search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலககோப்பை ஹாக்கி போட்டி - ஸ்பெயினை 4-3 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது அர்ஜென்டினா
    X

    உலககோப்பை ஹாக்கி போட்டி - ஸ்பெயினை 4-3 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது அர்ஜென்டினா

    ஒடிஷாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினா அணி ஸ்பெயின் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. #HockeyWorldCup2018 #Argentina #Spain
    புவனேஸ்வர்:

    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

    இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள அர்ஜென்டினா, ஸ்பெயின் அணிகள் மோதின.

    ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் கான்செலஸ் முதல் கோல் அடித்தார். அடுத்த நிமிடத்திலேயே அர்ஜென்டினா வீரர் அகஸ்டின் மாசெல்லி ஒரு கோல் அடித்து சமனிலைக்கு கொண்டு வந்தார். இதேபோல், ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ஜோசபின் ருமியு ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

    இதற்கும் அடுத்த வினாடியே அர்ஜெண்டினா வீரர் அகஸ்டின் மாசெல்லி பதில் கோல் அடித்து மீண்டும் சமனிலைக்கு கொண்டு வந்தார். தொடர்ந்து கிடைத்த பெனால்டி கார்னரில் கான்சலோ பெய்லாட் கோலாக்கினார்.இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜென்டினா 3-2 என முன்னிலை வகித்தது.

    இரண்டாவது பாதியில், ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ரோயிஸ் ஒரு கோல் அடிக்க ஆட்டம் சமனிலை பெற்றது. கடைசியாக, ஆட்டத்தின் 49வது நிமிடத்தில் பெய்லாட் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், அர்ஜென்டினா அணி ஸ்பெயின் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. #HockeyWorldCup2018 #Argentina #Spain
    Next Story
    ×