என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரேசன் அரிசி கடத்தியவர் மாமூல் தர மறுத்ததால் அரிவாள் வெட்டு-உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை
- 5 பேர் கைது செய்யபட்டனர்
- அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
திருச்சி:
திருச்சி பீமநகர் யானைக் கட்டி மைதானம் பகுதியைச் சேர்ந்தவர் சிவநேசன் (வயது 60). திருமணமாகாத இந்த முதியவர் ரேஷன் அரிசி வாங்கி விற்பனை செய்து வந்தார். அதைத்தொடர்ந்து அவர் மீது ரேஷன் அரிசி கடத்தியதாக பொது விநி–யோகத்திட்ட சி.ஐ.டி. போலீ–சார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் காந்தி மார்க்கெட்டில் இருந்து சிவநேசன் யானைக்கட்டி மைதானத்திற்கு தனது மொபட்டில் புறப்பட்டுச் சென்றார். பீமநககர் காவிரி தியேட்டர் மேம்பாலத்தில் சென்றபோது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து பேர் கும்பல் அவரை வழிமறித்தனர். திடீரென அவர்கள் தாங்கள் மறைத்து வைத்தி–ருந்த அரிவாளால் சிவநே–சனின் பின்னந்தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் அவருக்கு தலையில் மூன்று இடங்களில் பலத்த வெட்டுக்காயம் விழுந்தது. இதையடுத்து அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் உயி–ருக்கு ஆபத்தான நிலையில் தீவிரசிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்சன் தப்பி ஓடிய 5 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார். இதில் அரிவாளால் சிவநேசனை வெட்டியவர்கள் ஒரு ஜாதி அரசியல் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இவர்கள் ரேஷன் அரிசி கடத்தும் சிவநேசனிடம் மாமூல் கேட்டுள்ளனர். அவர் தர மறுத்துவிட்டார். இத–னால் ஆத்திரமடைந்த ஐந்து பேரும் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அரிசி கடத்தும் முதியவர் மாமூல் தர மறுத்ததால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பீமநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






