search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "spain"

    • ஸ்பெயின் நாட்டில் 2வது கட்டமாக வெப்ப அலை வீசி வருகிறது.
    • சுவாச கோளாறு, இதய நோயால் பாதிக்கப் பட்டவர்களே அதிகம் உயிரிழப்பு.

    மாட்ரிட் :

    ஸ்பெயின் நாட்டில் தற்போது உச்சகட்ட கோடை காலம் நிலவி வருகிறது. இந்த கோடையில் கடந்த ஜூன் மாதம் 11ந் தேதி முதல் ஒரு வாரம் முதல் கட்ட வெப்ப அலை வீசியது. 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையில் 829 பேர் இதில் சிக்கி உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் தற்போது அந்நாட்டில் 2வது கோடை வெப்பஅலை வீசி வருகிறது. ஜூலை 10 ந் தேதி தொடங்கிய கடந்த 19ந் தேதிவரை பதிவான வெப்பம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1047 ஆக உயர்ந்துள்ளது.

    உயிரிழந்தவர்களில் 672 பேர் 85 வயதிற்கு உட்பட்டவர்கள். சுவாச கோளாறு மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம் உயிரிழந்தாக ஸ்பெயின் வானிலை ஆய்வு மையத்தின் செய்தித் தொடர்பாளர் பீ ஹெர்வெல்லா தெரிவித்துள்ளார்.

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், செர்பியாவின் ஜோகோவிச் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 2-வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

    இதில், 11 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் ஜெர்மனியின் தகுதி சுற்று வீரர் யான்னிக் ஹன்ப்மனை எதிர்கொண்டார். இதில் 6-2, 6-1, 6-3 என்ற நேர்செட்டில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.



    மற்றொரு ஆட்டத்தில், நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் போலந்து வீரர் ஹூபெர்ட் ஹூர்காச்சை எதிர்கொண்டார். இதில், 6-4, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் ஹூர்காச்சை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 
    ஸ்பெயினில் தனது தாயை கொலை செய்து, அவரது உடலை ஆயிரம் துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்துவைத்து நாய்க்கு விருந்தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.
    மாட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட்டை சேர்ந்தவர் ஆல்பர்ட்டோ கோமஸ் (வயது 26). இவர் 66 வயதான தனது தாயுடன் வாழ்ந்து வந்தார். ஆல்பர்ட்டோ கோமசுக்கு கஞ்சா அடிக்கும் பழக்கம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஆல்பர்ட்டோ கோமசின் தாய் திடீரென மாயமானார். ஒரு மாதத்துக்கும் மேலாக அவரை காணவில்லை என அவரது தோழி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் ஆல்பர்ட்டோ கோமஸ் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது ஆல்பர்ட்டோ கோமஸ் தனது தாயை கொலை செய்து, அவரது உடலை ஆயிரம் துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்துவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆல்பர்ட்டோ கோமசை போலீசார் கைது செய்தனர்.

    முதற்கட்ட விசாரணையில், கஞ்சா வாங்குவதற்கு பணம் தராததால் தாயை கொலை செய்தததும், அவரின் உடல் பாகங்களில் சிலவற்றை தனது செல்லப்பிராணியான நாய்க்கு உணவாக வழங்கியதும் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 
    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் செக் குடியரசு வீரரை தோற்கடித்து ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தார். #AustralianOpen #RafaelNadal
    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால், செக் குடியரசு நாட்டை சேர்ந்த தாமஸ் பெட்ரிக்கை எதிர்கொண்டார்.

    இதில் ரபேல் நடால் தாமஸ் பெட்ரிக்கை 6-0, 6-1, 7-6 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் ரபேல் நடால் காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தார். #AustralianOpen #RafaelNadal 
    இந்தியா வந்துள்ள நார்வே பிரதமர் மற்றும் ஸ்பெயின், ஆஸ்திரேலியா நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளை வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று சந்தித்துப் பேசினார். #SushmaSwaraj
    புதுடெல்லி:

    நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் நார்வே அரசின் உயரதிகாரிகள் குழுவும் வந்துள்ளது.

    நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க் இன்று காலை இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசினார்.

    இதேபோல், இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஸ்பெயின் வெளியுறவு துறை மந்திரி ஜோசப் போரெல் மற்றும் ஆஸ்திரேலியா நாட்டின் வெளியுறவு துறை மந்திரி மாரிஸ் பெயின் ஆகியோரையும் வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று சந்தித்துப் பேசினார்.



    அப்போது, இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவது, பல்வேறு துறைகளில் இணைந்து செயலாற்றுவது தொடர்பாக இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.

    சுஷ்மா சுவராஜை சந்தித்த பின்னர், நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். #SushmaSwaraj
    ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான போட்டி 1 - 1 என சமனில் முடிந்தது. #HockeyWorldCup2018 #France #Spain
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பிரான்ஸ், ஸ்பெயின் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்திலேயே 6-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் திமோதி கிளமெண்ட் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். அதன்பின்னர், ஆட்டத்தின் முதல் பாதி வரையில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் பிரான்ஸ் அணி 1-0 என முன்னிலை பெற்றது.

    இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் அல்வரோ இக்லியாஸ் ஒரு கோல் அடித்து ஆட்டத்தாஇ சமனிலைக்கு கொண்டு வந்தார். இதனால் ஆட்டம் சமனானது.

    இறுதியில், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1 -1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. #HockeyWorldCup2018 #France #Spain
    ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினா அணி ஸ்பெயின் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. #HockeyWorldCup2018 #Argentina #Spain
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

    இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள அர்ஜென்டினா, ஸ்பெயின் அணிகள் மோதின.

    ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் கான்செலஸ் முதல் கோல் அடித்தார். அடுத்த நிமிடத்திலேயே அர்ஜென்டினா வீரர் அகஸ்டின் மாசெல்லி ஒரு கோல் அடித்து சமனிலைக்கு கொண்டு வந்தார். இதேபோல், ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ஜோசபின் ருமியு ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

    இதற்கும் அடுத்த வினாடியே அர்ஜெண்டினா வீரர் அகஸ்டின் மாசெல்லி பதில் கோல் அடித்து மீண்டும் சமனிலைக்கு கொண்டு வந்தார். தொடர்ந்து கிடைத்த பெனால்டி கார்னரில் கான்சலோ பெய்லாட் கோலாக்கினார்.இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜென்டினா 3-2 என முன்னிலை வகித்தது.

    இரண்டாவது பாதியில், ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ரோயிஸ் ஒரு கோல் அடிக்க ஆட்டம் சமனிலை பெற்றது. கடைசியாக, ஆட்டத்தின் 49வது நிமிடத்தில் பெய்லாட் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், அர்ஜென்டினா அணி ஸ்பெயின் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. #HockeyWorldCup2018 #Argentina #Spain
    உலக கோப்பை ஹாக்கி போட்டியில் ஏ பிரிவில் உள்ள அர்ஜென்டினா- ஸ்பெயின், பிரான்ஸ்- நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர். #HockeyWorldCup2018
    புவனேஷ்வர்:

    14-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிஷா தலைநகர் புவனேஷ்வரத்தில் நேற்று தொடங்கியது.

    இந்தப் போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டது.

    நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. இதில் இந்தியா வெற்றியுடன் தனது கணக்கை தொடங்கிய 5-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

    இந்திய அணி 2-வது ஆட்டத்தில் பெல்ஜியத்தை வருகிற 2-ந்தேதி எதிர் கொள்கிறது. இதே பிரிவில் நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் 2-1 என் கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது.

    2-வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. இதில் ஏ பிரிவில் உள்ள அர்ஜென்டினா- ஸ்பெயின் (மாலை 5 மணி), பிரான்ஸ்- நியூசிலாந்து (இரவு 7 மணி) அணிகள் மோதுகின்றன. #HockeyWorldCup2018
    ஸ்பெயின் நாட்டுக்கான இந்திய தூதராக சஞ்சய் வர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என வெளியுறவு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. #SanjayVerma
    புதுடெல்லி:

    இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் ஸ்பெயின் நாட்டுக்கான இந்திய தூதராக சஞ்சய் வர்மாவை நியமனம் செய்துள்ளது.

    இவர் ஏற்கனவே வெளியுறவு துறையில் கூடுதல் செயலாளராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல், ரிபப்ளிக் ஆப் குரோசியா நாட்டுக்கான இந்திய தூதராக அரிந்தம் பஷியை நியமனம் செய்து அறிவித்துள்ளது. #SanjayVerma
    ஸ்பெயின் பார்சிலோனா நகரில் கேட்டலோனியா பிராந்திய நாடாளுமன்றத்தின் முன்பாக நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. #Spain #Barcelona
    பார்சிலோனா:

    ஸ்பெயின் நாட்டில் கேட்டலோனியா பகுதியில் அந்த நாட்டின் மக்கள் தொகையில் 16 சதவீதம் பேர் வசிக்கின்றனர். அந்த நாட்டின் மொத்த ஏற்றுமதியில் நான்கில் ஒரு பங்கு ஏற்றுமதியை கேட்டலோனியா பகுதி செய்கிறது. அப்படிப்பட்ட கேட்டலோனியாவை தனி நாடாக பிரித்து தர வேண்டும் என்ற கோரிக்கை அங்கு வலுத்து வருகிறது. இந்த கோரிக்கையை முன்வைத்து போராடுகிறவர்கள், பிரிவினையாளர்களாக கருதப்படுகின்றனர்.



    தனிநாடு கோரிக்கை தொடர்பாக அங்கு கடந்த ஆண்டு பொது வாக்கெடுப்பு நடந்தது. அதில் மக்கள் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தும், அது செல்லாது என அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

    அந்த பொதுவாக்கெடுப்பின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி பார்சிலோனா உள்ளிட்ட பல நகரங்களில் மக்கள் பெருவாரியாக திரண்டு நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர்.

    பார்சிலோனா நகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். கேட்டலோனியா பிராந்திய நாடாளுமன்றத்தின் முன்பாக நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலைகள், நெடுஞ்சாலைகள், ரெயில் பாதைகளை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டிருந்ததால், போக்குவரத்தும் பாதித்தது.  #Spain #Barcelona 
    ஸ்பெயின் அணியின் தோல்வி எதிரொலியாக அந்த அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ ஹியரோ பதவி விலகியுள்ளார். #fernandohierro #spain #worldcup2018
    மாட்ரிட்:

    உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான ஸ்பெயின் அணியின் பயிற்சியாளராக ஜூலென் லோப்டெகு இருந்தார். ரியல் மாட்ரிட் கிளப்பின் பயிற்சியாளர் பொறுப்புக்கு அவர் பேச்சுவார்த்தை நடத்தியதை அறிந்த ஸ்பெயின் கால்பந்து சங்கம் அவரை அதிரடியாக நீக்கியது. உலக கோப்பை போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாள் இந்த சலசலப்பு அரங்கேறியது. உடனடியாக ஸ்பெயின் அணியின் புதிய பயிற்சியாளராக அந்த நாட்டின் முன்னாள் வீரர் பெர்னாண்டோ ஹியரோ நியமிக்கப்பட்டார்.

    உலக கோப்பை போட்டியில் முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் அணியின் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. 2-வது சுற்றில் ரஷியாவிடம் பெனால்டி ஷூட்-அவுட்டில் வீழ்ந்து மூட்டையை கட்டியது. இந்த நிலையில் தோல்வி எதிரொலியாக பயிற்சியாளர் பதவியில் இருந்து 50 வயதான பெர்னாண்டோ ஹியரோ நேற்று விலகினார். ஏற்கனவே கவனித்து வந்த ஸ்போர்ட்டிங் இயக்குனர் பதவிக்கு திரும்பமாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் ஸ்பெயின் அணிக்கு புதிய பயிற்சியாளரை தேட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. #fernandohierro #spain #worldcup2018
    லிபியா கடல் பகுதியில் தத்தளித்த அகதிகளை ஸ்பெயினை சேர்ந்த தொண்டு நிறுவனத்தினர் பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தனர். #migrantboat
    மாட்ரிட்:

    மத்திய தரைக்கடல் வழியாக அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. சமீப காலமாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ள மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 25 லட்சத்தை எட்டியுள்ளது.

    இதுதவிர, கடந்த ஆண்டில் மட்டும் இத்தாலி நாட்டுக்கு புகலிடம் தேடிச் செல்லும் வழியில் சுமார் ஐயாயிரம் பேர் காணாமல் போனதாகவும், கடலில் மூழ்கி இறந்துவிட்டதாகவும் தெரிகின்றது. இருப்பினும், உள்நாட்டில் பசி, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் இன்றும் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக படையெடுத்தவாறு உள்ளனர். 

    லிபியா நாட்டின் கடற்பகுதி வழியாக சென்றால் கண்காணிப்பு அதிகமாக உள்ளதால் துனிசியா கடற்பகுதி வழியாக இவர்கள் பெரும்பாலும் இத்தாலியை நோக்கிச் செல்கின்றனர்

    இதற்கிடையே, ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கத்தில் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த சுமார் 180 அகதிகள் சென்ற படகு கடந்த மாதம் 3-ம் தேதி துனிசியா கடற்பகுதியில் கவிழ்ந்த விபத்தில் 68 பேர் உயிரிழந்தனர். கடலில் மூழ்கி காணாமல் போன பலரை தேடும் பணி நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், இத்தாலி நாடு அனுமதி மறுத்ததால் லிபியா கடல் பகுதியில் 60க்கு மேற்பட்ட அகதிகள் சிக்கித் தவிப்பதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, ஸ்பெயினை சேர்ந்த தொண்டு நிறுவனத்தினர் மீட்புக் கப்பலில் சென்று நடுக்கடலில் தத்தளித்த 60 அகதிகளை இன்று பத்திரமாக மீட்டனர்.

    அவர்களில் 5 குழந்தைகள்,  5 பெண்கள் , 50 ஆண்கள் உள்பட மொத்தம் 60 பேர் இருந்தனர். அவர்களுக்கு தேவையான முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன என மீட்பு பணி அதிகாரிகள் தெரிவித்தனர். #migrantboat
    ×