என் மலர்tooltip icon

    இந்தியா

    புடவை கடையை புரட்டி எடுத்த 2 காளைகள்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    புடவை கடையை புரட்டி எடுத்த 2 காளைகள்

    • சில நிமிடங்களே ஓடும் வீடியோவில், காளைகளின் சண்டையால் கடைக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதை உணரமுடிகிறது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இன்றைய உலகில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஏராளமான வீடியோக்கள், ரீல்ஸ்கள் மற்றும் மனிதர்களுக்கிடையே நடைபெறும் வாக்குவாதம், சண்டைகளும் பதிவிடப்படுகின்றன. அப்படி ஒரு சண்டையின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. ஆனால் இந்த சண்டையானது மனிதர்களுக்கு இடையே அல்ல, இரண்டு காளைகளுக்கு இடையேயானது.

    கார் கீ காலேஷ் என்பவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தான் தற்போது வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், இரண்டு காளைகள் சண்டை போட்டுக் கொண்டு புடவை கடைக்குள் நுழைகிறது. அங்கிருந்தவர்கள் காளைகள் சண்டையிடுவதை பார்த்ததும் கடையில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்கள் கடைக்கு வெளியே இருந்து காளைகள் சண்டையிடுவதை பார்க்கின்றனர். சில நிமிடங்களே ஓடும் வீடியோவில், காளைகளின் சண்டையால் கடைக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதை உணரமுடிகிறது.

    வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், 'இவர்கள் இருவரும் புடவைகளை வாங்க வந்தார்கள், ஆனால் அவர்களுக்கு நல்ல தள்ளுபடி கிடைக்கவில்லை' என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×