என் மலர்
செய்திகள்

நரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாட்டை தொடர்ந்து சுவாமி வீதி உலா நடந்தது
கேரளாவில் மழை, வெள்ளம் குறைய கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு
கேரளாவில் மழை, வெள்ளம் குறைந்து இயல்புநிலை திரும்ப வேண்டி கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டன.
பாவூர்சத்திரம்:
தெட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. அப்போது கேரளாவில் மழை, வெள்ள பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலை திரும்பவேண்டி பூஜைகள் நடத்தப்பட்டன.
விழாவையொட்டி மாலை 3 மணி அளவில் 16 வகையான மூலிகைகளால் மூலமந்திர ஹோமம், விஷ்ணு சூத்த ஹோமம், மன்யு சூத்த ஹோமம், பாக்ய சூத்த ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிசேகமும், பெருமாள் சப்பரத்தில் தீர்த்தவலம் வருதல், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், ஸ்ரீசாம்ராஜ்ய லட்சுமி நரசிம்ம பீடத்தினர், நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினர் செய்திருந்தனர்.

Next Story