search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிவாசல் நிர்வாகிகள் தேர்தல்
    X

    பள்ளி வாசல் முன்பு உறுப்பினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    பள்ளிவாசல் நிர்வாகிகள் தேர்தல்

    • சிவகங்கை அருகே பள்ளிவாசல் நிர்வாகிகள் தேர்தல் நடத்தக்கோரி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
    • பதவிக்காலம் முடிந்தும் நிர்வாகிகள் பதவி விலக மறுத்து வருவதாக குற்றம் சாட்டு எழுந்துள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை அடுத்த மதகுபட்டியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    இங்கு அபூபக்கர் சித்திக் ஜும்மா பள்ளிவாசல் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி வாசலில் நிர்வாகிகள் தேர்வு என்பது அவ்வப்போது நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில் கடந்த முறை தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பதவிக்காலம் முடிந்து தாங்கள் பதவி விலக மறுத்து வருவதாக குற்றம் சாட்டு எழுந்துள்ளது.

    இந்த பள்ளிவாசல்நிர்வாகிகள் தேர்தல் தொடர்பாக ஜமாத்தார்கள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இதைத்தொடர்ந்து நிர்வாகிகள் தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதையடுத்து தமிழ்நாடு வக் வாரியம் நிர்வாகிகள் தேர்தலை நடத்த அறிவுறுத்தியும் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தேர்தலை நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்யாமல் உள்ளனர்.

    எனவே உடனடியாக நிர்வாகிகள் தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து பள்ளி வாசல் முன்பு உறுப்பினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×