search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "grama sabha"

    • கீழவிளாத்திகுளம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
    • தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்பட உள்ளது.

    விளாத்திகுளம்:

    தொழிலாளர் தினத்தை யொட்டி விளாத்திகுளம் அருகே கீழவிளாத்திகுளம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சிமன்ற தலைவர் நவநீத கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மார்க்க ண்டேயன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் 2.15 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இதில், ஒரு கோடி குடும்ப அட்டைகளில் உள்ள பெண்களுக்கு உரிமைத் தொகை ரூ. 1000, செப்டம்பர் 15-ம் தேதி முதல் தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழங்க உள்ளார். பட்டா வேண்டுவோர் விண்ணப்பம் செய்தால் உடனடியாக செய்து கொடுக்கப்படும். பண்ணை குட்டை அமைப்பதற்கும், கூடுதல் மின்மாற்றி தேவைப்படும் இடங்க ளுக்கும் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் அனைத்து வீடுகளுக்கும் தேவையான குடிநீர் திட்டத்தை நிறைவேற்றும் பணியாக கீழ விளாத்திகுளம் ஊராட்சிக்கு ரூ. 10 லட்சமும், குரளய ம்பட்டிக்கு ரூ. 19.85 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்பட உள்ளது.

    அதே போல், 2024-25ம் ஆண்டில் கீழ விளாத்திகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ விளாத்திகுளம், குரளயம்பட்டி, சோலைமலையன்பட்டி கிராமங்களில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ. 42 லட்சத்தில் சிமென்ட் சாலை, வாறுகால் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது. கீழ விளாத்திகுளம் ஊராட்சியில் மரக்கன்றுகள் அதிகம் நடுவதற்கு மக்கள் முன் வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தின்போது, எலக்ட்ரானிக் தையல் எந்திரம் வாங்குவதற்காக உதவி கேட்ட பத்திரகாளி என்ற பெண்ணுக்கு, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தனது சொந்த நிதியில் ரூ. 10 ஆயிரம் வழங்கினார். மீதமுள்ள பணம் கூட்டுறவு சங்கம் மூலம் வட்டியில்லா கடனாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

    கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேலு, முத்துக்குமார், மண்டல துணை தாசில்தார் பாலமுருகன் மற்றும் அரசு துறை அலுவலர்கள், கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

    • கடையம் யூனியனுக்குட்பட்ட கீழக்கடையத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் தலைமை தாங்கினார்.
    • கடையத்தை தனி தாலுகாவாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , மேலும் கீழக்கடையம் ஊராட்சியில் கூடுதலாக தூய்மைப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட்பட்ட கீழக்கடையத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில், ஆதிதிராவிட ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் , கடையத்தை தனி தாலுகாவாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , மேலும் கீழக்கடையம் ஊராட்சியில் கூடுதலாக தூய்மைப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் துணைத்தலைவர் , உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் ஜெயசக்திவேல் நன்றி கூறினார்.

    • 265 கிராம ஊராட்சிகளில் ஆகஸ்ட் 15ந் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.
    • கிராம ஊராட்சிகளின் தணிக்கை உள்ளிட்டவைகள் தொடா்பாக விவாதிக்கப்படவுள்ளன.

    திருப்பூர் :

    சுதந்திர தினத்தை ஒட்டி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 15-ந்தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திர தினத்தை ஒட்டி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 265 கிராம ஊராட்சிகளில் ஆகஸ்ட் 15ந் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

    இதில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதத்தில், சுகாதாரத்தை பேணுதல், நெகிழி உற்பத்திப் பொருள்களை தடை செய்தல், நீா் வழிப்பாதை மற்றும் நீா் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், கிராம ஊராட்சிகளின் தணிக்கை உள்ளிட்டவைகள் தொடா்பாக விவாதிக்கப்படவுள்ளன.

    இந்த கிராம சபைக் கூட்டங்களை நடத்தும் வகையில் ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பற்றாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.ஆகவே, பொதுமக்கள் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்று ஊராட்சிகளின் வளா்ச்சிக்காக நல்ல ஆலோசனைகள் குறித்து விவாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபா கூட்டம் நாளை காந்தி பிறந்த தினத்தன்று நடைபெறவுள்ளது என மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபா கூட்டம் நாளை (செவ்வாய்க் கிழமை) காந்தி பிறந்த தினத்தன்று நடைபெறவுள்ளது என மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய, மாநில அரசின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 385 கிராம ஊராட்சிகளிலும் நாளை கிராமசபா நடைபெற உள்ளது. கூட்டத்தில், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்படுத்த தடை செய்தல், திறந்தவெளி மலம் கழிக்கப்படாத ஊராட்சிகளாக அறிவித்தல், கழிப்பறை கட்டி பயன்படுத்தும் பயனாளிகளுக்கு பாராட்டு தெரிவித்தல், கழிப்பறை இல்லாதோர் விவரப்பட்டியல் தெரிவித்தல், திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்தல்,

    ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையக் கழிப்பறைகள் பயன்படுத்தப்படுத்துவது குறித்து விவாதித்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், கிராம வளர்ச்சித்திட்டம் குறித்து விவாதம் செய்தல் குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்துதல்,

    கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், அந்தியோதயா இயக்கம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், திட்ட அறிக்கை, முதல் அமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் 2018-19, பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் திட்ட அறிக்கை முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விளக்குதல் மற்றும் அரசின் முக்கிய திட்டங்கள் குறித்த விளக்க உரையும் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்படவுள்ளது.

    இவ்வாறு கலெக்டர் ரோகிணி கூறி உள்ளார்.
    ×