search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Speaker Appavu"

    • சட்டசபையில் எடப்பாடி பழனிசாமியின் அருகில் உள்ள ஓ.பி.எஸ்.சின் இருக்கை மாற்றப்பட்டு அவருக்கு வேறு இடம் ஒதுக்கப்படுமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
    • ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கை மாற்றப்பட்டால் எடப்பாடி பழனிசாமியின் இருக்கை அருகே எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமார் அமர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் வெடித்ததையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதையடுத்து தமிழக சட்டசபையில் ஓ.பி.எஸ். வகித்து வந்த எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. அவருக்கு பதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எதிர்க்கட்சி துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இது தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் சபாநாயகர் அப்பாவுவிடம் முறைப்படி கடிதம் கொடுக்கப்பட்டது.

    சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அருகில் உள்ள அ.தி.மு.க. துணைத்தலைவர் இருக்கையில் ஆர்.பி. உதயகுமாரை அமர வைக்க வேண்டும் என்றும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு வேறு பகுதியில் இடத்தை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆனால் சபாநாயகர் அப்பாவு இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. சட்டமன்ற விதிகளின்படி எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி என்பது இல்லை. அதேநேரத்தில் யார்-யாரை எங்கு அமர வைக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட அதிகாரத்துக்குட்பட்டது என்று அவர் விளக்கம் அளித்தார்.

    ஆனால் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஓ.பி.எஸ்.சின் இருக்கையை எப்படியாவது மாற்றிவிட வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.

    இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவுவிடம் நேரில் பலமுறை முறையிட்டுள்ளனர். இதற்காக வெளிநடப்பும் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் நேற்று அங்கீகரித்துள்ளது. இதையடுத்து அ.தி.மு.க. கொறடா எஸ்.பி.வேலுமணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இன்று சபை கூடும் முன்னர் சபாநாயகர் அப்பாவுவை அவரது அறைக்கு சென்று நேரில் சந்தித்து மனு அளித்தனர். அப்போது தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை சுட்டிக் காட்டி கருத்துக்களை தெரிவித்தனர்.

    ஓ.பி.எஸ்.சின் இருக்கையை மாற்றக்கோரி பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அ.தி.மு.க. சார்பில் இன்று மனு அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதன்மூலம் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமியின் அருகில் உள்ள ஓ.பி.எஸ்.சின் இருக்கை மாற்றப்பட்டு அவருக்கு வேறு இடம் ஒதுக்கப்படுமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவேளை அப்படி ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கை மாற்றப்பட்டால் எடப்பாடி பழனிசாமியின் இருக்கை அருகே எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமார் அமர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எஸ்.பி. வேலுமணி பேசுவதை கண்டுகொள்ளாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து தனது பதில் உரையை வழங்கத் தொடங்கினார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்வதாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று ஒவ்வொரு கட்சியின் சார்பில் எம்.எல்.ஏ.க்கள் பேச அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் தொகுதி பிரச்சினை பற்றி எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

    அதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுந்து தனது போலீஸ் மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேச தொடங்கினார்.

    அப்போது அ.தி.மு.க. கொறடா எஸ்.பி. வேலுமணி எழுந்து ஒரு கோரிக்கையை முன்வைத்தார். சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவது தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது இல்லை என்றார்.

    ஆனால் அவர் பேச சபாநாயகர் அப்பாவு அனுமதிக்கவில்லை. எஸ்.பி.வேலுமணியின் மைக் இணைப்பும் வழங்கப்படவில்லை. என்றாலும், எஸ்.பி.வேலுமணி தொடர்ந்து பேசினார்.

    இதற்கிடையே எஸ்.பி. வேலுமணி பேசுவதை கண்டுகொள்ளாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து தனது பதில் உரையை வழங்கத் தொடங்கினார். அதே சமயத்தில் எஸ்.பி. வேலுமணியும் மைக் இணைப்பு இல்லாமல் பேசிக்கொண்டே இருந்தார்.

    இதனால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு குரல் எழுப்பினார்கள். முதல்வர் பேசுகிறார். உட்காருங்கள் என்று குரல் கொடுத்தனர். ஆனாலும், எஸ்.பி.வேலுமணி தொடர்ந்து பேசினார்.

    எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கை ஏற்கப்படாததால் வெளிநடப்பு செய்வதாக கூறினார். இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்வதாகவும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். இதற்கு சபாநாயகர் அதிருப்தியை பதிவு செய்தார்.

    சபாநாயகர் அப்பாவு இதுகுறித்து கூறுகையில், 'ஜனநாயக முறையில் நான் இந்த அவையை நடத்தி வருகிறேன். நான் சுதந்திரமாக செயல்படுகிறேன். ஆனால் அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்வதை நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள். அவர்களது வெளிநடப்பு ஏற்புடையது அல்ல' என்று கூறினார்.

    • சட்டசபையில் நேரலை தொடர்பாக காரசாரமாக விவாதம் நடைபெற்றது.
    • அதிமுக உறுப்பினர்கள் பேசும்போது நேரலை செய்யப்படுவதில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், "விருத்தாசலத்தில் படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த பள்ளியின் உரிமையாளரான தி.மு.க. கவுன்சிலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். எடப்பாடி பழனிசாமி பேசுவதை நேரலை செய்யாததால் அதிருப்தி அடைந்த அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் பேசும்போது நேரலை செய்யப்படுவதில்லை என்று குற்றம் சாட்டினார்.

    அதன்பின்னர் சட்டசபையில் நேரலை தொடர்பாக காரசாரமாக விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, நான் பேசுவதை நேரலை செய்வதில் என்ன பிரச்சனை? என கேள்வி எழுப்பினார்.

    அப்போது சபாநாயகர் அப்பாவு பேசும்போது, நேரலை வழங்குவதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும், சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும் கவன ஈர்ப்புகள் இனி நேரலை செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

    • விழாவில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு பேசினார்.
    • மகளிருக்கு அற்புதமான திட்டங்களை தந்து மகளிர் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்திவருகிறது தமிழக அரசு என்று பேசினார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் டி.டி.என்.கல்விக்குழுமங்களின் நேரு நர்ஸிங் கல்லூரி, ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி, மரியா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நேரு மருத்துவமனை ஆகிய நிறுவனங்கள் சார்பில் மகளிர் தினவிழா மரியா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

    விழாவுக்கு டி.டி.என்.கல்வி குழுமங்களின் தாளாளர் மற்றும் செய லாளர் ஹெலன் லாரன்ஸ் தலைமை தாங்கினார். டி.டி.என்.கல்வி குழுமங்களின் தலைவர் டி.லாரன்ஸ் வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு விருந்தின ராக பங்கேற்ற சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

    இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறியிருக்கிறார்கள் அதற்கு திராவிட இயக்க ங்களின் தியாகமும், திட்டங் களும் தான் காரணம்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்கள் பட்டப்படிப்பு படித்து முடிக்கும் வரையில் மாதம் ரூ.1,000 நிதி உதவி வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை தந்துள்ளார். பெண்கள் தான் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்த வேண்டும். அப்படிப்பட்ட குடும்பங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளது.

    பெண்களுக்கு கட்டண மில்லா பேருந்தை தந்தவர் நமது முதல்-அமைச்சர். இன்னும் வருகின்ற சட்டப்பேரவை கூட்டத்தில் நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை எதிர்பார்க்கலாம். பெண் காவலர்களுக்கு சலுகைகள் இப்படி பெண்களுக்காக சலுகைகள், திட்டங்களை வழங்கி வருவதால் தான் தமிழகம் இன்று அனைத்து துறைகளிலும் முதலிடத்தை பெற்றுள்ளது.

    இந்தியாவிலேயே சட்டத்தின் ஆட்சி தமிழ்நாட்டில் தான் நடக்கிறது. என இந்தியாவி லுள்ள அனைத்து மாநில முதல்-அமைச்சர்களும் தெரிவிக்கிறார்கள். இப்படி மகளிருக்கு திட்டங்களை தந்து மகளிர் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்திவருகிறது தமிழக அரசு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி முதல்வர் மைதிலி பேசினார்.

    அதனைத் தொடர்ந்து காலையில் நேரு நர்ஸிங் கல்லூரியில் நடைபெற்ற கோலப்போட்டி, மெகந்தி போட்டி, அடுப்பில்லா சமையல் போட்டி, மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சபாநாயகர் அப்பாவு பரிசு வழங்கி பாராட்டினார். விழாவில் வள்ளியூர் டி.எஸ்.பி. யோகேஷ்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் பெருமாள், வள்ளியூர் பேரூராட்சி தலைவர் ராதா ராதாகிருஷ்ணன், சென்னை வேளாண்மைத்துறை துணை இயக்குனரும் டி.டி.என்.கல்வி குழுமத்தின் பொருளாளருமான ஸ்டேன்லி, கல்லூரி நிர்வாக அலுவலர் அலெக்ஸண்டர், நேருநர்ஸிங் கல்லூரி முதல்வர் எஸ்.மார்க்கரெட் ரஞ்சிதம், துணை முதல்வர் பேபி உமா, ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஜி.சுரேஷ் தங்கராஜ் தாம்சன், நேரு மருத்துவனை மகப்பேறு மருத்துவர் டியாவிலின் மெடோனா, அரசு வக்கீல் முத்துகிருஷ்ணன், கிங்க்ஸ் பள்ளிகளின் மக்கள் தொடர்பு அலுவலர் ரேகா முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பெண்கள் வேலைக்கு செல்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகு கிறதா, குறைகிறதா என்ற தலைப்பில் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. விழாவில் பங்கேற்றவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்பட்டது.

    ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்தி ருந்தனர். மரியா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சி.ஆர்.கிளாடிஸ் லீமா ரோஸ் நன்றி கூறினார்.

    • பட்ஜெட் கூட்டத்தொடரில் மார்ச் 29 முதல் ஏப்ரல் 21-ந்தேதி மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும்.
    • பட்ஜெட் மீதான விவாதம் 23, 24, 27, 28-ம் தேதிகளில் நடைபெறும்.

    சென்னை:

    2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

    சட்டசபை நிகழ்ச்சிக்கு பின்னர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும், அதில் என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இறுதியில், தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21-ந்தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

    பட்ஜெட் கூட்டத்தொடரில் மார்ச் 29 முதல் ஏப்ரல் 21-ந்தேதி மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும். பட்ஜெட் மீதான விவாதம் 23,24,27,28-ம் தேதிகளில் நடைபெறும்.

    காலை, மாலை என இருவேளைகளிலும் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும்.

    • காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.
    • திசையன்விளை மனோ கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு தொடங்கப்பட்டு உள்ளது.

    திசையன்விளை:

    திசையன்விளை மனோ கல்லூரி முன்பு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

    சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    காமராஜர் ஆட்சிக்காலத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிக்கூடங்களை திறந்ததால், கல்வி கற்றவர்களின் விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 37 சதவீதமாக உயர்ந்தது. எனவேதான் காமராஜரை பெருமைப்படுத்தும் வகையில், அவரது பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். தமிழகத்தில் புதிய கல்விக்கூடங்களை கட்டுவதற்கு ரூ.1,000 கோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த கல்விக்கூடங்களுக்கு காமராஜர் பெயரை சூட்டி பெருமைப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

    திசையன்விளை மனோ கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்த கல்லூரிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தருவதற்கு ரூ.1 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இக்கல்லூரியானது இந்த ஆண்டில் அரசு கல்லூரியாக தரம் உயர்த்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவிகள் மனு

    திசையன்விளை பஸ் நிலையத்தில் இருந்து மனோ கல்லூரிக்கு அரசு டவுன் பஸ் சேவையை நீட்டித்து தர வேண்டும் என்று மாணவிகள் சபாநாயகர் அப்பாவுவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

    விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், கல்லூரி முதல்வர் ராமச்சந்திரன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து திசையன்விளை, குருகாபுரம், நந்தன்குளம், எருமைகுளம், ரோச் மாநகர், ஆனைகுடி, பொத்தகாலன்விளை, இடையன்குடி, இலக்கரிவிளை, காரம்பாடு, அப்புவிளை உள்ளிட்ட 13 பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகளை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

    • மீனவர் நலனிற்காக முதல்-அமைச்சர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
    • மீனவர்களுக்கு எந்த இடையூறும் வராமல் சுவர் அமைத்து கொடுக்கும்படி செயற்பொறியாளரிடம் அறிவுறுத்தப்பட்டது.

    நெல்லை:

    ராதாபுரம் அருகே விஜயா புரம் ஊராட்சி இடிந்தகரை அருவிக்கரையில் ரூ.10 கோடி மதிப்பிலான மீன் இறங்குதளம் அமைக்கும் பணியை சபாநாயகர் அப்பாவு இன்று தொடங்கி வைத்தார்.

    ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

    நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலின் மீனவர் நலனிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

    இடிந்தகரை அருவிக் கரை பகுதியில் நாட்டுப் படகு மீனவர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் மீன் பிடித்து வருகிறார்கள். அவர்களின் நலனிற்காக இடிந்தகரை அருவிக்கரை பகுதியில் மீன் இறங்குதளம் அமைப்பதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிதியை கொண்டு கடற்கரையில் இருந்து கடலை நோக்கி 100 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலம் கொண்ட நேர் சுவர் அமைக்கும் பணிக்கும், அதே போன்று 10 மீட்டர் அகலம், 100 மீட்டர் நீளத்திற்கு மீன் இறங்குதளம் அமைக்கும் பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இப்பணிகள் தொடர்பாக பங்கு தந்தை தலைமையில், மீனவர் நலத்துறையினரிடமும், மற்றும் இக்கிராமத்தில் உள்ள மக்களிடமும் கலந்து ஆலோசித்து மீன் இறங்குதளம் எந்த இடத்தில் அமைத்தால் மீனவர்களுக்கு பாதுகாப்பாகவும், பயனுள்ளதாக இருக்கும் என்பதை முடிவு செய்து அமைப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    இந்த இரண்டு சுவர்கள் அமைப்பதால் மீனவர்க ளுக்கு எந்த பாதிப்புகளும், இடையூறும் வராமல் அமைத்து கொடுக்கும்படி செயற்பொறியாளரிடம் அறிவுறுத்தப்பட்டது. இப்பகுதியில் 12,000-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் சரவணக்குமார் , உதவி செயற்பொறியாளர் குருபாக்கியம் , இளநிலை பொறியாளர் அருண்குமார் கவுதம், மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
    • வீடுதோறும் தண்ணீர் வழங்க சபாநாயகர் அப்பாவு முதல்-அமைச்சரிடம் பேசி ரூ.605 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் அதன் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து விவாதித்தனர்.

    தொடர்ந்து பேசிய மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    ராதாபுரம் பகுதியில் உள்ள 295 பள்ளிகளில் சபாநாயகர் அப்பாவு முயற்சியால் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப் பட்டு வருகிறது. இது நமக்கு கிடைத்த பெருமை. மாவட்ட பஞ்சாயத்து நிதியில் இருந்து 208 அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளை தேர்ந்தெடுத்து ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தற்போது தெரு நல்லிகளுக்கு மட்டுமே தண்ணீர் வழங்கப் பட்டு வருகிறது. இதன் மூலம் வீடுதோறும் தண்ணீர் வழங்க சபாநாயகர் அப்பாவு முதல்-அமைச்சரி டம் பேசி ரூ.605 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்வது.

    மாவட்டத்தில் 204 பஞ்சாயத்துகள், 9 யூனியன்களுக்கு மாவட்ட பஞ்சாயத்து சார்பில் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து போர் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    12 மாவட்ட கவுன்சிலர் களும் தங்களது பகுதியில் உள்ள ஒரு பஞ்சாயத்தை தேர்ந்தெடுத்து அதனை முன்மாதிரி பஞ்சாயாத்தாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து இதுகுறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

    கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். 

    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 20 மாத காலமாக சிறப்பாக ஆட்சி புரிந்து வருகிறார்.
    • ஒன்றரை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    சபாநாயர் அப்பாவு இன்று நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:

    வருகிற 20-ந் தேதி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கூடுகிறது. சலசலப்பு இல்லாத வகையில் அனைவருக்கும் சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினை பற்றி பேசுவதற்கு போதிய நேரம் வழங்கப்படும்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 20 மாத காலமாக சிறப்பாக ஆட்சி புரிந்து வருகிறார். வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது நெல்லை மாவட்டத்திற்கு ஏராளமான சலுகைகள் கிட்டும்.

    நெல்லை மாவட்டத்திற்கு தேவையான திட்டங்கள் என்ன என்பது முதலமைச்சருக்கு தெரியும். இதுவரை வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று ரூ.3 லட்சம் கோடி வரை முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    நாங்குநேரி தொழில் நுட்ப பூங்கா 1996-ல் தொடங்கப்பட்டது. 2001-ல் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. 2006-ல் பணிகளை தொடங்குவதற்கு முன்னர் 10 ஆண்டு காலம் ஆட்சி மாற்றம் வந்துவிட்டது.

    சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இருக்கை விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டியது எனது உரிமை. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் முற்றுப்பெற்றுவிட்டது.

    எதிர்க்கட்சியினரே துணைத்தலைவர் இருக்கை விவகாரம் பற்றி பேசாமல் இருக்கும்போது அவர்களை உசுப்பேத்தி விடுகிறீர்கள்.

    மகளிருக்கான உரிமை தொகை ரூ. 1,000 வழங்குவது குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துவிட்டார். அதனால் விரைவில் நல்ல அறிவிப்பு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறுதானிய கண்காட்சியை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்து பார்வையிட்டார்.
    • கண்காட்சியில் மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு சிறு, குறு, கிராமிய தொழில் முனைவோர் சங்கம் மற்றும் எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரி தொழில் முனைவு மேம்பாட்டு மையம் சார்பில் எப்.எக்ஸ். கல்லூரி வளாகத்தில் தொழில் துறை வளர்ச்சி கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி இன்று நடைபெற்றது.

    ஸ்காட் கல்வி குழும இயக்குனர் ஜான்கென்னடி வரவேற்றார். சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ்பாபு சிறப்புரை யாற்றினார். தொடர்ந்து சிறுதானிய கண்காட்சியை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்து பார்வையிட்டார்.

    இதில் ஏராளமான பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள், பொதுமக்கள், விவசாயிகள் தொழில் முனைவோர் மத்திய மாநில அரசு அதிகாரிகள், வங்கி மேலாளர்கள், தொழில் பேட்டை உற்பத்தி சங்கத்தினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து கூட்டுறவு வங்கிகள் மூலம் பயனாளிகளுக்கு கடன் உதவிகளை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கணேசன், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாவட்ட கவுன்சிலர்கள் கனகராஜ், பாஸ்கர், பொது மேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாவட்ட பொருநை நெல்லை 6-வது புத்தகத்திருவிழா பாளை வ.உ.சி. மைதானத்தில் இன்று தொடங்கி மார்ச் 7-ந்தேதி வரை நடக்கிறது.
    • தொடக்க விழாவை இன்று மாலை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்கிறார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட பொருநை நெல்லை 6-வது புத்தகத்திருவிழா பாளை வ.உ.சி. மைதானத்தில் இன்று தொடங்கி மார்ச் 7-ந்தேதி வரை நடக்கிறது.

    இன்று தொடக்கம்

    இதில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் 110 புத்தக அரங்குகள் அமைக்க ப்பட்டுள்ளன. அதற்கான உருவ சின்னமாக 'ஆதினி' என பெயரிடப்பட்ட இருவாச்சி பறவை சின்னத்தை 2 நாட்களுக்கு முன்பு கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டார்.

    தொடக்க விழாவை இன்று மாலை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்கிறார். புத்தகத் திருவிழாவில் முதல் 3 நாட்கள் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு அரங்குகள் மற்றும் பயிற்சி பட்டறைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பாரம்பரிய உணவு

    பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்குபெறும் தொடர் வாசிப்பு, மாணவர் கையெழுத்து இதழ், கல்லூரி மாணவர்களுக்கான இதழியல் பயிற்சி பட்டறை மற்றும் புத்தக வெளியீடுகள் ஆகியவை நடைபெறுகின்றன.

    புத்தகத்திருவிழாவை காணவரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவை யான பாரம்பரிய உணவு களை வழங்கிட உணவகங்கள் அமைக்கப் பட்டுள்ளன. சிறுதானிய உணவுகள், சிற்றுண்டி களுக்கு முக்கியத்து வமளிக்கும் வகையில் உணவு அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன.

    புத்தக பாலம்

    மாவட்டத்தில் உள்ள சிறை நூலகம், அரசுப்பள்ளிக்கூட நூலகங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளின் நூலகங்கள் ஆகியவற்றிற்கு புதிய புத்தகங்களை நன்கொடை யாக வழங்கும் புத்தகப் பாலம் என்ற திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

    இத்திட்டம் வருகிற மார்ச் 7-ந் தேதி மாலை 5 மணிக்கு முடிவு பெறும். நாள்தோறும் நடைபெறும் நிகழ்வுகள், போட்டிகள் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகம் சார்பாக அமைக்க ப்பட்டுள்ள (nellaibookfair.in) என்ற இணையதளம் வழியாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கலை நிகழ்ச்சிகள்

    புத்தகக்கண்காட்சியின் ஒரு பகுதியாக செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புகைப்பட கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. பகல் நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மாலையில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், பல்வேறு அறிஞர்களின் கவிரங்கம், பட்டிமன்றம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் தொடக்க விழாவில் வெங்கடேஷன் எம்.பி., மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் அரசு அதிகாரிகள், எழுத்தா ளர்கள், கவிஞர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இதனையொட்டி அங்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

    • சுப்ரீம் கோர்ட்டு ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு கூறி உள்ளது.
    • நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டமன்றம் செயல்படுவதில்லை. சட்டமன்றம் தனித்தன்மை வாய்ந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வடக்கு பச்சையாறு அணையில் இருந்து பிசான சாகுபடிக்கு தேவையான தண்ணீரை தமிழக சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவரிடம், சுப்ரீம் கோர்ட்டு ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு கூறி உள்ளது. சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கை நிலைப்பாடு என்ன? என்பது குறித்து நிருபர்கள் கேட்டனர்.

    அதற்கு பதில் அளித்து சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:-

    இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு கூறி உள்ளது. அதற்குள் செல்ல விரும்பவில்லை. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டமன்றம் செயல்படுவதில்லை. சட்டமன்றம் தனித்தன்மை வாய்ந்தது. சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் அல்லது சட்டமன்றத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்து எல்லாமே சட்டப்பேரவை தலைவருடைய முழு பொறுப்பாகும்.

    ஆகவே, உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கும், சட்டமன்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×