search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Social Media"

    • வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
    • மணமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வரதட்சணை அதிகம் கேட்டு கொடுக்க முடியாததால் கடைசி நேரத்தில் திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவங்களை கேள்விபட்டிருப்போம். ஆனால் தான் சீதனமாக கேட்ட காருக்கு பதிலாக புதிதாக வேறு காரை வழங்கியதால் மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

    அங்குள்ள முசாபர் நகரை சேர்ந்தவர் அமீர் ஆலம். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. மணமகன் தனக்கு வரதட்சணையாக ஹூண்டாய் காரை கேட்டிருந்தார். ஆனால் மணமகளின் குடும்பத்தினர் அவருக்கு மாருதி காரை சீதனமாக அளித்துள்ளனர். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்தினார்.

    இதனால் பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். திருமணம் பாதியில் நின்றதை அறிந்து சோகம் அடைந்த மணப்பெண் தனது நிலை குறித்தும், குடும்பத்தினரின் துயரம் குறித்தும் இதுபோன்ற ஆண்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.

    அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து மணமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனது கணவர் மீண்டும் சுயநினைவுக்கு திரும்புவார் என சன்ஹாங்சியா உறுதியாக நம்பினார்.
    • வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் இதுதான் உண்மையான காதல் என பதிவிட்டு வருகின்றனர்.

    சீனாவின் அன்ஹுய் மாகாணத்தை சேர்ந்த ஒருவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். இதனால் கோமா நிலைக்கு சென்ற அவர் அதன் பிறகு சுயநினைவுக்கு திரும்பவில்லை. ஆண்டுகள் பல கடந்த போதும் அவருக்கு நினைவு திரும்பாததால் அவரது மனைவி சன்ஹாங்சியா மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    ஆனாலும் தனது கணவர் மீண்டும் சுயநினைவுக்கு திரும்புவார் என சன்ஹாங்சியா உறுதியாக நம்பினார். மேலும் கணவர் மீது மிகவும் அன்பு செலுத்திய அவர் வீட்டில் கணவரை தொடர்ந்து கவனித்து வந்தார். இதன் பயனாக அவரது கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோமாவில் இருந்து மீண்டுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சீனாவில் உள்ள சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    அதில், படுக்கையில் விழித்திருக்கும் கணவரின் அருகில் சன்ஹாங்சியா அமர்ந்திருக்கும் காட்சிகளும் கடந்த சில வருடங்களாகவே அவர் அனுபவித்த வலிகளை பற்றி கூறும் காட்சிகளும் உள்ளது.

    அப்போது அவரது கணவரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறது. இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் இதுதான் உண்மையான காதல் என பதிவிட்டு வருகின்றனர்.

    • சுதா ரெட்டியின் ஸ்டைலான உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
    • சுதா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலை மற்றும் பேஷனின் தீவிர ஆர்வலராக தன்னை விவரித்துள்ளார்.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் மெட்காலா எனும் பேஷன் நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகர்- நடிகைகள், பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் இந்தியாவில் இருந்து பலரும் பங்கேற்ற நிலையில், அவர்கள் அணிந்து வந்த ஆடைகள் மற்றும் நிகழ்ச்சி தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. நிகழ்ச்சியில் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபராக வலம் வரும் ஐதராபாத்தை சேர்ந்த கோடீஸ்வரரான மேகா கிருஷ்ணாரெட்டியின் மனைவியான சுதா ரெட்டி, ஐவெரி பட்டு கவுன் அணிந்து பங்கேற்றார். அவரது ஸ்டைலான உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    சுதா ரெட்டி 180 காரட் வைர நெக்லசை அணிந்திருந்தார். அதில் 25 காரட் இதய வடிவ வைரமும், மேலும் மூன்று 20 காரட் இதய வடிவிலான வைரங்களும் அணிந்திருந்தார். இதுதவிர 23 காரட் வைர சாலிடர் மோதிரத்தையும், 20 காரட் வைர சொலிடர் மோதிரத்தையும் அணிந்திருந்தார். அவற்றின் மதிப்பு சுமார் ரூ.165 கோடி என கூறப்படுகிறது.

    சுதா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலை மற்றும் பேஷனின் தீவிர ஆர்வலராக தன்னை விவரித்துள்ளார்.


    • சிறுவனின் மனித நேயத்தை பாராட்டும் வகையில் அவனுக்கு உயர்தர ஓட்டலில் உணவு வாங்கி கொடுத்தும் விளையாட்டு பொருட்களையும் பரிசளித்துள்ளார்.
    • சிறுவனின் செயல் என்னை வெகுவாக கவர்ந்தது என கருத்துடன் இதுகுறித்தான சம்பவத்தை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டார்.

    சிறுவன் ஒருவன் சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவருக்கு தன்னிடம் இருந்துள்ள ஒரு டாலரை கொடுத்த அவனுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் காத்திருந்துள்ளது.

    அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மேட் புஸ்பைஸ். கோடீஸ்வரரான இவர் தன்னுடைய வீட்டில் திடீரென தீப்பிடித்தற்கான அலாரம் ஒலிக்கப்பட்டதால் சாதாரண உடையுடன் வீட்டைவிட்டு வெளியேறி சாலையில் நின்றுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற 9 வயது சிறுவன் ஒருவர் மேட் புஸ்பைசை பிச்சைக்காரன் என தவறாக எண்ணியது மட்டுமின்றி தன்னிடம் இருந்த ஒரு டாலர் பணத்தை மேட்டிடம் கொடுத்துள்ளார்.

    ஆனந்தம் கலந்த அதிர்ச்சியுடன் அந்த பணத்தை பெற்று கொண்ட மேட், தான் யார் என அந்த சிறுவனுக்கு விளக்கி உள்ளார். பின்னர் அவனின் மனித நேயத்தை பாராட்டும் வகையில் அவனுக்கு உயர்தர ஓட்டலில் உணவு வாங்கி கொடுத்தும் விளையாட்டு பொருட்களையும் பரிசளித்துள்ளார். சிறுவனின் செயல் என்னை வெகுவாக கவர்ந்தது என கருத்துடன் இதுகுறித்தான சம்பவத்தை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட அமெரிக்க மீடியாக்கள் மட்டுமின்றி சமூக வலைத்தளவாசிகள் சிறுவனுக்கு பாராட்டு தெரிவித்து வைரலாகி வருகின்றனர்.

    • கலையரங்க மேடைக்கு செல்வதற்கான படிக்கட்டுகளில் ஏற முடியாமல் தடுமாறி நின்று கொண்டிருந்தார்.
    • வீடியோ தற்போது வலைத்தளங்களில் பேசுப்பொருளாகி உள்ளது.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்த ஆண்டின் மெட் காலா நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடந்தது. இந்த நிகழ்வில் சர்வதேச சினிமா பிரபலங்கள், பாப் மற்றும் ராப் இசை கலைஞர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், கோடீஸ்வர பணக்காரர்கள் ஆகியோர் கண்ணை கவரும் வகையில் விதவிதமான ஆடைகளை அணிந்தவாறு போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பர். இந்த மெட் காலா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாப் பாடகி ஒருவரை பாதுகாவலர்கள் ஒன்று சேர்ந்து அலேக்காக தூக்கிய சம்பவம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி டைலா. பல்வேறு வெற்றி பாடல்களை பாடியுள்ள இவர் முதன்முறையாக மெட் காலா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனத்தினரின் ஆடையை அவர் அணிந்திருந்தார். கடற்கரை மணலை கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்தவாறு அவர் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

    அப்போது கலையரங்க மேடைக்கு செல்வதற்கான படிக்கட்டுகளில் ஏற முடியாமல் தடுமாறி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை அலேக்காக தூக்கினர். பின்னர் படிக்கட்டுகளில் டைலாவை ஏந்தி சென்று மேடையில் விட்டனர். அப்போதும் அவர் போட்டோவுக்கு போஸ் கொடுத்தவாறே இருந்துள்ளார்.

    இந்த வீடியோ தற்போது வலைத்தளங்களில் பேசுப்பொருளாகி உள்ளது.

    • வீட்டின் கழிவறைக்குள் ஒரு பாம்பு இருக்கும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது.
    • பாம்பை சர்ப்மித்ரா அசால்டாக கைகளால் பிடித்து அப்புறப்படுத்தும் காட்சிகள் பயனர்களை வியக்க வைத்துள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டம் அகில்யா நகரை சேர்ந்தவர் சர்ப்மித்ரா சிடல்காரா என்கிற சிட்டு. இவர் பாம்பு பிடிக்கும் காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பிரபலமானவர்.

    அந்த வகையில் சமீபத்தில் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கழிவறைக்குள் புகுந்த பாம்பை லாவகமாக பிடித்து அப்புறப்படுத்திய காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

    அதில் வீட்டின் கழிவறைக்குள் ஒரு பாம்பு இருக்கும் காட்சிகளுடன் தொடங்குகிறது. பின்னர் கழிவறையில் இருந்து பாம்பு வெளியே வர முயற்சிப்பது போன்ற காட்சிகள் உள்ளது. அந்த பாம்பை சர்ப்மித்ரா அசால்டாக கைகளால் பிடித்து அப்புறப்படுத்தும் காட்சிகள் பயனர்களை வியக்க வைத்துள்ளது.

    • மகளுக்கு வழங்கப்பட்ட விவரங்களை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
    • மாணவியின் மதிப்பெண் விபரங்கள் சரி செய்யப்பட்டன.

    குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் கராசனா கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்களின் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 4-ம் வகுப்பு படித்து வரும் மாணவி மனிஷாபாய் வம்சிபிள் என்ற மாணவி எழுதிய தேர்வுகளில் குஜராத்தி மற்றும் கணித பாடங்களில் தேர்வு மதிப்பெண் அதிகபட்சமாக 200-க்கு 211 மற்றும் 212 பெற்றதாக முடிவுகள் வழங்கப்பட்டது. இதனை பார்த்து ஆச்சரியம் அடைந்த மாணவி தனது மதிப்பெண் சான்றிதழை தனது வீட்டிற்கு கொண்டு சென்று பெற்றோரிடம் காட்டினார். இதைப்பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

    அவர்கள் தங்கள் மகளுக்கு வழங்கப்பட்ட விவரங்களை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த புகைப்படங்கள் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கல்வி அதிகாரிகள் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டனர். அப்போது தேர்வு முடிவுகளை தொகுத்த போது பிழை ஏற்பட்டது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து மாணவியின் மதிப்பெண் விபரங்கள் சரி செய்யப்பட்டன. அதன் படி மாணவி குஜராத்தி பாடத்தில் 200-க்கு 191 மதிப்பெண்களும், கணிதத்தில் 200-க்கு 190 மதிப்பெண்களும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    • வீடியோ இணையத்தில் வைரலாகி 96 லட்சம் விருப்பங்களை குவித்தது.
    • வீடியோவை பார்த்த பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா சிறுவனுக்கு உதவ முன் வந்தார்.

    டெல்லியின் கிழக்கு விஹார் போலீஸ் நிலையம் அருகே சாலையோரத்தில் ரொட்டிக்கடை நடத்தும் 10 வயது சிறுவன் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிது.

    சரப்ஜித் சிங் என்ற உணவு பதிவர் ஒருவர் அந்த கடைக்கு சென்றுள்ளார். கடையில் இருந்த 10 வயது சிறுவன் ஜஸ்பிரீத்திடம் உனது தந்தை எங்கே என்று கேட்க... அதற்கு ஜஸ்பிரீத் எனது தந்தை சமீபத்தில் உடல் நலப்பாதிப்பால் உயிரிழந்து விட்டார். அதன் பிறகு எனது தாயார் என்னையும், எனது சகோதரியையும் தவிக்க விட்டு விட்டு சென்று விட்டார். இதனால் நானும், எனது சகோதரியும் மிகவும் அதிர்ச்சியடைந்தோம். பின்னர் வாழ்வாதாரம் கருதி எனது தந்தையின் கடையை நானே நடத்த தொடங்கி விட்டேன். என் தந்தையிடம் இருந்து எக்ரோல் மற்றும் சிக்கன் ரொட்டி வகைகளை செய்ய பழகி இருந்தேன். தற்போது பல்வேறு வகையான ரொட்டி வகைகளை விற்பனை செய்கிறேன். வருபவர்கள் எல்லோருமே நல்ல வரவேற்பு கொடுக்கின்றனர் என கூறுகிறார்.

    அவரது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 96 லட்சம் விருப்பங்களை குவித்தது. வீடியோவை பார்த்த பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா சிறுவனுக்கு உதவ முன் வந்தார். இது தொடர்பாக அவர் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தைரியம், உன் பெயர் ஜஸ்பிரீத். ஆனால் அவரது கல்வி பாதிக்கப்பட கூடாது. யாரேனும் அவரது தொடர்பு எண்ணில் இருந்தால் பகிரவும். ஜஸ்பிரீத்தின் கல்விக்கு ஆதரவு அளிப்பதற்கான வாய்ப்புகளை எனது அறக்கட்டளை செய்யும் என கூறியுள்ளார்.

    • விட்டிலிகோ பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் நிறம் படிப்படியாக மாறி தற்போது முழுவதும் வெள்ளை நிறமாகி உள்ளது.
    • புகைப்படங்களை ரெடிட் தளத்தில் பதிவிட, அது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    சில அரிதான நோய்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளையும் தாக்கும். அதுபோன்று ஒரு அரிதான நோயால் பாதிக்கப்பட்ட கருப்பு நாய் 2 ஆண்டுகளில் முழுவதும் வெள்ளையாக மாறி உள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    தோல் அதன் இயற்கையான நிறத்தை இழந்து வெளிறிய வெள்ளை நிறமாக மாறும் நிலைக்கு விட்டிலிகோ என்று பெயர். இந்த வகை அரிய நோயால் சில மனிதர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாய் ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் ஓக்லஹோமா பகுதியை சேர்ந்த ஸ்மித் என்பவர் வளர்த்து வரும் பஸ்டர் என்ற பெயர் கொண்ட அந்த 4 வயது நாய் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முழுவதும் கருப்பு நிறத்தில் இருந்தது. இந்நிலையில் விட்டிலிகோ பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் நிறம் படிப்படியாக மாறி தற்போது முழுவதும் வெள்ளை நிறமாகி உள்ளது.

    இதுதொடர்பான புகைப்படங்களை ரெடிட் தளத்தில் பதிவிட, அது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    • பிறந்தநாளன்று கணவர் வழங்கிய சிறப்பு பரிசால் எல்லையில்லா ஆனந்தம் அடைந்த ஜேன், தனது காதல் கணவரை கட்டி அணைத்து முத்தமிட்ட காட்சிகளை அவர்களது மகள் கேட் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
    • வீடியோ இணையத்தில் வைரலாகி 37 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களை குவித்த நிலையில் பயனர்கள் பலரும் வயதான தம்பதிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

    காதல் தம்பதிகள் ஒருவர் மீது ஒருவர் அலாதி பிரியம் காட்டுவது இயல்பு என்றாலும், முதுமையிலும் அந்த அன்பு குறையாமல் இருப்பது சில தம்பதிகளிடம் மட்டுமே காணப்படுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இங்கிலாந்தை சேர்ந்தவர் ஜோ கியோக். 78 வயதான இவர் தனது மனைவி ஜேனின் 73-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தார். அதன்படி மனைவிக்கு மிகவும் பிடித்த ஜப்பானிய செர்ரி பிளாசம் மரத்தை வாங்கி பரிசளித்துள்ளார். பிறந்தநாளன்று கணவர் வழங்கிய சிறப்பு பரிசால் எல்லையில்லா ஆனந்தம் அடைந்த ஜேன், தனது காதல் கணவரை கட்டி அணைத்து முத்தமிட்ட காட்சிகளை அவர்களது மகள் கேட் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 37 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களை குவித்த நிலையில் பயனர்கள் பலரும் வயதான தம்பதிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உள்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் விளம்பர பிரச்சாரங்களை மாநில அரசு தொடங்கி உள்ளது.
    • வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில் பயனர்கள் பலரும் அரசின் முயற்சியை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

    கடவுளின் தேசம் என பெயர் பெற்ற கேரளா இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகள் நிறைந்த இடமாகும். மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் இயற்கை எழில் சூழ்ந்த பசுமையான இடங்கள், அழகிய கடற்கரைகள், சுவையான உணவுகளால் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ள நிலையில், இம்மாநில அரசு சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது.

    உள்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் விளம்பர பிரச்சாரங்களை மாநில அரசு தொடங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக லண்டன் பஸ்களில் கேரளாவின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள், படகு ஆகியவற்றை காட்டும் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ள காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் லண்டனில் இருந்து முத்திரை பதிக்கும் வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில் பயனர்கள் பலரும் அரசின் முயற்சியை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சில நிமிடங்களே ஓடும் வீடியோவில், காளைகளின் சண்டையால் கடைக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதை உணரமுடிகிறது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இன்றைய உலகில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஏராளமான வீடியோக்கள், ரீல்ஸ்கள் மற்றும் மனிதர்களுக்கிடையே நடைபெறும் வாக்குவாதம், சண்டைகளும் பதிவிடப்படுகின்றன. அப்படி ஒரு சண்டையின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. ஆனால் இந்த சண்டையானது மனிதர்களுக்கு இடையே அல்ல, இரண்டு காளைகளுக்கு இடையேயானது.

    கார் கீ காலேஷ் என்பவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தான் தற்போது வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், இரண்டு காளைகள் சண்டை போட்டுக் கொண்டு புடவை கடைக்குள் நுழைகிறது. அங்கிருந்தவர்கள் காளைகள் சண்டையிடுவதை பார்த்ததும் கடையில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்கள் கடைக்கு வெளியே இருந்து காளைகள் சண்டையிடுவதை பார்க்கின்றனர். சில நிமிடங்களே ஓடும் வீடியோவில், காளைகளின் சண்டையால் கடைக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதை உணரமுடிகிறது.

    வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், 'இவர்கள் இருவரும் புடவைகளை வாங்க வந்தார்கள், ஆனால் அவர்களுக்கு நல்ல தள்ளுபடி கிடைக்கவில்லை' என பதிவிட்டுள்ளார்.

    ×