search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், சோழ நாட்டு பட்டாளம் 4-ம் ஆண்டு தொடக்க விழா
    X

    விழாவை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    தஞ்சையில், சோழ நாட்டு பட்டாளம் 4-ம் ஆண்டு தொடக்க விழா

    • தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள், விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
    • வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம் மூலம் 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    ஒன்றுப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் உள்ள முன்னாள் மற்றும் இன்னாள் முப்படை மற்றும் துணை ராணுவ படை வீரர்களைக் கொண்டு அமையப் பெற்ற சோழ நாட்டு பட்டாளம் சமூக சேவை அறக்கட்ட ளையின் 4-ம் ஆண்டு தொடக்க விழா தஞ்சையில் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவை ெதாடங்கி வைத்தார்.

    இந்த விழாவில் ஈ.சி.எச்.எஸ் பொறுப்பு அதிகாரி ஜிபி கேப்ட் சிபிகே. கென்னடி ( ஓய்வு ), குந்தவை நாச்சியார் கலை கல்லூரி பேராசிரியர் முனைவர் தமிழடியான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தா டைகள், விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், ரத்த தானம் வழங்கியவர்களுக்கு பரிசு சான்றிதழ்கள் ஆகியவற்றை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கி பாராட்டினார்.

    மேலும் அவர் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம் மூலம் 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கினார்.

    மேலும் இந்த விழாவோடு இணைந்து சோழநாட்டு பட்டாள படை வீரர் அந்தோ ணியின் பணி ஓய்வு பாராட்டு விழாவும் நடைபெற்றது. அவரை கலெக்டர் கவுர வித்தார்.

    Next Story
    ×