search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fasting porridge"

    • இஸ்லாமிய நண்பர்கள் அனைவரும் நோன்பு இருப்பார்கள்.
    • நோன்பு கஞ்சி அருந்தி நோன்பை நிறைவு செய்வார்கள்.

    இஸ்லாமிய நண்பர்கள் அனைவரும் நோன்பு இருப்பார்கள். இப்படி நோன்பு இருப்பவர்கள் மாலையில் தொழுகையை நிறைவு செய்த பிறகு நோன்பை நிறைவு செய்யும் வகையில் நோன்பு கஞ்சி அருந்தி நிறைவு செய்வார்கள். இந்த நோன்பு கஞ்சி என்பது அனைத்து பள்ளிவாசல்களிலும் கிடைக்கும். முஸ்லிம்களின் விருப்ப உணவுகளில் ஒன்றாக விளங்கும் நோன்பு கஞ்சியை வீட்டில் எளிய முறையில் எப்படி செய்யலாம் என்பதை இங்கு காணலாம்.

    தேவையான பொருட்கள்:

    பச்சரி- கால் கிலோ

    பாசிப்பருப்பு- 50 கிராம்

    பட்டை- 2

    ஏலக்காய்- 4

    கிராம்பு- 4

    பிரியாணி இலை- 1

    வெந்தயம்- ஒரு ஸ்பூன்

    எண்ணெய்- தேவையான அளவு

    நெய்- ஒரு குழி கரண்டி

    கொத்தமல்லி, புதினா- ஒரு கைப்பிடி

    இஞ்சி பூண்டு பேஸ்ட்- ஒரு ஸ்பூன்

    கேரட்- 1

    பச்சை மிளகாய்- 3

    சின்னவெங்காயம்- ஒரு கைப்பிடி

    பூண்டு- 5 பல்

    வெங்காயம்- 1 (நறுக்கியது)

    தக்காளி- 4 (நறுக்கியது)

    தேங்காய்ப்பால்- தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து குக்கர் நன்றாக சூடானதும் அதில் எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்ற வேண்டும். இவை இரண்டும் நன்றாக சூடான பிறகு பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை இவற்றை சேர்க்க வேண்டும். பிறகு வெந்தயத்தை சேர்க்க வேண்டும்.

    வெந்தயம் சிவந்த பிறகு பூண்டு, சின்ன வெங்காயம் இவை இரண்டையும் ஒன்று இரண்டாக இடித்து அதனுடன் சேர்க்க வேண்டும்.

    பிறகு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி அதையும் சேர்க்க வேண்டும். தக்காளியை பொடியாக நறுக்கி அதையும் சேர்த்து, மூன்று பச்சை மிளகாயையும் நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு கொத்தமல்லி, புதினா, இஞ்சி பூண்டு பேஸ்ட், பொடியாக நறுக்கிய கேரட்டையும், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால் கேரட்டிற்கு பதிலாக கொத்துக்கறி வாங்கி இதில் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு ஊற வைத்திருக்கும் பச்சரிசி, பாசிப்பருப்பை இதனுடன் தண்ணீர் இல்லாமல் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். ஒரு நிமிடம் அப்படியே வைத்து விட்டு பிறகு இதில் 5 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விசில் போட்டு விட வேண்டும்.

    ஐந்து விசில் வரும் வரை அப்படியே விட்டு விடுங்கள். ஐந்து விசில் வந்த பிறகு அதை அணைத்து விடலாம். விசில் முழுவதும் போன பிறகு குக்கரை திறந்து தண்ணீர் தேவைப்பட்டால் தேவையான அளவு தண்ணீரை கொதிக்க வைத்து அதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு தேங்காய் பால் சேர்த்து ஒருமுறை நன்றாக கொதிக்கவிட்டு சிறிது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி இறக்கி விட வேண்டும்.

    அவ்வளவுதான் மிகவும் சுவையான நோம்பு கஞ்சி தயாராகிவிட்டது. சைவம், அசைவம் இரண்டிற்கும் ஒரே வித்தியாசம் தான் சைவமாக இருந்தால் கேரட்டை சேர்த்துக் கொள்ளுங்கள் அசைவமாக இருந்தால் மட்டனை சேர்த்துக் கொள்ளுங்கள்.

    • ராமநாதபுரம் மாவட்ட பள்ளிவாசல்களில் ஆட்டுக்கறி கலந்த நோன்பு கஞ்சி வினியோகிக்கப்பட்டது.
    • பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

    ராமநாதபுரம்

    ரமலான் மாதம் பிறந்து விட்டாலே எங்கு பார்த்தாலும் நோன்புக்கஞ்சியின் வாசம் கமகமக்கும். அதிகாலையிலிருந்து மாலை வரை நோன்பை கடைப்பிடிக்கும் நோன்பாளிகளுக்கு உடலுக்கு சக்தி அளிக்கும் உணவாக விளங்குகிறது.

    நோன்பு கஞ்சி நோன்பாளிகளுக்காக தயாரிக்கப்பட்டாலும், அனைத்து சமுதாய மக்களும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். கஞ்சியின் கூடுதல் சுவைக்காக ஆட்டு இறைச்சி சேர்த்து வருகின்றனர். இதில் சேர்க்கப்படும் பொருட்கள் சோர்வை நீக்கி, உடலின் வெப்பத்தை தணித்து, ஜீரணசக்தியை ஏற்படுத்துகிறது. திட உணவில் இது போன்ற சத்து இருப்பதில்லை. பக்க விளைவில்லாத உணவாக இருப்பதால் நோன்பு திறக்க நோன்பு கஞ்சி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டுக்கு ஒரு மாதம் நோன்பு கஞ்சி காய்ச்சப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது.

    கீழக்கரை, ராமநாதபுரம், ஏர்வாடி, தொண்டி, மண்டபம், பாம்பன், பனைக்குளம், அழகன்குளம், சித்தார்கோட்டை, தேவிபட்டிணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நோன்புக்கஞ்சி பள்ளிவாசல்களில் மட்டு மில்லாமல் வீடுகளிலும் தயார் செய்து நோன்பு கஞ்சியை ஏழை,எளிய மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

    ஒவ்வொரு கிராமங்களிலும் முஸ்லிம் மக்கள் இறைவன் தனக்கு அளித்த வாய்ப்பாக கருதி போட்டி போட்டு ஆர்வமாக வந்து தங்களது சொந்த செலவில் நோன்பு கஞ்சியை முஸ்லிம் ஜமாத் மூலமாக வழங்கி வருகின்றனர். நோன்பு கஞ்சிக்காக ஏராளமானோர் விண்ணப்பித்தால் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் குலுக்கல் முறையில் நன்கொடையா ளர்களை தேர்வு செய்கின்றனர்.

    முஸ்லிம் மக்கள் மட்டுமில்லாமல் அனைத்து சமூக மக்களும் விரும்பி பருகுவதால் தநல்லிணக்கத்தின் மறு பெயராகவும், ரமலான் மாதத்தின் அடையாளமாகவும் நோன்புக்கஞ்சி திகழ்கிறது என்றால் மிகையாகாது.

    • ரம்ஜான் நோன்பு தொடங்கியதை முன்னிட்டு பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்று வருகின்றன.
    • 120 கிலோ அரிசி கொண்டு நோன்பு கஞ்சி தயாரித்து வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    ரம்ஜான் நோன்பு தொடங்கியதை முன்னிட்டு திருப்பூர் நகரில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்று வருகின்றன. மாலை தொழுகை முடிந்து நோன்பு துறக்கும் நேரம் துவங்கிய பின் அவர்கள் பருகும் வகையில் பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சி வழங்கப்படுகிறது.

    திருப்பூர் பெரிய பள்ளி வாசலில் நோன்பு கஞ்சி தயாரித்து வழங்கப்படுகிறது. இது குறித்து பள்ளிவாசல் செயலாளர் ஷாஜகான் கூறியதாவது :- பெரிய பள்ளிவாசல் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுப்பகுதி பள்ளி வாசல் மற்றும் பிற பகுதியினருக்கும் நோன்பு கஞ்சி வழக்கமாக இங்கிருந்து வழங்கப்படும்.அவ்வகையில் தினமும் சராசரியாக 120 கிலோ அரிசி கொண்டு நோன்பு கஞ்சி தயாரித்து வழங்கப்ப டுகிறது. ரமலான் பண்டிகை நாள் வரையிலான அளவு நோன்பு கஞ்சி வழங்குவத ற்கான பொருள் தயாராக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    ×