search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிவாசல்"

    • ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
    • நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டுகளைப் போலவே. 2024-ஆம் ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

    2024-ஆம் ஆண்டு. ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின்கீழ் நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி,7,040 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால் அரசுக்கு 26 கோடியே 81 இலட்சத்து 53 ஆயிரத்து 600 ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.

    • ஏ.வி.எம்.கால்வாயை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
    • புல் பூண்டுகள் நீர் மட்டத்தில் உயர்ந்து சாலை மட்டத்தை எட்டியுள்ளது.

    குளச்சல் :

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. கடந்த ஒரு வாரம் மழை ஓய்ந்திருந்த நிலையில் நேற்றிரவு முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    குளச்சல் சுற்று வட்டார பகுதியில் பெய்த கன மழையால் குளச்சல் பாம்பூரி வாய்க்காலில் வெள்ளம் பெருகி கரைபுரண்டு ஓடுகிறது. காந்தி சந்திப்பு முதல் பீச் சந்திப்பு வரை சாலையை மூழ்கடித்து வெள்ளம் ஓடியது.

    இதனால் வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமடைந்தனர்.வெள்ளியாகுளம் நிரம்பி உள்ளது. இந்த குளம் தூர்வாரப்படாததால் வளர்ந்துள்ள செடிகள், புல் பூண்டுகள் நீர் மட்டத்தில் உயர்ந்து சாலை மட்டத்தை எட்டியுள்ளது. ஆசாத் நகர் வடிகால் நிரம்பி சாலையை மூழ்கடித்து சென்றது.

    இதனால் மழை வெள்ளம் அருகில் உள்ள ஜூம்மா பள்ளி வாசலுக்குள் புகுந்தது. இந்த வெள்ளம் இன்று காலை வடியாததால் தொழுகைக்கு இடையூறு ஏற்பட்டது.நிர்வாகிகள் மின் மோட்டார் மூலம் வெளியேற்றி வருகின்றனர். மழைக்காலங்களில் பெரு வெள்ளம் இந்த பள்ளி வாசலுக்குள் புகுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.எனவே ஆசாத் நகர் வழியாக பாய்ந்தோடும் மழை வெள்ளம் ஏ.வி.எம்.கால்வாய் வழியாக கடலில் சேர ஏ.வி.எம்.கால்வாயை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

    • பள்ளிவாசல்களில் புனித இரவு தொழுகை நடந்தது.
    • திரளானோர் பங்கேற்றனர்.

    கீழக்கரை

    ரம்ஜான் மாதத்தில் லைலத்துல் கத்ரு எனப்படும் புனித இரவில் முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து இரவு முழுவதும் தூங்காமல் பள்ளிவாசல்களில் திருக்குரான் ஓதி சிறப்பு தொழுகை நடத்துவது வழக்கம். இதன்படி நேற்று புனித இரவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி , பெரியபட்டணம், பனைக்குளம், திருப் புல்லாணி உள்பட மாவட் டத்தின் பல்வேறு பகுதி களிலும் உள்ள ஜும்மா பள்ளி வாசல்களில் முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    இதில் முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து நறுமணம் பூசி தொழுகை மற்றும் சிறப்பு துஆவில் கலந்து கொண்டனர். தொழுகைக்கு பின் உலக நன்மைக்காகவும், மக்கள் அனைவரும் நலமுடன் வாழவும், திருக்குர்ஆன் ஓதி சிறப்பு துஆ செய்தனர். அதனை தொடர்ந்து நேற்று இரவு பள்ளிவாசல்களில் விடிய விடிய இஸ்லாமிய மக்கள் திருக்குர்ஆன் ஓதி இறைவனை தொழுதனர்.

    அனைத்து ஊர்களிலும் ஜமாத் நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதிகாலை அனைத்து பள்ளி வாசல் களிலும் நோன்பு நோற்பதற்காக சகர் உணவு வழங்கப் பட்டது. பெண்களுக்கான தொழுகை மதரசாக்களிலும், வீடுகளிலும் நடந்தது.

    • ரம்ஜான் நோன்பு தொடங்கியதை முன்னிட்டு பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்று வருகின்றன.
    • 120 கிலோ அரிசி கொண்டு நோன்பு கஞ்சி தயாரித்து வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    ரம்ஜான் நோன்பு தொடங்கியதை முன்னிட்டு திருப்பூர் நகரில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்று வருகின்றன. மாலை தொழுகை முடிந்து நோன்பு துறக்கும் நேரம் துவங்கிய பின் அவர்கள் பருகும் வகையில் பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சி வழங்கப்படுகிறது.

    திருப்பூர் பெரிய பள்ளி வாசலில் நோன்பு கஞ்சி தயாரித்து வழங்கப்படுகிறது. இது குறித்து பள்ளிவாசல் செயலாளர் ஷாஜகான் கூறியதாவது :- பெரிய பள்ளிவாசல் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுப்பகுதி பள்ளி வாசல் மற்றும் பிற பகுதியினருக்கும் நோன்பு கஞ்சி வழக்கமாக இங்கிருந்து வழங்கப்படும்.அவ்வகையில் தினமும் சராசரியாக 120 கிலோ அரிசி கொண்டு நோன்பு கஞ்சி தயாரித்து வழங்கப்ப டுகிறது. ரமலான் பண்டிகை நாள் வரையிலான அளவு நோன்பு கஞ்சி வழங்குவத ற்கான பொருள் தயாராக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    • உடுமலை ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் முத்தவல்லி யூ.எஸ்.அப்துல் கபூர் தலைமை வகிக்கிறார்.
    • பள்ளிவாசலை வடிவமைத்த பொறியாளர் ஏ.சம்சுதின் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை தளி ரோடு தெற்கு குட்டை வீதியில் உள்ள 120 ஆண்டு பழமையான புனரமைக்கப்பட்ட ஜாமிஆ மஸ்ஜித் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் திறப்பு விழா நாளை 29-தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

    இவ்விழாவிற்கு உடுமலை ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் முத்தவல்லி யூ.எஸ்.அப்துல் கபூர் தலைமை வகிக்கிறார். இமாம் எம்.முஹம்மது யூசுப்ஹசனி கிரா அத் செய்கிறார். செயலாளர் சையத் நூருல் ஹமீத் வரவேற்று பேசுகிறார். உடுமலை வட்டார அனைத்து பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள், உலமா பெருமக்கள், ஜமா அத்தார்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

    தலைமை இமாம்கள் செய்யிது ஈஸா (பூர்வீக பள்ளிவாசல்) முஹம்மது அப்துல்லாஹ் (ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல்) முஹம்மது யூசுப் (பிர்தெளஸ்ஸியா பள்ளிவாசல்) உடுமலை மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் யூ.எஸ்.எஸ்.ஸ்ரீதர், சி.எஸ்.ஐ. இம்மானுவேல் ஆலயம் கே.எல்.லூதர், பள்ளிவாசலை வடிவமைத்த பொறியாளர் ஏ.சம்சுதின் ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.

    விழாவில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி. கே.எஸ்.மஸ்தான், திருச்சி அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரி முதல்வர் ரூஹூல் ஹக் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

    விழாவில் பொள்ளாச்சி எம்.பி.சண்முகசுந்தரம், உடுமலை எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், திருப்பூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர் பத்மநாபன், உடுமலை நகர மன்ற தலைவர் மத்தீன், துணைத் தலைவர் கலைராஜன், தி.மு.க. உடுமலை நகர செயலாளர் வேலுச்சாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.எம்.முபாரக் அலி, காந்திநகர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் ஹக்கீம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் சையத் பக்ருதீன், அப்துல் அமீது, முஹம்மது அப்துல்லாஹ், சதாம் உசேன், காதர்உசேன், சையத் யூனூஸ் மற்றும் ஆடிட்டர் ஹக்கீம் ஆகியோர் செய்துள்ளனர்.

    • பனங்குடி கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் வரி வசூல் செய்யப்பட்டது.
    • வரி வசூல் மூலம் கிடைத்த ரூ. 1 ½ கோடி மதிப்பில் புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டது.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பனங்குடி கிராமத்தில் பெரும்பாலும் இந்துக்கள் வசித்து வருகின்றனர். கணிசமான அளவில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் வசிக்கின்றனர். ஜாதி, மத வேறுபாடின்றி இந்தப்பகுதி மக்கள் கோவில் திருவிழாக்களை முன் நின்று நடத்துவது வழக்கம்.

    பனங்குடி கிராமத்தில் பழமையான பள்ளிவாசல் இருந்தது. இந்த பள்ளிவாசலின் கட்டிடம் சிதிலமடைந்து மோசமான நிலையில் காணப்பட்டது. இதனால் அங்கு தொழுகை நடத்துவதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை. இதையடுத்து புதிய பள்ளிவாசல் கட்ட ஜமாத் நிர்வாகிகள் முடிவு செய்தனர். இதற்கான ஆலோசனை கூட்டம் ஜமாத் தலைவர் தலைமையில் நடந்தது.

    இதில் அந்தப்பகுதி இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். மும்மதத்தினரும் இணைந்து பள்ளிவாசலை கட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி பனங்குடி கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் வரி வசூல் செய்யப்பட்டது. இதன்மூலம் கிடைத்த ரூ. 1 ½ கோடி மதிப்பில் புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டது.

    இதன் திறப்பு விழா நடந்தது. விழாவில் அந்தப்பகுதி மக்கள் அனைவரும் அங்குள்ள கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் நடத்தினர். அதன்பின் பள்ளிவாசல் திறப்பு விழா நடந்தது. இதில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டனர். சமூக நல்லிணக்கத்திற்கு உதாரணமாக இந்த சம்பவம் விளங்குவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    • பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.
    • இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் பக்ரித் பண்டிகை ஆகும். இன்று நாடு முழுவதும் முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.

    மதுரை மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையை முஸ்லிம்கள் கொண்டாடி னர். இதனை முன்னிட்டு முஸ்லிம்கள் அனைவரும் புத்தாடை அணிந்து உற்சா கத்துடன் அதிகாலை நேரத்தில் மசூதிக்கு புறப்பட்டு சென்றனர்.

    மதுரை மாநகரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரசரடி ஈத்கா மைதானம், காஜிமார் தெரு பெரிய பள்ளிவாசல், சிம்மக்கல் மக்கா ஜும்மா‌‌ பள்ளிவாசல், நெல்பேட்டை சுங்கம் பள்ளிவாசல், முனிச்சாலை கரீம்ஷா பள்ளிவாசல், கோரிப்பாளையம் தர்ஹா பள்ளிவாசல், முஸ்லிம் மேலகார ஜமாத் பள்ளி வாசல். மாட்டுத்தாவணி பள்ளிவாசல், டவுன் ஹால் ரோடு மசூதி சம்மட்டிபுரம் புதுப்பள்ளிவாசல் உள்பட பல்வேறு பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சிறப்பு தொழுகையின் முடிவில் இஸ்லாமிய மத குருமார்கள் பக்ரீத் பண்டிகையின் முக்கியத்து வம், நடைமுறைகள் மற்றும் நன்மைகள் குறித்து கூறினர்.

    பக்ரித் பெருநாள் தொழு கையை நிறைவேற்றிய பிறகு இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவி பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து இஸ்லாமியர்கள் இறை வனுக்கான கடமையை நிறைவேற்றும் வகையில், ஆடுகளை பலியிட்டு, இறைச்சிகளை ஏழை எளியோருக்கு வழங்கி தியாகத்திருநாள் கடமையை நிறைவேற்றினர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகைக்கு ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
    • 200-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில், பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது.

    ராமநாதபுரம்

    இறைத்தூதர் இபுராகிம் (அலை) தியாகத்தை கொண்டாடும் வகையில் முஸ்லிம் மக்கள் ஆண்டு தோறும் துல்ஹஜ் மாதம் பிறை 10-ல் பக்ரீத் பண்டிகையை தியாகத் திருநாளாக கொண்டாடி வருகின்றனர்.

    இன்று காலை 7 மணிக்கு தக்பீர் முழக்கத்துடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில், பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது.

    ராமநாதபுரத்தில் அனைத்து ஜமாத் சார்பில் ராமநாதபுரம் - மதுரை சாலையில் உள்ள ஈதுகா மைதானத்தில் தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    இதே போல் கீழக்கரையில் உள்ள 13-க்கும் ேமற்பட்ட பள்ளிவாசல்களில் பெரு நாள் சிறப்பு தொழுகை நடந்தது. ஏர்வாடி, பெரிய பட்டினம், ரெகுநாதபுரம், திருப்புல்லாணி, ராம நாதபுரம் வெளிப்பட்டினம், பாரதி நகர், தங்கப்பா நகர் மதரஷா, பனைக்குளம், தேவிபட்டினம், இருமேனி, மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம், ராமேசு வரம், ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி, அழகன்குளம், பெருங்குளம், சித்தார்கோட்டை உள்பட மாவட்டத்தின் அனைத்து ஜூம்ஆ பள்ளிவாசல் களிலும் பெருநாள் தொழுகை நடந்தது.

    முன்னதாக பள்ளிவாச லில் பேஷ் இமாம்கள் பக்ரீத் பண்டிகையின் சிறப்புகளை பயான் (சொற்பொழிவு) செய்தனர். தொழுகைக்கு பின் உலக மக்களின் அமைதிக்காகவும், மத நல்லிணக்கம் தொடரவும், தண்ணீர் தட்டுப்பாடு நீங்கவும், மழை வேண்டியும் சிறப்பு துவா நடந்தது. தொழுகை முடிந்ததும் உறவினர்களும், நண்பர்களும் ஒரு வருக்கொருவர் கட்டி யணைத்து பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். பெண்களுக்கான தொழுகை பெண்கள் பள்ளிவாசல், மதரஸா மற்றும் வீடுகளில் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் வீடுகளில் ஆடு, மாடுகள் ஆயிரக்கணக்கில் குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சிகளை உறவினர்க ளுக்கும், ஏழைகளுக்கும் வழங்கினர். மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஏராளமான இடங்களில் திறந்த வெளி மைதானத்தில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

    சொந்த ஊரில் நடை பெறும் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டு குடும்பத்துடன் பெருநாள் கொண்டாட வளைகுடா நாடுகளிலிருந்தும், மலே சியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும் ஏராள மானோர் சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள மலுங்கு ஒலியுல்லா தர்ஹா வளாகத்திடலில் தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாள் பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஆண்களும், பெண்களும் ஒரே இடத்தில் தொழுகை நடத்தினர்.முன்னதாக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட அனைத்து இஸ்லாமியர்களும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து உற்சாகமாக தொழுகைக்கு வந்தனர். தொழுகை முடிந்து ஒருவரையொருவர் கட்டி அனைத்து தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து குர்பானி கொடுக்கப்பட்டது.

    • உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் இரண்டு பெருநாளை கொண்டாடுவார்கள்.
    • ஈதுல் அல்ஹா எனும் இந்த தியாகத் திருநாள் ஹஜ் பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் இரண்டு பெருநாளை கொண்டாடுவார்கள். ஒன்று ரம்ஜான் பண்டிகை. மற்றொன்று பக்ரீத் பண்டிகை ஆகும்.புனித ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பு இருந்து அதன் இறுதியில் கொண்டாடப்படுவது ரம்ஜான் பண்டிகையாகும்.

    இந்த நிலையில் நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்–பட்டது. இறைத்தூதர் இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இப்ராஹீம் நபி தான் கண்ட கனவின்படி தனது மகன் இஸ்மாயிலை அறுத்துப் பலியிட துணிந்தார். அப்போது வந்த இறைக்கட்டளை மகனை அறுக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக ஒரு ஆட்டை இறைவனுக்காக பலியிடுமாறும் கூறப்பட் டது. அத–ன்படியே அவர் அக்கடமையை நிறைவேற்றினார்.இறைக்கட்டளை என்ற தும் தனது மகனையே பலி கொடுக்க முயன்ற இந்தத் தியாகம் தான் இந்த பண்டிகையின் பின்னணியாகும்.

    இந்த தியாகத் திருநாளில் சிறப்பு தொழுகை நடத்தியும், கால்நடைகளான ஆடு, மாடு, ஒட்டகங்களை பலியிட்டு அதன் இறைச்சிகளை உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் கொடுத்தும் கொண்டாடப்படும்.ஈதுல் அல்ஹா எனும் இந்த தியாகத் திருநாள் ஹஜ் பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. இத்திருநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

    திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், பல்லடம், உடுமலை, தாராபுரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பக்ரீத் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அைனத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள பள்ளிவாசலில் திருப்பூர் மாநகர பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்காேனார் ஒன்று கூடி உலக அமைதி வேண்டி கூட்டு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகைக்கு பின் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். இதுபோல் திருப்பூர் நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளியிலும் சிறப்பு தொழுகை நடந்தது. இதிலும் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று பக்ரீத் பண்டிகை தொழுகையில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் பெரிய பள்ளிவாசல், காதர்பேட்டை பள்ளிவாசல், கோம்பைத்தோட்டம் பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் இன்று காலை பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. அதுபோல் பெரிய பள்ளிவாசலில் தொழுகை நடந்தது. சி.டி.சி. கார்னர் அல் அமீன் பள்ளி வளாகத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர். பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு, குர்பானி கொடுத்து கொண்டாடினர்.

    • 200 பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.
    • தமிழகம் முழுவதும் நாளை (10-ந்தேதி) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    ராமநாதபுரம்

    தமிழகம் முழுவதும் நாளை (10-ந்தேதி) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஜூம்ஆ பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. தொழுகை முடிந்ததும் குர்பானிக்காக ஆயிரக்கணக்கான ஆடுகள் தயார் நிலையில் உள்ளது.

    இறைத்தூதர் இபுராகிம் (அலை) தியாகத்தை கொண்டாடும் வகையில் முஸ்லிம் மக்கள் ஆண்டு தோறும் துல்ஹஜ் மாதம் பிறை 10-ல் பக்ரீத் பண்டிகையை தியாகத் திருநாளாக கொண்டாடி வருகின்றனர்.

    நாளை காலை 7 மணி முதல் தக்பீர் முழக்கத்துடன் மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் மற்றும் திறந்தவெளி மைதா னங்களிலும் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடக்கிறது.

    முன்னதாக பள்ளிவா சலில் பேஷ் இமாம்கள் பக்ரித் பண்டிகையின் சிறப்புகள் குறித்து பயான் (சொற்பொழிவு) நடைபெறும். தொழுகைக்கு பின் உலக மக்களின் அமைதிக்காகவும், மத நல்லிணக்கம் தொடரவும் சிறப்பு துவா நடைபெற்று தொழுகை நிறைவடையும். இதைத்தொடர்ந்து வீடுகளில் ஆடுகள், மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சிகளை உறவினர்களுக்கும், ஏழை களுக்கும் வழங்குவார்கள்.

    ராமநாதபுரத்தில் வெளிப்பட்டணம், சின்னக்கடை, பாரதிநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலும், கீழக்கரையில் தெற்குத்தெரு, நடுத்தெரு, பழைய குத்பா பள்ளி, வடக்குத்தெரு, மேலத்தெரு உள்பட 13-க்கும் அதிகமான பள்ளிவாசல்களில் பெருநாள் தொழுகை நடைபெறுகிறது.

    இதேபோல் பனைக்குளம், என்மனங்கொண்டான், ஏர்வாடி, மண்டபம், பாம்பன், ராமேசுவரம், பெருங்குளம், பெரியபட்டி னம், தேவிபட்டினம், சித்தார் கோட்டை, அழகன்குளம், தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    சொந்த ஊரில் நடை பெறும் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டு குடும்பத்துடன் பெருநாள் கொண்டாட வளைகுடா நாடுகளில் இருந்தும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடு களில் இருந்தும் ஏராள மானோர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் களை கட்டியுள்ளது.

    • சிவகங்கை அருகே பள்ளிவாசல் நிர்வாகிகள் தேர்தல் நடத்தக்கோரி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
    • பதவிக்காலம் முடிந்தும் நிர்வாகிகள் பதவி விலக மறுத்து வருவதாக குற்றம் சாட்டு எழுந்துள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை அடுத்த மதகுபட்டியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    இங்கு அபூபக்கர் சித்திக் ஜும்மா பள்ளிவாசல் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி வாசலில் நிர்வாகிகள் தேர்வு என்பது அவ்வப்போது நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில் கடந்த முறை தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பதவிக்காலம் முடிந்து தாங்கள் பதவி விலக மறுத்து வருவதாக குற்றம் சாட்டு எழுந்துள்ளது.

    இந்த பள்ளிவாசல்நிர்வாகிகள் தேர்தல் தொடர்பாக ஜமாத்தார்கள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இதைத்தொடர்ந்து நிர்வாகிகள் தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதையடுத்து தமிழ்நாடு வக் வாரியம் நிர்வாகிகள் தேர்தலை நடத்த அறிவுறுத்தியும் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தேர்தலை நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்யாமல் உள்ளனர்.

    எனவே உடனடியாக நிர்வாகிகள் தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து பள்ளி வாசல் முன்பு உறுப்பினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ×