என் மலர்
உள்ளூர் செய்திகள்

எலக்ட்ரீசியனுக்கு அரிவாள் வெட்டு
- எலக்ட்ரீசியனுக்கு அரிவாள் வெட்டு வழக்கில் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- வெட்டு காயமடைந்த கிரியை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டி செட்டியார் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் கிரி (வயது 20). இவர் கோவை கணபதி புதூர் பகுதியில் தனது தந்தையுடன் தங்கியிருந்து எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கிரி பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு களரம்பட்டி மாரியம்மன் கோவிலில் காணும் பொங்கலையொட்டி விளையாட்டு போட்டி நடத்துவதற்காக கிரி வேலை செய்து வந்தார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சிலர் அவரிடம் தகராறில் ஈடுபட்டு கைகளாலும், கம்பியாலும் தாக்கி விட்டு, அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் வெட்டு காயமடைந்த கிரியை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் களரம்பட்டி கிராமத்தை சேர்ந்த அருண், நவீன், அரவிந்த், கதிரேசன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.






