை பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. அதுபோல் பெரிய பள்ளிவாசலில் தொழுகை நடந்தது. சி.டி.சி. கார்னர் அல் அமீன் பள்ளி வளாகத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர். பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு, குர்பானி கொடுத்து கொண்டாடினர்.

    புனித வெள்ளியை முன்னிட்டு புதுவையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாதை நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். #goodfriday

    புதுச்சேரி:

    கிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதனன்று தொடங்கியது. இதனை தொடர்ந்து கிறிஸ்தவர்களின் புனித வாரம் கடந்த ஞாயிற்றுகிழமை குருத்தோலை ஞாயிறுடன் தொடங்கியது.

    அதனைத்தொடர்ந்து புனித வெள்ளி இன்று நடைபெற்றது. இதையொட்டி புதுவையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் திருப்பலிகள் நடைபெற்றது.

    புதுவை தூய ஜென்ம ராக்கினி அன்னை பேராலயத்தில் புதுவை கடலூர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் ஏசுபிரானின் மரணத்தை நினைவுபடுத்தும் சிலுவை பாதை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து தூய ஜென்மராக்கினி அன்னை ஆலயத்தில் இருந்து தொடங்கிய சிலுவை பாதை பேரணியில் பேராயர் சிலுவையை சுமந்து முன்னே செல்ல ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பின்தொடர்ந்து சென்றனர்.

    சிலுவை பாதை பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று இறுதியில் ஆலயத்தில் நிறைவுபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஏசுபிரான் பாடலை பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.

    இதே போல் புதுவையில் உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா பேராலயம், வில்லியனூர் மாதா ஆலயம் உள்ளிட்ட பல்வேறு பேராலயங்களில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதுவை குயவர்பாளையம் எம்.பி.ஏ. சபை சார்பில் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை நவீனா கார்டனில் நடைபெற்றது. சபை போதகர் நித்திய ஜீவதாஸ் தேவ செய்தி அளித்தார்.

    நிகழ்ச்சியில் ஜார்ஜ், மோசே தலைமையில் ஆண்கள், பெண்கள் குழுவினரின் சிறப்பு பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சபை ஊழியர்கள் செய்து இருந்தனர். #goodfriday

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு பக்ரீத்தொழுகை நடத்தப்பட்டது.
    ஈரோடு:

    இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த இறைத் தூதர் இப்ராகிமின் தியாகத்தை உலகிற்கு உணர்த்தும் உன்னத நாள் தான் பக்ரீத் திருநாள் ஆகும்.

    இறைவனின் அருளை பெறுவதற்காக அனைத்தையும் தியாகம் செய்யும் உயர்ந்த எண்ணத்தை விதைக்கும் நன்னாளாகவும் இந்நாள் விளங்குகிறது.

    இன்று காலையிலேயே இஸ்லாமியர்கள் அவர்கள் பகுதிக்கு உட்பட்ட பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையில் ஈடுப்பட்டனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் இன்று பக்ரீத் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதிகாலையிலயே எழுந்து குளித்து, புத்தாடைகள் அணிந்து பள்ளிவாசல்களுக்கு சென்று சிறப்பு தொழுகைகளில் ஈடுப்பட்டனர்.

    பக்ரீத்தையொட்டி ஆட்டை பலியிட்டு அதை மூன்று பங்குகளாக பிரித்து ஒரு பங்கை ஏழைகளுக்கு கொடுத்தனர். இரண்டாவது பங்கை உறவினர்களுக்கு கொடுத்தனர். மூன்றாவது பங்கை தங்களுக்கு வைத்து கொண்டனர்.

    ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் உள்ள ஈத்கா மைதானத்தில் ஈரோடு மாவட்ட அரசு காஜி முகமது கிபாயத்துல்லா தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

    இதே போன்று ஈரோடு மாநகரில் உள்ள ஜானகியம்மாள் லே-அவுட் பள்ளிவாசல்,புது மஜித் வீதியில் உள்ள சுல்தான் பேட்டை பள்ளிவாசல், அசோகபுரம் , திருநகர் காலனி, கே.எஸ்.நகர், சம்பத்நகர், டவுண் போலீஸ் நிலையம் எதிரே உள்ள பள்ளிவாசல், மரப்பாலம், ரெயில்வே காலனி, முத்தம்பாளையம், திண்டல் புதுகாலனி, பெரிய அக்ரஹாரத்தில் உள்ள ஈத்கா மைதானம் என மாநரில் உள்ள 43 பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

    இதே போன்று சத்தியமங்கலத்தில் உள்ள போட்டு வீராம்பாளையத்தில் 1,500 இஸ்லாமியர்கள் பங்கேற்ற சிறப்பு தொழுகை நடந்தது. அந்தியூர் பர்கூர் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகையும் நடந்தது. புளியம்பட்டி மெயின் ரோட்டில் உள்ள பெரிய பள்ளிவாசல், சின்ன பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

    இதே போன்று பெருந்துறை, கோபி, அம்மாபேட்டை, மொடக்குறிச்சி, கொடுமுடி, பவானி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 250 பள்ளிவாசல்களிலும் , 42 ஈத்கா மைதானத்திலும் சிறப்பு தொழுகை நடந்தது.

    கொடுமுடியில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள்.

    இதனையொட்டி ஈரோடு- கரூர் பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள மசூதியில் இருந்து ஹஸ்ரத் முகமது யாசின், ஹஸ்ரத் சாதிக் பாட்சா தலைமையில் முத்தவல்லி அபுபக்கர் முன்னிலையில் இஸ்லாமியர்கள் ஊர்வலமாக சென்றனர்.

    ஊர்வலம் கொடுமுடி பழைய பஸ் நிலையம் வழியாக சென்று சுல்தான் பேட்டையில் உள்ள சுல்தான் மாகல்லா பள்ளிவாசலுக்கு வந்தனர். பள்ளிவாசல் பின்புறம் அமைந்துள்ள மண்டபத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.இதில் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    பக்ரீத் பண்டிகையையொட்டி கோபியில் முஸ்லிம்கள் பங்கேற்ற ஊர்வலம் இன்று நடந்தது. ஈரோடு- சத்தி மெயின் ரோட்டில் உள்ள பெரிய பள்ளி வாசல் முன்பு இந்த ஊர்வலம் தொடங்கியது.

    கடை வீதி, மார்க்கெட் வழியாக சென்ற இந்த ஊர்வலம் ஈத்கா பள்ளி வாசலில் முடிவடைந்தது. அங்கு முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு பக்ரீத்தொழுகை நடத்தப்பட்டது.

    பெருந்துறையில் குன்னத்தூர் ரோட்டில் உள்ள மஜித் வீதியில் உள்ள மசூதியிலும். இதேபோல் புதிய மசூதியிலும் இன்று முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

    பெருந்துறை சிப்காட் தொழில் பேட்டையில் ஆயிரக்கணக்கான வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களில் பெரும் பாலோனோர் முஸ்லிம்கள் ஆவார்கள்.

    இவர்களும் இன்று பக்ரீத்தையொட்டி சிறப்பு தொழுகை நடத்த திரண்டனர். ஆனால் மசூதியில் போதிய இடம் இல்லாததால் இந்த 2 மசூதியிலும் ஷிப்டு முறையில் முஸ்லீம்கள் தொழுகை நடத்தினர்.

    ஒரு ஷிப்டுக்கு 1000 பேர் என அவர்கள் சிறப்பு பக்ரீத் தொழுகையில் ஈடுபட்டனர்.  #tamilnews
    கேரளாவில் மழை, வெள்ளம் குறைந்து இயல்புநிலை திரும்ப வேண்டி கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டன.
    பாவூர்சத்திரம்:

    தெட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. அப்போது கேரளாவில் மழை, வெள்ள பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலை திரும்பவேண்டி பூஜைகள் நடத்தப்பட்டன.

    விழாவையொட்டி மாலை 3 மணி அளவில் 16 வகையான மூலிகைகளால் மூலமந்திர ஹோமம், விஷ்ணு சூத்த ஹோமம், மன்யு சூத்த ஹோமம், பாக்ய சூத்த ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிசேகமும், பெருமாள் சப்பரத்தில் தீர்த்தவலம் வருதல், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், ஸ்ரீசாம்ராஜ்ய லட்சுமி நரசிம்ம பீடத்தினர், நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினர் செய்திருந்தனர்.

    தா.பேட்டை அருகே விஜயகாந்த் பூரண உடல்நலம் பெற்று குணமடைய வேண்டி சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.
    தா.பேட்டை:

    தா.பேட்டை அடுத்த பிள்ளாபாளையம் கிராமத்தில் கொல்லிமலை அடி வாரத்தில் அமைந்துள்ள நரசிங்கபெருமாள் கோவிலில் தே.மு.தி.க நிறுவன தலைவர் விஜயகாந்த் பூரண உடல்நலம் பெற்று குணமடைய வேண்டி சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. 

    நிகழ்ச்சிக்கு தே.மு.தி.க வடக்கு மாவட்ட செயலாளர் கே.எஸ்.குமார் தலைமை தாங்கினார். அப்போது தே.மு.தி.க நிறுவன தலை வர் விஜயகாந்த் பூரண உடல்நலம் பெற வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்று, திரளான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

    இதில் தா.பேட்டை ஒன்றிய செயலாளர் குணசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோபி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பெரியசாமி, பிள்ளாபாளையம் ஊராட்சி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர். 
    ×