search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "saplings"

    • எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 15ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது
    • கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகளுடன், மரக்கன்றுகளை வழங்கினர்

    பொன்னமராவதி,

    பொன்னமராவதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 15ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருமயம் தொகுதி துணை தலைவர் எம்.அக்பர் அலி தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகளுடன், மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு நகர பொருளாளர் எஸ்.அமீர் ஹம்ஜா கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். இவ்விழாவில் நகர ஒருங்கிணைப்பாளர் இப்ராஹீம், நகரதலைவர்ஷேக் முகம்மது, நகர செயலாளர் ஆரிப், கிளை பொருளாளர் நூருல் அமீன் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

    • தொண்டி அருகே சுற்றுச்சூழல் தின விழா நடந்தது.
    • 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    தொண்டி

    தொண்டி அருகே வட்டாணம் சமுதாயக் கூடத்தில் வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனம் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினம் திட்ட மேலாளர் சந்திர எபினேசர் தலை மையில் கொண்டா டப்பட்டது. வட்டாணம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சுந்தாயி முன்னிலை வகித்தார்.

    ஆசிரியர் குந்தப்பன் வரவேற்று பேசினார். பஞ்சாயத்து தலைவர்கள் ராமநாதன் மற்றும் மோகன் உட்பட சுமார் 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனை வருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    • அரியலூர் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் 5,000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
    • நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மரக்கன்றுகளை நட்டுவைத்து துவக்கி வைத்தார்.

    அரியலூர்,

    தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 5,00,000 மரக்கன்றுகள் நடும் திட்டம் நெடுஞ்சாலைத்துறை மூலம் அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கிவைக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் மூலம் அரியலூர் உட்கோட்டத்தின் சார்பாக 5,000 மரக்கன்றுகளும், செந்துறை உட்கோட்டத்தின் சார்பாக 5,000 மரக்கன்றுகளும், ஜெயங்கொண்டம் உட்கோட்டத்தின் சார்பாக 5,000 மரக்கன்றுகளும் என ஆக மொத்தம் 15,000 மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக செந்துறை நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தில் செந்துறை சாலை துவங்கி ஜெயங்கொண்டம் சாலை வரை சாலையின் இருபுறங்களிலும் நிழல் தரக்கூடிய அத்தி, நாவல், மகிழம், வேம்பு, புங்கன், ஆலம் ஆகிய மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மரக்கன்றுகளை நட்டுவைத்து துவக்கி வைத்தார்.

    தொடர்ந்து, மரக்கன்றுகளை முறையாக பராமரித்திடவும், இதேபோல் அரியலூர் முதல் செந்துறை வரை உள்ள சாலையில் பணிகள் முடிந்தவுடன் சாலையின் இருபுறங்களிலும் மரக்கன்றுகள் நட்டு பராமரித்திட நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார். இந்நிகழ்வில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் உத்தண்டி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், உதவிக் கோட்டப் பொறியாளர் ராஜா, உதவி பொறியாளர் முரளிதரன், வட்டாட்சியர் பாக்கியம் விக்டோரியா மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • போலீஸ் நிலையங்களில் 2400 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.

    விருதுநகர்

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி விருதுநகர் மாவட்ட போலீசார் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 46 போலீஸ் நிலையங்கள், 11 போலீஸ் குடியிருப்புகள், 3 ஆயுதப்படை மைதானங்கள் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் பலன் தரும் 600 மரக்கன்றுகள் உள்பட 2400 மரக்கன்றுகள் இன்று நடப்பட்டது.விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    • தமிழகம் முழுவதும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார்.
    • இதில், சேலம் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    வாழப்பாடி:

    மறைந்த முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை யொட்டி நெடுஞ்சாலைத் துறையின் சார்பில், தமிழகம் முழுவதும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார். இதில், சேலம் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    வாழப்பாடி உட்கோட் டத்தில் மட்டும் 2 ஆயிரம் மரக்கன்றுகள் வைத்து பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வாழப்பாடி அடுத்த காரிப்பட்டி ஆய்வு மாளிகை வளாகத்தில் நடைபெற்ற விழாவில், சேலம் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் துரை மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இவ்விழாவில் காரிப்பட்டி ஊராட்சித் தலைவர் மனோசூரியன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலைச்செல்வன், பொன்னுமலை, மாரியப்பன் மற்றும் உதவிக்கோட்டப் பொறியாளர் கவிதா, உதவிப்பொறியாளர் கருணாகரன் மற்றும் பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    காரிப்பட்டி ஆய்வு மாளிகை வளாகத்தில் 200 மரக்கன்றுகளும், அயோத்தியாப்பட்டிணம் – பேளூர்- கிளாக்காடு சாலை பகுதியில் 200 மரக்கன்றுகளும் நடப்பட்டன. 2 மாதத்திற்குள் 1,600 மரக்கன்றுகளும் நடப்பட்டு உரிய முறையில் தொடர்ந்து பராமரிக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள், விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
    • வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம் மூலம் 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    ஒன்றுப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் உள்ள முன்னாள் மற்றும் இன்னாள் முப்படை மற்றும் துணை ராணுவ படை வீரர்களைக் கொண்டு அமையப் பெற்ற சோழ நாட்டு பட்டாளம் சமூக சேவை அறக்கட்ட ளையின் 4-ம் ஆண்டு தொடக்க விழா தஞ்சையில் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவை ெதாடங்கி வைத்தார்.

    இந்த விழாவில் ஈ.சி.எச்.எஸ் பொறுப்பு அதிகாரி ஜிபி கேப்ட் சிபிகே. கென்னடி ( ஓய்வு ), குந்தவை நாச்சியார் கலை கல்லூரி பேராசிரியர் முனைவர் தமிழடியான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தா டைகள், விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், ரத்த தானம் வழங்கியவர்களுக்கு பரிசு சான்றிதழ்கள் ஆகியவற்றை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கி பாராட்டினார்.

    மேலும் அவர் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம் மூலம் 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கினார்.

    மேலும் இந்த விழாவோடு இணைந்து சோழநாட்டு பட்டாள படை வீரர் அந்தோ ணியின் பணி ஓய்வு பாராட்டு விழாவும் நடைபெற்றது. அவரை கலெக்டர் கவுர வித்தார்.

    • கீழவிளாத்திகுளம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
    • தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்பட உள்ளது.

    விளாத்திகுளம்:

    தொழிலாளர் தினத்தை யொட்டி விளாத்திகுளம் அருகே கீழவிளாத்திகுளம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சிமன்ற தலைவர் நவநீத கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மார்க்க ண்டேயன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் 2.15 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இதில், ஒரு கோடி குடும்ப அட்டைகளில் உள்ள பெண்களுக்கு உரிமைத் தொகை ரூ. 1000, செப்டம்பர் 15-ம் தேதி முதல் தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழங்க உள்ளார். பட்டா வேண்டுவோர் விண்ணப்பம் செய்தால் உடனடியாக செய்து கொடுக்கப்படும். பண்ணை குட்டை அமைப்பதற்கும், கூடுதல் மின்மாற்றி தேவைப்படும் இடங்க ளுக்கும் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் அனைத்து வீடுகளுக்கும் தேவையான குடிநீர் திட்டத்தை நிறைவேற்றும் பணியாக கீழ விளாத்திகுளம் ஊராட்சிக்கு ரூ. 10 லட்சமும், குரளய ம்பட்டிக்கு ரூ. 19.85 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்பட உள்ளது.

    அதே போல், 2024-25ம் ஆண்டில் கீழ விளாத்திகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ விளாத்திகுளம், குரளயம்பட்டி, சோலைமலையன்பட்டி கிராமங்களில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ. 42 லட்சத்தில் சிமென்ட் சாலை, வாறுகால் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது. கீழ விளாத்திகுளம் ஊராட்சியில் மரக்கன்றுகள் அதிகம் நடுவதற்கு மக்கள் முன் வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தின்போது, எலக்ட்ரானிக் தையல் எந்திரம் வாங்குவதற்காக உதவி கேட்ட பத்திரகாளி என்ற பெண்ணுக்கு, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தனது சொந்த நிதியில் ரூ. 10 ஆயிரம் வழங்கினார். மீதமுள்ள பணம் கூட்டுறவு சங்கம் மூலம் வட்டியில்லா கடனாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

    கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேலு, முத்துக்குமார், மண்டல துணை தாசில்தார் பாலமுருகன் மற்றும் அரசு துறை அலுவலர்கள், கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் மரம் நடும் விழா நிகழ்ச்சி நடந்தது.
    • மரக்கன்று நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என கலெக்டர் பேசினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் மரம் நடும் விழா நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பங்கேற்று பள்ளி மாணவ, மாணவிகளுடன் 1000 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.

    பள்ளி மாணவ-மாணவிகளுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசினார். இதேபோல் மற்ற பள்ளிகளிலும் இந்த மாணவ-மாணவிகளை போல் மரக்கன்று நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

    இதில் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் கணேச கண்ணன், பள்ளிச் செயலாளர் ஜீவலதா, முதல்வர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 1 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் ஆய்வு செய்தார்.
    • “பசுமை ராமநாதபுரம்” உருவாக்க திட்டமிடப் பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஒன்றியம் தேவிபட்டினம் ஊராட்சியில் வேளாண்மை துறையின் மூலம் நாற்றங்கால் பண்ணை செயல்பட்டு வருவதை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டார். அவர் நாற்றங்கால் பண்ணையில் தென்னை மற்றும் பல்வேறு வகை மரக்கன்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படுவதை பார்வையிட்டு பேசியதாவது:-

    வேளாண்மை துறையின் மூலம் 6 ஹெக்டேர் பரப்பளவில் நாற்றங்கால் பண்ணை அமைத்து விவசாயிகளுக்கு தேவையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது நெட்டை மற்றும் குட்டை ரக தென்னை நாற்றுகள் வளர்ந்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மானிய திட்டத்தில் கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    விவசாயிகள் தேவையான தென்னங்கன்று களை வாங்கி பயன்பெற வேண்டும். தமிழ்நாடு பசுமை இயக்கம் திட்டத்தின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 1 கோடி மரக்கன்றுகள் நடவு செய்து "பசுமை ராமநாதபுரம்" உருவாக்க திட்டமிடப் பட்டுள்ளது. அதனடிப்படையில் வேளாண்மை துறையின் மூலம் நாற்றங்கால் பண்ணைகளில் மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. இதில் மகோகனி, வில்வம், கொடுக்காபுளி, செம்மரம், சீதா, வன்னி, வாதம், மஞ்சள் கொன்னடி என பல்வேறு மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது.

    ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் 25லட்சம் கன்றுகளும், பள்ளி கல்வித்துறையின் மூலம் 10லட்சம் கன்றுகளும், மகளிர் சுய உதவிக்குழு மூலம் 10 லட்சம் கன்றுகளும், வனத்துறையின் மூலம் 25 லட்சம் கன்றுகளும் என பல்வேறு துறைகள் மூலம் ஒருங்கிணைந்து நடப் பாண்டில் 1 கோடி மரக்கன்றுகள் மாவட்டத்தில் நடவு செய்யப்படுகின்றன. நடவு செய்வது மட்டுமின்றி 5 ஆண்டுகளுக்கு பராமரிக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது.

    ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் மூலம் பராமரித்தல், பள்ளிக் கல்வித்துறையின் மூலம் பராமரித்தல் என திட்ட மிட்டு இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், சமூக ஆர்வ லர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு "பசுமை ராமநாதபுரம்" உருவாக செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது வேளாண்மை துறை இணை இயக்குநர் சரஸ்வதி, தோட்ட கலைத்துறை துணை இயக்குநர் நாகராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) தனுஷ்கோடி உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • முதல்-அமைச்சர் மு. க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு கீழப்பாவூர்மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கி கொண்டாடினர்.
    • நிகழ்ச்சியில் கீழப்பாவூர்மேற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு. க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு கீழப்பாவூர்மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக, பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகில், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் காவேரி சீனித்துரை தலைமையில், உதயநிதிஸ்டாலின் நற்பணி மன்ற இணை செயலாளர் சிவ அருணன் முன்னிலையில், பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் கீழப்பாவூர்மேற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • முக்கிய பகுதிகளில் அண்டர்கிரவுண்ட் மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
    • மாநகராட்சி சார்பில் 2 இலவச அவசர ஆம்புலன்ஸ் மற்றும் ஓர் இலவச அமரர் ஊர்தி சேவைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் நிருபர்களுக்குஅளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:-

    தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சியை மாற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    தஞ்சை மாநகராட்சி பகுதியில் புதிதாக மேலும் ஒரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டாக்டர் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் 5000-க்கும் மேற்பட்டவர்கள் பலனடைந்துள்ளனர்.

    10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சர்க்கரை, ரத்தக் கொதிப்பு , இருதய நோய் போன்ற தொற்றா நோய் உள்ளவர்களுக்கு அவரவர் வீடுகளுக்குச் சென்று மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுவதுடன் இயன் முறை மருத்துவ சிகிச்சை வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டு வருகிறது.மாநகரில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் 2023-ம் ஆண்டுக்குள் முடிக்க ப்படும். மாநகரில் அனைத்து சாலைகளும் இன்னும் இரண்டு மாதத்தில் முடிக்கப்படும். முக்கிய பகுதிகளில் அண்டர்கிரவுண்ட் மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 15-வது மத்திய நிதி குழு மானிய நிதியின் கீழ் மாநகராட்சிப் பகுதியில் 8 எண்ணிக்கையிலான நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் ஒரு பொது சுகாதார ஆய்வகம் கட்டும் பணிகள் ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

    திருமானூர் கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் இருந்து சுமார் 72 கோடி மதிப்பீட்டில் தினசரி 36 எம்.எல்.டி குடிநீரை மாநகராட்சி பகுதியின் பயன்பாட்டிற்கு கொண்டு வர பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 1400 சி.சி.டி.வி. கேமராக்கள் சுமார் ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் பொருத்தப்பட உள்ளன. மாநகராட்சி சார்பில் 2 இலவச அவசர ஆம்புலன்ஸ் மற்றும் ஓர் இலவச அமரர் ஊர்தி சேவைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

    நம்ம வார்டு நம்ம மேயர் என்ற திட்டத்தின் கீழ் தினமும் ஒவ்வொரு வார்டாக ஆய்வு செய்யபட்டு பொதுமக்களின் குறைகளை கேட்டு அறியப்பட்டு உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படுகிறது.மாநகராட்சி பகுதிகளில் 1 லட்சம் மரக்கன்றுகளை ஓராண்டுக்குள் நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 5000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

    கடையம் பெரும்பத்து ஊராட்சியில் பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை ஊராட்சி மன்ற தலைவர் பொன்சீலா வழங்கினார்.
    கடையம்:

    கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங்களில் காணொலிக் காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் வேளாண் திட்டங்களை தொடங்கி வைத்தார். 

    தென்காசி மாவட்டம் கடையம் பெரும்பத்து ஊராட்சியில் நடைபெற்ற விழாவுக்கு ஊராட்சி தலைவர் பொன்ஷீலா பரமசிவன் தலைமை தாங்கினார்.

    விழாவில் பயனாளி–களுக்கு தென்னை மரக்கன்று–கள். வீடுகளுக்கு தேவையான காய்கறி விதைகள்,விவசாய உபயோகத்திற்கான தெளிப்பான்கள், பழ மரக்கன்றுகள், உளுந்து விதை, வேளாண் இடுபொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டது.  

    வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சல் பொன் ராணி, வேளாண் பொருட்களை பயனாளி களுக்கு வழங்கினர்.நிகழ்ச்சியில் அட்மா சேர்மன் குணசீலன், வேளாண்மை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி,கடையம் ஒன்றிய துணை சேர்மன் மகேஷ்மாயவன், கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகி பரமசிவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    முடிவில் ஊராட்சி செயலர் ஆனைமணி நன்றி கூறினார்.
    ×