search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "scythe cut"

    • பேனர் மீது அதேபகுதியைச் சேர்ந்த சிகாமணி மகன் சந்தோஷ் (18) என்பவர் கல்லை எரிந்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
    • சந்தோஷ் அரிவாளால் மாயவனின் கழுத்து மற்றும் இடது கையில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் வேம்பு மகன் மாயவன் (வயது 42) இவர் விஜய் ரசிகர் மன்ற துணைத் தலைவராக உள்ளார். இந்நிலையில் இதே கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே விஜய் ரசிகர் மன்ற பேனர் வைத்துள்ளனர்    இந்த பேனர் மீது அதேபகுதியைச் சேர்ந்த சிகாமணி மகன் சந்தோஷ் (18) என்பவர் கல்லை எரிந்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை மாயவன் தட்டி கேட்டபோது ஆத்திரம் அடைந்த சந்தோஷ் அரிவாளால் மாயவனின் கழுத்து மற்றும் இடது கையில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    இதில் படுகாயம் அடைந்த மாயவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மாயவன் கொடுத்த புகாரின் பேரில் சந்தோஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • அரிவாளால் வெட்டிய கும்பலை கைது செய்யக்கோரி ஆருணின் உறவினர்கள் அழகியபாண்டியபுரம் - சங்கரன்கோவில் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
    • இன்று மாணவரின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள இரண்டும் சொல்லான் கிராமத்தை சேர்ந்தவர் ஆருண் (வயது 21). கல்லூரி மாணவர். இவரது உறவினர் ஆபிரகாம் (19).

    அரிவாள் வெட்டு

    நேற்று முன்தினம் இவர்கள் ஊரின் வடக்கே உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றனர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் ஆருணை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டது.

    தகவலறிந்து இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆருணை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே அரி வாளால் வெட்டிய கும்பலை கைது செய்யக்கோரி ஆருணின் உறவினர்கள் அழகியபாண்டியபுரம் - சங்கரன்கோவில் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் தாழையூத்து டி.எஸ்.பி. ஆனந்தராஜ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதுதொடர்பாக கொலை முயற்சி, தீண்டாமை பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று மாணவரின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், இளைஞரணி முத்துப்பாண்டி, தமிழர் உரிமை மீட்பு களம் லெனின் மற்றும் பலர் வந்தனர். பின்னர் அவர்கள் எஸ்.பி. அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    இதுகுறித்து மாணவரின் உறவினர்கள் கூறும்போது, எங்கள் கிராமத்தில் எங்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. எங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எனவே உரிய நடவடிக்கை எடுத்து இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மாணவனை அரிவாளால் வெட்டிய கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றனர்.

    • எலக்ட்ரீசியனுக்கு அரிவாள் வெட்டு வழக்கில் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • வெட்டு காயமடைந்த கிரியை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டி செட்டியார் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் கிரி (வயது 20). இவர் கோவை கணபதி புதூர் பகுதியில் தனது தந்தையுடன் தங்கியிருந்து எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கிரி பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு களரம்பட்டி மாரியம்மன் கோவிலில் காணும் பொங்கலையொட்டி விளையாட்டு போட்டி நடத்துவதற்காக கிரி வேலை செய்து வந்தார்.

    அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சிலர் அவரிடம் தகராறில் ஈடுபட்டு கைகளாலும், கம்பியாலும் தாக்கி விட்டு, அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் வெட்டு காயமடைந்த கிரியை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் களரம்பட்டி கிராமத்தை சேர்ந்த அருண், நவீன், அரவிந்த், கதிரேசன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.


    • அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    கோத்தகிரி,

    திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் அதே பகுதியை சேர்ந்த அசோக் என்பவரின் அக்காவை திருமணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் அந்த பகுதிகளில் சரியான வேலை இல்லாததால் சரவணன் தனது மனைவி மற்றும் மனைவியின் சகோதரர் அசோக் ஆகியோருடன் கோத்தகிரிக்கு வந்தார். இங்கு சரவணனிற்கும், அசோக்கிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதற்கிடையே சம்பவத்தன்று இரவு சரவணன், அசோக்கிற்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சரவணன் திடீரென அருகில் இருந்த அரிவாளை எடுத்து அசோக்கை வெட்டினார்.

    இதில் பலத்த காயம் அடைந்த அசோக் ரத்த வெள்ளத்தில் சுருண்டு கீழே விழுந்தார். பயந்து போன சரவணன் அங்கிருந்து தப்பி சென்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சரவணன் மனைவி அசோக்கை அருகில் இருந்தவர்களின் உதவியுடன் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.

    அப்போது டாக்டர்கள் கோத்தகிரி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுன் தலைமையிலான போலீசார் அசோக்கிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை தேடி வந்தனர்.

    அப்போது சரவணன் அறவேனு பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்ததை கண்டு உடனடியாக போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 5 பேர் கைது செய்யபட்டனர்
    • அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    திருச்சி:

    திருச்சி பீமநகர் யானைக் கட்டி மைதானம் பகுதியைச் சேர்ந்தவர் சிவநேசன் (வயது 60). திருமணமாகாத இந்த முதியவர் ரேஷன் அரிசி வாங்கி விற்பனை செய்து வந்தார். அதைத்தொடர்ந்து அவர் மீது ரேஷன் அரிசி கடத்தியதாக பொது விநி–யோகத்திட்ட சி.ஐ.டி. போலீ–சார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் காந்தி மார்க்கெட்டில் இருந்து சிவநேசன் யானைக்கட்டி மைதானத்திற்கு தனது மொபட்டில் புறப்பட்டுச் சென்றார். பீமநககர் காவிரி தியேட்டர் மேம்பாலத்தில் சென்றபோது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து பேர் கும்பல் அவரை வழிமறித்தனர். திடீரென அவர்கள் தாங்கள் மறைத்து வைத்தி–ருந்த அரிவாளால் சிவநே–சனின் பின்னந்தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் அவருக்கு தலையில் மூன்று இடங்களில் பலத்த வெட்டுக்காயம் விழுந்தது. இதையடுத்து அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் உயி–ருக்கு ஆபத்தான நிலையில் தீவிரசிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்சன் தப்பி ஓடிய 5 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார். இதில் அரிவாளால் சிவநேசனை வெட்டியவர்கள் ஒரு ஜாதி அரசியல் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இவர்கள் ரேஷன் அரிசி கடத்தும் சிவநேசனிடம் மாமூல் கேட்டுள்ளனர். அவர் தர மறுத்துவிட்டார். இத–னால் ஆத்திரமடைந்த ஐந்து பேரும் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அரிசி கடத்தும் முதியவர் மாமூல் தர மறுத்ததால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பீமநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


    • இரு தரப்பினர் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பு நடந்துள்ளது.
    • ஜெகநாதன் தரப்பினர் அய்யாச்சாமியை இரும்பு கம்பி மற்றும் அரிவாளால் தாக்கியதாக தெரிகிறது.

    பல்லடம் : 

    பல்லடம் - தாராபுரம் ரோட்டில் உள்ள கள்ளிப்பாளையம் அரிசன காலனியை சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 40). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் ஜெகநாதன்( 37). இவரது உறவினர்கள் முருகன் (40), முருகன் மகன் பிரதீப்( 22). இந்த நிலையில் அய்யாசாமி மற்றும் ஜெகநாதன் தரப்பினருக்கும் இடையே இடப்பிரச்சினை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

    சம்பவத்தன்று இரு தரப்பினர் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பு நடந்துள்ளது. அப்போது ஜெகநாதன் தரப்பினர் அய்யாச்சாமியை இரும்பு கம்பி மற்றும் அரிவாளால் தாக்கியதாக தெரிகிறது. இதில் அய்யாசாமியின் வலது கையின் கட்டை விரல் வெட்டுப்பட்டது.

    மேலும் அவரது தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அய்யாசாமி காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெகநாதன், முருகன் மற்றும் பிரதீப் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் இது குறித்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள். காயம் அடைந்த அய்யாசாமி திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    • களக்காடு அருகே உள்ள தோப்பூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ஜெயசீலன். தொழிலாளி.
    • இதில் அவருக்கு தலை, கை, விரல்கள், கால்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள தோப்பூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 40). தொழிலாளி.

    இவருக்கும், பரப்பாடி அருகே உள்ள கழுவூரை சேர்ந்த ரெஜினா என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

    கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

    இந்நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு இருவருக்கும் விவாகரத்தானது.

    இதற்கு தோப்பூர் வடக்குத்தெருவை சேர்ந்த தீனதயாளனும், அவரது மனைவி செல்வியும் (51) தான் காரணம் என ஜெயசீலன் கருதினார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    இதற்கிடையே சம்பவத்தன்று செல்வி வீட்டில் இருந்த போது, ஜெயசீலன் அவரது வீட்டுக்குள் புகுந்து செல்வியை அவதூறாக பேசி, அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

    இதில் அவருக்கு தலை, கை, விரல்கள், கால்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி ஜெயசீலனை தேடி வருகின்றனர்.

    • பணகுடி அண்ணாநகரை சேர்ந்தவர் மணிகண்டன். கட்டிட தொழிலாளி
    • மூர்த்தி உட்பட 3 பேர் மணிகண்டனிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த அவர்கள் அரிவாளால் வெட்டினர்.

    பணகுடி:

    பணகுடி அண்ணாநகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). கட்டிட தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

    நேற்று மாலையில் மணிகண்டன் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த மூர்த்தி உட்பட 3 பேர் மணிகண்டனிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த அவர்கள் அரிவாளால் வெட்டினர்.

    இதில் மணிகண்டனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அங்கு நின்ற மணிகண்டனின் தந்தை மனோகர் இதனை தடுத்துள்ளார். அவரையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    காயமடைந்த இருவரை யும் அங்கிருந்தவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இச்சம்பம் குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தி உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

    • முன் விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை தாக்கியவர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை திருப்பாலை, ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் செந்தில்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மதுரை வந்தார். நேற்று காலை அவர் தனது குழந்தைகளை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

    பின்னர் அவர் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது பொன்விழா நகர், ஜூப்ளி டவுன் அருகே 2 பேர் அவரை வழிமறித்து தகராறு செய்தனர். அவர்கள் செந்தில்குமாரை கீழே தள்ளி, சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இதில் படுகாயம் அடைந்த செந்தில்குமார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுபற்றிய புகாரின் பேரில் திருப்பாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் செந்தில்குமாருக்கும், அவரது சகோதரர்களுக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக முன் விரோதம் உள்ளது தெரிய வந்தது. இது தவிர செந்தில்குமாருக்கு நண்பர்கள் சிலருடனும் முன்விரோதம் உள்ளது.

    எனவே அவரை முன்விரோதம் காரணமாக தாக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரை யார் தாக்கினார்கள்? என்பது தொடர்பாக தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக உதவி கமிஷனர் ஜெகநாதன் உத்தரவின் பேரில், திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை தாக்கியவர்களை தேடி வருகின்றனர்.

    • ராஜேந்திரன் மகன் ஏழுமலைக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகாரறு ஏற்பட்டு கார்த்திகா தனது அம்மா வீட்டிற்கு சென்று விடுவது வழக்கம்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள செம்மண்கூடல் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 47). இவரது அண்ணன் மகள் கார்த்திகா என்பவருக்கும் காடையாம்பட்டி அருகில் உள்ள கொங்குப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஏழுமலைக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    இவர்களுக்கு 8 வயதில் ஒருமகன் உள்ளான். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகாரறு ஏற்பட்டு கார்த்திகா தனது அம்மா வீட்டிற்கு சென்று விடுவது வழக்கம். அவ்வாறு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கணவருடன் சண்டை போட்டு கொண்டு செம்மண்கூடலில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றார். இதனால் ஏழுமலை மீண்டும் மனைவியை குடும்பம் நடத்த அழைத்து செல்வதற்காக சென்றார். அப்போது கார்த்திகாவின் அண்ணன் ரஞ்சித், குமார் ஆகியோருக்கும் ஏழுமலைக்கும் தகாரறு ஏற்ப்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஏழுமலை தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து குமாரை வெட்டினார். இதில் குமாருக்கு கையில் 

    • வீரமணிக்கு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தோப்பூர் கோட்டை மேடு பகுதியை சேர்ந்த ரம்யா என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு அவருடன் இருந்து கொண்டு தனது வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார்.
    • இது பற்றி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கார்த்திகாவின் உறவினர்கள் கேட்டனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகில் உள்ள பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் வீரமணி (வயது 35).கூலிதொழிலாளி. இவருக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு சங்ககிரி அருகே உள்ள கூடலூர் பகுதியை சேர்ந்த விஜயா என்பவரின் மகள் கார்த்திகா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    கள்ளத்தொடர்பு

    வீரமணிக்கு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தோப்பூர் கோட்டை மேடு பகுதியை சேர்ந்த ரம்யா என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு அவருடன் இருந்து கொண்டு தனது வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். இது பற்றி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கார்த்திகாவின் உறவினர்கள் கேட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த வீரமணி, அவர்களிடம் தகராறு செய்தார். இதனால் முனமுடைந்த கார்த்திகா தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு கூடலூருக்கு சென்றுவிட்டனர்.

    இந்த நிலையில் வீரமணி, ரம்யாவுடன் தொடர்ந்து குடும்பம் நடத்தி வந்ததை அறிந்த கார்த்திகா நேற்று முன்தினம் நியாயம் கேட்க தனது உறவினர்களான கார்த்திக், இளஞ்செழியன், மற்றொரு கார்த்திக் ஆகியோருடன் வீரமணி வீட்டிற்கு சென்றார். வீட்டில் வீரமணி இல்லை. அவர் தாரமங்கலம் அருகிலுள்ள பவளத்தானுர் புறவெளிச்சாலையில் உள்ள ஒரு மெடிக்கல் கடை அருகே நின்றுகொண்டிருந்தார். அங்கு சென்ற கார்த்திகா, தனது கணவர் வீரமணியிடம் ரம்யாவுடன் உள்ள கள்ளக்காதலை கைவிட்டு விட்டு தன்னுடன் வருமாறு கூறினார்.

    அரிவாள் வெட்டு

    இதனால் ஆத்திரம் அடைந்த வீரமணி மெடிக்கல் கடையில் மறைத்து வைத்து இருந்த வீச்சு அரிவாளை திடீரென எடுத்து அவர்களை வெட்ட ஆரம்பித்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத கார்த்திக் மற்றும் உடன் வந்தவர்கள் தடுத்தனர். இதில் 2 பேருக்கு கை விரல் துண்டானது, ஒருவருக்கு கண்ணில் வெட்டுப்பட்டது. வீரமணி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    காயம் அடைந்தவர்கள் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டுள்ளனர். அங்கு அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுபற்றி கார்த்திக் கொடுத்த வாக்கு மூலத்தின் படி வழக்கு பதிவு செய்த தாரமங்கலம் போலீசார், வீரமணியை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் தாரமங்கலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • 3 மாதங்களுக்கு முன்பு பார்த்தசாரதி குடிபோதையில் வீட்டுக்கு வந்தார்.
    • பார்த்தசாரதி தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த அரிவாளை எடுத்து சங்கீதாவை வெட்டினார்.

    கோவை

    பொள்ளாச்சி பி.நாகூரை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 29).டிரைவர். இவரது மனைவி சங்கீதா (25). அவர்கள் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இந்தநிலையில் பார்த்தசாரதிக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 3 மாதங்களுக்கு முன்பு பார்த்தசாரதி குடிபோதையில் வீட்டுக்கு வந்தார்.

    அப்போது சங்கீதா அவரை கண்டித்தார். இதனால் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. சங்கீதா கோபித்து கொண்டு எம்.ஜி.புதூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.

    சம்பவத்தன்று பார்த்தசாரதி, சங்கீதாவை பார்ப்பதற்கு அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு 2 பேரும் பேசி கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

    இதில் ஆத்திரம் அடைந்த பார்த்தசாரதி அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த அரிவாளை எடுத்து சங்கீதாவை வெட்டினார். பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    அவர்கள் வருவதை பார்த்து பார்த்தசாரதி சங்கீதாவை மிரட்டி அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் அங்கிருந்தவர்கள் சங்கீதாவை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இதுகுறித்து சங்கீதா வடக்கிபாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்தசாரதியை தேடி வருகின்றனர்.

    ×