search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Porunai Book Festival"

    • நெல்லை மாவட்ட பொருநை நெல்லை 6-வது புத்தகத்திருவிழா பாளை வ.உ.சி. மைதானத்தில் இன்று தொடங்கி மார்ச் 7-ந்தேதி வரை நடக்கிறது.
    • தொடக்க விழாவை இன்று மாலை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்கிறார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட பொருநை நெல்லை 6-வது புத்தகத்திருவிழா பாளை வ.உ.சி. மைதானத்தில் இன்று தொடங்கி மார்ச் 7-ந்தேதி வரை நடக்கிறது.

    இன்று தொடக்கம்

    இதில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் 110 புத்தக அரங்குகள் அமைக்க ப்பட்டுள்ளன. அதற்கான உருவ சின்னமாக 'ஆதினி' என பெயரிடப்பட்ட இருவாச்சி பறவை சின்னத்தை 2 நாட்களுக்கு முன்பு கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டார்.

    தொடக்க விழாவை இன்று மாலை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்கிறார். புத்தகத் திருவிழாவில் முதல் 3 நாட்கள் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு அரங்குகள் மற்றும் பயிற்சி பட்டறைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பாரம்பரிய உணவு

    பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்குபெறும் தொடர் வாசிப்பு, மாணவர் கையெழுத்து இதழ், கல்லூரி மாணவர்களுக்கான இதழியல் பயிற்சி பட்டறை மற்றும் புத்தக வெளியீடுகள் ஆகியவை நடைபெறுகின்றன.

    புத்தகத்திருவிழாவை காணவரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவை யான பாரம்பரிய உணவு களை வழங்கிட உணவகங்கள் அமைக்கப் பட்டுள்ளன. சிறுதானிய உணவுகள், சிற்றுண்டி களுக்கு முக்கியத்து வமளிக்கும் வகையில் உணவு அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன.

    புத்தக பாலம்

    மாவட்டத்தில் உள்ள சிறை நூலகம், அரசுப்பள்ளிக்கூட நூலகங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளின் நூலகங்கள் ஆகியவற்றிற்கு புதிய புத்தகங்களை நன்கொடை யாக வழங்கும் புத்தகப் பாலம் என்ற திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

    இத்திட்டம் வருகிற மார்ச் 7-ந் தேதி மாலை 5 மணிக்கு முடிவு பெறும். நாள்தோறும் நடைபெறும் நிகழ்வுகள், போட்டிகள் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகம் சார்பாக அமைக்க ப்பட்டுள்ள (nellaibookfair.in) என்ற இணையதளம் வழியாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கலை நிகழ்ச்சிகள்

    புத்தகக்கண்காட்சியின் ஒரு பகுதியாக செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புகைப்பட கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. பகல் நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பல்வேறு போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மாலையில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், பல்வேறு அறிஞர்களின் கவிரங்கம், பட்டிமன்றம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் தொடக்க விழாவில் வெங்கடேஷன் எம்.பி., மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் அரசு அதிகாரிகள், எழுத்தா ளர்கள், கவிஞர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இதனையொட்டி அங்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

    ×